மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 30 ஜனவரி, 2013

"தமிழகம் நான் வெளியேற வேண்டும் என விரும்புகிறது" கமல் பேட்டி



விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக சென்னையில் பேட்டியளித்த கமல் , "என்னுடைய படம் நடக்கும் களம் ஆப்கானிஸ்தான். இது இந்திய முஸ்லிம்களை எப்படி கேலி செய்ய முடியும். என்னுடைய இந்த படத்தை எடுத்திருப்பதாக பெரும் செலவு செய்திருக்கிறேன். என்னுடைய திரையுலகை அனுபவத்தையும் எனக்கு இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்டும் இந்த படத்தை எடுத்துள்ளேன். இந்தபடத்துக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் அடகு வைத்துள்ளேன்.

படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் இப்போது நான் உங்களுக்கு பேட்டி அளித்து கொண்டு இருக்கும் இந்த வீடு ‌எனது இல்லை. கோர்ட்டில் வழக்கு நடந்தபோது நீதிபதி கேட்டார். ஒருவரின் முதலீடுக்காக நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டுமா என்று கேட்டார். நான் இப்போதும் சொல்கிறேன். நாட்டின் ஒற்றுமை தான் முக்கியம். நாட்டுக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் இழக்க தயாராக இருக்கிறேன்.


எனக்கு மதம் கிடையாது, அரசியல் கிடையாது. எனக்கு மனிதநேயம் முக்கியம். மனதில் பட்டதை தைரியமாக எடுத்து சொல்பவன். இந்தப்படம் நிச்சயம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் கிடையாது. எதற்காக எனது படத்தை தடை செய்கிறார்கள் என்று புரியவி‌ல்லை.

என்னை வீழ்த்தி விடலாம் என்று சிலர் கருதுகின்றனர். நான் விழுந்தால் விதையாக விழுவேன். ஒருவேளை தமிழகம் மதச்சார்ப்பற்ற மாநிலமாக இல்லாமல் போய்விட்டால் நிச்சயம் வேறு ஒரு மாநிலத்தை தேடி போவேன். அதற்காக தமிழகத்தை விட்டு வெளியேறவும் நான் தயார். வேறு மாநிலமும் கிடைக்காவிட்டால் வேறு நாட்டை தேடி போவேன்.

இன்று படம் பார்க்கச் சென்ற எனது ரசிகர்களை தியேட்டர்களை விட்டு வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று விளங்கவில்லை. என்னிடம் இப்போது எதுவும் இல்லை. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை. எனது ரசிகர்கள் அமைதியானவர்கள். அவர்களில் பலர் முஸ்லிம்கள். அவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார்கள்.


கேரளாவில் மலபார், ஐதராபாத்தில் படம் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் எனது நீதி தாமதப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு பேசினார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பிய நிருபர் ஒருவர், நீங்கள் தமிழகத்தை வெளியேற வேண்டும் என விரும்புகிறீர்களா என கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகம் தான் நான் வெளியேற வேண்டும் என விரும்புகிறது என கமல் வேதனையுடன் தெரிவித்தார்.


செய்தி : தினமலர்.
-'பரிவை' சே.குமார்

4 எண்ணங்கள்:

Yoga.S. சொன்னது…

வணக்கம்,குமார்!உண்மையில் இந்தப் படம் அமெரிக்காவிலோ/ஐரோப்பாவிலோ அந்த அந்த நாட்டு மொழிகளில் தயாரிக்கப்பட்டிருந்தால்................................?

பால கணேஷ் சொன்னது…

நல்லதொரு கலைஞனை இவ்வளவு மனவேதனைப்பட வைத்து விட்டது இந்தப் பிரச்னை. விஜயகாந்த் நடித்த பல படங்களில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை காட்டியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் வராத பிரச்னை இப்போது ஏன் என்பது என் சிற்றறிவுக்கு எட்வில்லை குமார்!

indrayavanam.blogspot.com சொன்னது…

கமல் நீங்க எதுக்கு போறீங்க அடுத்த தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா போகட்டும்...

RAMA RAVI (RAMVI) சொன்னது…

ஒரு சிறந்த கலைஞருக்கு நாம் கொடுக்கும் பரிசு?? வேதனையாக இருக்கு.