மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 5 டிசம்பர், 2015

தமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...


மிழ்க்குடில் அறக்கட்டளை தன்னார்வத் தொண்டு செய்வதில் தனித்து விளங்குகிறது என்பதை அதனோடு தொடர்புடைய அனைவரும் அறிவோம். எனது நண்பன் தமிழ்க்காதலன் மற்றும் அன்பு அக்கா காயத்ரி உள்ளிட்ட குடிலின் உறவுகள் அனைவரும் தொண்டுள்ளத்தோடு செயல்படுகிறார்கள் என்பதை அவர்கள் செய்யும் பல செயல்கள் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

தற்போது தமிழக மழை வெள்ள சேதத்தில் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் கடலூரில் அரசின் உதவிகள் கிடைக்கப்பெறாத நிலையில் மக்களே தன்னார்வத்தோடு இறங்கி வேலை செய்கிறார்கள். சென்னையைக் கவனத்தில் கொண்ட் அளவுக்கு கடலூரை யாரும் கவனிக்கவில்லை என்ற செய்திகள் முகநூல் பக்கத்தில் நேற்றுக் காலைவரை அதிகம் பகிரப்பட்டன. அதன் பிறகு கடலூரில்  தன்னார்வத் தொண்டர்களும், மக்கள் கொடுத்த பொருட்களைச் சுமந்த வாகனங்களும் நிறைந்து மக்கள் பாதுகாப்பில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றன என்ற செய்திகள் வர ஆரம்பித்தன.


கடந்த இரண்டு நாட்களாக தமிழ்க்குடில் அறக்கட்டளையின் சார்பாக எனது நண்பன், இதயச்சாரல் வலைப்பூவில் எழுதி வந்த  தமிழ்க்காதலன் தனது நண்பர்களுடன் இணைந்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து வருகிறார். தமிழ்க்குடில் அறக்கட்டளை தன்னலம் கருதாது செயல்படும் ஒரு அமைப்பு... எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செயல்படும் அமைப்பு என்பதால் நாமும் அவர்களுடன் கை கோர்க்கலாம். நம்மாலான உதவிகளை நாம் செய்யலாம்.

பஹ்ரைனில் இருக்கும் தம்பி தினேஷ் குமார், தனது நண்பர்களிடம் வசூலித்து ஒரு தொகையை மக்கள் நிவாரணப் பணிக்காக அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார். நாமும் நம்மாலான உதவியைச் செய்யலாம். வெளிநாட்டில் என்றால் பணமாகவும், உள்நாட்டில் என்றால் முடிந்தால் பொருளாகவோ அல்லது பணமாகவோ கொடுக்கலாம். அபுதாபியில் இருக்கும் நட்புக்கள் நாமெல்லாரும் சேர்ந்து அனுப்பலாம் என்று நினைத்தால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். இல்லை தாங்களே தனியாக அனுப்புவது என்றாலும் இல்லை அவர்களைத் தொடர்பு கொண்டு உண்மை விவரம் அறிந்து நான் உதவி செய்து கொள்கிறேன் என்றாலும் 9818126890 என்ற நம்பரில் தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளுங்கள்.


பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழ்க்குடில் களப்பணியாற்ற இறங்கியிருப்பது குறித்து காயத்ரி அக்கா தனது தூரிகைச் சிதறல் தளத்திலும் முகநூலிலும் பகிர்ந்து கொண்ட செய்தி கீழே

"அன்புத்தோழமைகளுக்கு தமிழ்க்குடிலின்அன்பான வணக்கம்.

இயற்கையின் விளையாட்டில் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்காக நம்மால் இயன்ற அளவு உதவிசெய்திட இருக்கிறோம். முதல் கட்டமாக கடலூர் மக்களுக்கு நம் கரங்களை நீட்டிட எண்ணி நம் பயணத்தைத் துவங்கியிருக்கிறோம். இச்செயலில் தங்களையும் இணைத்துக்கொள்ள விரும்பும் அன்புள்ளங்கள் தொடர்பு கொண்டு உதவிட வேண்டுகிறோம். உங்களின் ஒவ்வொரு சிறுதுளியும் எங்கோ இருக்கும் நம் சகோதர சகோதரிகளுக்குப் பயன்படும் என்பதால் தங்களுடைய ஒத்துழைப்பையும் வழங்கிட வேண்டுகிறோம்.  தமிழ்க்குடில் அன்பர்கள் இன்று நிவாரணப்பொருட்களோடு கடலூருக்கு சென்றுள்ளனர். 

நம் பயணத்தில் தொடர்ந்து கரம் கோர்த்து வரும் அனைவருக்கும் நன்றியும், மகிழ்ச்சியும்.

என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில்"

விபரம் அறிய காயத்ரி அக்காவின் முகநூல் பக்கம் செல்ல இங்கு சொடுக்குங்கள்.

நண்பர்களே... பாதிப்பில் இருக்கும் மக்களுக்கு நம்மாலான உதவிகளைச் நாமும் செய்யலாமே... வாருங்கள் இணைந்து செயலாற்றுவோம்.










இங்கு பகிரப்பட்டிருக்கும் படங்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட கிராமங்கள்ல் தமிழ்க்குடிலின் நிவாரணப் பணியின் போது எடுக்கப்பட்டவை.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

35 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தமிழ்க்குடிலின் சேவைகளுக்கு நன்றிகள் பல...

S.P.SENTHIL KUMAR சொன்னது…

இது போன்ற தன்னலமற்ற சேவைக்கு பாராட்டுகள்! தொடரட்டும் நண்பர்களின் சேவை.

காரைக்குடியில் இருக்கும் எனது நண்பர் ராஜ்குமார் இரண்டு கண்டைனர் லாரிகளில் நிவாரணப் பொருட்களையும் 100 மூட்டை அரிசியும் எடுத்துக் கொண்டு நீச்சல் தெரிந்த இளைஞர்களை அழைத்துக் கொண்டு கடலூருக்கு சென்றிருக்கிறார்.
த ம 3

S.P.SENTHIL KUMAR சொன்னது…

தமிழ்மணம் பிரச்சனையாக உள்ளது. ஒட்டு பதிவாகவில்லை.

மீரா செல்வக்குமார் சொன்னது…

தமிழ்க்குடில் வாழட்டும்.....

KILLERGEE Devakottai சொன்னது…

உதவித்தொகைக்கு அபுதாபி வட்டத்தில் என்னையும் சேர்க்கவும் நண்பரே..
தமிழ் மணம் 3

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் உங்களுக்குச் சில யோசனைகள் சொல்லலாம் என்று நினைக்கின்றோம்.

தமிழ்க்குடில் தன்னலமற்ற அமைப்பு என்பதால் இதைச் சொல்லுகின்றோம்

1. சென்னையில் பல இடங்களில் ஒரே இடத்திற்கு குவிந்த உதவிகள் சென்றடைந்துள்ளன.

2. அவர்களுக்குச் சாப்பாடு வேண்டாம் என்றும் சொல்லுகின்றார்கள். எனவே என்ன தேவை என்று அறிந்து கொள்ளுங்கள்.

3. உங்கள் குழுவிற்கு என்று ஒரு தலைமைப் பொறுப்பை எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். அவர் அங்கு எந்த பகுதிகளுக்கு இது வரை என்ன நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது, எந்தப் பகுதிக்குச் செல்லவில்லை எதுவும் இல்லை எது கொடுக்கப்பட வில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். முடிந்தால் வேறு தன்னார்வலர்கள் உதாரணம் நிசப்தம் மணிகண்டனும் கடலூருக்கு உதவுவதாக இருக்கின்றார். தொடர்பு கொண்டால் அவர்களும் நீங்களும் ஒரே பொருளைக்/ உதவியைக் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.

4. சிறு குழந்தைகள் உள்ளவர்கள் ஸ்னக்கி போன்றவையும், பெண்களுக்கு சானிட்டரி நாப்கினும், பின்னர் காமன் மருந்துகளும், குழந்தைகளுக்குப் பால் பௌடர்,... கேட்கப்பட்டதாக அறிந்தோம். செருப்புகள், குடைகள். இதில் ஒரு சின்ன விசயம் இருக்கு நண்பரே அதையும் நீங்கள் கவனித்தில் கொள்ள வேண்டும். அதாவது சிலர் இது போன்று கொடுக்கப்படும் பொருட்களைக் கடையில் கொடுத்து காசு பண்ணுவதாக அறிய முடிகின்றது. எனவே நீங்கள் எல்லோரும் இத்தனை தூரத்திலிருந்து செய்வதால், பகுதி பகுதியாகப் பரித்து அங்கு வேறு தன்னார்வலர்கள் இதே உதவியுடன் வருவதைத் தவிர்த்து வேறு பகுதிக்கு டைவர்ட் செய்து பொருட்கள் சரியாக போகிறதா என்று பார்த்துக் கொள்ளவும். பகுதியாகப் பிரிக்கும் போது அங்கு எத்ஹ்டனைக் குடும்பங்கள், பெரியவர்கள் சின்னவர்கள் குழந்தைகள் எத்தனை என்றும் என்ன தேவை என்பதையும் எவ்வளவு தேவை என்பதையும் அறிந்து கொண்டு பணம் விரயம் ஆகாமல் செய்ய முடியும்.

5. பள்ளிக் கூடங்கள் பாதிப்பில் இருந்தால் அவற்றிற்கும் உதவலாம். அதுவும்முக்கியம் இல்லையா..

6. நிறைய குழந்தைகளின் நோட் புத்தகங்கள் தண்ணீரில் வீணாகிவிட்டதாகவும், அடித்துச் செல்லப்பட்டதாகவும் அறிந்தோம். எனவே ஸ்கூக் பைகள், நோட்டுப் புத்தங்கள், பென்சில், ஜியாமெட்ரி பாக்ஸ் போன்றவையும் கொடுக்கலாம். கடலூரில் குழந்தைகள் நிறைய பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.

எது செய்தாலும் சானலைஸ்டாகச் செய்யுங்கள். இங்கு சென்னையில், சிறிய பகுதியில் இளைஞர்களை வழி நடத்தியதையே இங்குச் சொல்லியிருக்கின்றோம்.

தமிழ்க்குடில், உங்கள் எல்லோருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! தங்கள் நல்லிதயத்திற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மற்றொன்றும் பெரிய அளவில் செய்யும் தன்னார்வலர்களுக்குச் சொன்னதைச் சொல்ல விழைகின்றோம்.

நிறைய பணம் சேர்ந்தால், ஒரு சிறிய பகுதிக்கேனும் கழிவறைகள் கட்டிக் கொடுக்கலாம். இங்குப் படத்தில் பார்ப்பவை எல்லாமே குடிசைகளாக இருக்கின்றன. அரசு எவ்வளவு தூரம் இவர்களுக்கு வீட்டைச் செப்பனிட உதவும் என்று தெரியவில்லை...வீடு? குடிசைகளை.
நிச்சயமாகக் கழிவறைகள் இருப்பவையாகத் தெரியவில்லை. எனவே தான்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

தங்கள் கருத்துக்களை எங்கள் நண்பர்களுக்கு தெரிக்கிறேன் துளசி சார்...
அருமையான யோசனைகள்...
உண்மைதான்... நிறைய நல்ல விஷயங்களை என் நண்பன் தமிழ்க்காதலன் கடலூரில் செய்து வருகிறான்.
நேற்று கனமழையிலும் கிராமங்களில் உதவி செய்ததாய்ச் சொன்னான்.
அவர்களின் உதவி விபரங்கள் அறிய
https://www.facebook.com/kayathrivaithyanathan
இங்கு போய்ப் பாருங்கள்...காயத்ரி அக்கா அப்டேட்ஸ் கொடுத்துக் கொண்டும் குழுவை வழி நடத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.

தங்கள் கருத்துக்கள் எல்லாமே செயல்படுத்த வேண்டியவை... நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
காரைக்குடியில் இருந்து உதவி செய்ய கிளம்பியிருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில் சார்...
என்ன பிரச்சினை என்று தெரியவில்லை...
குடிலில் பகிர்வு பதியக்கூட ரொம்ப நேரம் எடுக்கிறது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
கண்டிப்பாக.... நாம் இணைந்து அனுப்புவோம் அண்ணா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

கண்டிப்பாக சார்...
நானும் அப்படித்தான் நினைக்கிறேன்..
தற்போதைய தேவைக்கென நிறைய கொடுக்கிறார்கள்.
மழைக்குப் பின்னான தேவைகளை எல்லாரும் செய்வார்களா தெரியாது...
அப்போது செய்வது இன்னும் சிறப்பாகும்தானே...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
கண்டிப்பாக.... நாம் இணைந்து அனுப்புவோம் அண்ணா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில் சார்...
என்ன பிரச்சினை என்று தெரியவில்லை...
குடிலில் பகிர்வு பதியக்கூட ரொம்ப நேரம் எடுக்கிறது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
காரைக்குடியில் இருந்து உதவி செய்ய கிளம்பியிருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள்.

Yarlpavanan சொன்னது…

தொண்டர்களை
கடவுளின் பிள்ளைகளாக
வணங்குகின்றேன்

வானிலிருந்து - கடவுள்
தன் திருவிளையாடலைக் காட்ட
தரையிலிருந்து - மக்கள்
துயருறும் நிலை தொடராமலிருக்க
கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

போதும் போதும் கடவுளே! - உன்
திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

அன்பே சிவம் சொன்னது…

தங்கள் முயற்சிக்கேற்ப நிதி
திரளும்....

வழங்கப்படும் பொருட்களுடன்

ஒரு டார்ச் லைட் சேர்த்தால் நன்றாக இருக்கும்
இந்த இருண்ட சூழலில் மக்களுக்கு மிகவும் உபயோகமாக
இருக்கும்..
நன்றி.

அன்பே சிவம் வேலூர்.

அன்பே சிவம் சொன்னது…

உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு
சில வேண்டுதல்கள்...

இயற்கை தன் இயல்பை இழந்தாலும்
மணிதம் இன்னும் மரிக்கவில்லை
என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்
நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல
நிறையவே நாம் ஜாக்கிரதையாக
செயல்பட வேண்டிய தருணம் இது...

அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த
வேண்டுதல்கள்..

1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.

2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..

3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்.தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.

4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.

5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். மேலும் எங்கு செல்வதாக இருந்தாலும் கால்களில் ரப்பர் ஷூக்களை 'தீயணைப்பு துறையில்' உள்ள மாதிரி.. அணிந்து செல்லவும் காரணம் கொட்டித்தள்ளிய மழையில் ஆணி, கண்ணாடி. உள்ளிட்ட பொருட்கள் வழியெங்கும் இருக்கும். நாம்தான் கவனத்துடன் இருக்க வேண்டும்.

உதவிக்கு யாரும் எட்டி பார்கவில்லையே என்ற கோபத்தில் உள்ள மக்கள் உண்மையான அன்புடன் செல்லும் தங்களிடம் ஆவேசப்படக்கூடும்.. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்..

நோய் எதிர்பு சக்திகுறைந்த குழந்தைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், பெண்கள். இவர்களையெல்லாம் தயவு செய்து மீண்டும் நிலமை சரியாகும் வரை வெளியேறி வேறு இடத்திற்க்கு செல்ல அறிவுறுத்தவும் கா'ரணம்' 'எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் மேலும் ஒரு பெரு மழை வரும் அபாயம் நிணைக்கும்போதே வேதனையளிக்கிறது.

உதவிக்கு செல்லும் தெய்வங்களே உங்களையும் தற்காத்துகொள்ளுங்கள்.

தமிழ்க்குடில் சொன்னது…

மிக்க நன்றி...விரைவில் நல்லது நடக்க இயற்கை அருளட்டும்

தமிழ்க்குடில் சொன்னது…

களப்பணியாளர்கள் மீது தாங்கள் கொண்டிருக்கும் அன்பிற்கும், தங்கள் ஆலோசனைக்கும் மிக்க நன்றி. அவசியம் கடைபிடிக்கிறோம். :)

தமிழ்க்குடில் சொன்னது…

மிக்க நன்றி. தங்கள் யோசனை மிகவும் சிறப்பு. தற்சமய்ம் மிக அத்தியாவசியமாக அடிப்படை உணவிற்கும், உடைக்கும் ஏற்பாடு செய்துவருகிறோம். இந்த முதல்கட்ட பணி என்பது முதலுதவி போன்றுதான். இனிதான் அவர்கள் வாழ்வாதாரம் சரிசெய்ய முயற்சி செய்யவேண்டும். அதற்கு பெரிய அளவில் உதவிகள் தேவைப்படும். பார்ப்போம். முயற்சிப்போம். நன்றி

தமிழ்க்குடில் சொன்னது…

வணக்கம். மிக்க நன்றி சகோதரரே. தாங்கள் கூறிய முதல் 4ம் செய்துவருகிறோம். 5, 6, 7அடுத்தகட்ட நடவடிக்கை. அதை நிறைவேற்ற மனபலத்தையும், தங்களைப்போன்ற அன்புள்ளங்களின் இணைந்த கரங்களும் அவசியம் தேவைப்படும். செயலாற்றுவோம். நன்றி. :)

தமிழ்க்குடில் சொன்னது…

மிக்க நன்றி. :)

தமிழ்க்குடில் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி செந்தில்குமார். தங்கள் நண்பரின் குழுவுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

தமிழ்க்குடில் சொன்னது…

நன்றி. :) __/\__

தமிழ்க்குடில் சொன்னது…

மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். :) __/\__

தமிழ்க்குடில் சொன்னது…

அன்புத்தம்பி குமாருக்கு மனமார்ந்த நன்றியும், நெகிழ்ச்சியும். உன்னைப்போன்றவர்கள் நம்மை சுற்றியிருப்பதால்தான் தமிழ்க்குடிலின் ஒவ்வொரு செயல்பாடுகளும் சாத்தியமாகிறது. :)

சீராளன்.வீ சொன்னது…

சிறந்த சேவைகள் தொடரட்டும் மக்கள் பணி எல்லோருக்கும் இறையருள் நல்கட்டும் வாழ்க வளமுடன்

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அன்பே சிவம் ஐயா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கவிஞரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

தங்களது கருத்துக்களை நண்பர்களிடம் சொல்லியாச்சு ஐயா...
தங்கள் அன்பிற்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.