மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

சிறுவர் கதைகள் (நான்கு)



"டேய்... எனக்கொரு பெஞ்சில் கொடுடா...."

"நாந்தரமாட்டேன் போ..."

"ரெண்டு இருக்குல்ல ஒண்ணு கொடுடா..."

"முடியாது போ..."

"தாடான்னா..." படக்கென்று பிடிங்கினாள்.

"எருமை... உம் பென்சில் எங்கடி... எம் பெஞ்சிலை பறிக்கிறே... அம்மாட்ட சொல்லவா தாரியா... அம்ம்ம்மா..." கத்தினான்.

"இந்தாடா... கத்தாதே... இரு நீ எதாவது கேப்பேல்லே... அப்ப பாரு..."

"அங்க என்ன சண்டை... விடிஞ்சா எந்திரிச்சா... உங்க பஞ்சாயத்துதான் பெரிசா இருக்கு... பஸ் வர்ற நேரமாச்சு...  கிளம்புங்க... உங்க சண்டைய சாயந்தரம் வந்து வச்சிக்கங்க..."

இருவரும் அரக்கப் பறக்க கிளம்ப... பென்சில் அனாதையாக கிடந்தது.

-----------


ம்மா வீட்டில் இல்லாததால் டிவி பார்த்துக் கொண்டிருந்த அண்ணனும் தம்பியிம் விஜய், அஜீத்தால் கட்டிப்பிடித்து உருண்டனர். மாறி மாறி அடித்துக் கொண்டனர். நகங்களால் ஒருவருக்கு ஒருவர் கீறிக்கொண்டனர்.

கதவு திறக்கும் சப்தம் கேட்டதும் இருவரும் தலையை ஒதுக்கிக் கொண்டு அமைதியாக டிவி பார்க்க ஆரம்பித்தனர்.

"என்ன ரெண்டு பேரும் ரொம்ப அமைதியா இருக்கீங்க... என்னாச்சு..."

"ஒண்ணுமில்லையே... படம் பார்க்கிறோம்... இல்லடா"

"ஆமாம்மா..."

"சரி... சரி..."

அம்மா உள்ளே போனதும் கையை மடக்கி சின்னவன் பெரியவனை குத்த, "அம்மா இங்க பாரும்மா... சும்மா இருக்கயில அடிக்கிறாம்மா..." அழுகையினூடே கத்தினான்.

-----------

"நானும் விளையாட வாரேண்டா..." என்றாள் அவள்

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... ஓரமா உட்கார்ந்து பாரு போதும்..." என்றான் அவன்.

"என்னைய மட்டும் ஏண்டா சேர்க்க மாட்டேங்கிறீங்க..." கோபமாக கேட்டாள் அவள்.

"ஆளு கரெக்டா இருக்கு... உனக்கு விளையாடத் தெரியாது" கேலியாக சொன்னான் அவன்.

"உப்புக்கு சப்பாணியாவது இருக்கேண்டா..." கெஞ்சினாள் அவள்.

"வேணான்னா போ... இல்ல முகரைய பேத்துடுவேன்..." கையை முறுக்கிக் காட்டினான் அவன்.

"நீ உருப்புடவேமாட்டே... எருமை" முணங்கியபடி அமர்ந்தாள் அவள்.

"என்னடா... விளையாடுறீங்க... " என்றபடி உள்ளே வந்த பிரசிடெண்ட் மகன், விளையாட்டை சொன்னதும் "நானும் வாரேன்" என்றான்.

"கரெக்டா இருக்கு... அடுத்த ஆட்டை வரலாம்" என்றான் அவன்.

"என்னடா லெப்ட்... அவன் கரெக்டா இருக்குங்கிறான்... நாளைக்கு தோப்புக்கு வரணுமா இல்லையா..." மிரட்டினான் பிரசிடெண்ட் வாரிசு.

"டேய் நீ வாடா... நீ போய் உட்காருடா... அப்புறம் வரலாம்" என்றான் லெப்ட்.

"என்னடா... வேற யாரையாவது நிப்பாட்டுடா..." என்றான் அவன்.

"சொன்னா கேளுடா... போடா"

முகத்தை சுருக்கிக் கொண்டு அவள் அருகில் போய் அமர்ந்தான் அவன்.

-----------

"டேய்... முந்திரி தோப்புக்கு போகலாமா?"

"ம்... போகலாம்"

"ஆனா யார்கிட்டயும் சொல்லக்கூடாது... சரியா?"

"சரிடா... எப்ப போறோம்...?"

"நாளைக்கு..."

"சரி..."



"என்னடா முந்திரி தோப்புக்கா... போறீங்க..."

"இல்லையே..."

"எனக்கு எல்லாம் தெரியும் மறைக்காதீங்க... நானும் வாரேன்..."

"சரி வா... மூணு பேரும் போகலாம்"



"மூணு பேரும் எங்க கிளம்பிட்டிங்க... முந்திரி தோப்புக்குத்தானே..."

"இல்லையே.... சும்மா..."

"ஏண்டா பொய் சொல்றீங்க... நானும் வருவேன்... இல்லை தோப்புக்காரங்கிட்ட போட்டுக் கொடுத்துடுவேன்..."

"சரிடா இவனையும் கூட்டிக்கலாம்..."



ரெண்டு நாலாகி.... நாலு எட்டாகி... கும்பலா தோப்புக்கு போனப்போ தோப்புகாரன் வாசலில் நின்று "கருங்காலி நாய்களா இன்னைக்கு வாங்க... தோலை உறிச்சு உப்புக்கண்டம் போட்டுடுறேன்" என்று கத்திக் கொண்டிருந்தான்... வந்த சுவடு தெரியாமல் திரும்பும் போது முந்திரி பழத்தை இந்த வாரமும் இழந்தது அவர்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்து.

-----------

கவனிக்க: இந்த கதைகளை எழுதியதும் 'மைக்ரோ கதைகள்' என்று பெயரிட்டேன்... அது ஏனோ மனதில் ஒட்டவில்லை... பின்னர் 'குழந்தைக் கதைகள்' என்று பெயரிட்டு வைத்தேன். இன்று பதிவிடும் போது குழந்தைக் கதை என்றால் மூன்று, நான்கு வயதுக்குள் நடப்பது போலிருந்தால் நல்லாயிருக்கும் இது சற்று கூடுதல் வயதில் நடக்கும் கதை என்பதால் 'சிறுவர் கதைகள்' என்று மாற்றியாச்சு.

இது சிறுவர்களுக்கான கதையல்ல... சிறுவர்களுக்கு இடையே நிகழும் அன்றாட நிகழ்வு அவ்வளவே...

படித்து நொந்து திட்டுபவர்கள் மின்னஞ்சலில் வரவும்... ஏதோ மனசை தேத்திக்கிட்டு திட்டினாலும் கொஞ்சமாக திட்ட நினைப்பவர்கள் பின்னூட்டத்தில் வரவும். அப்புறம் ஓட்டு ரொம்ப முக்கியமுங்க... நாம ஆட்சியை புடிக்கணுமில்ல....

-'பரிவை' சே.குமார்.

34 எண்ணங்கள்:

பெயரில்லா சொன்னது…

போட்டாச்சு போட்டாச்சு :)
"முந்திரி தோப்பு" ரொம்ப நல்லாருக்கு!

பின்னோக்கி சொன்னது…

எல்லாம் ரொம்ப இயல்பா இருக்கு

"உழவன்" "Uzhavan" சொன்னது…

முதல் கதை கவிதை போலவே இருந்தது.

Priya சொன்னது…

சிறுவர்களுக்கு இடையில் பொதுவா நடப்பவைகள்தானே... நல்லா இருக்கு!

Thenammai Lakshmanan சொன்னது…

நாலுமே அருமை குமார்.. ரொம்ப பிடிச்சு இருந்துச்சு..

Chitra சொன்னது…

எல்லாமே நல்லா இருக்குது.... முந்திரி தோப்பு தான் டாப்.

அம்பிகா சொன்னது…

மிக இயல்பான நிகழ்வுகள். அருமை. ஆமாம், வோட்டு வாங்கி, எந்த ஆட்சிய புடிக்க போறீங்க?

vasu balaji சொன்னது…

simple and good:)

சுப்பு சொன்னது…

கதை எல்லாமே நல்லா இருக்கு

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பாலாஜி சரவணா...

வாங்க பின்னோக்கி...

வாங்க உழவன்...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பிரியா மேடம்...

வாங்க தேனம்மை அக்கா...

வாங்க சித்ரா மேடம்...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்பிகா அக்கா...
என்ன இப்புடி கேட்டுப்புட்டீங்க... அல்லாரும் தமிழ்மணத்துல லெப்டாண்டு சைடுல எதோ நம்பரெல்லாம் வாங்கி உக்காந்துக்கிறாங்க.... வானம்பாடிகள் ஐயாவுல்லாம் அடிக்கடி மகுடத்தைப் புடிக்கிறாவுக... நாமளும் ஒருவாட்டி அத்துல உக்காந்து பாக்காண்டா... அத்தேன்....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானம்பாடிகள் ஐயா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நசரேயன் சொன்னது…

// ஓட்டு ரொம்ப முக்கியமுங்க.//

ஆமா

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

கதைகள் மிக அருமை குமார்.. நாலு கேரக்டர்களும் மனதை ஆக்ரமிக்கிறார்கள்.. நல்ல சிந்திக்கவைக்கும் கதைகள்.

ஹேமா சொன்னது…

நேரமின்மையால் இன்றுதான் பார்க்கிறேன் குமார்.

எல்லாக் கதைகளையுமே ரசித்தேன்.மனம் முழுதும் அந்தக் குழந்தைகளிடமே !

கமலேஷ் சொன்னது…

மிக இயல்பான நிகழ்வுகள். அருமை,,,,

தமிழ்க்காதலன் சொன்னது…

வணக்கம் நண்பா, முதல் கதையும், முந்திரி தோப்பும் மிக அருமை....நல்ல நடை..., வாழ்த்துக்கள்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

ரொம்ப நல்லா எழுதியிருக்கிங்க குமார்.

அதிலும் முந்திரி தோப்பு கவிதை.

ம.தி.சுதா சொன்னது…

///...இருவரும் அரக்கப் பறக்க கிளம்ப... பென்சில் அனாதையாக கிடந்தது.../// கதைகள் அருமையிலும் அருமை... வாழ்த்துக்கள் சகோதரா..

மோகன்ஜி சொன்னது…

குமார்,நாலுமே முத்துக்கள். குழந்தைகளைப் பற்றியும், சிறார்களைப் பற்றியும் எழுத கூர்ந்த பார்வையும் பொறுமையும் வேண்டும்.. உங்கள் கதைகள் இரண்டையுமே பறை சாற்றுகின்றன. வாழ்த்துக்கள் குமார். தமிழுக்கு இப்போது தேவை குழந்தை இலக்கியம்.. அதன் படைப்பாளிகள் அதிகம் பேர் இல்லை.. பெரியவர்களின் பார்வையாக இல்லாமல், குழந்தைகளை முன்னிலைப் படுத்தி அவர்கள் உலகில் புகுந்தும் வாழ்ந்தும் படைப்புகளை உருவாக்க வேண்டும்.. நீங்கள் முயலலாம் குமார். உங்களால் அது முடியும்!

Jaleela Kamal சொன்னது…

பிள்ளைக்ள் விளையாடி கொண்டு இருக்கும் போது போடும் சண்டை அப்படியே இங்கு ஓடுகீறது.
நிஜம் தான்.

அண்ணாமலை..!! சொன்னது…

நம்மையும் சின்னப் புள்ளையாக்கிடறீங்க!

Sriakila சொன்னது…

நாலு கதைகளும் அருமையா இருக்கு குமார்!

முதல் கதை சூப்பர்!


//படித்து நொந்து திட்டுபவர்கள் மின்னஞ்சலில் வரவும்//

இதுக்கு எதுக்குத் திட்டணும்?

r.v.saravanan சொன்னது…

சிறுவர் கதைகள் நான்கும் நல்லாருக்கு குமார் அசத்துங்க

thiyaa சொன்னது…

இயல்பான நடையில் ஒரு இனிய கதை

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நசரேயன் சார்...
ஆமா... ஓட்டாலதானே பல பேரோட வாழ்க்கையே ஓடுது....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஸ்டார்ஜன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சகோதரி ஹேமா...
எனக்கும் அதே பிரச்சினைதான்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கமலேஷ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க தமிழ்க்காதலன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்பர்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ம.தி.சுதா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மோகன்ஜி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சிறுவர் கதையெல்லாம் எழுத இன்னும் அதிக படைப்புத்திறன் வேண்டும் சார்... நானெல்லாம் அவ்வளவு தூரம் வர வேண்டும் என்று நீங்கள் நினைப்பது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. பார்க்கலாம் சார்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜலீலா மேடம்...
எல்லார் வீட்டிலும் அப்படித்தான்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணாமலை...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ஸ்ரீஅகிலா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அப்படியில்லைங்க... முதல் முயற்சி அதிலும் கதைகளைக் கவனித்துப் பார்த்தீர்களானால் காரெக்டர்களின் பெயரே இல்லாமல் எழுதிப் பார்த்தேன்... அதனால்தான் சொல்லியிருந்தேன்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க தியா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.