புதன், 19 ஜனவரி, 2011

பாதசாரி



மழை நின்ற இரவில்

அருகில் கிடப்பவன் குறட்டையும்...

சாக்கடைக் கொசுவின் கடியும்...

கிழிந்த போர்வைக்குள் நுழைந்து

இதயம் உறைய வைக்கும் குளிரும்...

மழையின் எச்சமாய் எங்கோ

தாளநயத்துடன் சொட்டும் ஓசையும்...

பாதசாரியின் தூக்கம் கலைக்க

சொக்கலால் பீடியை

சுகமாய் உறிஞ்சிய போது

தூரத்து விளக்கொளியில்

சுகத்தை விக்க தூக்கம் மறந்தவள்...

இன்றாவது வாய்க்குமா?

இடுப்பை தொட்டுப் பார்த்தான்

நோட்டில்ல சில்லறை சிரித்தது...

ஏக்கமாய் சிரித்தவன்

எவனை(ளை)யோ திட்டியபடி

எழுந்தான் வேறிடம் தேடி..!

-'பரிவை' சே.குமார்.

21 கருத்துகள்:

  1. சுகத்தை விக்க தூக்கம் மறந்தவள்...

    இன்றாவது வாய்க்குமா?

    இடுப்பை தொட்டுப் பார்த்தான்

    நோட்டில்ல சில்லறை சிரித்தது...

    ரொம்ப அருமை நண்பா

    பதிலளிநீக்கு
  2. கவிதையில் உள்ள ஒவ்வொரு வரியும் 'நச்'ன்னு இருக்கு..

    Super!

    பதிலளிநீக்கு
  3. வித்தியாசமான பார்வையோட கவிதை நல்லாயிருக்கு குமார் !

    பதிலளிநீக்கு
  4. கவிதை இயல்பாய் இருக்கு.அருமை.

    பதிலளிநீக்கு
  5. நல்லாருக்குங்க.

    பதிலளிநீக்கு
  6. என்னங்க குமார்.. கவிதையில் பின்றீங்க.. சூப்பர் :-)

    பதிலளிநீக்கு
  7. வாங்க கவிதைக்காதலன்..
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க ஆயிஷா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வாங்க மேனகாக்கா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க ஸ்ரீஅகிலா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வாங்க ஹேமா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க வானதி...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வாங்க சரவணன்...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க ஆசியாக்கா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வாங்க ராஜ்மோகன்...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க சித்ராக்கா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வாங்க சுசிக்கா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க மனோ அம்மா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க ஆனந்தி...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. கவிதை பல பொருள் பேசுகிறது.... புரிகிறபோது மனசு வலிக்கிறது ....(எங்களுக்கு). பாதசாரி என்றாலும் பாவம் உணர்ச்சிகள் பொதுவானதுதானே...

    பதிலளிநீக்கு
  14. வாங்க தமிழ்...
    எல்லாருக்கும் உணர்ச்சி உண்டல்லவா.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி