வெள்ளி, 13 நவம்பர், 2015

மனசின் பக்கம் : ஆல்ப்ஸிலிருந்து தூதுவளை

சேனைத்தமிழ் உலாவில் எழுதும் அனைவரையும் தனது பின்னூட்டக் கருத்துக்களால் ஊக்கப்படுத்தி எழுத வைப்பதில் நிஷா அக்காவுக்கு நிகர் அவர்தான்.... சேனையில் மட்டுமின்றி முகநூல், பலரின் வலைப்பூக்கள் என எல்லா இடத்திலும் தனது நீண்ட, நிறைவான கருத்துக்களால் நிறைய விஷயங்களைப் பேசுவார். எல்லாமே வாழ்வியல் பேசும் கருத்துக்கள் என்பதை அவரின் கருத்துக்களை வாசித்தவர்கள் அறிவார்கள். அப்படிப்பட்ட ஒருத்தர் கருத்துக்களை மட்டுமே பகிர்ந்து செல்லாமல் தனது எண்ணங்களை பதிவுகளாக்கி தனக்கான பெட்டகமாகவும் மற்றவர்களும் அறியும் வகையில் செய்ய வேண்டும் என நினைத்தபோதெல்லாம் அவர் பார்க்கும் தொழிலுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அவரிடம் சொல்வதில்லை. ஒருநாள் அவராகவே எனக்கும் வலைப்பூ ஆரம்பிக்கும் ஆசை வந்துவிட்டது என்று சொன்னார். விடுவோமா... கீதமஞ்சரி அக்கா, நான், சம்ஸ், நண்பன் என ஒரு குழு சேர்ந்து அவரை தீபாவளி அன்று வலையுலகிற்குள் இழுத்து விட்டுவிட்டோம். ஆம் இப்போது அக்கா அவர்கள் தனது 'ஆல்ப்ஸ் தென்றல்' என்ற தளத்தில் எழுத ஆரம்பித்து மூன்று பதிவுகளும் போட்டாச்சு. நீங்களும் வாசித்துப் பாருங்கள்... அவரின் எழுத்தில் லயித்துப் போவீர்கள். தளத்திற்குச் செல்ல படத்தின் மீது கிளிக்குங்கள்.

ஆல்ப்ஸ் தென்றல்

***
வேதாளம் தியேட்டரில்தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதனால் தூங்காவனம் நேற்றிரவு இணையத்தில் பார்த்தேன். கமல் என்ற கலைஞனுக்காக ஒரு முறை பார்க்கலாம். மற்றபடி ஆங்கிலப் படத்தின் கதையை அப்படியே எடுத்திருந்தாலும் அந்த நைட் கிளப்பும் கோட் அணிந்த மனிதர்களும் கதையோடு ஒட்டவில்லை.  த்ரிஷா... நண்பர் செங்கோவி விளிப்பது போல் கமலா காமேஷ்... ஆமா முகம் அப்படித்தான் இருக்கு... போலீசுக்கு எல்லாம் செட்டே ஆகாத முகம்... ஒரு வேகம் இருக்க வேண்டாமா... சண்டை போடுறேன்னு கமல்... விடுங்க... தலைவர் மதுஷாலினிக்கு கொடுக்கிற முத்தத்தைவிடவா... இந்தச் சண்டை பெரிசு... இதெல்லாம் இல்லைன்னா அது கமல் படமே இல்லை... 


கமலா காமேஷ்... மன்னிக்கவும் த்ரிஷாவுக்குப் பதிலாக பாபநாசம் படத்தில் போலீசாக அதிரடி காட்டி கலக்கிய ஆஷா சரத்தையே போலீசாக்கியிருக்கலாம் மிரட்டியிருப்பார். இதில் கமலின் மனைவியாக நாலு காட்சிகளில்  மட்டுமே ஒப்புக்கு வருகிறார். நடிப்புக்கு தீனியே இல்லை போனில் பேசுவதாய் மட்டுமே... திரைக்கதையில் ஒரு வேகமில்லை... கமல் என்ற மனிதர் ஓடுகிறார்... படத்தையும் தாங்கிக் கொண்டே ஓடுகிறார். வருடத்திற்கு மூன்று படமெல்லாம் எடுக்க நினைத்தால் கமலும் இப்படித்தான் எடுக்க முடியும்... கமலின் ரசிகனாய் மீண்டும் சண்டியர், தேவர் மகன், ஹேராம், குணா, குருதிப்புனல், விஸ்வரூபம் போன்ற படங்களை அவர் கொடுக்க வேண்டும் என்ற ஆசையே படத்தைப் பார்த்தபோது மேலோங்கியது.
***
ந்த வாரம் அலுவலகத்தில் அவ்வளவாக வேலை இல்லை.... அதற்கெல்லாம் சேர்த்து வரும் வாரம் பிழிந்து எடுத்துவிடுவார்கள் அது வேற விஷயம்... நான் சொல்ல வந்தது தீபாவளி அன்று எழுதிய சிறுகதை பற்றி... அலுவலகத்தில் வேலை முடிந்தும் 5.30 மணி வரை உக்கார வேண்டுமே என்பதால் ஒரு கவிதை எழுதலாம் என உட்கார்ந்தேன். அப்படியே தையற்காரரையும் பார்த்தவனுக்கு தீபாவளிக்கு ஒரு சிறுகதை எழுதலாமே என்று தோன்றியதும் ஆரம்பித்ததுதான் ஜீவநதி, முதலில் ஒரு பாரா எழுதும் போது கணவன் பணம் அனுப்பவில்லை, குழந்தைகளுக்கு துணி எடுக்கணும் என்பதாய் பயணப்பட்ட கதையில் அண்ணனும் எங்கிட்ட காசில்லைன்னு சொல்லிட்டுப் போவதாய் போகும்போது கடன் வாங்கலாம் என்பதாய் போய், ஏன் கடன் வாங்கணும் அண்ணனே கொடுப்பதாய் இருந்தால் என்று மாற்றுப் பாதையில் பயணித்த போது அந்தப் பணம் அண்ணனுக்கு ஏது...? என்ற கேள்வியில் தொக்கியபோது விரல்கள் தட்டச்சு செய்ததே கடைசி பாரா... 

கதை எல்லோருக்கும் பிடித்திருந்தது. நான் கதையின் கருவை யோசித்து வைத்து அதுக்கு தீனி போட்டு எழுதுபவன் அல்ல... இதுதான் கதை என்றெல்லாம் யோசித்துப் பயணிப்பவனும் இல்லை... முதல் பாரா எழுதி முடியும் போது இரண்டாம் பாரா அதுவாக பயணிக்கும்... இப்படியேதான் கடைசிப் பாரா வரை... கதையின் போக்கில் பயணிப்பேன். நான் தேர்ந்த எழுத்தாளன் இல்லை... மொழி அழகியல் எல்லாம் என் கதையில் இல்லை... ஆனாலும் கடைசிப் பாரா மொத்தக் கதையையும் தாங்கிப் பிடிப்பதாய் அமைவது கடவுள் கொடுத்த வரம் என்றுதான் நினைக்கிறேன். கல்லூரிக் காலத்தில் நிறைய எழுதி பத்திரிக்கைகளில் வந்திருக்கிறது. சில கதைகள் மட்டுமே நல்ல கதைகள் என்று எனக்குத் தோன்றும்... இப்போது நினைத்தால் எல்லாமே ஏதோ எழுதியவைதான்... ஆனால் இப்போது எழுதும் கதைகள் கொஞ்சம் வாழ்க்கையோடு பயணிப்பதாய்த் தெரிகிறது. இருந்தாலும் என் நண்பர்களில் சிலர் உனது கதைகள் பெரும்பாலும் சோகத்தைத்தான் சொல்கிறது என்பார்கள். அவர்களுக்காகவே சில காதல், சந்தோஷக் கதைகள் எழுதியிருக்கிறேன்.. ஆனால் அவை எல்லாம் வாழ்க்கை பேசவில்லை... இப்படிப்பட்ட கதைகள்தான் என் மண்ணின் மக்களோடு வாழ்வதைப் போல் எனக்குள் ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. எனது கதைகள் அப்படித்தானா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

***
நேற்றுக் காலை அலுவலகம் செல்லும் போது மேகம் இருட்டிக் கொண்டு வந்தது, காற்றும் வீசியது... சரி இன்னைக்கு மழை இருக்கு என்று நினைத்துக் கொண்டே நடந்தேன். வெயில் சுட்டெரித்த பூமியில் இதமான காற்று... அதுவும் மழை மேகம் இருப்பதால் சற்று குளிராய்... நடக்கவே சுகமாய் இருந்தது... அலுவலகத்தில் அமர்ந்து வெளியில் பார்க்கும் போதெல்லாம் எப்படியும் மழை வரும் என்றே தோன்றியது. துபாயில் இருந்து போன் பண்ணிய அண்ணனிடம் இங்கு மழை வருவது போல் இருக்கு.. அங்கு எப்படி என்றதும்... காலையில் லேசாகத் தூறி இருக்கு... ஆனா இப்ப வெயில் இருக்கு, மழை வர்றது மாதிரி தெரியலை... மாலை அலுவலகம் விட்டு வரும்போது எப்பவும் போல் இருந்தது... மழையும் இல்லை ஒன்றும் இல்லை... அறைக்கு வந்த பிறகு  சாயந்தரம் துபாயில மழை அடித்துப் பெய்திருக்கிறது தெரியுமா.. இங்குதான் இல்லை என்று நண்பர் ஒருவர் சொன்னார். அட... அங்க பெய்ந்த மழை இங்கும் பெய்திருக்ககூடாதா..? போன வருடமும் சுற்றி மழை பெய்தது அபுதாபியில் மட்டும் இல்லை... இந்த வருடமும் அப்படித்தான் போல...

தொடர்ந்து பெய்யும் மழையால் தமிழகமே தத்தளிக்கிறது என்று செய்திகள் வருகின்றன... வீடுகளைச் சுற்றி குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது என்று சொல்கிறார்கள். ஆம்... நகரை விரிவாக்குறேன் என்று சொல்லியே ஏரிகளையும் குளங்களையும் பட்டா போட்டு விற்றுவிட்டார்கள். விற்பவன் செல்வச் செழிப்போடு இருக்கிறான்... வாங்கியவன் நீச்சலடித்துக் கொண்டிருக்கிறான்.  இப்பப் புலம்பி என்னாகப் போகுது..? அம்மாவுக்கு சுத்தமாக் கேக்காது... வித்தவனில் அவர் ஆளும் இருக்கிறான் என்றாலும் ஏதோ குரல் கொடுப்போம் என்று ஐயா கத்துவார், தளபதியோ அதிலும் படகு விடலாமா அல்லது நீச்சலடிக்கலாமா என நமக்கு நாமே திட்டம் திட்டுவார். சிவகாசிக்காரரும் மாம்பழத்து ஐயாவும் சின்னக்கவுண்டரும் வளவனாரும் மூப்பனாரின் வாரிசும் தமிழிசை பாடி வரும் வானம்பாடியும் என்ன அழகு எத்தனை அழகு புகழ் இளங்கோவும் கூடையில் பூவும் அறிக்கைப் போர் நடத்துவார்கள். நாமதான் மலேரியாவும் டெங்கும் வராமல் தேங்கி தண்ணீர் கொசுக்களுக்கு வீட்டுக்குள் வரவிடாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

***
ரு நிமிடமே என்றாலும் இந்தக் குறும்படம் சொல்லும் செய்தி... உண்மையிலேயே படம் முடியும் போது ரொம்பக் கஷ்டப்படுத்திருச்சு.... இந்தப் படத்தை எடுத்த குழுவினருக்கு வாழ்த்துக்கள்... நீங்களும் பாருங்களேன்.


