மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சினிமா பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஜூலை, 2015

காற்றில் கலந்த மெல்லிசையின் ராகங்கள்

'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு அஞ்சலி

(இசை ஒலித்தது : 24-06-1928  இசை ஓய்ந்தது : 14-07-2015)
த்தனை ராஜாக்கள் வந்தாலும் தனது இசையால் பல இதயங்களைக் கட்டிப் போட்ட மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. என்னும் புல்லாங்குழல் தனது காற்றை இங்கு உலவ விட்டு இன்று சாம்பலாகிவிட்டது. காலத்தால் அழியாத கானங்களைக் கொடுத்த அந்தக் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரின் பாடல்கள் சிலவற்றை இங்கு பகிர்ந்துள்ளேன்.

ஆடலுடன் பாடலைக் கேட்டு 
ரசிப்பதிலேதான் சுகம்... சுகம்...



உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்....
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்...



காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான்...
பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு....



கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே...


(திரு. MSV அவர்கள் ஒரே ஒரு வாத்தியத்தை 
வைத்து இசையமைத்த பாடல்)

அடி என்னடி ராக்கம்மா
பல்லாக்கு நெளிப்பு....




ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து 
ஓடம் போலே ஆடலாம் பாடலாம்....



நினைவாலே சிலை செய்து 
உனக்காக வைத்தேன் திருக்கோயிலே...



கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை மலர்...




அல்லா அல்லா யா அல்லா அல்லா
நீ இல்லாத இடமே இல்லை....




புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே...



(கவிஞர் கண்ணதாசனின் கிருஷ்ணகானம் என்ற கேசட்டிற்காக எம்.எஸ்.வி இசையில் டி.எம்.எஸ். பாடியது. இந்தப் பாடலின் இசைக்காக கவிஞர் பாராட்டியதையும் இந்தப் பாடலை உன்னோட கச்சேரியில் முதல் பாடலாய் பாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க தனது எல்லாக் கச்சேரியிலும் முதலில் பாடுவதாகவும் பாடலை முடிக்கும் போது புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன் என்று முடிப்பதாகவும் தனது பேட்டி ஒன்றில் திரு. எம்.எஸ்.வி. குறிப்பிட்டிருந்தார்.)

*************

சூப்பர் சிங்கரில் எம்.எஸ்.வி. பாடிய 
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே....


திரு. எம்.எஸ்.வி. அவர்களின் உடல் இன்று சாம்பலாகி காற்றோடு கலந்து இருந்தாலும் அவர் கொடுத்துச் சென்ற ஆயிரக் கணக்கான பாடல்கள் என்றும் நம் இதயங்களில் இசையாய் நிரம்பியிருக்கும். மெல்லிசை மன்னர் காலங்கள் கடந்தாலும் இசையாய் வாழ்ந்து கொண்டிருப்பார்... இசைக்கு இறப்பில்லை.

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 21 நவம்பர், 2014

வீடியோ : ஜெமினியின் ஜெம் ராகங்கள்

ஜெமினி கணேசன்.

மலஹாசனுக்கு காதல் இளவரசன் பட்டம் கிடைக்காம போகக் காரணமே இந்த ஆளுதான்... என்னடா இவன் புதுக்கதையாக் கிளப்புறானேன்னு பாக்குறீங்களா? ஆமாங்க... இந்தாளு மட்டும் காதல் மன்னன்கிற பட்டத்தை பறிச்சி வச்சிக்கலைன்னா பின்னால வந்த நம்ம முத்தகாசனுக்கு காதல் மன்னன்னு பட்டம் கொடுத்திருப்பாங்க...  ஆனா ஆளு விடவே இல்லையே... அந்தப் பட்டத்தை இறுக்கிப் பிடிச்சிக்கிட்டதும் இல்லாம வாழ்க்கையிலும் காதல் மன்னனாகவே இருந்தாருல்ல... ஒருவேளை இன்னைக்கு இருக்க மாதிரி சூப்பர் ஸ்டாரு... அடுத்த சூப்பர் ஸ்டாரு... மூணாவது சூப்பர் ஸ்டாருன்னு பட்டம் மாறிக்கிடே இருக்க நிலை அன்னைக்கி இருந்திருந்தா காதல் மன்னன் பட்டம் கமலுக்குப் போயிருக்கும்.

