மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 6 மார்ச், 2017

சினிமா : பார்த்ததில் வென்றது..?

பார்த்த சினிமாக்களைப் பற்றி பகிர்ந்து ரொம்ப நாளாச்சு. இப்போதெல்லாம் எழுத நினைத்தாலும் பிரச்சினைகள் சூழ் மனசுக்குள் அதற்கான உந்துதலே இல்லை... சனிக்கிழமை காலையில் 'சேரன் செல்வி'யை ஆரம்பித்து எழுதுவோம்... எழுதுவோம்... எனத் தள்ளிப்போட்டுப் போட்டு இரவில்தான் எழுதி முடித்தேன். மனம் ஒருநிலையில் இருந்தால்தான் எழுத்தும் வரமாகும்... உறவுகளின் எழுத்தை வாசித்து விடுகிறேன்... கருத்து இடுவதில் அயற்சி... இணையத்தில் நிறைய சினிமா பார்க்க முடிகிறது... மற்றவற்றில் மனம் ஒட்டவில்லை. இதுவும் கடந்து போகுமென்பதால் பார்த்த சினிமாக்கள் குறித்து விமர்சனமாக இல்லாமல் சும்மா கிறுக்கலாம்... இப்படியாச்சும் பகிர்வு எழுதுவோமே.

Image result for துருவங்கள் பதினாறு

குமான் நடிப்பில் வந்த 'துருவங்கள் பதினாறு' நல்லவனாக காட்டப்பட்டவன்தான் வில்லனாவான் என்ற தமிழ் சினிமா வழக்கப்படி என்றாலும்... அடுத்தது என்ன...  அடுத்தது என்ன என ராஜேஸ்குமாரின் க்ரைம் நாவலை வாசிப்பது போல நகரும் காட்சி அமைப்புக்கள் நம்மை படத்தோட இணைந்து பயணிக்க வைக்கிறது. ஒரு மழை இரவு... விபத்து... காணாமல் போகும் பெண்... போலீஸ் விசாரணை... என விறுவிறு க்ரைம் திரில்லர்... ஆரம்பத்தில் இருந்து பார்த்தால் பார்த்தால் படம் புரியும்படியான காட்சி அமைப்புக்கள் அருமை... மிகச் சிறப்பான ஒரு புலனாய்வுக் கதையைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கார்த்திக் நரேன். பின்னணி இசையே படத்துக்குப் பெரும் பலம்.

Image result for குற்றம் 23

ருண் விஜய் நடிப்பில் அரவிந்தன் இயக்கத்தில் வந்திருக்கும் 'குற்றம் 23', ராஜேஸ்குமார் அவர்களின் க்ரைம் நாவலை மையமாகக் கொண்ட கதை. பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணும் கொடுத்த பாதிரியாரும் கொலை செய்யப்பட, அதை துப்புத் துலக்கப் போய்... செயற்கை கருத்தரிப்பு, அதனால் கர்ப்பிணிப் பெண்களில் மரணம்... என கதை விறுவிறுப்பாய் பயணிக்கிறது. ஆரம்பம் முதல் வேகமெடுக்கும் கதையில் காதல், நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. இறுதியில் சினிமாத்தனமான காட்சிகளால் டிராபிக் ஜாமில் மாட்டிக் கொண்ட அரசுப் பேருந்து போல் ஆனாலும் அருண் விஜய், மஹிமா, அபிராமி நடிப்பும் கதையின் போக்கும் கவர்கிறது. குற்றம் 23 அருமையான க்ரைம் திரில்லர். பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

Image result for முப்பரிமாணம்

திரைக்கதை சித்தர் பாக்யராஜ் மைந்தன் சாந்தனு நடிப்பில் வந்திருக்கும் படம் 'முப்பரிமாணம்'. ஆரம்பக்காட்சியில் திருமண மண்டபத்திலிருந்து மணப்பென் சிருஷ்டி டாங்கேயை கடத்திச் செல்கிறார் சாந்தனு... வில்லனும் போலீசும் விரட்ட, காரில் பயணிக்கும் போதே முன்கதை நாயகன் கண்ணில் விரிகிறது. சின்னச் சின்ன லாஜிக் சொதப்பல் இருந்தாலும் அழகான காதல் கதைக்குள் போகும் கதை, அதனால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சினைகள், இழப்புக்களில் நீந்தி, இடைவேளைக்குப் பின்னர் வேறொரு பாதையில் வித்தியாசமாய் பயணிக்கிறது.  இடைவேளைக்குப் பிறகு காதலியை திருமண நேரத்தில் கடத்தி வந்ததற்கான முடிச்சுக்கள் மெல்ல மெல்ல அவிழ்க்கப்படும் போது விறுவிறுப்புக் கூடுகிறது. விறுவிறுப்பான கதைக்கு காமெடி தேவையில்லை என்பதால் நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் நகைச்சுவைக்குப் பஞ்சம். சாந்தனு நடிப்பு மிகச் சிறப்பு. சிருஷ்டிதான் கதையின் நாயகி... இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். இயக்குநர் அதிரூபனின் கிளைமேக்ஸ் எல்லாரையும் கவரும். ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை நன்று. இடைவேளைக்குப் பின் நாயகன் நாயகி பரிமாணம் மாறிய பின் அசத்தல்.

Image result for முத்துராமலிங்கம்

வரச நாயகன்  கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் நடிப்பில் 'முத்துராமலிங்கம்'. சிலம்பம் பற்றி சொல்லும் கதை என்றார்கள்... கார்த்திக் நாயகனாக நடிக்கும் போது கூட இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததில்லை... நாயகி வயிற்றில் கேப்டன் பம்பரம் விட்டார்... சுப்ரீம் ஸ்டார் தேன் ஊற்றினார்... அதெல்லாம் 90க்கு முன்னால ஆனா 2017-ல் குப்புற கிடக்கும் நாயகியை திருப்பினால் வெற்றி என்ற போட்டியில் களம் இறங்கியிருக்கிறார் கௌதம்... கம்புச் சண்டையே பிரதானம் என்பதால் கம்பைத் தூக்கிக்கிட்டே திரியுறானுங்க... மொத்தத்தில் முத்துராமலிங்கம் வீரமாய் வர வேண்டியது படு மொக்கையாய்... இசை இளையராஜாவாம்...90களுக்கு முன் வந்த கதைகளைப் போன்ற படத்தில் 90களின் ராஜா கூட ஜெயிக்கவில்லை.

Image result for அதே கண்கள்

'அதே கண்கள்' இயக்குநர் ரோஹின் வெங்கடேசனின் முதல் படம். அறிவழகன்,ஜனனி,ஷிவதா நடிப்பில் வித்தியாசமான  ஒரு கதைக்களம். கண்பார்வை அற்றவர்களில் தேர்ந்தெடுத்த சிலரை மட்டும் காதலிப்பதாக மயக்கி பணம் பறிக்கும் கும்பல், அறிவழகனையும் ஏமாற்ற... அவர்களைத் தேடி சென்று எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதே மிகவும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள். இதுவும் நாயகியை (ஷிவதா) மையமாகக் கொண்டு நகரும் கதை. கண்டிப்பாக பார்க்கலாம்.

Image result for போகன்

'போகன்' மெஸ்மரிசத்தின் மூலம் மற்றொருவரின் உடம்பில் புகுந்து பணத்தைத் திருடி, சுகபோகமாய் வாழும் ஒருவனுக்கும் காவல்துறை அதிகாரிக்கும் நடக்கும் மோதல்தான் கதை. ஜெயம் ரவி நாயகன்... அரவிந்த்சாமி வில்லன். நாயகனை மிஞ்சுகிறார் வில்லன். இடைவேளைக்குப் பிறகு ஜெயம் ரவி அரவிந்த்சாமியும்... அரவிந்த்சாமிக்குள் ஜெயம்ரவியுமாய் விறுவிறுப்பாய்... போகன் பார்க்கலாம்... ஜெயம் ரவியைவிட அரவிந்த்சாமி அசல்ட்டாய் அப்ளாஸ் பெறுகிறார்.

Image result for ரம்

'ரம்' அப்படின்னு ஒரு பேய்ப்படம்... எத்தனை காலத்துக்குத்தான் ஆவி பலி வாங்குமோ தெரியலை... டிஜிட்டல் இந்தியான்னு மோடிஜி சொல்லிக்கிட்டு கார்ப்பரேட்டை வளக்குறாரு... நாம் இன்னமும் பேய்ப்படங்கள்ன்னு சொல்லி விட்டாலாச்சாரியா காலத்துலயே இருக்கோம். போதுமய்யா இயக்குநர்களே புதுமைக்கு வாங்க. ஆங்கிலத்தில் வரும் பேய்ப்படங்கள் நம்மை உறைய வைக்கும் என்றால் தமிழில் வரும் பேய்ப்படங்கள் சிரிப்பைத்தான் கொடுக்கின்றன.

இதில் பச்சை கலர் கொடுக்கப்பட்ட படங்களை பார்க்கலாம்.. சிவப்புக்கலர், அந்தப் பக்கமே போகாதீங்கன்னு அர்த்தம்.
-'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இதில் இந்தப்படமும் இன்னும் பார்க்கவில்லை...!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

படங்களாய் பார்த்துத் தள்ளியிருக்கிறீர்கள்
நன்றி நண்பரே

Yarlpavanan சொன்னது…

எல்லாப் படங்களையும்
ஒரு முறை பார்க்கத் தூண்டும்
சிறந்த பதிவு

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
ஒவ்வொரு படம் பற்றி சொல்லிய விதம் சிறப்பு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இவ்வளவு படங்களையும் பார்த்து உள்வாங்கி எழுதுவது சற்று சிரமமே. இருந்தாலும் சுருக்கமாக நச்சென்று உள்ளது.

Angel சொன்னது…

துருவங்கள் பதினாறும் அதே கண்களும் பார்த்தாச்சு .மிகவும் ரசித்தது துருவங்கள் 16 படத்தை .சமீபத்தில் நல்ல மலையாள படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகியிருக்கா ? நாங்க போன வர்ஷம் வரை வந்தவற்றை பார்த்து முடிச்சிட்டோம்

இராய செல்லப்பா சொன்னது…

இவ்வளவு படங்களைப் பார்த்தால் கண்ணும் பர்சும் கெட்டுப் போகாதா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இதில் சுயநலம் இல்லையே! மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்கத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டு மொக்கைப் படங்களையும் கூட, பார்த்திருக்கிறீர்கள்! பாராட்டவேண்டிய கடமை உணர்ச்சி நண்பரே!

- இராய செல்லப்பா நியூஜெர்சி

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பதிவு.... படம் பார்க்கும் பொறுமை இல்லை, நேரமும் இல்லை.

Ajai Sunilkar Joseph சொன்னது…

படங்கள் பார்த்த உணர்வு இப்பதிவை பார்த்ததில் இருந்து...

PUTHIYAMAADHAVI சொன்னது…

Thanks for your red and green signal.

ஸ்ரீராம். சொன்னது…

துருவங்கள் பதினாறு பார்க்க வேண்டும். அதே கண்களும் பார்க்க வேண்டும். போகன் இரண்டு நாட்களுக்கு முன் பார்த்து ரசித்தேன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

துருவங்கள் 16 பார்த்தாச்சு. அதேகண்கள், குற்றம் 23ம் போகனும் லிஸ்டில் இருக்கின்றன...இனிதான் பார்க்கணும்...