காரி-
சல்லிக்கட்டை மையப்படுத்தி எடுத்திருப்பார்கள் என்று நினைத்துப் பார்த்தால் என்னென்னமோ கதைகள் பேசி இறுதியில் காரி மாட்டைக் களத்தில் இறக்கி விடுறாங்க... அம்புட்டுத்தான்.
காரி-
சல்லிக்கட்டை மையப்படுத்தி எடுத்திருப்பார்கள் என்று நினைத்துப் பார்த்தால் என்னென்னமோ கதைகள் பேசி இறுதியில் காரி மாட்டைக் களத்தில் இறக்கி விடுறாங்க... அம்புட்டுத்தான்.
கூமன்-
பரிவை படைப்புகள்-
இந்த முறையும் நாவல்தான் வரும்ன்னு நினைச்சிருந்தேன் என்றார் நண்பர் ஒருவர். நானோ இந்த முறை இதுவே வரவேண்டாம்ன்னுதான் நான் நினைத்தேன் என்றேன் சிரித்தபடி. நீங்க வேண்டான்னாலும் உங்க நண்பர் கொண்டு வந்திருப்பார் என்று சொல்லிச் சிரித்தார். அவர் சொன்னது உண்மைதான், அதுதான் இந்த முறை நடந்தது.
குமாரி-
பரிவை-
எனக்கு எப்போதுமே எங்க ஊர்ப்பாசம் ரொம்ப அதிகம். இன்று வாழ்வின் நிமித்தம் வெளிநாட்டு வாழ்க்கை என்றாலும் ஊருக்குப் போகும் அந்த ஒரு மாதத்தில் தினமும் காலை அல்லது மாலை எங்க ஊருக்குப் போய் வீட்டில் இருக்கும் மரம், செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சி விட்டு அங்கிருப்பவர்களுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வருவதுண்டு. அந்தக் காற்றைச் சுவாசித்தாலே மனசுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது போல் அத்தனை மகிழ்வாய் இருக்கும். இன்று பல மாற்றங்களை - குறிப்பாக விவசாயம் இழந்து, நாங்க நீந்தி விளையாண்ட கண்மாய் குளிக்க முடியாத அளவுக்கு மாற்றம் - அடைந்திருந்தாலும் நாம் ஓடித்திரிந்த அந்த ஊர் இன்னமும் மனசுக்குள் அப்படியேதான் இருக்கிறது.
அம்மு-
ரத்தசாட்சி-
எழுத்தாளர் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதை அதன் தரத்தைக் குறைக்காமல் திரைப்படமாக்கியிருக்கிறார் புதிய இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில். அதற்காக அவரை வாழ்த்தலாம்.
அச்சுக்குப் போகும் முன் - பிழைதிருத்தம் செய்யும் முன் - நிறையக் கதைகளை, நாவல்களை, கவிதைகளை, கட்டுரைகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி கிடைப்பதுண்டு. கரன் கார்க்கி அண்ணனின் 'சட்டைக்காரி'யைப் புத்தகமாவதற்குள் - கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே - அவர் எழுதிய சூட்டோடு வாசிக்கும் வாய்ப்புஎனக்குக் கிடைத்த பெரும்பேறு என்று சொல்லலாம். அது குறித்து அண்ணனுடன் நீண்ட நேரம் உரையாடியதும் அதற்குப் பின் இன்று வரை அவரின் தம்பி என்ற அழைப்பு எனக்குக் கிடைப்பதும் பெரும் மகிழ்ச்சி என்றாலும் இன்றுவரை இருவரும் சந்திக்காதது வருத்தமே.
பாலைவன பரமபதம் வெளியீட்டு விழா நிகழ்வுப் பகிர்வு -
சென்ற சனிக்கிழமை (19/11/2022) இரவு துபை பின் ஷபீப் மாலில் இருக்கும் ஃபரா உணவகக் கூட்ட அரங்கில் சகோதரி சிவசங்கரி வசந்த்தின் முதல் நாவலான 'பாலைவன பரமபதம்' வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம் நடத்திய இந்நிகழ்வு எப்பவும் போல் மகிழ்வாகவும் சிறப்பாகவும் நடந்தது.