புதுக்கோட்டையில் பிறந்த ஜெமினி கணேசன் அவர்கள் தான் பார்த்த ஆசிரியர் வேலையை விட்டு விட்டு சினிமா உலகிற்குள் வந்து ஜெமினி ஸ்டுடியோவில் வேலை பார்த்ததால் பின்னாளில் கதாநாயகனாக ஆனபோது  சிவாஜி நாடகத்தில் நடித்த கணேசன்... சிவாஜி கணேசன் ஆனது போல் தான் வேலை பார்த்த நிறுவன பெயருடன் தனது பெயரை இணைத்து ஜெமினி கணேசன் ஆனார்.

எப்படி கமல் ரஜினி  கோலோச்சிய காலத்தில் அவர்களுக்கு அடுத்த நிலை நாயகர்களாக பலர் இருந்தாலும் விஜயகாந்த் பேசப்பட்டாரோ அதே போல் எம்ஜிஆர் சிவாஜியின் காலத்தில் அவர்களுக்கு அடுத்த நிலையில் பலர் இருந்தும் ஜெமினி முன்னிலையில் இருந்தார் என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது. மலைகள் இரண்டு வெவ்வேறு பாணியில் பயணிக்க இடையில் இவரோ காதல் ரசம் சொட்டச் சொட்ட நடித்து சாம்பார் கணேசன் என்று அன்பாக(!) அழைக்கப்பட்டாலும் காதல் மன்னனாக உயர்ந்து நின்றார். அவரின் பாடல்கள் சில இங்கே... கேளுங்கள்... ரசியுங்கள்... பின்னர் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

நிலவும் மலரும் பாடுது...



தனிமையிலே இனிமை காண முடியுமா...




வாடிக்கை மறந்ததும் ஏனோ..?




பிருந்தாவனமும்  நந்தகுமாரனும்...




காலங்களில் அவள் வசந்தம்...




அழகிய மிதிலை நகரினிலே...




பாட்டுப் பாடவா...




ஓ ஹோ எந்தன் பேபி...




வாராயோ வெண்ணிலாவே...




அன்று ஊமைப் பெண்ணல்லோ...




காலையும் நீயே மாலையும் நீயே...



பாடலை ரசித்தீர்கள்தானே... ஏன்னா என்னடா இவன் பாட்டைப் போட்டு பதிவு ரெடி பண்ணிடுறானேன்னு நினைச்சிட்டீங்கன்னா... எழுத நினைத்து சில வேலைகளால் தள்ளிப் போட நேர்ந்ததால்தான் இது போல பாடல்களைப் பகிர்வாக்குகிறேன்னு முன்னமே சொல்லியிருக்கேன். அப்படியிருந்தாலும் பழைய பாடல்களாகத் தேடித்தேடித்தானே தருகிறேன்... அப்ப இதுவும் பதிவுத் தேடல்தான் என்பதை நினைவில் கொள்க. அப்பா எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு. இருந்தாலும் வீடியோ பகிர்வும் அதற்கான தேடலும் வாராவாரம் ஆரவாரமாகத் தொடரும்.

நன்றி.

பாடல்களை யூடிப்பில் சேகரித்து வைத்திருந்தவர்களுக்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 11 நவம்பர், 2014

வீடியோ : வசந்தம் வீசும் பரதம்

திவு எழுத சோம்பேறித்தனம் வந்தால் இருக்கவே இருக்கு பாடல் பதிவு என்று அதற்கான பாடல் தேடலில் இறங்கி விடுவது வழக்கமாகிவிட்டது.  இரண்டு நாட்களாக இணையம் இழுக்க மாட்டேன் என்கிறது. கணிப்பொறியோ தூங்கி எழுந்த குழந்தை போல தூக்க கலக்கத்திலேயே இருக்கிறது. வயல்ல உழுகும் போது கோணச்சால் அடிக்கும் மாட்டை இழுத்து ஏர் ஓட்டுவது போல இழுத்து ஓட்டினாலும் ஸ்கைப்பில் ஊருக்குப் பேச முடியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. 

