கருக்கலிலே எழுந்திருச்சு
காளைகளை குளிப்பாட்டி
புது கயிறுயும் மணியுமிட்டு
காவித் துண்டும் கட்டி
மஞ்சள் பொட்டோடு
காவியும் கலந்து இட்டு
கரும்பும் கிழங்கும்
அதனூடே பொங்கத்தாலி
கொஞ்சம் வைத்துக்கட்டி
ஊர் கூடி ஒன்றாக
கருப்பர் கோவில் வாசலிலே
பொங்கல் வைத்து
'பொங்கலோ பொங்கல்'
என சந்தோஷமாய்
திட்டிக்குழி சுத்தி வந்து
மாட்டுக்கெல்லாம்
பொங்கல் கொடுத்து
கேலிகாரர்களுக்கும்
பொங்கல் தீட்டி உற்சாகமாய்
கொண்டாடும் கிராமத்து
மாட்டுப் பொங்கல்
நெஞ்சுக்குள்ளே இனிக்கிறது
சர்க்கரைப் பொங்கலென...
என் கிராமத்து மக்களுக்கும்
நண்பர்களுக்கும் உறவுகளுக்கும்
மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்
-'பரிவை' சே.குமார்.
3 எண்ணங்கள்:
இனிய வரிகள்..
அருமை குமார்.
இனிய பொங்கல் வாழ்த்துகள்.
மாட்டுப் பொங்கலுக்கான கவிதை மிகச்சிறப்பாக இருக்கு,குமார். வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக