நீண்ட நாட்களுக்குப் பிறகு நமது பதிவர்களான நாளைய திரைப்பட பாடலாசிரியர்களை வைத்து கதை சொல்லச் சொல்லலாம் என்று தோன்ற வைத்த பரிதிமுத்துராசன் அண்ணாச்சிக்கு நன்றி. எதுக்கு அண்ணனுக்கு நன்றின்னு கேக்குறீங்களா... இருங்க சொல்றேன்.... தொடர்ந்து எழுதலாம் என்று ஆரம்பித்த கதை சொல்லும் பதிவர்கள் பதிவு வேலைப்பளு மற்றும் புதுவீட்டுப் பணிக்காக சிக்கல்கள் களவாடிய பொழுதுகளில் எல்லாம் மறந்து போச்சு. அண்ணாச்சி நேற்று ஒரு பின்னூட்டம் இட்டு நமக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த சிங்கத்தை தட்டி... ஒரு தட்டு இல்லை ரெண்டு தட்டுத் தட்டி எழுப்பிவிட்டார். இதோ இங்கு சில பதிவர்கள் கதை சொல்கிறார்கள். இனி அவர்கள் பாணியில் தொடர்வோம்.
"வணக்கம் சார்..."
"சொல்லுங்க..."
"நான் ஒரு மரபுக்கவிஞன்... சுயநலவாதியில்லாத பொதுநலவாதி..."
"அதுக்கு.. நான் என்ன செய்யணும்?"
"இல்ல ஒரு படம் எடுக்கலாம்ன்னு இருக்கேன்... நல்ல கதை இருக்கு சார்.... இது சொல்ல மறந்த கதை இல்ல சொல்ல நினைத்த கதை..."
"என்னோட கதையே கீழ விழ வச்சி பட்டி தொட்டியெல்லாம் பரவிக்கிடக்கு... பொக்கிஷமா வளர்த்த மக காதல் கீதம் பாடிட்டா..."
"விடுங்க சார்... இதெல்லாம் இப்ப எல்லா இடத்திலும் நடக்கிறதுதானே.. என்ன பிரபலங்கள் பிற பலங்களால ஜெயிச்சிடுறீங்க... சாதாரண மக்கள் தோத்துடுறாங்க... வெளிய தெரியிறதில்லை... சரி கதைக்கு வருவோம்.... அப்படியே எல்லார் மனசுலயும் சாரல் அடிக்கிற மாதிரி நவ்யா நாயரை உங்க ஜோடியாக்கி ஒரு படம் பண்ணிரலாம்...."
"ம்... கதையை சொல்லுங்க..."
"இதயத்துல சாரல் அடிக்கிற மாதிரி கதை சார்..."
"அதைத்தான் சொல்லுங்கன்னு சொல்றேன்..."
"ஓபனிங்க சீன்ல நீங்க..."
"என்னால தல தளபதி மாதிரியோ... சுள்ளான் விசில் மாதிரியோ பில்டப்பெல்லாம் கொடுக்கமுடியாது... கையில ஒரு பேக் போட்டுக்கிட்டு பேக்கு மாதிரி வரணுன்னா அழகா வருவேன்..."
"அதே... அதேதான்.... ஞாபகம் வருதே .... ஞாபகம் வருதே... அது மாதிரி ஒரு ஓபனிங்க் சாங்க்... அப்புறம் கல்லூரி போறீங்க... அங்க உங்க இதயத்துக்குள்ள நவ்யா சாரல் அடிக்க அரம்பிக்குது... அப்படியே நகர்ற கதையில..."
"இதுவரைக்கும் ஒண்ணுமே நகரலையே ஐயா... நீங்கதான் அங்க இருந்து இங்க நகர்ந்து இருக்கீங்க... எனக்குப் பொருத்தமான கதையா இது தெரியலை... வேணுமின்னா மிஷ்கின், அமீர், சீமானை டிரைப் பண்ணிப் பாருங்க..."
"நவ்யா வேண்டான்னா நஸ்ரியாவை போட்டுக்கலாம் சார்..."
"போதும் இனி காதலிக்கிற மாதிரி படம் பண்ண எண்ணம் இல்லை... சாரி... மரபுக் கவிஞரே..."
"இதயத்துல சாரல் அடிக்கும்ன்னு வந்தேன்... சரி வேற யார்கிட்டயாவது சாரல் அடிக்கிதான்னு பார்க்கிறேன்... சரி வாறேன் சார்...."
"நல்லது... என்னோட படத்துல உங்களுக்கு பாட்டெழுத வாய்ப்புத்தாறேன்... சந்தோஷந்தானே...."
"ரொம்ப சந்தோஷம்..."
***
"வாங்கம்மா... கவிதாயினி..."
"வணக்கம் சார்..."
"சொல்லுங்கம்மா... என்ன விசயமா வந்தீங்க... சட்டுன்னு சொல்லுங்க... ஒரு விழா... அதுக்குத்தான் ரெடியாயிக்கிட்டு இருக்கேன்... இப்பல்லாம் வேஷ்டி சட்டையில தான் போறது..."
"உங்களுக்காகவே ஒரு கதை வச்சிருக்கேன் சார்... நீங்க புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்குறீங்கன்னு தெரியும் அதான்... நல்ல கதை சார்..."
"ம்... டயமில்லை... வேகமா சொல்லுங்க..."
"வேகமா சொன்னா கதை புரியணும்... புரியிற மாதிரி சொல்லணுமின்னா வேகத்தை குறைக்கணும்... வேகத்தைக் குறைத்தா கதையோட்டம் தெரியாது... கதையோட்டம் தெரியணுமின்னா வேகமா சொல்லித்தான் ஆகணும்... நானும் சொல்லனும் நீங்களும் கேட்கணும்.. கேட்கிற நீங்க சொல்ற நான்... எல்லாம் எப்பவும்... எப்படியும்... எல்லாராலயும்... எங்கயும்..."
"அம்மா.... கவிதாயினி... ஸ்... அப்பா... என்ன சொல்ல வாறீங்க... முடியல..."
"இல்ல சார் அப்ப அப்ப விசு சார் மாதிரி எழுதிப் பார்ப்பேன்... அதை ட்ரை பண்ணினேன்..."
"அப்ப அவருக்கிட்டயே ட்ரை பண்ணுங்க... என்னை விட்டுடுங்க..."
"சார்... சார்... ப்ளீஸ் கதையை சொல்றேன் கேளுங்க..."
"சொல்லுங்க..."
"தூரிகை வீசுற மாதிரி... அப்படியே முத்துக்களைச் சிதறவிட்ட மாதிரி ஒரு கதை சார்...."
"நீங்க கடல்ராசா..."
"என்னது மறுபடியும் கடல் ராசாவா... ஒரு தடவை பட்டதே போதும்... அம்புட்டுப் பயலும் அந்தப் புள்ளைய பாக்கத்தான் வந்திருக்காங்கன்னு அப்புறம்தான் எனக்குத் தெரிய வந்தது... சரி.. வேற மாதிரி சொல்லுங்க..."
"சரி எப்பவும் போல ஊர் சுத்துற கதாபாத்திரம்... உங்களுக்கு ஜோடியா ஸ்ருதி இருந்தா நல்லா இருக்கும்..."
"ஏம்மா மூணுல ஸ்ருதி சேர்ந்ததுதான் எல்லாருக்கும் தெரியுமே... நான் மூணு முடிச்சுப் போட்டவ வேற கொலவெறியோட முடியப் புடிச்சு ஆஞ்சுபுட்டா மறுபடியும் அந்தப் புள்ளயா... குடும்பத்துல குழப்பம் வேண்டாம் தாயி..."
"இல்ல தலைவர் வேற மேடையில கமல் சாரை அண்ணன்னு சொன்னாருன்னு படிச்சேன்... அவருக்கு அண்ணன் பொண்ணு உங்களுக்கு கொழுந்தியாதானே சார்..."
"ஏம்மா கதை சொல்றேன்னு சொல்லிட்டு திரிவக்கிறே... இருக்கிற கொழுந்தியா போதுந்தாயி..."
"சரி விடுங்க... கதைக்கு வருவோம்....சார் நீங்க ஆட்டோ ஓட்டுறீங்க.. ஒருநாள் உங்க ஆட்டோவுல கதாநாயகி ஏறுறாங்க..."
"ம்.. கதாநாயகியா ஸ்ரேயா இருக்கட்டும்... எனக்கு நல்ல பிரண்ட் அவங்க..."
"ஹன்சிகாவை கேட்கலாம் சார்..."
"எதுக்கும்மா... தேவையில்லாம வாலண்டா போயி வண்டியில ஏறச்சொல்றே.... நல்லா இருப்பே... ஏதோ வாழ்க்கை போயிக்கிட்டு இருக்கு... இப்ப படம் பண்ற ஐடியா இல்லை... நீ உன்னோட தூரிகையை சிதறாம எடுத்துக்கிட்டு விமல், சிவகார்த்திகேயன் இப்படி ஆளுங்களைப் பாரு.... நல்லா நடிக்கிற பயலுவ... கண்டிப்பா உங்க டீம் ஜெயிக்கும்..."
"சரி சார்... முடியாதுன்னு நாசூக்கா சொல்லிட்டீங்க... கடைசியா இரண்டு கேள்வி சார்... ஒண்ணு உங்க மனைவி வந்ததுக்கு அப்புறம் நிறைய நல்ல படங்கள். தேசிய விருது எல்லாம் வாங்கினாலும் எப்பவும் அண்ணன்... அண்ணன்னு அவரையே சொல்றீங்களே... கட்டின மனைவியை சொன்னா என்ன சார்.."
"ஏம்மா... ஏன்... நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு...."
"அப்புறம்...?"
"அம்மா தூரிகை... ப்ளீஸ் என்னோட குடும்பத்தை சிதறவிட்டுறாதேம்மா... மூணுல நொறுங்கி நிக்கிது... விழுகாம தாங்கிப் பிடிச்சிருக்கேன்... கொஞ்ச நாள் கழித்து வாங்க கண்டிப்பா உங்களுக்காக ஒரு படம் பண்றேன்..."
"சரி சார்.... சிவகார்த்திகேயனை வச்சிப் பண்றேன்... நீங்கதான் தயாரிப்பாளர்... " என்றபடி நகர்கிறார் கவிதாயினி.
"அதுசரி... சிவாவ சொன்ன ஒத்துக்குவேன்னு பாக்கிறீங்க... விசு சார் வசனம் எழுதுங்க... நான் கூட இப்ப வரப்போற படத்துல ஒரு பாட்டு விசு சார் மாதிரி டிரைப் பண்ணியிருக்கேன்... நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு... உங்க விசு வசனத்துக்காகவே அடுத்த தயாரிப்புல உங்களை வசனகர்த்தாவா ஆக்கிடலாம்..."
"ஆகட்டும் சார்..."
***
"என்ன விஷயமா வந்திருக்கீங்க?"
"உங்ககிட்ட கதை சொல்லலாம்ன்னு..."
"கதையா... இப்ப கேக்கிற மூடுல நான் இல்ல... எங்க அப்பாகிட்ட வேணுமின்னா..."
"அவருகிட்டயா... ஐய்யய்யோ டண்டணக்கா டணக்குணக்கான்னாருன்னா என்னோட எண்ணத்துல ஓவியமா இருக்கிற கதை இதுவரை சிதறாம இருக்கு... மௌனத்தைக் கலைச்சா சிதறி ஓடிரும்... அஞ்சே அஞ்சு நிமிடம் சார்..."
"சொல்லுங்க... ஹன்சிக்கு கிப்ட் வாங்கப் போகணும்..."
"அப்படி என்னதான் கிப்ட் கொடுப்பீங்க.... எப்ப பார்த்தாலும் கிப்ட் கிப்ட்டுன்னு... சரி... சரி... கொடுக்கிறதை கொடுத்தாத்தானே.... கிடக்கிறது கிடைக்கும்"
"என்ன என்னம்மா.... என்னய பார்த்தா எப்படி தெரியுது..? "
"கோபப்படாதீங்க... கதைப்படி நீங்க மன்மதன்...."
"கதையில மட்டுமில்ல... எப்பவுமே நான் மன்மதன்தான்..."
"தெரியுமே..."
"நாயகியோட பேரு ஐஸ்வர்யா... நாயகியா ஸ்ருதி இருந்தா..."
"இந்த ஐஸ் வேண்டாம்... நான் ஒரு சைஸ் ஆனாதே இந்தப் பேராலதான்... அப்புறம் இனி என்னோட நாயகி ஹன்சி மட்டும்தான் அவதான் நாயகியா இருக்கணும்... வேணுமின்னா செகண்ட் ஹீரோயினியா நயனைக் கேட்டுக்கலாம்... சரி கதைக்கு வாங்க..."
"கதைப்படி நீங்க விரல் வித்தை செய்யும்...."
"சர்க்கஸ்க்காரனா... சுள்ளான் பாடிக்கலக்குறான்... நான் ஆடிக்கலக்குவேன்... கமலுக்கு சலங்கை ஒலி மாதிரி எனக்கு கதை ரெடி பண்ணிக்கிட்டு வாங்க.... ஒவ்வொரு பாட்டுலயும் பின்னால பத்து நிமிசம் டண்டணக்கா அடிக்கு அலப்பறையா ஆட்டம் போடணும்..."
"டண்டணக்கா உங்க குடும்பக்குத்தா சார்.."
"என்னது?"
"இல்ல குடும்பச் சொத்தான்னு கேக்க வந்தேன்... டங்க் சிலிப்பாயிருச்சு... சரி கதைக்குப் போவோம்... நீங்க நிறைய பொண்ணுங்களோட பழகுறீங்க... அப்ப ஒரு பெண்ணால சிக்கல்... அந்தச் சிக்கல்ல இருந்து எப்படி வெளிய வாறீங்கன்னு கதை சொல்றோம்..."
"ஒரு நேரம் ஒரு பொண்ணோடதான் பழகுவேன்... இதுதான் என்னோட பாலிசி... சரி கதைதானே... சிக்கலெல்லாம் எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி... என்னைய தப்பானவனாவே பத்திரிக்கைக்காரங்க முன்னிறுத்துறாங்க... ஏன்னே தெரியலை... மனசுக்குப் பயந்து... கடவுள் என்ன சொல்றானோ அதுபடி வாழ்றவன்... சரி... எனக்கு நேரமாச்சு... ஹன்சி காத்திருப்பா... கோபமாயிட்டா வடக்க போயிடுவா..."
'நஸ்ரியான்னு ஒண்ணு வந்திருக்கே அதுக்கு ஏதாவது..."
"அடுத்தது அதுதான் நம்ம டார்க்கெட்.... ஒண்ணு செய்யுங்க... நம்ம படத்துக்கு நயன் வேண்டாம்... நஸ்ரியாவை கேளுங்க... எனக்கும் ஒரு நல்ல படம் பண்ணின மாதிரி இருக்கும்... அப்புறம்.."
"தெரியும்... முதல்ல ஹன்சியைப் பாருங்க... சிவகார்த்திகேயன் பிந்து பிந்துன்னு பின்னாடி போகம ஹன்ஸ்ன்னு முன்னாடிப் போகப் போறாரு... நயனுக்கு ஒரு தேவா மாதிரி... ஹன்ஸ்க்கு யாரோன்னு பத்திரிக்கைகாரங்களும் முகநூல் நண்பர்களும் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க... முதல்ல வாழ்க்கை ஓவியத்தை கலையாமப் பாருங்க.. எதாவது ஒண்ணுல ஸ்டெடியா இருங்க... உங்கப்பா மாதிரி எல்லாத்துலயும் டண்டணக்கா போடாமா... உங்ககிட்ட பேசினதுல என்னோட எண்ண ஓவியம் கலஞ்சிபோச்சு... புதுமுகத்தை வைத்து பண்ணலாம்ன்னு முடிவுக்கு வந்திட்டேன்... பாக்கலாம்..."
"இருங்க.... இருங்க.... முகநூல்ல மௌனமா சிதறுற எல்லாம் நல்லாயிருக்கு... ஒரு தொகுப்பா எடுத்துக் கொடுங்க... உங்களுக்கு நேரமில்லைன்னா உங்க அண்ணன்கிட்ட சொல்லி எடுக்க சொல்லுங்க... அடுத்த படத்துல பஞ்ச் டயலாக் ஆக்கிடலாம்..."
"சரி... எங்கண்ணன்தானே... அவன் ஒரு சோம்பேறி... சொல்லிப் பார்க்கிறேன்... வாறேன் சார்..."
இங்கு கதை சொன்ன மூவரையும் யாரென்று கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். நண்பனிடமும் தங்கையிடமும் அனுமதி வாங்கியிருக்கிறேன்... திட்டுவதென்றால் மின்னஞ்சலிலோ அலைபேசியிலோ திட்டுங்கன்னு சொல்லியிருக்கேன்... கவிதாயினி எனது அக்காவிடம் மட்டும் சொல்லவில்லை.... எப்பவும் அக்கா தம்பி கட்சி... அதனால் திட்டமாட்டாங்க.... சரி... தொடரும் எண்ணம் இருந்தால் சில பதிவர்களோடு மற்றுமொரு சந்தர்ப்பத்தில் தொடரலாம்...
-'பரிவை' சே.குமார்.
7 எண்ணங்கள்:
எங்கண்ணன்தானே... அவன் ஒரு சோம்பேறி - இப்படி உண்மையை ஒத்துகிட்டதால நோ திட்டு //நல்லவேலை என்னை சோம்பேறினு சொல்லி உண்மையை உடைச்சுடுவீங்களோனு பயந்துட்டேன்//
'நஸ்ரியான்னு ஒண்ணு வந்திருக்கே அதுக்கு ஏதாவது..."//
ஹி ஹி......
கதை சொல்லிக் கொண்டு வரும்போதே யார் யார் என்று புரிந்துவிடுகிறது!
ரசித்தேன்...
திட்டும் படி எதுவும் எழுதி விடவில்லை... தொடருங்க.. வாழ்த்துக்கள்...
ஹஹா...தம்பீ...பரிவை பாரதிராசான்னா சும்மா..அசத்தல். :) அது சரி...நண்பன், தம்பி, தோழி எல்லாம் சேர்ந்து ஒருமுடிவோடத்தான் இறங்கியிருக்கீங்களா..தொடரட்டும் தம்பியின் குறும்புகள். வாழ்த்துகள்.
தம்பீ..இனி யாரும் கதை இருக்கு சொன்னா என் தம்பி படம் தயாரிப்பதோட இலவசமா நடிச்சும் கொடுக்கும் சொல்லிடறேன் சரியா..:)
எனக்கு யோசிக்க டயமில்லை, இப்ப படிக்கத்தான் டயமிருக்கு. அடுத்தவாட்டி கண்டிப்பா யார்யாருன்னு சொல்லிடுறேன்.
கருத்துரையிடுக