'திருமண ஒத்திகை' -
இந்தத் தலைப்பு பலருக்கு நினைவிருக்கலாம். ஆர்.வி.சரவணன் அண்ணன் தனது குடந்தையூர் தளத்தில் எழுத ஆரம்பித்து பாதியில் நிறுத்தி, புத்தகமாகக் கொண்டு வர நினைத்த கதைதான் இது.
இதில் நாயகன், நாயகி, கதையாசிரியர் என மூன்று பார்வைகளாய் கதை விரியும். அவரது பாணியில்... அதாவது திரைக்கதையாய் விரியும் கதை. இதை புத்தகமாகக் கொண்டு வரும் வேலைகளை ஆரம்பித்த போது பாக்யாவில் தொடராக வரும் வாய்ப்பைப் பெற்றது.
இந்தக் கதையை இரண்டு முறை முழுவதும் வாசித்திருக்கிறேன். இப்போது புத்தகமாகி, திரைக்கதை வித்தகர் பாக்கியராஜ் அவர்கள் தலைமையில் நேற்று வெளியிடப்பட்டிருக்கிறது.
இது அவரின் இரண்டாவது நாவல். முதல் நாவல் 'இளமை எழுதும் கவிதை நீ' முழுக்க முழுக்க கல்லூரியைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட திரைக்கதை நாவல். இதுவோ திருமண நிச்சயம்... அதன் பின்னான நிகழ்வுகள் என இரு மனங்களையும் இரு குடும்பங்களையும் வைத்து எழுதப்பட்ட திரைக்கதை வடிவிலான நாவல்.
இந்த நாவலை புத்தகமாக்கும் முயற்சியில் இறங்கியபோது எனக்கு ஒரு மின்னஞ்சல்... அதில் நீங்க ஒரு அணிந்துரை எழுதித் தரவேண்டும் என்று கேட்டிருந்தார்.
'நானா... அணிந்துரையா.... கதையென எதையாவது கிறுக்கிவிடலாம்... ஒரு நாவலுக்கு அணிந்துரையா' என்று யோசித்து மறுத்த போது நீங்கதான் எழுதுறீங்க என்று அன்புக்கட்டளை இட்டார். அதன் பின் எழுதி அனுப்ப, கதை பாக்யாவில் 21 வார தொடரானது.
தற்போது அவரின் கனவான இரண்டாவது நாவலாக... அதுவும் பாக்யாவில் வெளிவந்த தொடர்கதை என்ற ஒரு மகுடமும் சேர்ந்து கொள்ள, அந்த மகுடத்தில் பாக்யராஜ் என்னும் மலையோடு இந்த மடுவின் அணிந்துரையும் வந்திருக்கிறது.
பின் அட்டையில் அவரோடு எங்கள் போட்டோவெல்லாம் போட்டிருக்கிறார். இதெல்லாம் ஏன் என்று கேட்டபோது எப்பவும் போல் சிரித்தபடி 'கேட்டதும் எழுதிக் கொடுத்தீங்க... எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது...' என்றார்.
நான் மதிக்கும் விரும்பும் ஒரு திரைக்கதையாளனின் படத்தோடு, என்னை நேசிக்கும்.. நான் விரும்பும் வருங்கால இயக்குநரின் படத்தோடு என் படமும் பின் அட்டையில் பார்த்துப் பரவசமானேன்.
இன்று காலை போன் செய்தபோது விழா மிகச் சிறப்பாக நடைபெற்றதாக மகிழ்வுடன் சொன்னார். அவர் இன்னும் நிறைய புத்தகங்கள் கொண்டு வரவும் அவரது இயக்குநர் கனவு விரைவில் நிறைவேறவும் இறைவனைப் பிராத்திக்கிறேன்.
வாழ்த்துக்கள் அண்ணா.
அவர் அனுமதிக்கும் பட்சத்தில் அணிந்துரையை இங்கு பகிர்கிறேன்.
****
'கதை கதையாம்' -
பிரதிலிபி சிறுகதைப் போட்டி முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டிருக்கின்றன. எப்படியும் வெற்றியைத் தட்டிச் செல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஒவ்வொரு பிரசவத்தின் போதும் எதிர்பார்ப்பு இருக்கத்தானே செய்யும்... அப்படியான ஒரு எதிர்பார்ப்பு என்னுள்ளே.
வாசகர் பார்வைக்கான ரேசில் ஆறாயிரத்துக்கு மேல் பெற்று வாசிப்பின் அடிப்படையில் மூன்றாவது இடமென்றாலும் அவர்களின் தேர்வு முறையில் நாலாவது இடத்தில் வந்து வெற்றியைத் தவறவிட்டிருக்கிறது.
இந்தக் கதை பிறந்தது ஒரு மாலை வேலையில்... இது போட்டிக்கென எழுதிய கதை இல்லை... முன்பு எழுதி என் கணினியில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததுதான். போட்டிக்கான இறுதி நாளில்தான் அனுப்பியிருந்தேன். வாசித்த, கருத்துக்களிட்ட அனைத்து நட்புக்களுக்கும் நன்றி.
இங்கு குறும்படங்கள் எடுக்கும் அண்ணன் ஒருவர் அந்தக் கதையை குறும்படமாக்கும் முயற்சியில் இருக்கிறார். தற்போது வெறொரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். விரைவில் திரைக்கதை எழுதி, எனக்கு அனுப்புவதாய்ச் சொல்லியிருக்கிறார். கதை மட்டுமே என்னுடையது... திரைக்கதை அவர் பாணியில். நட்பிற்காக சரியெனச் சொல்லியிருக்கிறேன்.
கதையை விரைவில் இங்கு பகிர்கிறேன்.
****
திரு.எஸ்.இராமகிருஷ்ணன் -
அவர்களுடனான சந்திப்பின் நிகழ்வுகளை 80% அளவுக்கு மூன்று பதிவாகத் தொகுத்திருந்தேன். ஒரு நண்பர் பேப்பரும் பேனாவும் கையிலேயே இருக்குமோ என்றார். பாக்கெட்டில் பேனாவும் கையில் வாட்சும் இல்லாது எங்கும் செல்லாத நான் அன்று பேனாவும் எடுக்கவில்லை... வாட்சும் கட்டவில்லை.
எல்லாமே அவர் சொல்லும் போது கேட்டுச் சேமித்தவைதான்... எழுதியெல்லாம் வைக்கவில்லை. அப்படி எழுதி வைத்து எழுதும் பழக்கமும் இல்லை. முடிந்தவரை அவர் என்ன பேசினார்.. எதற்கடுத்து எதைப் பேசினார் என்பதை யோசித்தே எழுதினேன். முகநூலில் பகிர்ந்த பதிவை அவரின் மனைவி தன் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
ஷார்ஜா வந்ததைப் பதிவாக்கிய எஸ்.ரா அவர்கள் அதில் எங்களுக்கும் இடமளித்து எங்கள் படங்களையும் பகிர்ந்து கொண்டிருப்பதைப் வாசித்தபோது சிறந்த எழுத்தாளனின் வரிகளில் நாமும் என்ற சந்தோஷம் ஏற்பட்டது.
'சூப்பரா எழுதியிருக்கீங்க... நீங்கதான் அவர் பேசிய மொத்தத்தையும் விரிவாக் கொடுத்திருக்கீங்க... மூன்றையும் ஒன்றாக்கி ஆவணப்படுத்தி வையுங்க' என்றார் எழுத்தாளர் கனவுப்பிரியன்.
****
திரு. சுபான் பாய் -
பாலை மண்ணிலும் எஸ்.ராவுடனும் எங்களை மிக அழகாக கேமராவில் சுட்ட கேமராக் கவிஞன் இந்த அண்ணன். இவருக்கு Dear Health Medical Centre , Ajman, UAE என்ற மருத்துவ நிறுவனம் 'BEST PHOTOGRAPHY' விருதினை H.H.SHEIKH ABDUL MUNAEM BIN NASSER AL NUAIMI ,AJMAN . அவர்களில் கையால் வழங்கி கெளரவித்திருக்கிறது.
வாழ்த்துக்கள் அண்ணா.
-'பரிவை' சே.குமார்.
24 எண்ணங்கள்:
வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் குமார்!
வணக்கம்
அண்ணா
இருவருக்கும் எனது மனம் உகந்த வாழ்த்துக்கள் தொடருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துகள் அணிந்துரை எழுதுவதைவிட ஒரு எழுத்தாளருக்கு வேறென்ன வேண்டும்.
தொடர்ச்சியான இயக்கம் உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்கிறார்கள்.
நீங்கள் இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள் நண்பரே
தம +1
மனமார்ந்த வாழ்த்துக்கள் .
சுபான் அண்ணனை க்ளிக்ஸ் அண்ட் கலர்ஸ் முகப்புத்தக பக்கத்தில் தெரியும் ..
ஒவ்வொரு படமும் கவிதை பேசும் அவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்
துளசி: வாழ்த்துகள்! குமார் அனைத்திற்கும். தங்கள் கதை குறும்படமாக வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துகள்!
கீதா: ஆம் குமார் நேற்று விழாவிற்குச் சென்ற போதும் அதற்கு முன்னுமே அறிந்தேன் நீங்களும் அணிந்துரை எழுதியுள்ளீர்கள் என்பதை. வாழ்த்துகள்! அதுவே பெரிய விஷயமாச்சே குமார். உங்கள் கதை குறும்படமாய் விரியப் போவதைக் கண்டும் மகிழ்ச்சி, வாழ்த்துகளும்!!!
உங்கள் எண்ணம் போல படிப்படியாக உயர்ந்து கொண்டு இருக்கீங்க. வாழ்த்துகள்.
நன்றி குமார். தங்களின் கதை குறும்படமாக வெளியாவதில் மிகுந்த மகிழ்ச்சி.தொடரட்டும்.அணிந்துரை வெளியிடுங்கள்.
மிகவும் மகிழ்ச்சி அனைத்தையும் படித்த பின் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
எழுத்தின்வீச்சினை உணர முடிகிறது. மென்மேலும் சாதிக்க வாழ்த்துகள்.
வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வணக்கம் ரூபன்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வணக்கம் சகோதரி...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வணக்கம் துளசி அண்ணா / கீதா அக்கா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வணக்கம் சகோதரி..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் குமார்
மகிழ்ச்சி தரும் விஷயங்களின் தொகுப்பு. தொடரட்டும். நல்வாழ்த்துகள்!
கருத்துரையிடுக