டிசம்பர் 7: "விஸ்வரூபம்' படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது.
டிசம்பர் 9: முதலில் டீ.டி.எச். மூலம் "விஸ்வரூபம்' வெளியாகும் என்ற அறிவிப்பு வந்தது.
டிசம்பர் 9: டீ.டி.எச். குறித்து திரையரங்க உரிமையாளர்களுடன் கமல் பேச்சு நடத்தினார்.
டிசம்பர் 11: டீ.டி.எச். வெளியீட்டிற்கு திரையரங்க உரிமையாளர் சங்கம் தரப்பில் எதிர்ப்பு.
டிசம்பர் 29: டீ.டி.எச். நிறுவனங்களுடன் கமல்ஹாசன் ஒப்பந்தம்.
ஜனவரி 9: "என்னை தொழில் செய்ய விடாமல்' தடுக்கிறார்கள் என்றார் கமல்.
ஜனவரி 12: திரையரங்க சங்க நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு.
ஜனவரி 14: டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளிலும்,
பிப்ரவரி 2-ம் தேதி டீ.டி.எச். மூலமும் "விஸ்வரூபம்' வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஜனவரி 22: "விஸ்வரூபம்' படத்துக்கு தடை கோரி முஸ்லிம் அமைப்புகள் சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் மனு.
ஜனவரி 23. "விஸ்வரூபம்' படத்துக்கு அரசு திடீர் தடை.
ஜனவரி 24: கமல்ஹாசன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு.
ஜனவரி 26: உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் "விஸ்வரூபம்' படத்தை பார்த்தார்.
ஜனவரி 29: படத்துக்கு தடை இல்லை என நீதிபதி அறிவித்தார்.
ஜனவரி 30: தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து "விஸ்வரூபம்' படத்துக்கு தடை விதித்தது உயர் நீதிமன்றம்.
ஜனவரி 30: மதச்சார்பற்ற நாட்டை தேடிப் போவேன் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் கமல்ஹாசன்.
ஜனவரி 30: சில காட்சிகளை நீக்க கமல் சம்மதம் தெரிவித்தார்.
ஜனவரி 31: சட்டம் - ஒழுங்கு பிரச்னையால்தான் விஸ்வரூபத்துக்கு தடை என தமிழக அரசு அறிவித்தது.
பிப்ரவரி 1: அரசு முன்னிலையில் பேச்சு நடத்த கமல்ஹாசன், முஸ்லிம் அமைப்புகள் ஒப்புதல்.
பிப்ரவரி 2: குறிப்பிட்ட சில ஒலிக் குறிப்புகளை நீக்க கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்ததால், விஸ்வரூபம் சர்ச்சை முடிவுக்கு வந்தது.
நன்றி : தினமணி
-'பரிவை' சே.குமார்
4 எண்ணங்கள்:
என்னமோ,போங்க குமார்!இது வெளியாகதாதல கடல் வந்து ஓடிட்டிருக்கு.இனிமே வந்து...........................ஹூம்,90 கோடி பணால் தான் போல?
'அம்மா' நெனச்சத சாதிச்சாப்புல தான்!
தகவலுக்கு நன்றி,குமார். படத்தை சீக்கிரமாக வெளியிட்டால் நல்லது.
அப்பாடா... முடிந்து விட்டது...
கருத்துரையிடுக