சுதந்திர வேள்வியில்
காந்திக்கு அப்பாற்பட்டு
மக்களுக்குள் மலர்ந்த மாணிக்கமே..!
பெருங்'குடி'யில் பிறந்ததால்
மக்களைப் பிள்ளைகளாய்
அரவணைத்துச் சென்றாயோ...?
இந்திய தேசிய ராணுவத்தை
பிறப்பித்த பெருமை உனக்கு...
உன்னில் கலந்து உயிர் நீத்த
பெருமை எம் மறவர்களுக்கு..!
வங்கம் தந்த சிங்கம்
என்பவர்கள் அறியவில்லை
நீ பாரதம் பெற்ற பகலவன் என்பதை..!
இந்தியாவில் பிறந்து... தைவானில் இறந்து...
இன்னும் வாழ்கிறாய்... ஜப்பானில் அஸ்தியாய்..!
ஊழல்கள் மலிந்துவிட்ட நாட்டில்
உத்தமன் உன் அஸ்திக்கு இடமில்லை...
பாரதி இறப்புக்கு பத்துக்கு மேல்...
உன் அஸ்தி கண்டதோ பத்துக்கு கீழ்...
உலகம் சுற்றும் தலைவர்களுக்கு
உன் அஸ்தி காண என்ன அசதியோ...?
இருந்தும் வாழ்கிறாய்
எங்கள் இதய சிம்மாசனத்தில்...
தியாகச் சுடராய் மட்டுமல்ல
தீச்சுடராகவும்...!
(நேதாஜி. சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த தினமான இன்று ( பிறந்த தேதி : சனவரி-23, 1897) அவர் குறித்து பதிவிடும்படி நண்பர் தமிழ்க்காதலன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சுதந்திர தியாகி நேதாஜிக்கு இந்த கவிதை போன்ற சில வரிகள் சமர்ப்பணம். - நமக்காக உயிர்நீத்த தியாகச் சுடரை மனதில் நிறுத்துவோம்)
-'பரிவை'. சே.குமார்.
வாழ்க நேதாஜி
பதிலளிநீக்குஇன்னிக்குத்தான் பாஸ் உங்க ஏரியாவுக்கு வந்திருக்கேன்! கவிதை அருமையா இருக்கு! சுபாஸ் பேரைக்கேட்டாலே நமக்கெல்லாம் தெம்பு வருகிறது!!
பதிலளிநீக்குபெரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.
பதிலளிநீக்குஎன் பிரியங்கள் கொள்ளும் தோழனுக்கு, வேண்டுதலுக்கு இணங்கி உங்கள் எழுத்துக்களில் நேதாஜியை சுவாசித்து தேசம் நேசிக்க செய்த நட்பே... மெச்சுகிறேன். சந்தோசமா இருக்கு... உங்க எளிய தமிழும்... நடையும்... சரியாக சாடி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.
பதிலளிநீக்குரொம்ப நல்லாருக்கு.
பதிலளிநீக்குநேதாஜிக்கு எனது வீர வணக்கங்கள்..
பதிலளிநீக்குராயல் சயூட் ... கவிதைக்கும், நேதாஜிக்கும் ...
பதிலளிநீக்குஅன்புள்ள திரு.குமார்...
பதிலளிநீக்குநேதாஜி அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும்
கவிதை வரிகளில் கண்முன்னே கொண்டுவந்துவிட்டீர்கள்.
மிக்க பாராட்டுக்கள்!
வாழ்க நேதாஜி கவிதை அருமை குமார் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு//சிநேகிதன் அக்பர் said...
பதிலளிநீக்குபெரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.//
கவிதை மூலம் அருமையாக சொல்லி
இருக்கீர்கள் சகோ.வாழ்த்துக்கள்.
நேதாஜி அவர்கள்பற்றிய கவிதை அருமை!
பதிலளிநீக்குஎனது வலைப்பூவையும் தங்கள் தளத்தில்
அன்போடு இணைப்பு கொடுத்திள்ளீர்கள்.
மனமுவந்த நன்றி!
-கலையன்பன்.
(இது பாடல் பற்றிய தேடல்! )
தியாகி நேதாஜிக்கு சல்யூட்....ஜெய் ஹிந்த்!!
பதிலளிநீக்குnethaaji nanraaka vanthullathu. kudiyarasu thinaththai otti nethaajiyin pakirvu arumai. vaalththukkal
பதிலளிநீக்குகவிதை அருமை..
பதிலளிநீக்குபிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
பதிலளிநீக்குhttp://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html
// உன்னில் கலந்து உயிர் நீத்த
பதிலளிநீக்குபெருமை எம் மறவர்களுக்கு..!//
சூப்பர் :-)
good one!
பதிலளிநீக்குவாங்க எல்.கே...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மாத்தியோசி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அடிக்கடி வாங்க.
வாங்க அக்பர்...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தமிழ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வித்யாக்கா...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சாமக்கோடாங்கி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க செந்தில் அண்ணா...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க நிஜாமுதீன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சரவணன்...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஆயிஷா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கலையன்பன்...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மேனகாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சரவணன்...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க செங்கோவி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பிரபாகரன்...
பதிலளிநீக்குஒயின்ஷாப்புக்கு கூப்பிடுறேளே... சரி வந்து பார்க்கிறேன்.
வாங்க உழவன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
"எனது மனதிற்கு பிடித்த மனிதர்களில் இவரும் ஒருவர்"
பதிலளிநீக்குஅருமை........................
உன்னில் கலந்து உயிர் நீத்த
பதிலளிநீக்குபெருமை எம் மறவர்களுக்கு.
ennra varikal kavithiku miga poruthamana varikal
உன்னில் கலந்து உயிர் நீத்த
பதிலளிநீக்குபெருமை எம் மறவர்களுக்கு..!
என்பது மிகமிக உண்மைதான்;
நேதாஜி வங்கத்தின் சிங்கம்..
தென்னகத்தின் சிங்கம்
எங்கள் அய்ய
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்