மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் கேரள புதுவரவு நஸ்ரியா நசிம். தமிழில் இவர் நடித்துள்ள முதல்படம் நேரம். தமிழ், மலையாளம் என இரண்டு மொழியிலும் இப்படம் உருவாகியுள்ளது. இன்னும் இந்தப்படம் வெளியாகவில்லை, ஆனால் அதற்குள் அம்மணிக்கு கோலிவுட்டில் ஏகப்பட்ட வரவேற்பு. தற்போது ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்கா, தனுஷ் உடன் நய்யாண்டி, ஆர்யாவுடன் ராஜா ராணி என மூன்று படங்களில் நடித்து வருகிறார். நஸ்ரியா தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி...
* உங்களைப் பற்றி?
என் பெயர், நஸ்ரியா நசிம். கேரளா தான், சொந்த ஊர். அம்மா, அப்பா ஒரு தம்பி. சிறிய குடும்பம். இப்போது தான், பிளஸ் 2 தேர்வை எழுதி முடித்திருக்கிறேன்.
* நடிக்க வருவதற்குமுன்?
மலையாள, "டிவி சேனலில், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தேன். கொஞ்சம் பாடவும் தெரியும். தமிழ், மலையாள மொழிகளில் தயாரான, சில இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளேன். சினிமா பிரபலங்களின் தொடர்பு கிடைத்ததை அடுத்து, நடிப்பு சேவையாற்ற வந்து விட்டேன்.
* தமிழ் சினிமா பற்றி?
தமிழில், இப்போது, நல்ல கதைகள் படமாகின்றன. சிறந்த இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இப்போதெல்லாம், அதிகமான, தமிழ் படங்களை பார்க்கிறேன். படத்தின் கதை குறித்து, குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஆலோசித்து தான், நடிக்க சம்மதிக்கிறேன்.
* பெரிய ஹீரோக்களுடன் நடிக்கிறீர்களே?
நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே, பெரிய ஹீரோக்களுடன் நடிக்க, வாய்ப்பு கிடைத்ததை, எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன். நினைக்கும்போதே, மனதுக்குள், பட்டாம்பூச்சி பறக்கிறது. ஜெய்யுடன், "திருமணம் என்னும் நிக்காஹ் என்ற படத்திலும், தனுசுடன் "நையாண்டி என்ற படத்திலும் நடிக்கிறேன். ஆர்யாவுடன் "ராஜா ராணி படத்தில் நடிக்கிறேன். ஒவ்வொரு படத்திலும், எனக்கு வித்தியாசமான ரோல்.
* தமிழ் சினிமாவில், கேரள நடிகைகளுக்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து?
ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களுக்கு பிடித்தது போன்ற படங்களில் நடித்தால் போதும், அவர்கள், நம்மை கொண்டாடுவார்கள். அசின், நயன்தாரா ஆகியோர் நடித்த படங்களை எல்லாம், பார்த்திருக்கிறேன். கண்டிப்பாக, தமிழ் சினிமாவிலும், தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
செய்திக்கு நன்றி : தினமலர்
படங்களுக்கு நன்றி : கூகிள் இணையம்
-'பரிவை' சே.குமார்
1 எண்ணங்கள்:
"நேரம்".உண்மையில் இந்தப் படம் எல்லோரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.நீண்ட கால இடைவேளைக்குப் பின்,குடும்பத்துடன்(சிறுவர்&சிறுமியர்&குழந்தைகள்) உட்கார்ந்து பார்க்கக் கூடிய ஒரு சிறந்த படம்.மறு நிமிடம் என்ன நிகழும் என்று ஆவலுடன் காத்திருக்க வைத்த படம்.காலையில் ஆரம்பித்து மாலையே முடிந்து விடுகிறது!///இந்த 'நஸ்ரியா'..........உண்மையில் நல்லதோர் நடிகையாகப் பரிணமிக்க வாய்ப்பு உண்டு.
கருத்துரையிடுக