மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 1 ஜனவரி, 2010

2009 எப்படி....? - கற்பனை கலாட்டா

2010ல் நாம்... கடந்து போன 2009 நமக்கு சந்தோஷம், சோகம், நட்பு, காதல், விபத்து, ஆச்சரியம் என பலவற்றை கொடுத்திருக்கலாம். எனவே சந்தோஷம் அதிகம் பெற்றவர்கள் இது போல் வருடம் இனி வருமா? என்று வாழ்த்துவார்கள். சங்கடங்களை அனுபவித்தவர்கள் அப்பா தொலைந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். என்னதான் இருந்தாலும் 52 வாரங்கள் நம்முடன் உறவாடிய வருடம் அல்லவா...? அதற்கு மரியாதை செலுத்தும் விதமாக சில நண்பர்களிடம் 2009 எப்படி என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அளித்த பதில் இதோ...

போலீஸ்காரர்: நமக்கு 2009 'மாமூலா' போச்சுங்க. அதிக வரவும் இல்லை... அதிக செலவும் இல்லை. அதனால 'மாமூல்' வாழ்க்கை பாதிக்கலைங்க.

அர்ச்சகர்: என்ன இப்படி கேட்டுட்டேள்... பகவானுக்கு எத்துன 'தீபம்' மாதிரி நல்லா ஷேமமா இருந்தது. 'அஞ்சு பத்து' கூடக்குறைய இருந்தாலும் பகவான் கஷ்டப்படவிடலை.

டாக்டர்: என்ன தம்பி கேட்டே... எங்கே ஒரு தடவை நல்லா மூச்சை இழுத்துவிட்டு கேளு. ம்... அப்படித்தான், நமக்கு 'குளோரோபாம்' கொடுத்த நோயாளி மாதிரி சில நாளும் 'இனிமா' கொடுத்த நோயாளி மாதிரி பல நாளும் ஓடுச்சு. மொத்தத்துல நல்ல வருஷம்.

வக்கீல் : என்ன இந்த வருஷம் நல்ல வருமானம் இல்ல. அதனால மனைவி கேட்ட பொருட்களை வாங்கி கொடுக்க முடியாம 'வாய்தா' வாங்க வேண்டியதாப்போச்சு.

முடிதிருத்துபவர்: நம்மளை 2008 மாதிரி சுத்தமா 'மொட்டை' அடிச்சுடலை சாமி. ஆனா என்ன காலேசு பசங்க 'கிருதாவை' ஏத்தி எறக்குற மாதிரி ஏத்தம் ஏறக்கம் இருந்துச்சு.

டிரைவர்: ஆரம்பத்துல 'பர்ஸ்ட் கியர்ல' போச்சு அப்புறம் பிக்கப் ஆகி சும்மா 'டாப் கியர்ல' போச்சுல்ல... இடையில 'வேகத்தடையே' இல்லையில்ல.

கல்லூரி மாணவன்: இந்த வருஷம் நமக்கு நல்லாயில்லை பாஸ். காதல்ல 'அரியர்', படிப்புல 'அரியர்'ன்னு மப்பாத்தான் போச்சு.

தையல்காரர்: என்ன அண்ணாச்சி. இந்த வருஷம் பரவாயில்லைங்க. பட்ஜெட்டுல 'பிட்' விழுகலை. அதனால செலவுல அதிகம் 'கத்திரி' வைக்கலை.

இனிப்பக உரிமையாளர்: சுவீட்டான வருஷமுங்க... 'அல்வா' மாதிரி தித்திப்பா போனாலும் இடையில 'முறுக்கு' மாதிரி கரமுர இருக்கத்தான் செய்தது. கஷ்டமில்லா வாழ்க்கை இனிக்காதுங்களே.

விவசாயி: இந்த வருஷம் நல்லா தண்ணி விட்ட 'பயிர்' மாதிரி பசுமையா இருந்துச்சுங்க. பிள்ளைக்குத்தான் சரியா 'உரம்' போடலை... கல்யாணத்துக்கு அப்புறம் ஏர்ல பூட்டுன 'மாடு' மாதிரி பொண்டாட்டி பின்னால பொயிட்டான்.

ஆசிரியர்: இந்த வருசத்துல சில 'கழித்தல்'களும் பல 'கூட்டல்'களும் இருந்தது. அப்பப்ப பெருக்கலும் இருந்துச்சு.

கிரிக்கெட் வீரர்: சில நாள் 'டெட்பால்', சில நாள் 'பவுன்சரு'ன்னு போனாலும் பல நாள் நல்லா போச்சு. மொத்தத்துல இந்த வருசம் 'டுவெண்டி20' மாதிரி போச்சுங்க.

நடிகர்: இந்த வருஷம் சில்வர் சூப்ளின்னு சொல்ல முடியாது. ஆனா 'பிளாப்' ஆகலை.

பிச்சைக்காரர்: என்னத்தை சொல்ல சில்லறைத்தனமான வருஷம்.

செய்தி வாசிப்பவர்: ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இந்த ஆண்டு நல்ல ஆண்டாக இருந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கல்லூரி மாணவி: 2009...? வாவ்.... சூப்பர்..... ரியல்லி கிரேட் இயர்யா... ஹி....ஹி....ஹி........ (தமிழ்ல பேச போன பொண்ணுதான்... அந்த நேரம் பார்த்து ஒரு பய வந்துட்டான்).

சரிங்க....... போதுமுங்க...... பேட்டி முடிஞ்சுருச்சு.......... மறக்காம ஓட்டுப் போடுங்க முடிஞ்சா கருத்துச் சொல்லுங்க.

சே.குமார்.

7 எண்ணங்கள்:

பூங்குன்றன்.வே சொன்னது…

மிக்க நன்றி !!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.

கண்மணி/kanmani சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
கற்பனை கலாட்டா நல்லாவே இருக்கு

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி பூங்குன்றன்.

நன்றி கண்மணி

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

என்ன தம்பி கேட்டே... எங்கே ஒரு தடவை நல்லா மூச்சை இழுத்துவிட்டு கேளு..//

அசத்தீட்டீங்க..

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

(தமிழ்ல பேச போன பொண்ணுதான்... அந்த நேரம் பார்த்து ஒரு பய வந்துட்டான்).

அடக் கொடுமையே..
இவர்கள் வாயில் தமிழ்படும் பாடு..
இதற்கு இவர்கள் ஆங்கிலமே பேசலாம்.

நல்ல கற்பனை நண்பரே..

'பரிவை' சே.குமார் சொன்னது…

தங்கள் வாழ்த்துக்கு நன்றி முனைவரே..!

'பரிவை' சே.குமார் சொன்னது…

Congrats!

Your story titled 'மனசு: 2009 எப்படி....? சிலரின் கருத்து' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 3rd January 2010 10:14:02 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/162986

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

வாக்களித்த நட்புக்கும் வாய்ப்பளித்த தமிழிஷ்க்கும் நன்றி.