எல்லாரும் பொங்கல் கொண்டாடிய மகிழ்ச்சியில் இருப்பீர்கள். என்ன பொங்கல் சாப்பிட்டா நல்லா தூக்கம் வருமுன்னு சொல்லுவாங்க. அது உண்மைதான்னு வலையுலகம் நிரூபிச்சிருச்சு. அட ஆமாங்க கடந்த ஒரு வாரகாலமாக வலைப்பூக்களில் ரொம்ப டல் அடித்தது என்பதே உண்மை.
***************************
தமிழ்மணம் விருதுகள் அறிவித்தாச்சு. விருதுகள் பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். கலந்து கொண்டு கிடைக்கவில்லையே என்று விருது கிடைக்காத நண்பர்கள் வருந்த வேண்டாம். திறமைசாலிகளிடம்தான் தோற்றிருக்கிறீர்கள் என்ற வகையில் சந்தோஷப்படுங்கள். விருது கிடைத்தவர்களில் பெரும்பாலான பதிவர்கள் நான் விரும்பி வாசிப்பவர்களே என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
***************************
எங்கள் மாவட்டத்தில் ஒரு ஊரில் வெளி நாட்டில் வேலை பார்க்கும் கணவன் விடுமுறையில் சென்ற போது மனைவி மீது சந்தேகப்பட்டு கழுத்தை அறுத்து கொன்று சாக்கில் கட்டி வீட்டின் பின்புறம் புதைத்து விட்டான். இதைவிட கொடுமை என்னவென்றால் அம்மா எங்கே என்று கேட்ட இரண்டு குழந்தைச் செல்வங்களை ஊரை ஒட்டியுள்ள மரங்கள் அடர்ந்த பகுதிக்கு கூட்டிச் சென்று கழுத்தை அறுத்து புதரில் வீசிவிட்டு வந்திருக்கிறான்.
அவனது மாமியார் மகளைப் பார்க்க வந்தபோது சந்தேகப்பட்டு கேட்க, முன்னுக்குப்பின் முரணாக பேச, கடைசியில் விவரம் அறிந்து அவனை போலீஸில் ஒப்படைத்திருக்கின்றனர், அவனுக்கு போலீஸில் சொந்தங்கள் இருக்கிறார்களாம். அவன் ஒரு மனநோயாளி என்று கதையை மாற்றுகிறார்களாம். இவனுக்கெல்லாம் எதற்கு சிறை, விசாரணை எல்லாம்... அப்பவே போட்டுத் தள்ளியிருக்கணும். இல்ல கை காலை வெட்டி சாகுற வரைக்கும் அனுபவிக்க விட்டிருக்கணும்.
மூணு பேரை கொன்றவனை காப்பாற்ற நினைப்பவர்களை என்ன சொல்வது? ஈரமில்லாத மனிதர்கள் என்றா... இதயமில்லாத மனிதர்கள் என்றா... அரபு நாடுகள் போல் சட்ட திட்டங்கள் கடுமையாக இருந்தால் மன நோயாளிகள் குறைவார்கள் அல்லவா?
***************************
நேற்று முழுவதும் அபுதாபியில் மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. மாலை சற்று பலமாகவே மழை பெய்தது. எப்போதும் மழையுடன் உறவாடிய நமக்கே பாலைவனப் பூமியில் அத்தி பூத்தாற் போல் பெய்யும் மழைகண்டு சிலிர்க்கும் போது அரபிகளை சொல்லவா வேண்டும். மழையில் நனைந்து கொண்டே திரிவது, கால்பந்து விளையாடுவது என சந்தோஷமாய் கழித்தார்கள். இன்றும் மழை வருவது போல்தான் இருக்கிறது.
***************************
மழை பெய்த நேற்று மாலை அபுதாபி இந்தியன் பள்ளி கலையரங்கத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் தலைமையில் பொங்கல் பட்டிமன்றம் ஒன்றை பாரதி நட்புக்காக அமைப்பு நடத்தியது. அந்த மழையிலும் அரங்கம் நிரம்பி வழிந்தது. வெளியே மழை....உள்ளே சிரிப்பு மழை... இது குறித்த விரிவான பதிவு விரைவில்....
***************************
நம்ம வாரிசு... விஷால், தனது இரண்டாவது பிறந்த நாளை ஜனவரி -17 ,அதாங்க பொங்கல் முடிந்து ஜல்லிக்கட்டு வைப்பாங்கல்ல... அன்னைக்கு (அவரும் ஜல்லிக்கட்டு காளை மாதிரித்தான்....) கொண்டாடியிருக்காங்க... பாவம் புள்ளைக்கு கேக் வெட்டி தானே சாப்பிட்டு, எல்லாருக்கும் கொஞ்சமா கொடுத்து, கசகசன்னு புது டிரஸ் போட்டு... ரொம்ப சோர்வாயிட்டாரு போல... போங்கடா நீங்களும் ஒங்க பொறந்த நாளு கொண்டாட்டமும் அப்படின்னு என்ன ஒரு தெனாவெட்டா உக்காந்திருக்காரு பாருங்க...
மனசின் பக்கம் மீண்டும் மலரும்....
-'பரிவை' சே.குமார்.
முத வெட்டு
பதிலளிநீக்கு>>>>அட ஆமாங்க கடந்த ஒரு வாரகாலமாக வலைப்பூக்களில் ரொம்ப டல் அடித்தது என்பதே உண்மை.
பதிலளிநீக்குaamaaஆமா குமார்.. காத்து வாங்கிட்டு இருந்தது என் பிளாக்..
சந்தேகம் மனிதனை என்னவெல்லாம் செய்ய சொல்கிறது... கட்டிய மனையாள், பெற்ற குழந்தைகள் என அனைத்தையும் சந்கேகம் என்ற இருள் மறைத்திருக்கிறது...
பதிலளிநீக்குஇன்னுமா அவனை உயிரோடு விட்டு வைத்திருக்கிறார்கள்...
தொகுப்பு பல விஷயங்களைப் பேசுகிறது.
பதிலளிநீக்குகுழந்தை விஷாலுக்கு வாழ்த்துக்கள்:)!
Convey our birthday wishes to Vishal! He is very cute.
பதிலளிநீக்குவிஷாலுக்கு வாழ்த்துக்கள் :)
பதிலளிநீக்குகுழந்தை விஷாலுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஎல்லாம் அருமையாக எழுதி
பதிலளிநீக்குஇருக்கீர்கள்.குழந்தை விஷாலுக்கு
வாழ்த்துக்கள்.
வாங்க சி.பி...
பதிலளிநீக்குமுத வடைய விட்டுட்டு வெட்டுன்னு வெட்டியிருக்கீங்க...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ராமலெஷ்மி அக்கா....
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்தைச் சொல்லியாச்சு.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சித்ராக்கா...
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்தைச் சொல்லியாச்சு.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க முத்துலெஷ்மி அக்கா...
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்தைச் சொல்லியாச்சு.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சரவணன் அக்கா...
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்தைச் சொல்லியாச்சு.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஆயிஷா...
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்தைச் சொல்லியாச்சு.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஷாலுக்கு.
பதிலளிநீக்குமனசின் பக்கம் செய்திகள் மனதை தொட்டது.
லியோனி பட்டிமன்றம் குறித்து எழுதுங்கள்.
நாங்களும் இரண்டு நாளாக மழையில் கொடை பிடித்தும்,கொடை பிடிக்காமலும்,காரில் ஜன்னலை திறந்து சாரலை ரசித்தும் மகிழ்ந்தோமே.
விடியற்காலை எழுந்து பார்த்தால் எனக்கு முன்பாக வாசலில் யாரோ நீர் தெளித்து இருந்தார்கள்,என்னவென்று பார்த்தால் மழை.
நல்லா இருக்கு. உங்கள் குட்டியர் அழகா போஸ் குடுக்கிறார்.
பதிலளிநீக்குஅன்பு விஷால்... ஆயுள் விருத்தியும், ஆனந்த விருத்தியும், சித்தி புத்தி சித்திக்க, சகல சம்பத்துக்களும் பெற்று தமிழன் மாண்பை தரணியறியும் வண்ணம் வாழ வாழ்த்துக்கள் அன்பு முத்தங்களுடன்.
பதிலளிநீக்குவாங்க ஆசியாக்கா...
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்தை உங்கள் மருமகனுக்குச் சொல்லியாச்சு.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//விடியற்காலை எழுந்து பார்த்தால் எனக்கு முன்பாக வாசலில் யாரோ நீர் தெளித்து இருந்தார்கள்,என்னவென்று பார்த்தால் மழை.//
ஹா...ஹா.... இங்கயும் வந்து வாசத் தெளித்து கோலம் போடுறீங்களா?
வாங்க வானதி...
பதிலளிநீக்குநம்மாளுதான்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தமிழ்...
உங்கள் முத்தங்களை விஷாலுக்கு அனுப்பியாச்சு...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.