கேலக்ஸியின் முதலாமாண்டு உலகளாவிய சிறுகதைப் போட்டியை மகிழ்வுடன், எங்களால் முடிந்தளவுக்குச் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறோம் என்பதை முகநூல் எங்கும் நண்பர்கள் தங்கள் வாழ்த்துக்களால் நிறைத்து வைத்திருப்பதைப் பார்க்கும் போது புரிகிறது. மிகவும் சந்தோசமாக இருக்கிறது. அதேசமயம் அடுத்தடுத்த போட்டிகளை இதைவிட இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டுமே என்ற பயமும் தொற்றிக் கொள்கிறது.
வெள்ளி, 24 நவம்பர், 2023
ஞாயிறு, 29 அக்டோபர், 2023
சினிமா விமர்சனம் : லியோ
அமீரகம் வந்து ஒரு நாலைந்து படம்தான் தியேட்டரில் பார்த்திருப்பேன். லியோவுக்கு வரலைன்னு சொன்னவனை ஒரு வாரத்துக்கு முன்னாடியே டிக்கெட் புக் பண்ணி, படம் வெளியான அன்று இரவுக்காட்சிக்கு கூட்டிச் சென்றார்கள் தம்பிகள்.
திங்கள், 9 அக்டோபர், 2023
பிக்பாஸ் : பவா பிரம்மா அல்ல
பிக்பாஸ் வீட்டிலிருந்து பவா வெளியேறியதாகச் செய்திகள் வருகின்றன... மகிழ்ச்சி.
வெள்ளி, 22 செப்டம்பர், 2023
மதுரை கேலக்ஸி பதிப்பகம் நடத்தும் முதலாமாண்டு உலகளாவிய சிறுகதைப் போட்டி - 2023
சென்ற வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட கேலக்ஸி பதிப்பகம், இந்த ஓராண்டுக்குள் பல நூல்களை - குறிப்பாக அரபி மொழியில் பாரதி கவிதைகள், ஆத்திசூடி, இலங்கையின் பிரபலமான எழுத்தாளர் காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீனின் மைவண்ணம் இராமகாவியம் - வெளியிட்டு பதிப்புத் துறையில் தனக்கென இடத்தைப் பிடித்திருக்கிறது. மேலும் பல வளர்ந்த, வளரும் எழுத்தாளர்களின் படைப்புக்களை எந்தவித எதிர்பார்ப்புமின்றி புத்தகமாக்குவதையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.
எழுத்தையும் எழுத்தாளர்களையும் நேசிக்கும் கேலக்ஸி, மண் சார்ந்து எழுதும் எழுத்தாளர் ஒருவருக்கு ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாள் - பதிப்பகம் ஆரம்பித்த நாள் - ஆண்டு விழாவில் 'பாண்டியன் பொற்கிழி' - கேடயமும், சட்டகமிட்ட சான்றிதழும், பணமுடிப்பும் - என்னும் விருதை வழங்க இருப்பதாக அறிவித்து, அதைத் தனது முதலாமாண்டு விழாவிலேயே தொடங்கியும் வைத்திருக்கிறது.
யார் வேண்டுமானாலும் கேலக்ஸியில் தங்கள் புத்தகங்களைக் கொண்டு வரலாம், ஒரே ஒரு நிபந்தனைதான்... தாங்கள் அனுப்பும் உங்களது படைப்புகள் கேலக்ஸியின் குழுவால் வாசிக்கப்பட்டு, அந்தப் படைப்பு பிடிக்கும் பட்சத்தில் கேலக்ஸி உங்களின் படைப்பைக் கொண்டு வரும். அதற்கென எந்தக் கட்டணமும் பெறுவதில்லை. அப்படிப்பட்ட கேலக்ஸி எழுத்தாளர்களுடனான தனது நெருக்கத்தின் இறுக்கத்தை இன்னும் அதிகமாக்கும் வகையில் ஒரு உலகளாவிய சிறுகதைப் போட்டியினை அறிவித்திருக்கிறது. நமது சிறுகதை எழுத்தாளர்கள் எல்லாரும் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். களத்தில் இறங்குங்க. கலக்குங்க.
