மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 30 செப்டம்பர், 2013

மனசின் பக்கம்: கொஞ்சம் பேசுவோம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வரும் ஊதாக்கலரு அடிக்கடி கேட்கும் பாடலாக இருந்தாலும் மனதில் நிற்கும் மெலோடியாக பார்க்காதே பார்க்காதே ஆகிவிட்டது.  அலுவலகத்தில் 11 மணி நேரம் தொடர் பணி என்பதால் வேலை அலுப்புத் தெரியாமல் இருக்க இளையராசா பாடல்கள் கணிப்பொறியில் சேமித்து வைத்திருந்தாலும் ராசாவின் ராகங்களுக்கு இடையே சில புதிய பாடல்களும் அடிக்கடி கேட்கச் சொல்கின்றன அதில் இந்த பார்க்காதேயும் ஆனந்த யாழும் முக்கியப் பாடல்களாகிப் போய்விட்டன.



மத்தாப்பூ மற்றும் மூடர்கூடம் சென்ற வார விடுமுறையில் பார்த்தோம்... மூடர் கூடம் ஆஹா... ஓஹோ என்றெல்லாம் சொன்னார்கள். அந்தளவுக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை... பார்க்கலாம் படங்கள் ரகம்தான்... என்னோட ரசனை அப்படின்னு நினைக்கிறேன்... மத்தாப்பூ தினந்தோறும் நாகராஜ் பல வருடங்களுக்குப் பிறகு பண்ணியிருக்கிறார். கதை போரடிக்காமல் போகிறது. நாயகி... சோகத்தை அதிகம் சுமந்து கொண்டே திரிவதுதான் சகிக்கலை.... மற்றபடி இரண்டு படங்களுமே ஒருமுறை பார்க்கலாம். இன்னும் 6 மெழுகுவர்த்திகள் பார்க்கவில்லை... ஷாமின் நடிப்பிற்காகவாவது பார்க்க வேண்டும்.

கிராமத்து நினைவுகள் எழுதும் சந்தோஷத்தைவிட இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் வெங்கட் நாகராஜ் அண்ணன் எனது உப்பு வண்டியைப் படித்துவிட்டு அவரது மனச்சுரங்கத்தில் இருந்து சந்தையில் ஏலம் விடுதல், கீரை வாங்குதல் என சந்தை ஞாபகங்களை எழுதியிருக்கிறார். எனது பதிவையும் பற்றிச் சொல்லியிருக்கிறார். அண்ணனுக்கு நன்றி.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வரும் இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா பாட்டில் பின்னாடி சுத்த வச்சி என்ற வரி வரும். ஒரிடத்தில் சிவகார்த்திகேயன் பின்புறமாக திரும்பி இடுப்பை வளைத்து ஆட்டுவார். அப்போது அந்த வரியைக் கவனிக்க... எப்படி பாடுகிறார் பாடகர் என்று... இது தற்செயலாக நடந்ததா இல்லை வேண்டுமென்றே பாடினார்களா என்று தெரியவில்லை... இருந்தாலும் சந்தடி சாக்குல சுத்தவக்கிறதை கொஞ்சம் அழுத்திட்டாருபோல... என்னய்யா பண்றது நல்லதைவிட இந்த மாதிரி விசயங்கள் எல்லாம் கண்ணுல காதுல விழக்கெண்ணெய் ஊத்தாம கிளியரா தெரியுது... கேட்குதுங்க.



நூறாண்டு சினிமா விழாவுல தமிழகத்தின் தாய்... திரையுலக விடிவெள்ளி நினைத்ததை சாதிச்சிட்டு சத்தமில்லாம உக்காந்திருக்கு... ரஜினி, கமல், விஜய் மட்டுமின்றி மூத்த கலைஞர்களையும் வருத்தப்பட வைத்துவிட்டு விழாவை நடத்தியிருக்கிறார். தமிழ் சினிமா உலகின் நடிகர் சங்க கடனை தான் தலைவராக இருந்தபோது அடைத்த விஜயகாந்தை படத் தொகுப்பில் கூட சரியாக் காட்டக்கூடாதுன்னு சொன்ன அம்மாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மேல எம்புட்டு கடுப்பு இருக்கும்ன்னு பார்த்துக்கங்க... இப்ப ஆளாளுக்கு கேவலப்படுத்தப்பட்டுட்டோம்ன்னு புலம்புறாங்க... புலம்பி என்ன ஆகப்போகுது... எல்லாம் அம்மா செயல்.

விஷால் இப்பல்லாம் அதிகமா அரட்டை அடிக்கிறான். என்ன சொன்னாலும் அதுக்கு சரியா பதில் வச்சிருக்கான். அவங்க ஆயா ஏன்டா தம்பி அக்காவை அம்மா அடிச்சிக்கிட்டே இருக்குதாமே... எதுக்குடா அதை அடிக்கிதுன்னு கேட்டிருக்காங்க... எங்க அம்மா சும்மா சும்மா உங்ககிட்ட அழுதுக்கிட்டே இருந்தா நீங்க கொஞ்சுவீங்களோ... எங்க அம்மாவை அடிச்சித்தானே வளப்பீங்க... அப்படித்தான் பாப்பா சேட்டை பண்ணினா எங்கம்மா அடிப்பாங்கன்னு சொல்லியிருக்கான். அதுக்கு அப்புறம் ஆயா கேள்வி கேப்பாகங்கிறீங்க... எல்லாத்துக்கும் நாங்க பதில் வச்சிருக்கோமில்ல....

ஆரம்பம் படத்தில் என்னை எல்லாப்பாடல்களும் கவர்ந்தாலும் இந்தப் பாடலில் இசையும் அருமையா வந்திருக்கு... யுவன் சங்கர் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்...


மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

14 எண்ணங்கள்:

செங்கோவி சொன்னது…

இமான், மைனாவில் இருந்தே சரியான ரூட்டைப் பிடித்துவிட்டார்..!

செங்கோவி சொன்னது…

சுத்த வச்சி........மேட்டரை இப்போத்தான் கவனிக்கிறேன். நல்ல ஆளுங்கய்யா!

Unknown சொன்னது…

மனசின் பக்கம் அருமை!அந்த வ.வா.ச பாடலை மீண்டும் கேட்டுப் பார்ப்போம்,ஹி!ஹி!!ஹீ!!!///'அம்மா' ன்னா சும்மா இல்லடா..........இத விட்டா இனி சந்தர்ப்பம் கிடைக்குமோ,என்னமோன்னு நினைச்சுப் பாத்துட்டு................பண்ணியிருப்பாங்களோ?

Philosophy Prabhakaran சொன்னது…

எதற்கும் மூடர் கூடம் படத்தை இன்னொரு முறை பார்க்கவும்...

சு'வுக்கு பதிலா சூ'வை போட்டுட்டாங்களா ?

ஸ்ரீராம். சொன்னது…


சினிமா விஷயங்களாகப் படித்துக் கொண்டு வந்து விட்டு, 'விஷால் இப்பல்லாம்...' என்று படிக்கத் தொடங்கியவுடன் நடிகர் விஷால் என்று நினைத்து விட்டேன்! நான் இந்த புதிய படங்கள் எதுவுமே பார்க்கவில்லை!

பாமரன் சொன்னது…

புதிய திரைப்படப் பாடல்களில் 50% மேற்பட்டவை தரமற்ற வார்த்தைகளைத் தான் கொண்டுள்ளது என நான் எண்ணுகிறேன். பிழையிருந்தால் பொறுக்கவும்.

http://www.thamizhmozhi.net

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இனிமையான பாடல்களுடன் ஒரு பகிர்வு....

பதிவின் நடுவே என்னைப் பற்றியும், எனது பகிர்வு பற்றியும் குறிப்பிட்டமைக்கு நன்றி குமார்.....

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பாடல்கள் நல்லா இருக்கு...!

பெயரில்லா சொன்னது…

தாவணி கண்ணுக்குக் குளிர்ச்சியாக உள்ளது.
மற்றபடி நான் படமெல்லாம் தற்போது பார்ப்பது கிடையாது.
இதைப் போல படித்தால் தான் உண்டு.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மூடர் கூடம் நல்ல நகைச்சுவை படம்னுல்லா விமர்சனங்கள் வந்துட்டு இருக்கு...!

ezhil சொன்னது…

ஏதோ பேசலாம்னு சொல்றீங்களேன்னு கேட்க வந்தா எல்லாமே சினிமாச் செய்திகள்...படித்தேன்...மத்தாப்பூன்னு ஒரு படம் வந்துள்ளதே நீங்க சொல்லித்தான் தெரியும்....

கலையன்பன் சொன்னது…

உங்கள் எண்ணங்களைத் தொகுப்பாய் தந்த பதிவு அருமை சார்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

சுவையான சினிமா செய்திகள் .
சினிமாவை தன கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ள அரசியல் விரும்புகிறது. அதன் விளைவே இது.