முந்தைய பதிவுகளைப் படிக்க...
பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5
பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10
பகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14 பகுதி-15
******
16. மீண்டும் ஊடல்
முன்கதைச் சுருக்கம்:
கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரியில் வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். காதலில் விழுந்தானா இல்லையா என்று போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் கல்லூரிகளுக்கா கட்டுரைப் போட்டிக்குச் சென்று முதல் பரிசை வெல்கிறான். திரும்பும்போது அவளுடன் சேர்ந்து அமர்ந்து பஸ்ஸில் பயணிக்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக அம்மாவை கூட்டியாரச் சொல்கிறார் முதல்வர். வைரவன் மூலமாக வாடகை அம்மாவை கூட்டிவந்து சமாளித்து விடுகிறான்.
இனி...
புவனா அவனை நோக்கி வரவும் "சரிங்க... நீங்க போங்க..." என்று மல்லிகாவிடம் சொன்னான்.
"ஏங்க... பெர்சனலா எதுவும் பேசப்போறீங்களா... நான் டிஸ்டர்ப்பா இருக்கேனா?" திருப்பிக் கேட்டாள் மல்லிகா.
"அதெல்லாம் ஒண்ணுமில்ல... அவங்களும் பிரண்ட்தான்... இருங்க..." என்று அவளிடம் சொல்லும் போதே புவனா அருகில் வந்திருந்தாள். மல்லிகாவைப் பார்த்து ஒற்றைச் சிரிப்பை உதிர்த்துவிட்டு ராம்கியை ஏறிட்டாள்.
அவனது தலையில் இருந்த கட்டைப் பார்த்தவள் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள்.
"என்னங்க..."
"ம்... அடி பலமா பட்டுடுச்சா?" தலையை நிமிராமல் கேட்டாள்.
"அதெல்லாம் இல்ல... லேசாத்தான்.. உங்க அண்ணனுக்குத்தான் கத்தி நல்லாபட்டிருச்சு..."
"அவன் உங்களுக்குத்தான் நல்ல அடின்னு வருத்தப்பட்டான்... வலி இருக்கா?" தொட்டுப் பார்க்க துடித்த கையை அடக்கிக் கொண்டாள்.
"இல்லங்க... இப்போ பரவாயில்லை..."
"சஸ்பெண்ட் அது இதுன்னு... தேவையில்லாம உங்க பேர் கெட்டுப் போச்சு... இனி எங்கண்ணனை அடிக்க வந்தவங்க உங்களையும் சீண்டிக்கிட்டே இருப்பாங்க... அதான் எனக்குப் பயமா இருக்கு..." சொல்லும் போதே கண் கலங்கியது.
"அட அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லங்க... எதுங்குங்க கண் கலங்குறீங்க... யாராவது பார்த்தா தப்பாத் தெரியும்... சும்மாவே அங்க பேசக்கூடாது... இங்க பேசக்கூடாதுன்னு உங்க அண்ணன் சொல்லியிருக்காரு... எதுக்குங்க வம்பு... நான் நல்லாயிருக்கேன்... எந்தப் பிரச்சினையும் இல்லங்க..."
"நான் வருத்தப்பட்டுக் கேட்கிறது உங்களுக்கு தப்பாத் தெரியுதுல்ல... பரவாயில்ல... நேத்துல இருந்து தவிச்சுப் போயி வந்திருக்கேன்... அன்பா பேசணுமின்னு தெரியலையில உங்களுக்கு... எங்க அண்ணன் என்னங்க பண்ணிடுவான்... சும்மா அவன் சொன்னான்... அவன் சொன்னான்னு பூச்சாண்டி காட்டுறீங்க... எங்கூட பேசத் தைரியம் இருந்தா எவனுக்குப் பயப்படணும்... உங்களுக்கு புதுசா பிரண்ட்ஸ் வந்ததும் எங்கூட பேசக்கூடப் பிடிக்கலை... நான் வாறேன்..."
கண்களைத் துடைத்தபடி திரும்பிச் சென்றவளை "புவனா.. ப்ளீஸ்.. நில்லுங்க..." என்ற ராம்கியின் கத்தல் கட்டுப்படுத்தவில்லை.
"ம்... எதுக்கெடுத்தாலும் கோபம்...சரி வாங்க..." என்று மல்லிகாவுடன் நடந்தான்.
"நம்ம மேல யார் அதிகம் பாசம் வச்சிருக்காங்களோ... அவங்க கோபமும் படுவாங்க ராம்கி..."
"ம்... சின்னப்பிள்ளை மாதிரி..."
"உங்களை அந்தளவுக்கு நேசிக்கிறாங்க போல..."
"நீங்க வேற... பிரண்ட்ஸ்தாங்க... நேசம் அது இதுன்னு சொல்லி புதுக்கதைய ஆரம்பிச்சு வச்சிடாதீங்க..."
"நீங்க இப்படி சொல்றீங்க... ஆனா லேடீஸ் ரூமுக்குள்ள புவனா குரூப் இருந்தாலே உங்க பேச்சுத்தான்..." என்று சிரித்தாள்.
"அதுக்காக... இப்ப உங்க கூட பேசிக்கிட்டு வாறேன்... உடனே உங்களையும் என்னையும் இணைச்சு சொல்லிடுறதா? பிரண்ட்ஷிப் வேற காதல் வேறங்க... எனக்கு இன்னும் யார் மேலயும் காதல் வரலைங்க..."
"இல்லங்க... காலேசுக்குள்ள ஒரு பொண்ணும் பையனும் பேசினாலே அதை காதலாத்தான் பாப்பாங்க... நேத்து உங்களுக்காக கையெழுத்து வாங்கினப்போ... நம்ம பச்சமுத்து என்ன லைன் போடுறியா.... வாழ்த்துக்கள்ன்னு சொல்றான்... எனக்கு உங்க மேல அன்பிருந்தா டைரக்டா சொல்லப் போறேன்... இதுக்கு எதுக்கு சுத்தி வளைச்சு மூக்கைத் தொடணும்... சொல்லுங்க..."
"ஆமாங்க... புவனாகூட நல்ல பிரண்ட்ஷிப் இருக்கு... ஆனா அவங்க அண்ணனுக்காக அவங்ககிட்ட பேசுறதைக்கூட கொறச்சுக்க வேண்டியிருக்கு... பாவம் ரொம்ப வருத்தப்பட்டுட்டாங்க..."
"அவ உங்களை லவ் பண்றா ராம்கி..."
"என்னங்க நீங்க திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டு..."
"உண்மை... உங்க மேல எந்த அளவுக்கு காதல் இருந்தா ஒரு பொண்ணு பக்கத்துல இருக்காளேன்னு கூட பாக்காம கண் கலங்கியிருப்பா... ஏதோ பேச வந்தவ என்னையப் பார்த்ததும் பேசலை... பாவங்க அவ..."
"என்னங்க நீங்க... என்னென்னமோ பேசிக்கிட்டு... வாங்க கிளாஸ்க்குப் போவோம்..."
"நான் கிளாஸ்க்குப் போறேன்... நீங்க அவளைப் பார்த்துட்டு வாங்க... காதலியா பிரண்டான்னு அப்புறம் முடிவு பண்ணுங்க... இப்ப உங்கமேல அன்பா இருக்கிற ஒரு பொண்ணா அவளைப் பார்த்து பேசிட்டு வாங்க... அவங்க அண்ணனுக்காக அவளை கஷ்டப்படுத்தாதீங்க...ப்ளீஸ் எனக்காக... அவகிட்ட பேசிட்டு வாங்க..."
"ம்.. சரிங்க... ஆனா எல்லாரும் கிளாஸ்க்குப் பொயிட்டாங்களே... அவங்களும் போயிருப்பாங்களே..."
"இல்ல அவங்களுக்கு இந்த பிரியேடு இல்லை போல... லேடீஸ் ரூம்தான் போனாங்க... போய்ப் பாருங்க... வைரவண்ணன் பூச்சாண்டியெல்லாம் விட்டுத் தள்ளுங்க... இப்ப காலேசுல நீங்களும் ஒரு ரவுடிதான்..."
"என்னங்க சந்தடி சாக்குல என்னையும் ரவுடின்னுட்டிங்க... நம்ம ஒரே கிளாஸ்... பேசிச் சிரிச்சாலும் எதுவும் சொல்ல மாட்டாங்க... ஆனா வேற பொண்ணுக்கிட்ட பேசினா கண்ணு காது மூக்கு வச்சி பெரிசாக்கிடுறாங்க..."
"அதெல்லாம் அப்படித்தான்... சும்மா உங்களை கேலி பண்ணினேன்... போங்க... போய் பேசுங்க..."
"சரி... போறேன்..."
"டீ.. உன்னோட ஆளு உன்னையப் பார்க்க வர்றாரு..."
"சும்மா இருடி.. அங்கிட்டு திரும்பாதே... புரிஞ்சிக்காத ஜென்மம்..."
"எதுக்குடி கோபப்படுறே... பாவம் உங்கண்ணனுக்குப் பயந்து சொல்றாரு... அது போக உனக்காகத்தானே உங்கண்ணனை காப்பாத்தப் போயி அடிபட்டு வந்திருக்காரு... சும்மா அலையவிடாதே..."
"அலையவிட்டாத்தான் ஒரு மனசோட தவிப்புத் தெரியும்..."
"அது சரி... இப்புடி தவிக்க விட்டியனா இப்ப இங்க வர உத்தரவு கொடுத்த மகாராணி தட்டிக்கிட்டுப் போயிடுவா..."
"ம்... போவா போவா... விட்டுடுவேனா... நான் வைரவன் தங்கச்சியாக்கும்..."
"புவனா...."
அவன் பக்கம் திரும்பாமல் அமர்ந்திருந்தாள்...
"புவனா ப்ளீஸ்... "
"என்னவாம்டி... என்னனு கேட்டுட்டு போகச் சொல்லுங்கடி... யாராவது பார்த்தா எங்கண்ணனுக்கிட்ட சொல்லிடுவாங்க... அவன் மறுபடியும் கத்தியை தூக்கிருவான்... இங்க எதுக்கு வந்திருக்காராம்..?"
"ப்ளீஸ் புவனா.... நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..."
"......."
"சரி... உங்க கோபம் எப்ப தீருதோ... அப்ப வந்து பேசுங்க... நான் வாறேன்..."
அவன் போறேன் என்று சொன்னதும் படக்கென்று திரும்பினாள்.
(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
தொடர்கிறேன் ஐயா நன்றி
பதிலளிநீக்குஎன்ன ஒரு எகத்தாளம்,ஆங்..........க்!!!!!!தொடருங்க,எவ்வளவு யதார்த்தமா எழுதுறீங்க?கங்கிராட்ஸ்!!!
பதிலளிநீக்குநல்ல தொடர்.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாங்க ஜெயக்குமார் அண்ணா...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க யோகராஜா அண்ணா...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க விமலன் அண்ணா...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு