உங்க பேருக்கு பின்னால், எம்.ஏ., என, போடுறீங்களே?
நான் பல படங்களுக்கு பாடல் எழுதிருக்கேன். ஆனா பேருக்குபின் கவிஞர் என போட்டது இல்லை. எம்.எல்.ஏவான பின் கூட பேருக்கு பின் எம்.எல்.ஏ. என போட்டதில்லை. இந்த பதவிகளெல்லாம் நிரந்தரமானதல்ல. அப்பப்ப வரும்...போகும்...ஆனா படிச்ச படிப்பு எப்போதும் நம்மோட தான் இருக்கும். அதனால பேருக்கு பின் எம்.ஏ., எனப் போடுறேன். (நம்ம படிச்ச படிப்பை பேருக்குப் பின்னால போடுற தப்பில்லைங்க... இருந்தாலும் பலபேர் படிச்சி என்னத்தை கிழிச்சேன்னு கேக்கும்போது கஷ்டமாத்தானே இருக்கு)
பந்தா, பகட்டு, ஆடம்பரத்தில் நம்பிக்கை உண்டா?
கண்டிப்பாக இல்லை.சில பேர் கொஞ்சம் பணம் வந்தா காலரைதூக்கி விட்டுக்கிறான். ஆளே மாறிப் போயிடுறான். ஆனா என் முதல் படம் ரிலீசானதிலிருந்து இப்போ வரைக்கும் நான் மாறவே இல்லை. என்னைமதிக்காதவர்கள் மன்னாதிமன்னராக இருந்தாலும் அவங்க வீட்டு வாசலைக்கூட மிதிக்க மாட்டேன். மதிப்பவர்கள் மண் குடிசையிலிருந்தாலும் அவர்களை தேடிப் போவேன்.சுயமரியாதையை விட்டுவிட்டு வா என சொர்க்கத்திலிருந்து அழைப்பு வந்தாலும் கூட சொர்க்கமே வேண்டாம், சுங்குவார்சத்திரத்தில் சுக்கு காபி கிடைத்தால் போதும் என நினைப்பவன் நான். (தப்பா நினைக்காதீங்க... கலைஞர் கால்ல கூட்டணிக்காக விழுந்ததா சொல்றாங்களே உண்மையா?)
சிறிய பட்ஜெட்டில் படங்கள் வெளியாவது குறித்து?
சின்ன பட்ஜெட்டில் படம் எடுத்தால் அவங்களை கீழ்த்தரமா பார்க்ககூடாது. 20 கோடி, 30 கோடியில் படம் எடுத்து அதில் கிடைக்கும் லாபத்தை விட சின்ன பட்ஜெட்டில் படம் எடுத்து அதிகமா யார் லாபம் பார்க்கிறாங்களோ அவங்க தான் திறமையானவங்க. (இது உண்மை... திறமையை நிரூபிக்கும் பல இளம் இயக்குநர்கள் சிறிய பட்ஜெட்டில் ஜெயித்திருக்கிறார்கள்.)
ஆர்யா-சூர்யா படத்தில் குத்தாட்டம்ஆடியிருக்கீங்கலாமே?
ஆமாம். நடிகை முமைத்கானுடன் 'ரங்கு ரக்கற, ரங்குரக்கற...' என்ற பாடலுக்கு செமையா ஒரு குத்தாட்டம் போட்டுருக்கேன். நான் டான்சு ஆடின வேகத்தை பார்த்துட்டு பாவம்... அந்த பொண்ணுக்கு இரண்டாவது நாளே காய்ச்சல் வந்துருச்சு. அப்புறம் மாத்திரை, மருந்தெல்லாம் சாப்பிட்டு வந்து மறுபடியும் பட்டையை கிளப்புச்சு. (டண்டனக்கா... மாதிரி ரங்குரக்கற... சொல்லவே வேண்டாம்... நீங்க பட்டைய கிளப்பியிருப்பீங்க.... நல்லவேளை முமைத்கானுக்கு பேதி வராம காய்ச்சலோட போச்சே... அத விடுங்க... போட்டோவைப் பார்த்த காய்ச்சல் யாருக்கு வந்துச்சின்னு சந்தேகமா இருக்குங்கோவ்...)
கொஞ்சம் இளைச்ச மாதிரி தெரியுதே?
எல்லாரும் அப்படித் தான் கேக்குறாங்க. இப்போ உடம்பை மெயின்டெயின் பண்ண ஆரம்பிச்சுருக்கேன். என் பேர் டி. ஆர்., ஆக இருந்தாலும், நான், டீ கூட குடிக்கிறதில்லை. பையன் ஹீரோவா நடிக்கும்போது நீங்களும் ஹீரோவா நடிக்கி றீங்களே என கேட்க கூடாது. அவர் பாதை வேறு; என் பாதை வேறு. நிறைய பேர் இப்போ 'விக்' வைச்சுட்டு நடிக்கும் போது நான் 'விக்' இல்லாமல் நடிக்கிறேனே... அது போதாதா? (டீ குடிக்காம இருக்கீங்க சந்தோஷம்... அப்படியே 'கதா' நாயகனா நடிக்காம இருந்தா ரொம்ப சந்தோசப்படுவாய்ங்க இந்த தமிழ் ரசிகப்பயலுக... நான் கதாநாயகன்னு நீங்கதான் கூவுறீங்க... வீராசாமி பாத்துட்டுட்டு வீங்கிப் போயி கெடந்த ரசிகனுகளை மறந்துறாதீங்க... ப்ளீஸ்.)
குறிப்பு : அடைப்புக்குள் இருப்பது எனது கருத்துக்கள்...
செய்திக்கு நன்றி : தினமலர்
படங்களுக்கு நன்றி : கூகிள் இணையம்.
-'பரிவை' சே.குமார்.
2 எண்ணங்கள்:
அப்புடி என்னங்க அவர்(டி.ஆர்)மேல உங்களுக்கு ..............?(அவரு சினிமா உலகத்துல இந்த அளவு உயரத்துக்கு வர்றதுக்குப் பட்ட பாடு ....................ஹூம்!)
வாங்க யோகராஜா...
டி.ஆர். இந்த நிலையை அடைய பட்ட கஷ்டங்களையும் உழைப்பையும் நான் மதிக்கிறேன்.
அவர் மீது எந்தக் கடுப்பும், கோபமும் இல்லை.... இப்போ சில வருடங்களாக அவரது ஆட்டம் அதிகம்.. அதுதான் கமெண்ட்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கருத்துரையிடுக