சோப்பு வாங்கப் போன
எங்கிட்ட கடைக்காரரு
என்ன சோப்புன்னு கேக்காம
என்ன பேருன்னு கேக்க
அஞ்சலைன்னு சொல்ல
அந்த பேருல சோப்பு
இல்லைன்னு சிரிச்சாரு...
சோப்பு பேரா கேட்டியலா
நா எம்பேரை கேக்குறியன்னு
நினைச்சுக்கிட்டேன்னு சிரிச்சேன்...
வாறவுக பேரெல்லாம்
எனக்கு எதுக்கு தாயி...
சோப்பு பேரை சொல்லு
என்றார் சிரிக்காமல்..!
-'பரிவை' சே.குமார்.
34 எண்ணங்கள்:
இது தான் "பல்பு" கவிதையா...
யதார்த்தமாய் நல்லாயிருக்கு...
அட இது தான் சோப்பு போடறதா?நல்லாயிருக்கு
மண்ணின் மனம் கமழ்கிறது ...
nice!!
:-)
நல்லா இருக்கு
அவர் சொல்றதும் சரிதானே... நல்லாயிருக்குங்க...
super & funny!
அருமையா இருக்குங்க
funny. :-)
\\வெறும்பய said...
இது தான் "பல்பு" கவிதையா...
யதார்த்தமாய் நல்லாயிருக்கு...\\
:-)))
ரொம்ப நல்லா இருக்கு.. படிச்சதுமே 10 நிமிசத்துக்கு சிரிப்பு நிக்கலை...
ரசித்தேன்..!
பகிர்வுக்கு நன்றி..!
athaanee:))
சோப்பு கவிதை ஓகே
வாங்க வெறும்பய அண்ணா...
பல்புதான்... நாமளும் எப்பதான் கொடுக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க Asiya அக்கா...
ஆமா... சோப்பு போடத் தெரிஞ்சாத்தானே பெரியாளாகளாம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க செந்தில்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மேனகா மேடம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சிநேகிதி அக்கா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பாலாசி...
ஆமான்றேன்... அதானே...
சரிதாங்கிறேன்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வாணி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கயல்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சித்ரா அக்கா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அம்பிகா மேடம்...
நீங்களும் பல்புன்னு சொல்றீங்க அப்ப சரியாத்தான் இருக்கும்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க இலா...
முதல்ல சிரிச்சதுக்கு நன்றி... அப்புறம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வெற்றி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானம்பாடிகள் ஐயா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சரவணன்...
சோப்புதான்... வாங்கப் போறப்போ இதுமாதிரி ஆயிடாம... ஆமா சொல்லிப்புட்டேன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நகைச்சுவை கலந்த நயமான கவிதை! நன்றாக இருக்கிறது!!
ஆமா சோப்பு பேரு என்னங்க :)
ஒரு யதார்த்தத்தை எப்படி பார்க்க வேண்டும் என்கிற "கவிதை சிந்தனை" இங்கே அழகாய் சித்தரிக்கப் பட்டிருக்கிறது குமார். வாழ்த்துக்கள். அப்படியே நம்ம பிளாக்குக்கும் வந்துட்டு போறது.
(ithayasaaral.blogspot.com ).
வாங்க மனோ அம்மா...
நலமா?
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வாங்க அக்பர்...
தொழில் போட்டியின் காரணமாக சோப்பின் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. அவசியம் வேண்டும் என்றால் சாம்பிள் பீசுடன் உங்கள் இல்ல முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். (பின் விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல)
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வாங்க தமிழ்க் காதலன்...
உங்க பேரே அழகா இருக்கு, முதல் வருகைக்கு நன்றி.
இப்பவே வந்துட்டுப் போறேன்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
யதார்த்தமான நகைச்சுவை.. ரசித்தேன்..
ஹா ஹா.. நல்லா இருக்குங்க :-))
எனக்கு சிங்கமுத்து, வடிவேலு ஜோக் ஞாபகம் வந்திருச்சுங்க.. :-))
ஃஃஃஃ...வாறவுக பேரெல்லாம்
எனக்கு எதுக்கு தாயி...
சோப்பு பேரை சொல்லு
என்றார் சிரிக்காமல்..!..ஃஃஃ
இப்படிச் சொன்ன எப்படி...
hihi
செம கவிதைங்க...
கருத்துரையிடுக