மோகன் நடித்த இரட்டை வால் குருவி பார்த்திருப்பீங்கதானே... அது மாதிரி ஒரு படம்தான் இது... அதில் ரெண்டு மனைவி... இதில் முன்னாள், இந்நாள் காதலிகள்... அவ்வளவே வித்தியாசம்.. இங்கும் அங்கும் பயணித்தல் இரண்டிலும் ஒன்றே... அதுவும் ரெ.வா.குவில் மருத்துவமனையில் மாறிமாறி அலைவானே அதேபோல் இதில் தங்கையின் திருமணத்தில்... இருவருடனும் ஜோடி போட்டு ஆட வேண்டிய நிலையில் பேச்சு வார்த்தையில்லாத அப்பனால் இரட்சிக்கப்படுகிறான். மொத்தத்தில் மத்தளத்துக்கு அடிவிழுவது இரண்டிலுமே ஒன்றுதான்.
ஞாயிறு, 28 ஜூன், 2020
சனி, 27 ஜூன், 2020
சினிமா : கப்பேள (kappela - Malayalam)
மலையாளத்தில் கப்பேள என்றால் மேரி மாதாவை மட்டும் வைத்து வழிபடும் ஒரு சிறிய இடம் என்று சொல்கிறார்கள். அப்படியானதொரு மேரி மாதாவின் சிலையொன்று நாயகியின் வீட்டினருகே இருக்கிறது. அதுவே அவள் அடிக்கடி போய் வழிபாடு செய்யுமிடமாகவும் இருக்கிறது.
புதன், 24 ஜூன், 2020
நூல் விமர்சனம் : கறுப்பர் நகரம்
மரப்பாலம் வாசித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு கரன் கார்க்கியின் கறுப்பர் நகரம் நாவலை வாசித்தேன். மரப்பாலம் உலகப்போரைப் பற்றிப் பேசியது என்றால் கறுப்பர் நகரம் முழுக்க முழுக்க விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைப் பேசுகிறது... அதுவும் அதீத காதலோடும் கொஞ்சம் காமத்தோடும் மிகுந்த வலியோடும் பயணிக்கிறது.
ஞாயிறு, 21 ஜூன், 2020
'எதுவும் கடந்து போகும்' - ராஜுமுருகன்
கடந்த வெள்ளியன்று அமீரக எழுத்தாளர் மற்றும் வாசிப்பாளர்கள் குழுமத்தின் 'கானல்' காணொளி நிகழ்வாக திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன் அவர்களுடன் 'எதுவும் கடந்து போகும்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.
மனசு பேசுகிறது : முத்தான மூன்று கதைகள்
ஒரு சில சிறுகதைகள் வாசித்த பின்னும் நம் மனசுக்குள் எப்போதும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை உண்டாக்கிக் கொண்டேயிருக்கும். அப்படியான கதைகளை வாசிப்பது என்பது வரம்.
சனி, 20 ஜூன், 2020
மனசு பேசுகிறது : 'துருவ நட்சத்திரம்'
மத்தியமர் குழுமத்தில் இணைந்து நீண்ட நாட்களான போதிலும் எந்த ஒரு பதிவும் பகிர்வதில்லை... வாசிப்பதுடன் சரி... அதுவும் இங்கு எழுதுபவர்களைப் பார்க்கும் போது இதெல்லாம் பெரிய இடம் போல... நாம ஒதுங்கியே இருப்போம்ன்னு கொஞ்சம் எட்டிப் பார்த்துட்டு வெளியில் வந்துருவேன்.
வியாழன், 18 ஜூன், 2020
மனசு பேசுகிறது : ஜூம் வழி எதிர்சேவை அறிமுகம்
சகோதர் நந்தா அவர்களின் முன்னெடுப்பில் அமீரக பறம்பு வாசகர் வட்டம் மற்றும் கத்தார் கீழடி வாசகர் வட்டம் சார்பாக இன்று நடைபெற்ற காணொளி கலந்துரையாடல் மூன்று மணி நேரங்களுக்கு மேலாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.
புதன், 17 ஜூன், 2020
சினிமாவும் வாழ்வியலும் - ஆர்.பாண்டியராஜன்
அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் வட்டம் இன்று மாலை நடத்திய காணொளி நிகழ்வில் இயக்குநர் ஆர்.பாண்டியராஜன் அவர்களுடன் 'சினிமாவும் வாழ்வியலும்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
திங்கள், 15 ஜூன், 2020
ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் : 10
தினம் ஒரு கோவில் என்னும் தலைப்பில் பத்துக் கோவில்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற முகநூல் தொடர் பதிவுக்காக எழுதியவைதான் இவை. அப்படிப் பார்த்தால் இன்றோடு பத்துப் பதிவுகள் முடிந்துவிட்டன. இருப்பினும் எங்கள் மாவட்டத்துக்குள்ளேயே இன்னும் நிறையக் கோவில்களைக் குறித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் மனதில் உண்டு. அதை இந்தப் பதிவுகளின் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறேன். அதனால் இத்துடன் இது முடிந்து விடப் போவதில்லை... இன்னும் தொடர்வேன்... அதற்கென சில நாட்கள் இடைவெளி தேவைப்படலாம்.
ஞாயிறு, 14 ஜூன், 2020
ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 9
எவ்வளவு கோவில்கள்... எத்தனை சிறப்புக்கள்... வாசிக்கும் போதுதான் தெரிகிறது சிவகங்கைச் சீமையில் இத்தனை சிறப்புடைய கோயில்கள் இருப்பது... எல்லாமே வரலாற்றுடன் தொடர்புடைய கோவில்கள்... சர்வசாதாரணமாகக் கடந்து செல்லும் கோவில்களுக்குள் இத்தனை சிறப்பா என்று யோசித்துக் கொண்டும் வியந்து கொண்டுமிருக்கிறேன்.
சனி, 13 ஜூன், 2020
ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 8
தினம் ஒரு கோவிலுக்கான தேடல் பத்து நாளில் முடிந்து விடவில்லை. இன்னும் தொடரத்தான் செய்கிறது. ஒன்பது நகரக்கோயில்கள் என்பது எங்க மாவட்டத்தில் சிறப்பு. அதில் பிள்ளையார்பட்டி ஒன்றை மட்டுமே எழுதியிருக்கிறேன். மாத்தூரில் எல்லாம் எத்தனை அற்புதமான சிற்பங்கள்... எல்லாம் எழுதும் எண்ணமிருக்கிறது. பார்க்கலாம்... தொடர முடிகிறதாவென.
வெள்ளி, 12 ஜூன், 2020
ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 7
தினம் ஒரு கோயில் பதிவென முகநூலுக்கு எழுதும் போது எங்கள் மாவட்டக் கோவில்கள்தான் என்பது தீர்க்கமான முடிவாக இருந்தது. இந்தத் தொடருக்கு அழைத்த நண்பர் சத்யா, திருமயம் கோவிலைக் குறிப்பிட்டு எழுதச் சொன்னார் என்றாலும் சிவகங்கை மாவட்டத்தின் அருகில் இருந்தும் புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் கோவிலாததால் பின்னர் எழுதுகிறேன் என்று சொன்னேன். நேற்று அந்தக் கோவில் குறித்த வரலாறுகளை வாசிக்கும் போது ஆச்சர்யமாக இருந்தது. அந்த மலையைக் கடந்து எத்தனையோ முறை பயணித்திருந்தும் ஒருமுறை கூட கோவிலுக்குச் சென்றதில்லை. இவ்வளவுக்கும் திருமயம் மலை மீது ரெண்டொரு முறை ஏறியிருக்கிறேன். விரைவில் முகநூலில் எழுதுவேன். அதன் பின் இங்கும் பகிர்வேன்.
வியாழன், 11 ஜூன், 2020
ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 6
கோவில்களின் தேடலில் ஒன்றைக் கண்டு கொள்ள முடிந்தது. அது என்னன்னு முதல் கட்டுரையிலேயே சொல்லியிருந்தேன். அதாவது ஒரு ஆண் தெய்வத்தின் கோவிலில் பெண் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் ஆண் தெய்வத்தின் பெயர் மங்கி, பெண் தெய்வத்தின் பெயர் பிரதானமாகிறது. அப்படியான ஒரு கோவில்தான் இன்று பார்க்கப் போகும் கோவில்.
புதன், 10 ஜூன், 2020
ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 5
கோவில்களைப் பற்றி எழுத ஆரம்பித்த போதுதான் நாம் அடிக்கடி செல்லும் கோவிலாக இருந்தாலும், மக்கள் வழி வழியாகச் சொல்லும் கோவிலின் வரலாறு, சிறப்புக்களைக் கேட்டிருந்தாலும் விரிவான வாசிப்பில்தான் புராணக்கதை, வரலாறு சொல்லும் கதை என எல்லாமும் அறிய முடிந்தது.
செவ்வாய், 9 ஜூன், 2020
ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 4
கோவில்களைப் பற்றி எழுத ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயில் என்ற தேடலில் முதல் பதிவை விட இரண்டாவது பதிவு... அதைவிட மூன்றாவதென ஒவ்வொன்றும் விரிவாகப் போக ஆரம்பிக்கக் காரணம் இன்னும் வேறேனும் செய்திகள் இருக்கா என்ற தேடல்தான் என்பதை உணரமுடிகிறது.
திங்கள், 8 ஜூன், 2020
ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 3
நேற்றுடன் முகநூலில் பத்துக் கோவில்களைப் பகிர்ந்து முடித்தாலும் இன்னும் சில கோவில்கள் குறித்து தொடர்ந்து அங்கு பகிரும் எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. அங்கு பகிர்ந்தால் இங்கும்தான் தொடரும்.
ஞாயிறு, 7 ஜூன், 2020
ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 2
முகநூலில் தொடரும் பத்து நாள் பத்துக் கோவில் தொடரை இன்றுடன் முடிக்க இருந்தாலும் இன்னும் சில கோவில்கள் குறித்து எழுதலாம் என்ற எண்ணம் மனசுக்குள் இருக்கிறது. இது குறித்தான தேடலில்தான் நிறைய விஷயங்களை அறிய முடிகிறது. பெரும்பாலான கோவில்களுக்கு உண்மையான வரலாறு ஒன்றிருக்க, சாதிக்கொன்றாய் வரலாறுகளும் காணப்படுதல் அபத்தம்... இவர்கள் வரலாறுகளைத் திரித்து எழுதி பிற்காலத்தில் எந்த ஒரு உண்மையான வரலாறும் மக்களுக்குக் கிடைக்காமல் செய்து விடுவார்கள் என்பதே உண்மை.
சனி, 6 ஜூன், 2020
ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 1
நான் முகநூலில் பெரும்பாலும் அதிகம் எழுதுவதில்லை... நிறைய வாசிப்பேன்... வெட்டியாய் பொழுது போக்குவதென்பது அங்கு ரொம்பக் குறைவுதான். எழுதவோ படிக்கவோ செய்யும் போது பெரும்பாலும் இளையராஜா, சமீபத்தில் தேவா இசையில் எஸ்.பி.பி. பாடிய மூன்று மணி நேரத் தொகுப்பு, நாடக நடிகர் முத்துச்சிற்பி, கிராமியப் பாடகர்கள் இளையராஜா, அபிராமியின் பாடல்களுடன் ஐக்கியமாகி விடுவதுண்டு. முகநூல் சில நேரங்களில் நமக்கு நல்லதொரு வாய்ப்பை வழங்கவும் செய்யும். அப்படித்தான் நண்பரும் அகல் மின்னிதழ் ஆசிரியருமான சத்யா தொடரச் சொன்ன பத்து நாள் பத்துக் கோவில் குறித்த விபரங்களைச் சொல்லும் தினம் ஒரு கோவில் அமைந்தது.