விபரங்கள் கீழே
மொத்தப் பரிசுத்தொகை : ரூ. 12000
முதல் பரிசு : ரூ. 5000
இரண்டாம் பரிசு : ரூ. 3000
மூன்றாம் பரிசு : ரூ. 2000
சிறப்புப் பரிசு ( இருவருக்கு) : ரூ. 1000
இறுதித்தேதி : 20/10/2023
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : galaxybs2022@gmail.com
விதிமுறைகள் :
• கதைகள் 1200 முதல் 1500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.
• கதைக்களம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக மற்றவர்களின் மதங்களைப் புண்படுத்தும், இழிவுபடுத்தும் கதைகளாக இருக்கக் கூடாது. அப்படியான கதைகள் நிராகரிக்கப்படும்.
• கதைகளை மின்னஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும். கண்டிப்பாக யுனிகோட் (Unicode) எழுத்துருவில் World பைலாகத்தான் அனுப்பவேண்டும். தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
• கதை உங்களது சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். பிறரது கதைகளையோ, மொழிபெயர்ப்புக் கதைகளையோ, இதற்கு முன் பத்திரிக்கைகளிலோ இணைய இதழ்களிலோ வெளியான கதைகளையோ அனுப்பக் கூடாது.
• ஒருவர் ஒரு கதை மட்டுமே அனுப்பலாம்.
• பரிசுத்தொகை பணமாகவோ, புத்தகமாகவோ (வெற்றி பெற்றவர் விருப்பத்தின் பேரில்) வழங்கப்படும்.
• இறுதி நாளுக்குப் பின் கால நீட்டிப்பு செய்ய இயலாது என்பதால் அதற்குப் பின்வரும் கதைகள் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
• யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்து கொள்ளலாம், வயது வரம்பு இல்லை.
• போட்டிக்கான கதை தங்களது சொந்தப் படைப்பே, வேறு இதழ்களுக்கோ, போட்டிகளுக்கோ அனுப்பப்படவில்லை, போட்டி முடியும் வரை வேறு எதற்கும் அனுப்பமாட்டேன் என்ற உறுதிமொழி கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். அப்படி அனுப்பியது தெரிய வந்தால் தங்கள் கதை போட்டியில் இருந்து நீக்கப்படும்.
• தங்களது முகவரி மற்றும் செல்போன் எண்ணை மறக்காமல் மின்னஞ்சலில் குறிப்பிட வேண்டும்.
• இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் கதைகள் எங்கள் பதிப்பத்தில் புத்தகமாக வெளியிடப்படும்.
• இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் கதையை எழுதிய எழுத்தாளர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.
• போட்டி முடிவுகள் நவம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்.
• நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
-பரிவை சே.குமார்
திங்கள், 18 செப்டம்பர், 2023
மனசு பேசுகிறது : 'தூங்காநகர் நினைவுகள்' நூல் திறனாய்வுக் கூட்டம்
தூங்காநகர் நினைவுகளை இன்னும் விரித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்ததையும், எழுத்தாளனே மிகச் சிறந்த சோம்பேறி என்பதால் அது நிகழவில்லை என்பதையும் சொல்லி, இதை இன்னும் விரிவாக எழுத வேண்டும், அதுவும் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் எனச் சொன்னார். அப்போது திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய தொல்லியல் நூலைப் பற்றியும் அதில் தனது பங்கும் கொஞ்சம் இருப்பது குறித்தும் அதற்காக எப்படி அவர் உழைத்தார் என்பதையும் அது ஆங்கில நூலாக எல்லா இடத்திலும் எப்படிச் சென்று சேர்ந்திருக்கிறது என்பதையும் சொன்னார். மேலும் தனது காலத்து மதுரையை, அதாவது 1948க்குப்பின்னான மதுரையைக் குறித்து தூங்காநகர் நினைவுகள் தொகுதி இரண்டை இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள், காலம் வாய்ப்பளித்தால் எழுதி முடிக்க வேண்டும் எனச் சொன்னார். அதற்கான குறிப்புகள் முப்பதுக்கு மேல் தன் கைவசம் இருப்பதாகச் சொன்னார்.
திங்கள், 21 ஆகஸ்ட், 2023
மனசின் பக்கம் : எழுத்து கொடுத்த இடம்
தொடர்ந்து எழுதிக்கிட்டு இருப்பது கூட ஏதோ ஒரு வகையில் வரம்தான். இப்போது வரை ஏதாவதொன்றை கிறுக்கிக் கொண்டுதான் இருக்கிறேன். சில நாட்களுக்கு முன் ஒரு சகோதரர் 'உங்களுக்குப் பிரச்சினை இல்லைண்ணே... தசரதன் புத்தகம் கொண்டு வந்து அவரே எல்லாத்தையும் பார்த்துக்கிறார். நானெல்லாம் புத்தகம் போட்டு அதை எல்லார்க்கிட்டயும் கொண்டு போய் சேர்க்க ஓடிக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு. என்னமோ தெரியல இப்பல்லாம் ஓடவும் முடியல... அடுத்தடுத்து நகர்வதில் கூட ஒரு தயக்கம் வருது' என்று சொன்னார்.
திங்கள், 31 ஜூலை, 2023
மனசு பேசுகிறது : ஷார்ஜாவில் நிறைவான சந்திப்புக்கள்
முதல் சந்திப்பு :
கல்லூரியில் படிக்கும் போது எழுத ஆரம்பித்து, இன்று வரை எப்படியோ தொடர்ந்து கொண்டிருக்க்கிறேன் என்றாலும் படிக்கும் போது, சென்னையில் வேலை பார்த்த போது, அமீரகம் வந்த பின் என எழுத்தில் நிறைய மாற்றங்கள் வந்து இப்போது எழுத்தில் என்னளவில் நிறையவே மாற்றிக் கொண்டு, வாழ்வியலைத் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டுமென எழுதிக் கொண்டிருக்கிறேன்.
திங்கள், 24 ஜூலை, 2023
மனசு பேசுகிறது 'மடை மாற்றுதல்'
நண்பர்கள் அல்லது உறவினர்கள் கூடி ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது அதற்குச் சம்பந்தமில்லாத ஒரு விசயத்தை இடையில் ஆரம்பித்து வைத்து பேச்சின் போக்கையே மாற்றுவதைச் சிலர் வாடிக்கையாக வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். அதைத்தான் நாம் 'மடை மாற்றுதல்' என்று சொல்வோம்.
ஞாயிறு, 16 ஜூலை, 2023
நிகழ்வு : 'மாயநதி' பேராசிரியை உமாதேவியுடன் கலந்துரையாடல்
சமீபமாய் நிறைய நிகழ்வுகளுக்குப் போகும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. பலரைச் சந்திக்க, அவர்களுடன் உரையாட வார விடுமுறைகள் மட்டுமின்றி வாரநாட்களிலும் வாய்ப்புக் கிடைப்பது மகிழ்ச்சி. நேற்றைய நாளும் அப்படி ஒரு நாளாக, ஒரு சிறப்பான பேச்சைக் கேட்கும் நாளாக அமைந்தது.
புதன், 5 ஜூலை, 2023
யாவரும்.காமில் 'பொய்க்கால் குதிரைகள்'
ஜூன்-ஜூலை யாவரும்.காம் இணைய இதழில் எனது சிறுகதை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதுவும் அடுத்தடுத்த இதழ்களில் தொடர்ந்து சிறுகதைக்கு வாய்ப்பளித்திருப்பது மகிழ்ச்சி. யாவரும் இதழாசிரியர் திரு. ஜீவகரிகாலன் அவர்களுக்கு நன்றி.