***
கில்லர்ஜி அண்ணன் அவர்கள் சென்ற முறை கனவில் வந்த காந்தி சொல்லி நம்மளை எல்லாம் கேள்வி கேட்டாரு... இப்ப கனவுல வந்த கடவுளுக்கிட்ட பத்து நனவாக வேண்டிய கனவுகளைச் சொல்லச் சொல்றாரு... நம்மளையும் அதுல மாட்டி விட்டுட்டாரு... ஒரு பக்கம் ஆளாளுக்கு ஜோரா எழுத ஆரம்பிச்சிட்டாங்க... நாம என்னத்தை எழுதுறதுன்னு தெரியலை.... இருந்தாலும் அழைப்புக்கு என்று ஒரு மரியாதை இருக்கு அல்லவா..? அதனால் நாளை எப்படியும் எழுத வேண்டும்... பார்ப்போம்... வேதாளம் படத்துக்கு வேற போகணும்... கனவுப் பதிவு வேற எழுதணும்... நாளைக்கு ரொம்ப வேலை இருக்கு போங்க.
***
தாய் மனசு படத்தில் வரும் இந்த 'தூதுவளையலை அரைச்சி...' பாடலைக் கேளுங்கள்... உங்களுக்கும் பிடிக்கும்... சுகமான கிராமத்துக் கீதம் இது.


மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

30 கருத்துகள்:

  1. ஆல்ப்ஸிலிருந்து தூதுவளையா? ஹாஹா !

    சூப்பர் தலைப்பு. நான் பதிவை படிக்க முன்னர் தலைப்பை பார்த்திட்டு திகைத்து போய் நின்றேனாக்கும். எங்க ஊரில் தூதுவளை கிடைச்சால் செடியோட பிடிங்கி வந்து துவையல் செய்திருவேன்ல.. அப்படி தூதுவளை துவையலும் சுடுசோறும் ரெம்ப பிடிக்கும். சின்ன வயதில் அம்மம்மா கூட தான் இருந்தோம் அம்மம்மா ஒவ்வொரு செவ்வாயும், வெள்ளியும் மரக்கறிதான் சமைப்பா.. வெள்ளியில் தவறாது இடம் பிடிக்கும் ஒரு துவையல் இது.

    அது இருக்கட்டும்.... நம்ம தளத்துக்கு படு பயங்கர விளம்பரம் செய்திருக்கிங்க போல... முதல் விசிறி நீங்க தான்னு பட்சி வந்து சொல்லிட்டு போகுது குமார். ... அப்படியே அந்த கட்டவுட் பேனர்லாம் எப்ப எங்க வைப்பீங்கன்னு சொல்லிட்டிங்கன்னால் நல்லா இருக்கும்பா...! நம்ம தம்ஸ் தும்ஸ் எல்லோரையும் வாழ்க கோசம் போட அங்கங்கே ரெடியாக்கிருவேன்ல!

    ஆனாலும் நான் வலைப்பூ தொடங்க என்னை விட ஆர்வம் காட்டிய நீங்களும் அதன் வடிவமைப்பில் முஸம்மில் எனும் நண்பன் தும்பியும்... சம்ஸும் காட்டிய ஆர்வத்தினை நான் காட்டலப்பா.. ஒரு கட்டத்தில் சம்ஸிடம் வலையும் வேண்டாம், மீனும் வேண்டாம் என சொல்லிட்டேன் தெரியுமா?

    ஒன்னுமே புரியல்ல இந்த வலைஉலகத்திலே!

    வேதாளமோ என்னமோ... சினிமா... நோ ஐடியா!

    தீபாவளிக்கதை நல்ல கரு.. இப்படி முடியல்ல முடியல்ல தெரியல்ல புரியல்ல என சொல்லியே பக்கம் பக்கமா எழுதி தள்ளிட்டிருக்கிங்க.. நமக்கு ஒரு பக்கம் எழுதவே முடியல்ல... இந்த இரு வாரம் மட்டும் அடுத்தடுத்து நிரம்ப பதிவு வந்திட்டிருக்கு குமார். மனசு சிந்தனையில் சிதறடிக்குது என புரியிது. இதுவே என்றும் தொடர என் வாழ்த்துகள்.. !

    கில்லர்ஜி அவர்களின் நனவாக வேண்டிய கனவுகளை நானும் படித்தேன்.. சூப்பரோ சுப்பர்.. உங்கள் பட்டியலை காண ஆர்வத்தோடிருக்கின்றோம்ல!

    தூதுவளை யிலை பாட்டு சூப்பராக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அக்கா...
      தலைப்புத்தான் ரொம்பச் சிரமம்..
      யோசித்து எல்லாரையும் கவர்ற மாதிரி வைக்கணும்...
      மனசின் பக்கம் முதல் பாராவும் கடைசிப் பாராவும் இணைத்து வைத்துவிடுவேன்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      நீக்கு
  2. ஏதோ.. திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் போலிருக்கின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      நீக்கு
  3. அழகான தொகுப்பு. குறும்படம் மனதை குறுகுறுக்க வைக்கிறது அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தங்கை...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      நீக்கு
  4. தகவல்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      நீக்கு
  5. புதிய பதிவர் நிஷாவுக்கு வாழ்த்துகள்.

    கமல் எப்போதும் நல்ல படங்களாகவே கொடுக்க வேண்டும் என்கிறீர்கள். எப்போதும் பிரியாணியே சாப்பிட்டாலும் அலுத்து விடும். நடுவில் பழையதும் சாப்பிட்டால்தான் புதிய உணவுகளின் அருமையும் தெரியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      அக்காவை வாழ்த்தியதற்கு நன்றி.
      உண்மைதான் அண்ணா... எனக்கெல்லாம் பழைய சாதம்தான் பிடிக்கும்... இருந்தாலும் பழைய சாதத்தையும் புளிக்காமல் பரிமாறணும் அல்லவா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      நீக்கு
  6. ஏக்கப்பட்ட வேலைகள் இருந்தாலும் கில்லர்ஜியின் கனவுப் பதிவு, அதில் ஒன்றாக...

    காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      நீக்கு
  7. வணக்கம்
    அண்ணா
    பல் சுவைக் கதம்பம்... நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      நீக்கு
  8. பல்சுவை விடயங்கள் நன்று ஆசைப் பதிவைக்காண ஆவலுடன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      நீக்கு
  9. பலவகைச் செய்திகளையும் ரசித்தேன். குறும்படம் அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      நீக்கு
  10. நானும் ஒரு கருவை உள்வாங்கி அப்படியே எழுதி முடித்துவிடுவேன்! க்ளைமாக்ஸ், இடையில் திடீரென தோன்றினால் மாற்றிவிடுவேன். சமீபத்தில் எழுதிய உள்ளுக்குள் ஓர் மிருகம் கூட அப்படித்தான்! உங்கள் எழுத்துகள் அருமையாகவே உள்ளன. குறிப்பாக சிறுகதைகள் மிகவும் கவர்கிறது! ஜீவநதியின் கடைசி வரிகள் என்னையும் கட்டிப்போட்டது. தொடருங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      நீக்கு
  11. அட! எல்லாமே சும்மா நாம எல்லாரும் உட்கார்ந்து பேசுவது போல சொல்லிச் செல்கின்றீர்கள். குறும்படம் மனதை நெகிழ்த்திவிட்டது. இதை நாம் நம் அன்றாட வாழ்வில் தினமும் கேட்டும் பார்த்தும் மனம் நொந்தும் பழகிப் போய் வந்தாலும் காணொளிகளைப் பார்க்கும் போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கவே செய்கின்றது.

    நிஷா சகோவுக்கு வெல்கம்......பதிவுலகத்திற்கு..பதிவுலக நண்பர்கள் அனைவரது சார்பிலும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசி சார்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      நீக்கு
  12. சிறந்த கண்ணோட்டம்
    சிந்திக்கச் சிறந்த பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கவிஞரே...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      நீக்கு
  13. //சிவகாசிக்காரரும் மாம்பழத்து ஐயாவும் சின்னக்கவுண்டரும் வளவனாரும் மூப்பனாரின் வாரிசும் தமிழிசை பாடி வரும் வானம்பாடியும் என்ன அழகு எத்தனை அழகு புகழ் இளங்கோவும் கூடையில் பூவும்//

    ஹா... ஹா... ஹா...
    சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      நீக்கு
  14. பதிவுலகில் புதியவர்..... அவருக்கு வாழ்த்துகள்.

    தொகுப்பில் சொன்ன விஷயங்கள் அனைத்தும் நன்று. குறும்படம் - நெகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      நீக்கு
  15. உங்கள் பார்வையே வனம் பற்றிய எனது பார்வையும்...அழகு...நான் பதிவச் சொன்னேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      நீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி