மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

கிராமத்து நினைவுகள்: காவல் தெய்வம்

புரட்டாசி மாதம் மூன்றாவது அல்லது நான்காவது சனிக்கிழமை எங்கள் ஊர் முனியய்யா கோவிலில் பொங்கல் வைத்து சுவாமி கும்பிடுவார்கள். அதன்படி நேற்று காலை பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு இருக்கிறார்கள்.

ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன் கடவுளாய் பார்ப்பவர்களுக்கு அவர் கடவுள்... கல்லாய் பார்ப்பவர்களுக்கு அவர் கல். என்னைப் பொறுத்தவரை அவர் கடவுள். எங்கள் ஊரில் எல்லோரும் பய பக்தியுடன் வணங்கும் காவல் தெய்வம். ஊருக்குள் நுழையும் முன்னர் ரோட்டோரத்தில் கண்மாய்க்குள் குடி கொண்டிருக்கிறார். அவரை ஒட்டி ஒரு பூவரச மரமும் வன்னி மரமும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து இருக்கும். வன்னி மரம் ஒரு மழையில் உடைந்து விழுந்து அப்படியே தழைத்து இன்னும் பசுமையாக இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை என்னோட எல்லாக் காரியத்திலும் முனியய்யாவைக் கும்பிட்டே ஆரம்பிப்பேன். எனக்கு அவர் மீது அப்படி ஒரு பாசம். என்னைப் பொறுத்தவரை அவர் மீது பாரத்தைப் போட்டுவிட்டு வேலையை ஆரம்பித்தால் எப்படியும் என்னால் ஜெயிக்க முடியும். இது என் அப்பாவிடம் இருந்து எனக்கு வந்தது. அவர் அப்படித்தான் எதெற்கெடுத்தாலும் முனியய்யா முன் நின்றுவிடுவார். 

கண்மாய் நிறைந்து அவரையும் தண்ணி சுற்றி நிற்கும் போதும் குளித்து முடித்து ஈரத்துண்டுடன் அவர் முன்னே போய் நின்று வணங்குவார். அவருக்கு அப்படி மனம் உருகி நிற்கும் போது கவுளி சொன்னால் (பல்லியின் சத்தம்) அந்தக் காரியத்தை தள்ளிப் போடாமல் நடத்தி முடித்துவிடுவார். 

நாங்கள் வீடு கட்ட ஆரம்பிக்கும் போது கையில் இருந்தது சில ஆயிரங்களே. ஆரம்பிப்போமா வேண்டாமா என்று யோசித்து எப்படி பணம் புரட்டுவது எனப் பயந்து தள்ளிப் போட நினைத்தேன். இருந்தும் எல்லாரும் ஆரம்பிக்க வேண்டும் என்று உறுதியாக நிற்கவே நீதான் எல்லாம் என அவர் மீது பாரத்தை இறக்கி வைத்துவிட்டு ஆரம்பித்து வங்கி கடன், நண்பர்களிடன் கடன் என வீட்டை ஒரு வழியாக முடித்து சில மாதங்களுக்கு முன்னர் குடிபோய்விட்டோம்.

நாங்கள் பள்ளியில் படிக்கும் போது பூவரச மரம் வேலின் மீது சாய்ந்து வளைத்துக் கொண்டு இருந்தது. அந்த மரத்தை வெட்டி சரி செய்ய எல்லாருக்கும் பயம். ஏனென்றால் அதில் நல்லபாம்பு  இருந்தது. வேலில் வந்து அமர்ந்திருந்ததாக பார்த்தவர்கள் சொல்வார்கள். இரவில் அந்த இடத்தைக் கடக்கும் போது உருளைக்கிழங்கு வாசம் நாசியைத் துளைக்கும். கை வைக்கப் போய் எதாவது வில்லங்கம் ஆகிவிட்டால் என்ன செய்வதென முனியய்யா கோவில் பூசாரியிடம் சாமி அழைத்துக் கேட்ட போது வெட்டக்கூடாது என்று சொல்லிவிட்டதாகச் சொன்னார்கள். சாய்ந்த மரம் வேலை வளைத்துக் கொண்டு பலகாலம் இருந்தது. 

எங்கள் ஊருக்கு வருவோரெல்லாம் ஊர் எல்லையில் முனியய்யாவை ஏன் இப்படி கூனி நிற்க வைத்து விட்டீர்கள் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அத்துடன் நில்லாமல் ஊர் எல்லையில் இருக்கும்காவல் தெய்வத்தை இப்படி வைத்திருந்தால் ஊர் எப்படி நல்லாயிருக்கும்என்று சொல்ல, அவர் மீதே பாரத்தை இறக்கி வைத்து ஒரு நல்ல நாளில் பூஜை போட்டு பிரபலமான கணபதி ஸ்பதியிடம் கோயில் கட்டும் பணியைக் கொடுத்தோம். அவரும் கருங்கல்லால் அழகிய மேடை அமைத்து அதன் மீது பீடம் அமைத்து முனியய்யா வேலை புதிதாக செய்து கோவிலை சிறப்பாக அமைத்துத் தர விமரிசையாக கும்பாவிஷேகம் நடத்தினோம்.

அதற்கு முன்னும் சரி அதற்குப் பின்னும் சரி புரட்டாசி மாதம் அவருக்கான பூஜையை சிறப்பாக செய்து வருகிறோம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் காளைமாடுகள் வந்து என்னை விரட்டுவதாக  கனவு வந்தது. மறுநாள் அம்மாவிடம் சொன்னேன். அவரும் புரட்டாசி மாதம் பிறந்திருச்சில்ல... அதான் முனியய்யா பூஜை வருதுன்னு ஞாபகப்படுத்தியிருக்கும் பயப்படாதேன்னு சொன்னாங்க. நேற்று அதிகாலை கனவில் சிலவருடங்களுக்கு முன்னர் இறந்த பெரியய்யா ஐயா  வந்து வாடா பேராண்டி நாம முனியய்யாவை கும்பிட்டு வருவோம் என்று கூட்டிச் செல்ல கும்பிட்டுத் திரும்பும் போது விழித்துவிட்டேன். நேற்றுக் காலை பொங்கல், புளியோதரையுடன் பூஜை சிறப்பாக முடிந்தது. மனைவி, மக்கள் சென்று அய்யாவின் அருள் பெற்று வந்தார்கள்.

எங்கள் ஊர் கண்மாய் நிறையும் போது பெரிய முட்டு சின்ன முட்டு என்று அழைக்கப்படும் பகுதிகள் மூழ்கினால் விளைந்துவிடும் என்று கணக்கு வைத்திருந்தார்கள் . அதே நேரம் முனியய்யாவைச் சுற்றி தண்ணீர் வந்துவிட்டால் அந்த வருடம் எரவாமரம் போட்டு தண்ணீர் இறைக்காமல் விளைந்து விடும். எங்கள் காவல் தெய்வம் முனியய்யா... ஆடு, கோழி பலி கேட்காத சுத்த சைவம்.

-'பரிவை' சே.குமார்.

23 எண்ணங்கள்:

பெயரில்லா சொன்னது…

பக்தி மணம் கவழும் இந்த ஆன்மீகப் பதிவை பரவசத்துடன் படித்தேன்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

காவல் தெயவம் பற்ற் கனிவான பகிர்வுகள்..பாரட்டுக்கள்..!

கவிதை வானம் சொன்னது…

எங்க ஊரில் இப்படிதான் சுடலை மாடன் என்ற சாமியை காவல் தெய்வம் என்பார்கள்.....ஆனால் அந்த கோயில் பக்கம் பகலில் கூட போக விடமாட்டார்கள் .....காவல் தெய்வம் நமக்குதானே அப்புறம் ஏன் பயம் காட்டுகிறார்கள் ....ஆன்மிகம் சில நேரம் புதிர்......? ஆனாலும் உங்கள் பதிவுகளில் கிராமத்து வாசனை அருமை ..படிக்க விறுவிறுப்பு

”தளிர் சுரேஷ்” சொன்னது…

காவல் தெய்வங்களும் குலதெய்வங்களும் வேறுபட்டாலும் நம்பிக்கை இறை பக்தியை ஒன்றினைக்கிறது! அருமையான பகிர்வு! நன்றி!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

காவல் தெய்வம் சுத்த சைவம் என்பது மேலும் சிறப்பு...

இனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...

மகேந்திரன் சொன்னது…

பலி கேட்காத காவல் தெய்வம்...
மனதுக்கு இனிய செய்தி...
அருமையான பகிர்வு நண்பரே...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

மண்மணம் கமழும் பதிவு. காவல் தெய்வம் பற்றி நினைவு கூர்ந்தது அருமை

வெங்கட் நாகராஜ் சொன்னது…

காவல் தெய்வம் - என்றும் உங்களைக் காக்கட்டும் என நானும் வேண்டிக் கொண்டேன்.

Unknown சொன்னது…

சுத்த சைவ சாமி என்றால் கூட்டம் கூட குறைவாய்த்தான் இருக்கும் !

துரை செல்வராஜூ சொன்னது…

என்றுமே நமக்கு முனீஸ்வரன் வழித்துணை!.. அவர் இருக்கின்றார். பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை தான் - இங்கே - தலை சாய்த்துப் படுக்கும் போது!..
ஐயா முனீஸ்வரனைப் பற்றிய நல்ல பதிவு!..

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ.ஸ்ரவாணி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ராஜராஜேஸ்வரி அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…


வாங்க பரிதி முத்துராசன் அண்ணா...
எங்கள் ஊரில் அப்படியெல்லாம் இல்லை... ரோட்டின் மீதுதான் இருக்கிறார்... பயமெல்லாம் இல்லை...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுரேஷ் அவர்களே....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க தனபாலன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ. மகேந்திரன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க முரளிதரன் சார்....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வெங்கட் அண்ணா...
தங்கள் வேண்டுதலுக்கு நன்றி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பகவான்ஜி...
இது எங்கள் கிராமத்துக்கான தெய்வம்... எங்கள் ஊரே சிறிய ஊர்தான்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க செல்வராஜூ சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

காவல் தெய்வங்கள் எல்லாமே, ஒரு காலத்தில் வாழ்ந்த, நம்மைக் காத்த நம் முன்னோர் என்பர். அவர்கள் நிச்சயம் நமக்கு தெய்வங்கள்தான்.
நன்றி ஐயா

பால கணேஷ் சொன்னது…

இயல்பான உங்கள் எழுத்து நடையில் கிராமத்துக் கோயிலுக்குச் சென்று நானும் வேண்டுதல் முடித்து வந்த உணர்வு. ஆடு, கோழி பலி கேட்காத சைவ தெய்வம் என்பது எனக்கும் மிகப் பிடித்தமான ஒன்றே.

Unknown சொன்னது…

காவல் தெய்வங்கள் எப்போதும் துணை நிற்கும்.பலி கேட்காத காவல் தெய்வம்,கேட்கவே மெய் சிலிர்த்தது,எனக்கு!

கோமதி அரசு சொன்னது…

நேற்று அதிகாலை கனவில் சிலவருடங்களுக்கு முன்னர் இறந்த பெரியய்யா ஐயா வந்து வாடா பேராண்டி நாம முனியய்யாவை கும்பிட்டு வருவோம் என்று கூட்டிச் செல்ல கும்பிட்டுத் திரும்பும் போது விழித்துவிட்டேன். நேற்றுக் காலை பொங்கல், புளியோதரையுடன் பூஜை சிறப்பாக முடிந்தது. மனைவி, மக்கள் சென்று அய்யாவின் அருள் பெற்று வந்தார்கள்.//
மெய்சிலிர்க்க வைத்த கனவு.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜெயக்குமார் ஐயா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கணேஷ் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ.யோகராஜா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கோமதி அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தெம்மாங்குப் பாட்டு....!! சொன்னது…

Enakkum engalathu gula saami muththaiyaa enraal atheetha nambikkai...!! oorukkuch sellum pothu paarththu vittu vara vendum..