அப்படிப்பட்ட சூழலிலும் பாடல்களைத் தேடிப் பிடித்த போது அந்தகாலத்தில் வந்த நாட்டியப் பாடல்களைப் பகிரலாமே என்ற எண்ணம்... நிறையப் பாடல்கள் இருந்தாலும் இணையப் பிரச்சினை... ஒரே தொகுப்பாக பல பாடல்கள் வேண்டாம்... என்ற காரணங்களால் சில பாடல்களை மட்டுமே இங்கு பகிர்ந்திருக்கிறேன். இந்தப் பாடல்களை வைத்து இவன் பழங்காலத்தான் போல... வெளஞ்ச கட்டை போலன்னு எல்லாம் நினைக்கக் கூடாது. நாற்பதை எட்டிப் பிடிக்கப் போற வயசுதான்... ஆமா சொல்லிப்புட்டேன். 

எந்தக்காலத்தில் வந்த பாடலாக இருந்தாலும் இசையை ரசிக்க வயதை ஒரு காரணமாகக் கொள்ள முடியாதல்லவே. தில்லானா மோகனாம்பாள் பாடல்கள் என் மொபைலில் வீடியோவாக இருக்கின்றன... ஆஹா... பத்மினியின் நாட்டியம்... அட... அட... என்ன அழகு. இன்று பாடல் தேடும் போது எம்.ஜி.ஆரும் பத்மினியும் போட்டி போட்டு ஆடும் நடனம் பார்த்தேன். எப்பா நாட்டியப் பேரொளி எங்கே... நம்ம வாத்தியாரை தப்பாச் சொன்ன ரசிகர்களுக்கு கோவம் வரும் இருந்தாலும் நாயகன் ஜெயிக்கணுமுன்னு பேரொளியை கீழ விழ வச்சிட்டாரு இயக்குநரு... நம்ம வாத்தியாரோட ஆட்டம் என்ன ஜோருன்னு பாட்டைப் பாருங்க தெரியும்... என்னால எனது மனசுக்குள் என்றும் குடிகொண்டிருக்கும் மக்கள் நாயகன் ராமராஜன் பரதம் ஆடுவதாக நினைத்து சிரிக்கத்தான் முடிந்தது... மன்னிக்கவும் வாத்தியாரின் ஆட்டத்தை ரசிக்க முடியலை.

வஞ்சிக் கோட்டை வாலிபனிம் பரத நாட்டிய திலகங்கள் பத்மினிக்கும் வைஜெயந்தி மாலாவுக்கும் போட்டிப் பாடல்... என்ன நடனம்... என்ன நடனம்... ஆஹா... அழகு... அதே போல் மற்ற அனைத்துப் பாடல்களுமே நாட்டியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்களே... நீங்களும் கேட்டுப் பாருங்க.. கண்டிப்பா ரசிப்பீங்க.

பாடல் : மறைந்திருந்து பார்க்கும் மர்மம்...
படம் : தில்லானா மோகனாம்பாள்



பாடல் : மன்னவன் வந்தானடி...
படம் : திருவருட்செல்வர்




பாடல் : கண்ணும் கண்னும் கலந்து...
படம் : வஞ்சிக் கோட்டை வாலிபன்




பாடல் : தண்டை கொண்டு நடந்த...
படம் : மன்னாதி மன்னன்




பாடல் : யாரடி நீ மோகினி
படம் : உத்தம புத்திரன்




பாடல் : மாதவி பொன் மயிலாள்...
படம் : இரு மலர்கள்




பாடல் : வசந்த முல்லை போல...
படம் : சாரங்கதாரா



பாடல் பகிர்வு தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 3 நவம்பர், 2014

வீடியோ : கமலின் காதல் கீதங்கள்

ன்று நவரச நாயகனாக இருந்தாலும் காதல் இளவரசன் கமலின் காதல் பாடல்களுக்கு முன் வேறு எந்த நடிகரும் போட்டிக்கு வரமுடியாது. மனுசன் காதல் பாடல்களில் உருகி... தவித்து... அப்படியே உண்மையான காதலர்கள் போல கலக்கி விடுவார்... பத்தாததுக்கு முத்த மழை வேறு... இப்பல்லாம் டைரக்டா லிப் டு லிப்தான் தலைவரின் பாணி... ம்... பல் இருக்கவன் பக்கோடா சாப்பிடுறான்... அது நமக்கெதுக்கு... வாங்க பேசுவோம்..

கமல் 60... திரையுலகில் எத்தனை பேர் வந்தாலும் நடிகர் திலகம் சிவாஜியின் பெயர் எப்படி காலாகாலத்துக்கும் பொன் எழுத்தில் பதிக்கப்பட்டிருக்குமோ அதே போல் நவரச நாயகன்... சூப்பர் ஆக்டர் கமலின் பெயரும் உலக சினிமாவில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை எல்லோரும் அறிவோம்..

கமல் 60... திருச்சியில் ஒட்டப்பட்ட போஸ்டரில் நடிகர்களின் முதல்வரே என்று அடித்து விட்டார்களாம்... உடனே பத்திரிக்கைகள் நடிகர்களின் முதல்வர் என்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் பரபரப்புன்னு செய்தி போடுறாங்க... இதிலென்னய்யா தப்பு இருக்கு... இன்னைக்கு வந்த நண்டு சிண்டெல்லாம் வருங்கால முதல்வர்ன்னு போடலாம்... ஊழல் வழக்கில் பதவி இழந்த முன்னாள் முதல்வர் மக்கள் முதல்வராகலாம்... ஒரு போஸ்டர்தானேய்யா அடிச்சானுங்க... முதல்வராகப் போறார்... கட்சி ஆரம்பிக்கப் போறார்ன்னு எதையும் கிளப்பி விடலையே எதுக்கு இந்த குய்யோ முறையோ எல்லாம்... பத்திரிக்கைகள் சினிமா நடிகர்களின் பின்னால் திரிவதை நிறுத்தி மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்லலாமே...

கமல் 60... சரிங்க... நமக்கு எதுக்கு இந்த அரசியல்... நம்ம இப்ப நல்ல பாடல்களைக் கேட்கலாம்... அதிலும் கமலின் காதல் பாடல்களைக் கேட்கலாம்... ரசிக்கலாம்... நாமும் கமல் அறுபதைக் கொண்டாடலாம்... 


படம் : காக்கி சட்டை
பாடல் : கண்மணியே பேசு



படம் : காதல் பரிசு
பாடல் : கூக்கூ என்று குயில்...



படம் : சத்யா
பாடல் : வளையோசை கலகல...



படம் : உன்னால் முடியும் தம்பி
பாடல் : இதழில் கதை எழுதும்...



படம் : சிங்கார வேலன்
பாடல் : இன்னும் என்னை என்ன...



படம் : வறுமையின் நிறம் சிகப்பு
பாடல் : சிப்பி இருக்குது முத்தும் இருக்குது....



படம் : மீண்டும் கோகிலா
பாடல் : சின்னஞ் சிறு வயதில்...



படம் : இளமை ஊஞ்சலாடுகிறது
பாடல் : ஒரே நாள் உனை நான்...



படம் : சிப்பிக்குள் முத்து
பாடல் : துள்ளித் துள்ளி...


கமலின் காதல் பாடல்கள் இன்னும் இன்னும் என்று போய்க் கொண்டே இருக்கும்... என்னைக் கவர்ந்த பாடல்களில் சில பாடல்களை மட்டுமே பகிர்ந்திருக்கிறேன். இவை தங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

கமல் 60-க்கு வாழ்த்துக்கள்.

மீண்டும் நல்ல பாடல்களுடன் மற்றுமொரு வீடியோ பகிர்வில் சந்திப்போம்.

பாடல் பகிர்வு தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 13 அக்டோபர், 2014

வீடியோ : சிவக்குமார் பாடல்கள்

இன்றைய சினிமாப் பாடல்கள் பகிர்வில் நடிகர் சிவக்குமார் அவர்களின் படங்களில் இருந்து சில பாடல்களைக் கேட்டு ரசிப்போம் வாருங்கள்.


பாடல் : உச்சி வகுந்தெடுத்து...
படம் : ரோஜாப்பூ ரவிக்கைக்காரி




பாடல் : மேகம் கருக்குது...
படம் : ஆனந்த ராகம்




பாடல் : பொன்னுல்ல பொன்னுல்ல பண்ணுன...
படம் : சிட்டுக்குருவி




பாடல் : மயிலே மயிலே உன் தோகை...
படம் : கடவுள் அமைத்த மேடை




பாடல் : கேட்டேளே அங்கே...
படம் : பத்ரகாளி




பாடல் : சின்னக்கண்ணன் அழைக்கிறான்...
படம் : கவிக்குயில்




பாடல் : பொன் வானம் பன்னீர் தூவுது...
படம் : இன்று நீ நாளை நான்




பாடல் : உன்னை நம்பி நெற்றியிலே...
படம் : சிட்டுக்குருவி




பாடல் : கண்ணா உனைத் தேடுகிறேன்...
படம் : உனக்காகவே வாழ்கிறேன்



-பாடல் பகிர்வு தொடரும்
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 2 அக்டோபர், 2014

வீடியோ : பாட்டும் நானே பாவமும் நானே

டிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர்-1-ல் அவரின் பாடல்களைப் பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.  இவர் ஒரு பிறவிக் கலைஞன். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி நடிக்க கூடிய நடிகர். இன்றைய சினிமா நடிகர்களுக்கெல்லாம் முன்னோடி. இவரின் நடிப்பைப் பின்பற்றாத நடிகர்களே இல்லை எனலாம். அவரைப் பற்றிய சிறு குறிப்புக்களோடு அவரின் பாடல்கள் சிலவற்றைக் காணலாம்.

* செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் விழுப்புரத்தில் 01/10/1928 அன்று சின்னையாப்பிள்ளை - ராஜாமணி அம்மா அவர்களின் மகனாப் பிறந்தார்.


படம் : திருவிளையாடல்
பாடல் : பாட்டும் நானே பாவமும் நானே...


சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்ற நாடகத்தில் இவரது நடிப்பைப் பார்த்து வியந்த பெரியார் அவர்கள் 'சிவாஜி' கணேசன் என்று அழைக்க அதுவே நிலையானது.

சிவாஜியின் முதல் படம் கலைஞரின் கதை வசனத்தில் வெளியான 'பராசக்தி'. 


படம் : கர்ணன்
பாடல் : உள்ளத்தில் நல்ல உள்ளம்...


சிவாஜி  தமிழில் 270 படங்களிலும். தெலுங்கில் 9, இந்தியில் 2, மலையாளத்தில் 1 என மற்ற மொழிகளிலும்  நடித்திருக்கிறார். 19 படங்களில் கௌரவத் தோற்றத்தில் வந்திருக்கிறார்.

*நல்ல குரல் வளமும் தெளிவான உச்சரிப்பும் இவரின் சிறப்பு அம்சங்களாகும்.


படம் : கௌரவம்
பாடல் : கண்ணா நீயும் நானுமா...


வீரபாண்டிய கட்டபொம்மன், மனோகரா போன்ற படங்கள் வசனத்திற்குப் புகழ் பெற்றவை. 

இவரின் நடிப்பு மிகையானது என்று கூட சொல்லுவார்கள். ஒருவேளை நாடகத்தில் இருந்து வந்ததால் அந்த நடை, மிகை எல்லாம் வந்திருக்கலாம்.


படம் : ராஜபார்ட் ரங்கதுரை...
பாடல் : அம்மம்மா தம்பி என்று நம்பி...


தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சி ஆரம்பித்து அரசியலில் ஜெயிக்க முடியாமல் ஒதுங்கினார்.

பிலிம்பேர், பத்ம ஸ்ரீ, பத்மபூஷன், செவாலியே, தாதா சாகேப் பால்கே, கெய்ரோ சிறந்த நடிகர் போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


படம் : பாபு
பாடல் : இதோ எந்தன் தெய்வம்...


இந்தியக் கலாச்ச்சாரத் தூதுவாராக அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். இவரைக் கவுரப்படுத்தும் விதமாக நயாகரா நீர் வீழ்ச்சியின் ஒருநாள் மேயராக நியமிக்கப்பட்டார்.

தமிழ் சினிமாவில் முதன் முதலாக பெரிய அளவில் கட் அவுட் வைக்கப்பட்டது இவருக்குத்தான். வணங்காமுடி படத்துக்காக முதல் கட் அவுட் வைக்கப்பட்டது.


படம் : படித்தால் மட்டும் போதுமா
பாடல் : பொன் ஒன்று கண்டேன்...



தந்தைப் பெரியார் வேடத்தில் நடிக்க விரும்பினார் ஆனால் கடைசி வரை அந்த ஆசை நிறை வேறவில்லை.

கமலஹாசனை தனது மகனாகத்தான் பார்த்தார். தனது கலையுலக வாரிசாக கமலைத்தான் குறிப்பிட்டார்.


படம் : வியட்நாம் வீடு
பாடல் : உன் கண்ணில் நீர் வழிந்தால்...


கலைஞரை 'மூனா கானா' என்றும் எம்.ஜி.ஆரை 'அண்ணன்' என்றும் ஜெயலலிதாவை 'அம்மு' என்றும் அழைப்பாராம்.

சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் 'கூண்டுக்கிளி'.


படம் : தாய்க்கு ஒரு தாலாட்டு
பாடல் : ஆராரிரோ பாடியதாரோ...




இவரது வாழ்க்கைத் துணைவியார் பெயர் கமலா, ராம்குமார், நடிகர் பிரபு, சாந்தி மற்றும் தேன்மொழி என நான்கு மக்களைப் பெற்றவர்.

2001 ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று தனது 72 வது வயதில் மறைந்தார்


படம் : முதல் மரியாதை
பாடல் : பூங்காற்று திரும்புமா...


சிம்மக்குரலோனின் பாடல்களை ரசித்திருப்பீர்கள். மீண்டும் சிறப்பான பாடல் பகிர்வில் சந்திப்போம்.

குறிப்புக்கள் திரட்ட உதவிய தமிழ் விக்கிபீடியா, ஆனந்த விகடனுக்கு நன்றி.
பாடல்களைக் கொடுத்த யூடிப்புக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 25 செப்டம்பர், 2014

வீடியோ : இது ஒரு பொன்மாலைப் பொழுது

ப்போதும் இசையை அனுபவிப்பது என்பது எல்லாருக்குமே அலாதியான விஷயம்தான். வயலில் நாற்று நடும் பெண்கள் கூட வேலையின் சுமை தெரியாமல் இருக்க நடவுப்பாடல்களைப் பாடியபடித்தான் நடுவார்கள். அம்மன் கோவில் திருவிழாக்களில் எல்லாம் குலவைப் பாடல்களுக்குப் பஞ்சமிருக்காது. அதே போல் மொளக்கொட்டுப் பாடலும் கேட்க இனிமையாக இருக்கும். எங்க அக்கா, அண்ணன்களின் குழந்தைகளுக்கெல்லாம் அம்மா தாலாட்டுப் பாடும் போது கேட்டு ரசிப்பதோடு நானும் சேர்ந்து பாடி இருக்கிறேன். ஏன் கிராமங்களில் இன்றும் கூட இறந்தவரின் உடலுக்கு முன்னர் ஒப்பாரிப் பாடல் பாடி நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுவார்கள். இதற்கு எங்கள் பக்கம் மாரடிக்கிறது என்று சொல்வார்கள்.

இப்போது அலுவலகப் பணி நேரத்தில் பெரும்பாலும் எனக்குத் துணையாக இருப்பது இங்கு பகிர்ந்திருக்கும் பாடல்களைப் போன்ற பாடல்கள்தான். இவையெல்லாம் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்கள். முக்கல் முனங்கல் இல்லாமல் வேற்று கிரக வாசிகளின் வார்த்தைகள் இல்லாமல் அடித்து நொறுங்கும் இசை இல்லாமல் அழகான வரிகளோடு இனிமையான இசையோடு லயித்துப் பாடும் பாடகர்களின் குரலில் என்றும் நம்மை கிறங்கச் செய்யும் பாடல்களாகத்தான் இவை இருக்கின்றன. நீங்களும் கேளுங்கள்... கண்டிப்பாய் ரசிப்பீர்கள்.

பாடல் : மண்ணில் இந்தக் காதல் இன்றி...
படம் : கேளடி கண்மணி



பாடல் : கேளடி கண்மணி...
படம் : புதுப்புது அர்த்தங்கள்


\

பாடல் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு...
படம் : சிகரம்




பாடல் : ஜாதி மல்லிப் பூச்சரமே...
படம் : அழகன்




பாடல் : செம்பூவே பூவே...
படம் : சிறைச்சாலை




பாடல் : பூவே செம்பூவே...
படம் : சொல்லத் துடிக்குது மனசு




பாடல் : ராஜ ராஜ சோழன் நான்...
படம் : ரெட்டை வால் குருவி




ராஜாவின் இசை ராஜ்ஜியமும் வைரமுத்துவின் வைர வரிகளும் கலந்து கட்டி ஆடியிருக்கும் 'இது ஒரு பொன்மாலைப் பொழுது' எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை.  இன்றைய வீடியோப் பகிர்வில் எப்போதும் என் மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்றான நிழல்கள் படப்பாடல் இதோ


அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஜானகி அம்மாவின் வசீகரக் குரலில் வைரமுத்துவின் வைரவரிகளில் ராஜா புத்தும் புதுக்காலையை அவ்வளவு அழகாக வார்த்திருப்பார்... படத்தில் இந்தப் பாடல் இடம்பெறவில்லை.  ஆனால் ஆடியோவில் பட்டி தொட்டியெல்லாம் புத்தும் புதுக்காலை இப்போதும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதே புத்தும் புதுக்காலையை மேகாவில் ராஜா மீண்டும் வார்த்தார். அந்த இசையும் பாடகி அனிதாவின் அழகான குரலும் புத்தம் புதிய காலைக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கின்றன. இங்கே பழைய புத்தம் புதுக்காலை உங்கள் பார்வைக்காக.... 



இன்றைய பாடல் பகிர்வில் அனைத்துப் பாடல்களையும் ரசித்திருப்பீர்கள். மீண்டும் மற்றுமொரு பாடல் பகிர்வில் சந்திப்போம்.

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

வீடியோ : மாங்குயிலே... பூங்குயிலே....

இன்றைய பகிர்விலும் மீண்டும் மீண்டும் கேட்கும்... கேட்க நினைக்கும்... கேட்கத் தூண்டும் பாடல்கள் சிலவற்றைப்  பகிர்ந்திருக்கிறேன்.  எல்லாப் பாடல்களுமே கேட்கும் போது நமக்குள் ஒரு உற்சாகத்தைக் கொடுக்கும் பாடல்கள். அதுவும் கிராமிய இசையுடன் கிராமத்து பின்னணியும் சேர்ந்து கொள்ள சொல்லவா வேண்டும். நீங்களும் கேட்டுப் பாருங்கள்... 


படம் : ஒத்தையடிப் பாதையிலே
பாடல் : செப்புக்குடம் தூக்கிப் போற....




படம் : பகவதிபுரம் ரயில்வே கேட்
பாடல் : செவ்வரளி தோட்டத்திலே...




படம் : மெல்ல பேசுங்கள்
பாடல் : செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு...




படம் : பொல்லாதவன்
பாடல் : அதோ வாராண்டி வாராண்டி...




படம் : இளமைக்கோலம்
பாடல் : வச்ச பார்வை தீராதடி...




படம் : நீயா
பாடல் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்...




படம் : மௌன கீதங்கள்
பாடல் : மூக்குத்தி பூமேலே காற்று....





படம் : எட்டுப்பட்டி ராசா
பாடல் : பஞ்சு மிட்டாய் சேலை கட்டி...



எப்போது கேட்டாலும் இந்தப் பாடலின் இசையும் பாடலும் துள்ள வைக்கும்... வேலை நேரத்தில் பாடல் கேட்டுக் கொண்டே பணி செய்யும் போது இந்தப்பாடல் வந்தால் என்னையறியாமலே கை தாளம் போட ஆரம்பித்துவிடும்... \இந்தப் பாடல் கேட்டால் 'என்ன சேந்தம்பட்டியாரே சாமத்துல வாரே.. சாமந்திப்பூ தாரேன்னு சொன்னீங்க... எங்க சாமந்திப்பூவக் காணோம்' என கனகா கேட்பது ஞாபகத்தில் வரத் தவறுவதில்லை... 

என்னிடம் ராமராஜன் பாடல்கள் அதிகம் இருக்கின்றன. எல்லாப் பாடல்களையும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். காரணம் இசைராஜா... மோகனுக்குப் பின் ராமராஜனுக்கு எத்தனை விதமான ராகங்களைக் கொடுத்தார். அத்தனையும் தித்திப்பு.... 

இதோ  எப்போதும் நான் விரும்பும் பாடல்களில் ஒன்றான கரகாட்டக்காரன் படப்பாடல் மாங்குயிலே பூங்குயிலே...



பாடல் பகிர்வு தொடரும்.
-'பரிவை' சே.குமார்.