ஒரு தெக்கன் தள்ளு கேஸ்-
நா தான் கேசு கொடு-
எங்க கருப்பசாமி -
தமிழணங்கு-
நண்பர்களின் எழுத்துக்களை அச்சுக்குப் போகும் முன் வாசிக்கும் பாக்கியம் பெற்றவன் நான். அதில் மகுடமாய் எழுத்தாளர் கரன் கார்க்கி அண்ணனின் 'சட்டைக்காரி' புத்தகமாவதற்கு ஒரு வருடம் முன்னரே எனக்கு வாசிக்கக் கிடைத்ததுடன் அது குறித்தும், அதன் பின் என் எழுத்து குறித்தும் அவருடன் நீண்ட உரையாடல்கள் எல்லாம் நிகழ்ந்தேறியதுடன் இன்றுவரை மரப்பாலம் கொடுத்த நட்பு உறவாய்த் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அழகர் கோவில்-
எழுத்தாளர் தொ.பரமசிவன் அவர்கள் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் மேற்கொண்ட ஆய்வு நூலாகும். நமக்கெல்லாம் அழகர் கோவில் மதுரையில் இருக்கிறது என்பதும் வைகை ஆற்றில் இறங்கும் மிகப்பெரும் திருவிழாவும் மட்டுமே தெரியும், சிலருக்கு இன்னும் கூடுதலாகச் சில விஷயங்கள் தெரிந்திருக்கலாம்.
திரு. வேலாயுதம் ஐயா...
கடைசி விவசாயி...
பதிவுக்குள் செல்லும் முன்...
தென்னரசு சிறுகதைப் போட்டியில் எனது கதையும் இருக்கு. கதை அவ்வளவு நல்லாவெல்லாம் இருக்காது... சாதாரணக் கதைதான், அதனால் படிச்சாலும் படிக்காட்டியும், பிடிச்சாலும் பிடிக்காட்டியும் கீழிருக்கும் லிங்கைத் தட்டி, நாளைக்குள் ஒரு லைக்கையும் தட்டி விடுங்க... நன்றி.
******
ஹிருதயம் ...
எனக்கான ஏதோ ஒன்று ஏதோ ஒரு விதத்தில் நடந்து கொண்டேதான் இருக்கிறது, அதுவும் எழுத்து தொடர்பாக எனக்கு நான் எதிர்பார்க்காததெல்லாம் கடந்த மூன்றாண்டுகளில் நடந்து கொண்டிருப்பது மகிழ்வே. அப்படித்தான் இன்றைய நிகழ்வும்.
விமர்சனங்கள்தான் நம்முடைய எழுத்தை இன்னும் சிறப்பாக்கும், என்னென்ன தவறு செய்திருக்கிறோம் இனி அதை எப்படித் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் நமக்கு உணர்த்தும். நான் எங்கு எழுதினாலும் எனது கதைக்கான கருத்துக்களை வாசிக்கத் தவறமாட்டேன். அதில் இருக்கும் குறை, நிறைகளையெல்லாம் அடுத்து எழுதும்போது முடிந்தளவுக்குச் சரி செய்து கொள்வேன்.
மதுரம்
மலையாளத்தில் மதுரம் என்றால் இனிப்பு... படம் முழுவதும் அப்படி ஒரு சுவைதான் நிரவிக் கிடக்கிறது.
மின்தூக்கி
எழுத்தாளர் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் எழுத்தில் வெளிநாட்டு வாழ்க்கையையும் அதனுடே படிப்பின் முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசியிருக்கும் நாவல் இது.
தாமரைச்செல்வி-
பிக்பாஸ் சீசன்-5-ல் கலந்து கொண்டவர்களில் கிராமத்து முகமாகச் சிலர் இருந்தாலும் எதார்த்தமான மண்வாசனையுடன் இருவர் மட்டுமே - தாமரைச்செல்வி, சின்னப்பொண்ணு - இருந்தாலும் சின்னப்பொண்ணு மீடியா வெளிச்சம் பெற்றவர் என்பதால் தாமரைச்செல்வியே வெகுளித்தனமாய் தனித்து நின்றார்.
சென்ற வார இறுதியில் அறையில் அண்ணன் ஒருவருக்கு கொரோனா வந்ததால் அவருடன் இருந்த காரணத்தால் ஒரு வாரமாக சுய தனிமைப்படுத்துதலில் இருந்து வருகிறோம்.
குருப்-
'என்னை விட எனக்கு இங்கு யாருமே முக்கியமல்ல'- இது படத்தில் வரும் வசனம், இந்த வசனமே கதையைச் சொல்லிவிடும்.