பொழுதுகளின் புழுக்கம் மறந்து
இரவின் மடியில் நாம்...
எழுதாத ஓவியமாய்
என்னருகில் நீ..!
ஆடை துறந்து
ஆசை அணிந்து நான்..!
உனக்குள் வெட்கத்தின்
விளைச்சல்..!
எனக்குள் சந்தோஷ சாரல்..!
அணைத்த போதும்
அணைய மறுத்த
தேக நெருப்பு..!
கலந்தபின் கரைந்தது காமம்..!
தினமும் தொடர்ந்தாலும்
தீரவில்லை நமக்குள்..!
துய்ப்பிற்குப்பின்
சுகமான உறக்கம்..!
விடியலில் விழித்துக்கொண்டது
நேற்றைய சண்டையின் எச்சம்..!
இரவின் மடியில் நாம்...
எழுதாத ஓவியமாய்
என்னருகில் நீ..!
ஆடை துறந்து
ஆசை அணிந்து நான்..!
உனக்குள் வெட்கத்தின்
விளைச்சல்..!
எனக்குள் சந்தோஷ சாரல்..!
அணைத்த போதும்
அணைய மறுத்த
தேக நெருப்பு..!
கலந்தபின் கரைந்தது காமம்..!
தினமும் தொடர்ந்தாலும்
தீரவில்லை நமக்குள்..!
துய்ப்பிற்குப்பின்
சுகமான உறக்கம்..!
விடியலில் விழித்துக்கொண்டது
நேற்றைய சண்டையின் எச்சம்..!
(2009 - ல் நெடுங்கவிதைகள் தளத்தில் எழுதியது) -'பரிவை' சே.குமார்.
7 எண்ணங்கள்:
தொடர... வாழ்த்துக்கள்...
நல்ல பொழுதுகளாக ...............தொடர்க!
இரவில் உறவின் நெருக்கத்தில் மறைந்த/மறந்த சண்டையின் எச்சம் பகலில் விழித்துக் கொள்வது சுவாரஸ்யம்.
எச்சம் எச்சமாகவே இருக்கட்டுமே
//ஆடை துறந்து
ஆசை அணிந்து நான்..!//
அற்புதமான சொல்லாடல் .
எழுதியது நீங்கள் என்று சொல்லவில்லை என்றால் பெரிய கவிஞர் எழுதியதாகவே நினைப்பர்.
தரமான கவிதை வாழ்த்துக்கள்
இப்பவே ஊருக்கு கிளம்பனும் போல இருக்கு கவிதை படித்து !
அருமையான கவிதை.....
த.ம. +1
கருத்துரையிடுக