ஞாயிறு, 2 ஜூலை, 2023
மனசு பேசுகிறது : வித்தியாசமான முதல் விமர்சனத்தைப் பெற்ற 'வாத்தியார்'
சில நிகழ்வுகள் எப்போதும் இனிமையானவைதான். அப்படியானதொரு நிறைவான தினமாய், என் எழுத்துப் பயணத்தில் மறக்க முடியாத நாளாய் இன்றைய தினம் அமைந்தது.
ஞாயிறு, 25 ஜூன், 2023
மனசின் பக்கம் : எழுத்து தந்த 'பாண்டியன் பொற்கிழி'
இதுவரை எனது எழுத்து பரிசுகளையும், பரிசுக் கேடயங்களையும் பெற்றுத் தந்து கொண்டிருந்தாலும், எழுத்து தொடர்பான ஒரு சில நிகழ்வுகள் மறக்க முடியாத நினைவுகளாய் அமைந்து விடும். அப்படியான நிகழ்வு ஒன்று சென்ற ஞாயிறு (ஜூன் - 18) அன்று நிகழ்ந்தது.
வியாழன், 22 ஜூன், 2023
கேலக்ஸி பதிப்பக முதலாம் ஆண்டு வெற்றி விழா - நிறைவுப் பகுதி
ஞாயிறு (ஜூன்-18) மாலையைச் சிறப்பானதொரு மாலையாக்கியது கேலக்ஸியின் முதலாம் ஆண்டு வெற்றி - நிறைவு - விழா. விழா நிகழ்வின் தொடர்ச்சியாய்...
கேலக்ஸி பதிப்பக முதலாம் ஆண்டு வெற்றி விழா - பகுதி : 2
ஞாயிறு (ஜூன்-18) மாலையைச் சிறப்பானதொரு மாலையாக்கியது கேலக்ஸியின் முதலாம் ஆண்டு வெற்றி - நிறைவு - விழா. நிகழ்வின் தொடர்ச்சியாய்...
செவ்வாய், 20 ஜூன், 2023
கேலக்ஸி பதிப்பக முதலாம் ஆண்டு வெற்றி விழா - பகுதி : 1
ஞாயிறு (ஜூன்-18) மாலையைச் சிறப்பானதொரு மாலையாக்கியது கேலக்ஸியின் முதலாம் ஆண்டு வெற்றி - நிறைவு - விழா.
சனி, 17 ஜூன், 2023
விமர்சனம் : 2018 (மலையாளம் - 2023)
முரண்பட்ட மனிதர்கள் பலர் மழைநாளில் உதவிக்கரம் நீட்டி எப்படித் தாங்கள் எல்லாரும் கதாநாயகர்களே என்பதை நிரூபித்தார்கள் என்று சொல்லும் படம்தான் 2018.
புதன், 14 ஜூன், 2023
மனசின் பக்கம் : வருகிறார் 'வாத்தியார்'
சில சமயங்களில் நாம் வேண்டாமென நினைத்து ஒதுங்கிச் செல்லும் பாதைதான் நமக்கானதாக அமையும். அப்படித்தான் கணிப்பொறியோடு மல்லுக்கட்டிக் கொண்டு கிடந்த போது இனிமேல் இந்த வேலையே பார்க்கக் கூடாது என விலகி விலகிப் போனாலும் என்னை விடாமல் தொடர்ந்தது அந்த வேலை மட்டுமே. இப்போது எல்லாவற்றிற்கும் கணிப்பொறி என்றான போதும் நானெல்லாம் அலுவலகத்தில் கணிப்பொறியோட மல்லுக்கட்டுற வேலைதான் பார்த்துக்கிட்டு இருக்கேன்.
வெள்ளி, 9 ஜூன், 2023
மனசு பேசுகிறது : மாமன்னனும் நம் மன்னர்களும்
'குச்சிக்குள்ள கெடந்த சனம்
கோணிச் சாக்குல சுருண்ட சனம்'
சமீபத்தில் மாமன்னன் படத்தில் வடிவேலு பாடிய பாடல் எல்லோராலும் பாராட்டப்பட்டது என்பதை நாம் அறிவோம். அரசியலில் எல்லாரையும் கோடிகளில் புரள வைக்கும்... அந்தக் கோடிக்கான கதையைக் கேட்டால் நண்பன் கொடுத்ததுன்னு பதில் வரும். நான் தெருக்கோடியில இருக்கேனேன்னு அவங்ககிட்ட கேட்டா, நீ எனக்கு ஓட்டுப் போட்டியாங்கிற கேள்வியும் வரும். அதை விடுங்க ஆனால் அதே அரசியல் கோடிகளில் புரண்ட ஒருவரை வீட்டில் முடக்கிப் போட்டது என்றால் அது வடிவேலுவைத்தான் என்பதை நாம் எல்லாரும் அறிவோம். வாயால் சம்பாதித்த கலைஞனின் வாய்தான் எதிரியாகவும் மாறியது.
திங்கள், 5 ஜூன், 2023
சினிமா விமர்சனம் : காக்கிப்படா (மலையாளம்)
காக்கிப்படா
சின்னக் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்வதும், கொலை செய்வதும் சில வருடங்களாக அதிகமாகியிருக்கிறது. இப்படியான கொடுமை செய்யும் பாவிகளுக்குச் சரியான தண்டனை கிடைக்கிறதா என்றால் அப்படியொன்றும் பெரிதாக நிகழ்ந்து விடுவதில்லை. அதுவும் பணம் படைத்தவன் என்றால் காவல்துறையும் நீதித்துறையும் அவனுக்குகச் சாமரம் வீசும் கேவலம்தான் நிகழ்வதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படியான பாவிக்காகச் சட்டம் வளைந்து கொடுக்க நினைக்கும் போது காக்கிச்சட்டைக்குள் கறை படியாமல் இருக்கும் சில இளவயது போலீசார் மனச்சாட்சிப்படிக் கொடுக்கும் தண்டனையைக் காட்டும் படமே 'காக்கிப்படா'.
ஞாயிறு, 4 ஜூன், 2023
சினிமா விமர்சனம் : பாச்சுவும் அத்புத விளக்கும் (மலையாளம் - 2023)
பாச்சுவும் அத்புத விளக்கும்-
ஒரு சாதாரணக் கதை, அதை நகைச்சுவை கலந்து கொடுத்த விதத்தில் ஜெயித்திருக்கிறார்கள்.
வியாழன், 18 மே, 2023
மறக்க இயலா நினைவுகள் - 5
சங்கப்பலகை முகநூல் குழுமத்தில் எழுதிய மறக்க இயலாத நினைவுகள் இங்கும் பகிர்வாக...
***
இன்று அன்னையர் தினமாம், இன்று ஒரு நாள் மட்டும் கொண்டாட இது ஒன்றும் மற்ற தினங்களைப் போல இல்லை என்பதால் நாம் தினம் தினம் கொண்டாட வேண்டிய ஆத்மா அது என்பதை மட்டும் சொல்லிக் கொண்டு எனக்கும் அம்மாவுக்குமான நினைவுகளில் மறக்க இயலாத நினைவுகளை இங்கு பகிரலாமென நினைக்கிறேன்.
புதன், 17 மே, 2023
மறக்க இயலா நினைவுகள் - 4
சங்கப்பலகை முகநூல் குழுமத்தில் எழுதிய மறக்க இயலாத நினைவுகள் இங்கும் பகிர்வாக...
***
தேவகோட்டை கலை இலக்கியப் பெருமன்றத்தின் பாரதி விழாவில் எப்போதும் மாலை நிகழ்வில் குன்றக்கடி அடிகளார் அவர்கள் பேசுவது வழக்கம். காலை நிகழ்வில் இலக்கியவாதிகள் பலர் சிறப்பு விருந்தினராகக் கலந்து பேசுவதுண்டு. அப்படி ஒருமுறை பேசுவதற்காக திரு. இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அப்போது அவர் மதுரையில் வேலையில்லாத ஒரு துறையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் அரசுத் தேர்வு எழுதும் பள்ளிக் குழந்தைகளுக்கு 'நீங்களும் சாதிக்கலாம்' என எழுதி, மேடைகளில் பேசிக் கொண்டிருந்ததாக ஞாபகம்.
செவ்வாய், 16 மே, 2023
மறக்க இயலா நினைவுகள் - 3
சங்கப்பலகை முகநூல் குழுமத்தில் எழுதிய மறக்க இயலாத நினைவுகள் இங்கும் பகிர்வாக...
பனிரெண்டாவது முடிக்கும் வரை எழுத்துப் பக்கம் போனதில்லை என்றாலும் நிறைய வாசிப்பதுண்டு. வாசிப்பு ஒரு போதையாய் இருந்த காலம் அது. நல்ல நாவல்கள் என்றால் விடுமுறை தினத்தில் மாடு மேய்க்கப் போகும் போது புத்தகத்தைக் கையில் கொண்டு போய் வாசிப்பதுண்டு.
ஞாயிறு, 14 மே, 2023
மறக்க இயலா நினைவுகள் - 2
சங்கப்பலகை முகநூல் குழுமத்தில் எழுதிய மயக்க இயலாத நினைவுகள்-2, எத்தனையோ நினைவுகளில் சிலவற்றை மட்டும் அங்கு பகிர்ந்திருக்கிறேன். அதையே இங்கும் பகிர்ந்து வைப்பதால் எப்போது வேண்டுமானாலும் சுலபமாக எடுத்துக் கொள்ள முடியும்தானே.
சனி, 13 மே, 2023
மறக்க இயலா நினைவுகள் -1
சங்கப்பலகைகள் முகநூல் குழுமத்தில் மறக்க இயலாத நினைவுகளைப் பற்றி எழுதச் சொல்லியிருந்தார்கள். அங்கு எழுதியது இங்கும்.
வெள்ளி, 5 மே, 2023
மனசின் பக்கம் : வைகையில் அழகர் சில நினைவுகள்
இந்தக் கட்டுரையை இங்கு பதியும் நேரத்தில் பச்சைப் பட்டுடுத்தி - இப்போதெல்லாம் பச்சை மட்டும்தான் - கள்ளழகர் வைகையில் எழுந்தருளி, லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தாக் கோஷத்தை மகிழ்வாய் ஏற்று, மனநிறைவுடன் காட்சி கொடுத்திருக்கிறார்.
ஞாயிறு, 30 ஏப்ரல், 2023
திருவிழா : வாழ்வியலும் வட்டார வழக்கும் - 'மண்ணின் மைந்தர்கள்' அழகுராஜா
வெள்ளி, 28 ஏப்ரல், 2023
மனசு பேசுகிறது : சில கதைகள்
2022 கொடுத்த அடியில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்தாலும் மனசு என்னவோ இன்னமும் சோர்வாய்த்தான் இருக்கிறது. முன்பெல்லாம் தினமும் ஏதாவது எழுது எனச் சொன்ன மனசு இப்பல்லாம் என்னத்த எழுதி... எதாச்சும் படம் பார்க்கலாம், ஐபிஎல் மேட்ச் பார்க்கலாம், இல்லேன்னா கெடந்து தூங்கலாம் என்று சொல்ல ஆரம்பித்து அதையே செயல்படுத்தியும் கொண்டிருக்கிறது.
ஞாயிறு, 23 ஏப்ரல், 2023
புத்தக விமர்சனம் : ALT + 2 (சிறுகதைகள்)
ALT + 2
பினாத்தல் சுரேஷ் என்ற பெயரில் எழுதும் சுரேஷ் பாபு அண்ணனின் சிறுகதைத் தொகுப்பு.
மனசு பேசுகிறது : உலக புத்தக தினம் சில நினைவுகள்
உலக புத்தக தினம்-
சின்ன வயது முதல் புத்தக வாசிப்பில் ஈடுபாடு இருக்கத்தான் செய்தது. வீட்டில் அம்மாவுக்காக ராணி வாங்குவார்கள் என்பதால் எங்கள் எல்லாருக்குமே வாசிப்பு என்பது ராணியில் இருந்துதான் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை யார் கடைக்குப் பால் வாங்கப் போனாலும் திரும்பி வரும்போது ராணியோடுதான் வரவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. சில வேளைகளில் ஏதாவதொரு காரணத்தால் வாங்காமல் வந்துவிட்டாலும் கூட, எப்பவும் வாங்கும் கருணாநிதி அண்ணன் கடையில் ஒரு ராணியை எடுத்து வைத்திருப்பார்கள்.
சனி, 22 ஏப்ரல், 2023
மனசின் பக்கம் : பத்துக் கன்னி தல 'வலி' தீவு
புதன், 19 ஏப்ரல், 2023
நிகழ்வுகள் : அமீரகத் தமிழகத்தின் தமிழ்புத்தாண்டு விழா
'அமீரகத் தமிழகம்' அமைப்பின் தமிழ் புத்தாண்டு விழா-
நிகழ்வுகள் : அதீப் நடத்திய 'ரைஸ்' குழும இப்தார்
நேற்று மாலையை இனிமையான மாலையாக்கியது அதீப் குழுமம் ஏற்பாடு செய்திருந்த 'ரைஸ்' அமைப்பின் இப்தார் நிகழ்வு.
வியாழன், 13 ஏப்ரல், 2023
சினிமா விமர்சனம் : அயோத்தி (தமிழ் - 2023)
அயோத்தி-
மனிதமும் மனிதநேயமும் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை வலிமையாக வலியுறுத்திச் சொல்லியிருக்கும் படம்.
ஞாயிறு, 26 மார்ச், 2023
புத்தக விமர்சனம் : காற்றின் நிறம் சிவப்பு
'காற்றின் நிறம் சிவப்பு'
ஒரு தொடரை - நாவல் - பலர் சேர்ந்து வாரம் ஒருவர் என எழுதினால் எப்படியிருக்கும் என்பதை அகம் மின்னிதழ் நண்பர்கள் முயன்று, அதில் வெற்றியும் பெற்று கலக்கல் ட்ரீம்ஸ் மூலமாக 2018-ல் புத்தகமாகவும் ஆக்கியிருக்கிறார்கள்.
சனி, 25 மார்ச், 2023
புத்தக விமர்சனம் : சுரதா தொகுத்த 'நெஞ்சில் நிறுத்துங்கள்'
கவிஞர் சுரதா தொகுத்த 'நெஞ்சில் நிறுத்துங்கள்' என்னும் புத்தகம் சகோதரர் ராஜாராம் மூலம் வாசிக்கக் கிடைத்தது. சற்றே வித்தியாசமான புத்தகம் அது.
செவ்வாய், 17 ஜனவரி, 2023
பிக்பாஸ் சீசன் - 6 பதிவு -1
வெளியில பொங்கலுக்குச் சல்லிக்கட்டு.. பிக்பாஸ் வீட்டுக்குள்ள முட்டைக்காக மல்லுக்கட்டு.
திங்கள், 16 ஜனவரி, 2023
புத்தக விமர்சனம் : சிவமணியின் 'ஆதிராவின் மொழி'
ஆதிராவின் மொழி-
செவ்வாய், 10 ஜனவரி, 2023
மனசு பேசுகிறது : சில நேரங்களில் சில மனிதர்கள்
ராஜாராம் எழுதச் சொன்னதை எழுதாமல் விட்டால் நல்லாயிருக்காது... பெரிய்ய்ய்ய பொங்கலுக்குப் போட்டது மாதிரி பாவமன்னிப்புக்கு ஒரு மீம்ஸ் போட்டுருவார். எனவே நடந்தது நடந்தபடி இங்கே...
மனசு பேசுகிறது : அபுதாபி பொங்கல் விழா
அபுதாபி கலீஃபா பூங்காவில் நேற்றுக் காலையில் இருந்து களைகட்டிய பொங்கல் விழாவுக்கு நாங்கள் - நான், பால்கரசு, ராஜாராம் - போன போது மதியம் மூன்று மணிக்கு மேலிருக்கும்.