அலைனில் இருந்து இங்கு வந்த பிறகு அலுவலகத்தில் வேலை அதிகம். மாலை 5 மணி வரைக்கும் கணிப்பொறியோடு மல்லுக்கட்டி விட்டு வீட்டுக்குத் திரும்பினால் மூளைச் சோர்வு வந்துவிடுகிறது. அதுபோக ஒரு மாத சுற்றுலா விசாவில் குடும்பத்தை இங்கு கொண்டு வர இருப்பதால் வீடு தேடி அலைவதும் சேர்ந்து கொள்ள, வலைப்பக்க வரவு குறைந்து விட்டது. அப்பப்ப நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் வாசிக்கிறேன்... சிலருக்கு கருத்து இடுகிறேன். இனி வரும் மாதங்களிலும் மனசு காத்தாடத்தான் செய்யும் என்பதை இங்கு சொல்லிக் கொள்கிறேன்... காரணம்... ஏப்ரலில் குடும்ப வரவும்... மே மாத விடுமுறையில் ஊருக்கும் என கொஞ்சம் பிஸியாக இருக்கப் போவதால் அவ்வப்போது தலைகாட்டுவேன்... மறந்துடாதீங்க மக்களே.
----------------------
வீடு தேடி அலைந்தது மறக்க முடியாத அனுபவம்... பேச்சிலர் அறைகூட கிடைத்து விடும் போல... பேமிலி அறை தேடுவதென்பது மிகவும் கடினம் என்பதை உணர வைத்தது கடந்த பத்து நாட்கள்.... தினமும் அலைச்சல்... ஒரு மாதத்திற்கு மட்டும் என்றால் எவனுமே கொடுக்க நினைப்பதில்லை. சரி ஏஜெண்ட் மூலமாக பார்க்கலாம் என்று நினைத்து மலையாளிகளுடன் நடந்தால் அவனுக காட்டுற இடத்தில் நானே தங்க மாட்டேன்... அதிலும் குடும்பத்துக்கு அப்படி இடமா... காசைக் கொடுத்தும் நிம்மதியில்லாத... தங்க முடியாத இடங்கள் தேவையா என அவர்களையும் விட்டு ஒதுங்கியாச்சு.... அவனுக்கு கமிஷன் என்பதால் இது நல்ல இடம் இதைவிட வேறென்ன வேண்டும் என்று நம்மைக் கவிழ்க்கப் பார்க்கிறான். எங்களுக்குப் பிடித்தால்தான் இது நல்ல இடம்... இல்லைன்னா இல்லை என்று சொல்லிவிட்டோம்.
பின்னர் அப்படி இப்படி அலைந்து நாங்கள் தங்கியிருக்கும் கட்டிடத்தில் இருந்து இரண்டு மூன்று கட்டிடங்கள் தள்ளி ஒரு ஆள் மூலமாக கொஞ்சம் கூடுதல் வாடகை என்றாலும் பரவாயில்லை என பிடித்து விட்டோம். இப்போத்தான் கொஞ்சம் நிம்மதி. அபுதாபிக்கு வந்ததில் இருந்து நான் இப்போது வீடு தேடி அலைந்த போது பார்த்த மிக மோசமான இடங்களில் தங்கவில்லை என்பதாலும்... கட்டிடங்களும் சுத்தமான கட்டிடங்கள் என்பதாலும் அந்த இடங்களைப் பார்த்ததும் அங்கு நிற்கக்கூட பிடிக்கவில்லை. அதிலும் அவ்வளவு வாடகை கொடுத்து குடும்பங்களைத் தங்க வைத்திருக்கிறார்கள் என்பது வேதனையான விஷயந்தான்.
--------------------
பாக்யா இதழின் வரும் வார மக்கள் மனசு பகுதியில் எனது கருத்தும் வந்துள்ளது. நம்ம எழுதும் கருத்து நல்லாயிருக்குன்னு தொடர்ந்து பகிர்ந்து வரும் திரு.எஸ்.எஸ்.பூங்கதிர் சாருக்கு நன்றி. மேலும் சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்தும் தொடர்ந்து வெளிவருகிறது அவருக்கும் வாழ்த்துக்கள்.
------------------------------
உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிப் பயணம் தொடர்ந்து கோப்பையை தக்க வைத்துக் கொள்ள வாழ்த்துவோம். அரையிறுதியில் மீண்டும் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதுவதைப் பார்க்கலாம் என்ற கனவு நனவாகிப் போனது. ஆம் இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
-'பரிவை' சே.குமார்.
43 எண்ணங்கள்:
குடும்பத்தோட சந்தோஷமாக நேரங்களை செலவிட வாழ்த்துக்கள்
ரசித்தேன்.
குடும்பத்தின் வரவு மகிழ்ச்சி தரும். இனிய தருணங்கள் , நாட்கள் இறக்கைகட்டி பறக்கும், வாழ்த்துக்கள்.
குடும்பத்துடன் ஒரு மாதம் அரபு நாட்டில் செலவழிக்க இருப்பதால் உங்கள் மனசின் பரபரப்பும் அது போடும் திட்டங்களும் மகிழ்வும் எனக்கு மட்டுமே நன்றாக புரியும் குமார்! நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மகிழ்வுடன் எதிர்வரும் நாட்களை கழிக்க என் வாழ்த்துக்கள்! நானும் அடுத்த வாரம் ஷார்ஜா வருகிறேன். அவசியம் ஷார்ஜாவிற்கு எங்கள் இல்லத்திற்கு வாருங்கள் குமார்! என் ஈமெயில் விலாசத்தில் வரும் விபரத்தை தெரியப்படுத்துங்கள். என் ஈமெயில் விலாசம் smano26@gmail.com
வலையுலக உறவுகள் எங்கும் சென்றிடாது நண்பரே
தங்களுக்காக என்றென்றும் காத்திருக்கும்
குடும்பத்தோடு மகிழ்ந்திருங்கள்
தம +1
குடும்பத்துடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடுங்கள் குமார்..வாழ்த்துக்கள்..
குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் குமார் !
எல்லாம் எனக்கு தெரியும் என்றாலும் பதிவில் காணும்போது சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துகள்
தம + 1
என்றென்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்க நல்வாழ்த்துக்கள்!..
Family First... Enjoy with them....
இந்தமுறை சந்திப்போமா...?
அன்பின் அருந்தகையீர்!
வணக்கம்!
இன்றைய...
வலைச் சரத்திற்கு,
தங்களது
தகுதி வாய்ந்த பதிவு
சிறப்பு செய்துள்ளது!
வருக!
வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
கருத்தினை தருக!
நட்புடன்,
புதுவை வேலு
விடுமுறை மாதங்கள் குடும்பத்துடன் இனிதாக அமைய வாழ்த்துகள்!
குடுபத்தினருடன் முதலில் விடுமுறையை கொண்டாடுங்கள்.
வந்து வந்து போங்க குமார்.. நல்ல விடுமுறை வைக்க வாழ்த்துக்கள். பாக்கியா இதழில் உங்கள் வரிகள் ... பலே!
#இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதுவதைப் பார்க்கலாம் என்ற கனவு நனவாகிப் போனது. ஆம் இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.#
நனவு ,கனவு குழப்புதே:)
அன்புள்ள அய்யா,
இப்போது வீடு தேடி அலைந்த போது பார்த்த மிக மோசமான இடங்களில் தங்கவில்லை என்பதாலும்...
பின்னர் அப்படி இப்படி அலைந்து நாங்கள் தங்கியிருக்கும் கட்டிடத்தில் இருந்து இரண்டு மூன்று கட்டிடங்கள் தள்ளி ஒரு ஆள் மூலமாக கொஞ்சம் கூடுதல் வாடகை என்றாலும் பரவாயில்லை என பிடித்து விட்டோம். இப்போத்தான் கொஞ்சம் நிம்மதி. நிம்மதிப் பெருமூச்சு விடுவது தெரிகிறது.
குடும்பத்துடன் விடுமுறையைக் கொண்டாட வாழ்த்துகள்!
நன்றி.
குடும்பத்தை கவனிப்பது அவசியம்! அங்கும் வீடு கிடைப்பதில் சிரமம்தானா? பாக்யாவில் கருத்து வெளியானமைக்கு வாழ்த்துக்கள்! நண்பர் பூங்கதிர் அவர்களால் எனது கருத்தும் தொடர்ந்து வெளியாவதில் மகிழ்ச்சி! பகிர்ந்தமைக்கு நன்றி!
வாங்க சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அம்மா...
கண்டிப்பாக வருகிறேன் அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ராஜா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
இந்த முறை கண்டிப்பாக குடும்பத்துடன் வீட்டுக்கு வருகிறேன்.,
அண்ணி கையால் சாப்பாடு சாப்பிட்டுத்தான் செல்வோம்.
சொல்லி வையுங்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா.
வாசித்தேன்... அறிமுகத்துக்கு நன்றி..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோதரி..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
கண்டிபாக அண்ணா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஜி...
கனவு கனவாவே போச்சு... கொஞ்சம் அலைச்சல்ல அப்படி ஆயிருச்சு போங்க...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழ்த்துக்கள் பாகியாவில் கருத்து வெளி வந்தமைக்கு! நண்பரே! குடும்பம் வருகின்றதே எஞ்சாய்! அதை விட வேறு என்ன வேண்டும்...தங்களை மறப்பதா....அட!!
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க துளசி சார் / கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் சகோதரரே.!
விபரங்கள் அறிந்தேன்.. தங்கள் குடும்பத்துடன் சந்தோசமாக நாட்கள் மெள்ள நகர வாழ்த்துகிறேன்.. பாக்யாவில் தங்கள் கருத்துக்கள் வந்திருப்பதற்கு மகிழ்ச்சி..வாழ்த்துக்கள்...விடுமுறையில் குழந்தைகளுடன் களித்திருந்து ஆனந்தமாயிருங்கள்...அவர்கள்தாமே நம் பொக்கிஷம்...தங்கள் எழுத்துக்களை நாங்கள் என்றும் விரும்பித் தொடர்வோம்..
என்தளம் வந்து வாழ்த்தியமைக்கும் என் நன்றிகள்..
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
குடும்பத்துடன் சில நாட்கள்.... ஆஹா... வாழ்த்துகள் குமார். வலையெல்லாம் அப்புறம். முதலில் குடும்பம், மகிழ்ச்சி.
உங்களுக்கும் தளிர் சுரேஷுக்கும் வாழ்த்துகள்.
வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வரும் குடும்பத்தாரை வரவேற்று அவர்கள் வசதியாக சுற்றிப் பார்க்க, ஆவன செய்யுங்கள் பிறகு வலைப் பக்கம் வாருங்கள்!
கருத்துரையிடுக