லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமனா நடிப்பில் வெளிவந்து பரபரப்பாக (!????) ஓடிக்கொண்டிருக்கும் படம் 'பையா'.
* காரில் பயணிக்கும் கதையில் அவ்வளவாக சுவராசியம் இல்லை.
* பல இடங்களில் அதே ரோடுகள் மீண்டும் மீண்டும் வருகின்றன விக்கிரமன் படப்பாடல் போல.
* தமிழ் படத்திற்கே உரிய லாஜிக் இல்லா காட்சிகள் அதிகம்.
* நீண்ட சண்டைக் காட்சிகள் அலுப்பைத் தருகின்றன.
* இரண்டு வில்லன் குரூப் இருந்தும் விறுவிறுப்பு குறைவு.
* படம் பெங்களூரில் தொடங்கி மும்பை போகிறது. எனக்கு ஒரு பெரிய சந்தேகம் படத்தின் பெயர் பையா என்று ஏன் வைக்கப்பட்டது?. தமனா மும்பையில் இரண்டு தடவை 'பையா' என்ற வார்த்தையை பயன்படுத்துவார் அதனால இருக்குமோ?.
* தமிழில் 'மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி' என்று ஒரு படம் உண்டு அதுபோல் 'பெங்களூரு டூ மும்பை' என வைத்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்கிறது மனசு.
இயக்குநர்:
* நல்ல கதைகளை கொடுக்கும் புதிய இயக்குநர்கள் மத்தியில் இன்னும் சில லிங்குசாமிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
* ரன்னும் சண்டைக் கோழியும் விறுவிறுப்பாக இருந்ததால் ரசிக்கவைத்தன. பீமா???
* காரில் துரத்துவதும் புழுதி கிளம்ப பல மைல்தூரம் கடப்பதும் இன்னும் எத்தனை இயக்குநர்கள் மனதில் இருக்கின்றனவோ தெரியவில்லை.
* லிங்குசாமி படம் என்றாலே சண்டைக்காட்சிகள் நீண்ட நேரம் இழுக்கப்படுவது எல்லாருக்கும் தெரியும் இதில் இன்னும் கொஞ்சம் அதிகம்.
* லிங்குசாமியிடம் இருந்து வரும் அடுத்த படமாவது அரைத்த மாவை அரைக்காமல் மலிக்கா, மேனகாஸாதிகா போல் புதிய மாவை அரைக்கட்டும்.
கார்த்தி:
* அழகாக உயரமாக கம்பீரமாக இருக்கிறார். ஆனால் நடிப்பு பருத்தி வீரன். ஆயிரத்தில் ஒருவன் படங்களோடு ஒப்பிடுகையில் அரைக்கிணறு கூட தாண்டவில்லை.
* இன்னும் நடனம் கற்க வேண்டும். அசைவுகள் வராததால் காதல் பாடல்களிலும் நடனம் இல்லாமல் படமாக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
* உங்களால் பாடல் காட்சிகளில் தமிழர்களின் தற்போதைய கனவுக்கன்னி தமனாவும் வீணடிக்கப்பட்டுள்ளதாக துபாய்ராஜா, பனித்துளி சங்கர் போன்றவர்கள் அதிக வருத்தத்தில் இருப்பதாய் தகவல்.
* பல இடங்களில் பருத்திவீரனை ஞாபகப்படுத்துகிறது உங்கள் நடிப்பு.
* சண்டைக் காட்சிகளில் அத்தனை பேரையும் அடித்து நொறுக்கும் உங்கள் நடிப்பு விசிலடிக்கச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும்படியில்லை. இனி இது போன்ற கதைகளை தவிர்க்கவும்.
தமனா:
* தமிழகத்தின் தற்போதை புயல் அழகுப் பதுமை தமனா, பையாவில் ஏனோ ஒரு பிரயாணியாக பயணித்திருக்கிறாரே தவிர மனதில் ஒட்டவில்லை.
* பாடல் காட்சிகளில் சரிவர பயன்படுத்தப்படவில்லை என்பது உண்மை. அவருக்காக தனிப்பாடல் கொடுத்து இருக்கலாம் என்று நாடோடி இலக்கியன் புலம்பித் தள்ளுகிறார்.
* அழகான அருவிப் பிண்ணனியில் (செட்டாமே!!!!!!!!!) தமனா இன்னும் அழகாய்....
* சாப்பிடும் காட்சியில் தனக்கே உரிய பாணியில் நல்லா பண்ணியிருக்கிறார்.
* தேனம்மை, சத்ரியன் , விக்னேஷ்வரியின் கவிதையைப் போல் அழகாய் இருந்தாலும் இன்னும் நல்லா நடிக்க வாய்ப்பு கிடைக்கும் படத்தில் நடிக்க முயலுங்கள்.
இசை:
* யுவனின் இசையில் பாடல்கள் அருமை. குறிப்பாக ''அடடா மழைத்துளி'' பாடல் ரம்மியம்.
* பிண்ணனி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
* உங்களிடமிருந்து பா.ரா, திவ்யா ஹரி ஆகியோரின் அழகிய கவிதைகள் போல் இன்னும் அழகான அருமையான பாடல்களை எதிர்பார்க்கிறோம்.
சண்டைக்காட்சிகள்:
* முப்பது பேர் கையில் கத்தி, கட்டைகளுடன் சுற்றி வர அனைவரையும் கதாநாயகன் அடித்து நொறுக்குவது என்பது சினிமா கலாச்சரம் போலும். இதிலும் கலாச்சாரம் மீறப்படவில்லை.
* வில்லன் ஒரு அடியில் வீழ்ந்தாலும் பல அடிகள் வாங்கி ரத்தம் கக்கி கிடக்கும் நாயகன் மறுபடியும் எழுந்து அனாயாசமாக ஐம்பது பேரை அடிக்கிறார். இது எப்படி சாத்தியம் யோசிக்க மாட்டார்களா?
* ஆமா, எதிரி நூறு பேர் வந்தாலும் கதாநாயகன் கிட்ட மோதும்போது ஒவ்வொருத்தர வாராகளே அது ஏன்னே தெரியலை... எல்லாருமா சேர்ந்து தூக்கிப் போட்டு மி..........
இதுக்கு மேல இதுல சொல்ல ஒண்ணுமில்ல.
ஒளிப்பதிவு:
* படத்துக்கு அழகு மதியின் ஒளிப்பதிவு. படமுழுவதும் அவரது கைவண்ணம் அழகாய் இருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்.
மொத்தத்தில்...
பாடல்களுக்காகவும் ஒளிப்பதிவுக்காகவும் பையாவை ஒருமுறை திரையரங்கில் பார்க்கலாம்.
---------------------
எங்க வீட்டு செல்லக்குட்டி இப்ப விடுமுறைக்காக மதுரைக்கு போயாச்சாம். அவங்க முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டார்களாம். முழுஆண்டுத் தேர்வில் எல்லா பாடத்திலும் 90க்கு மேலாம். பள்ளியில் நடந்த பேஷன் ஷோவிலும் நடனத்திலும் இரண்டாவது பரிசாம். இதை எல்லாம் அவர் போனில் மழலையாய் சொன்னபோது அவருக்கு இருந்த சந்தோஷம் எனக்குள்ளும்....
-'பரிவை' சே.குமார்
வித்தியாசமா எழுதியிருக்கீங்க குமார். ரொம்பப் பிடிச்சிருக்கு.
பதிலளிநீக்குகடைசி பத்தி அருமை. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅதற்காவே உங்களுக்கு ஓட்டு.
ரொம்ப நல்ல அருமையா வித்யாசமா இருக்கு உங்கள் விமர்சனம்.
பதிலளிநீக்குஎங்க வீட்டு செல்லக்குட்டி இப்ப விடுமுறைக்காக மதுரைக்கு போயாச்சாம். அவங்க முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டார்களாம். முழுஆண்டுத் தேர்வில் எல்லா பாடத்திலும் 90க்கு மேலாம். பள்ளியில் நடந்த பேஷன் ஷோவிலும் நடனத்திலும் இரண்டாவது பரிசாம். இதை எல்லாம் அவர் போனில் மழலையாய் சொன்னபோது அவருக்கு இருந்த சந்தோஷம் எனக்குள்ளும்....
பதிலளிநீக்கு....இதையே அழகா ஒரு பதிவா போடுவதை விட்டு விட்டு...... குமார் சார், இதற்காகவே உங்களை பையா இன்னொரு முறை பார்க்க வைக்க வேண்டும்! :-)
விமர்சனம் நல்லா இருக்கு..
பதிலளிநீக்குஉங்கள நம்பி ஒரு முறை பார்கிறேன்..
@செ.சரவணக்குமார்
பதிலளிநீக்கு//வித்தியாசமா எழுதியிருக்கீங்க குமார். ரொம்பப் பிடிச்சிருக்கு.//
நன்றி நண்பா.
@அம்பிகா
பதிலளிநீக்கு//கடைசி பத்தி அருமை. வாழ்த்துக்கள்.
அதற்காவே உங்களுக்கு ஓட்டு.//
வாழ்த்துக்கும் ஓட்டுக்கும் நன்றி அம்பிகா
@ஸ்டார்ஜன்
பதிலளிநீக்கு//ரொம்ப நல்ல அருமையா வித்யாசமா இருக்கு உங்கள் விமர்சனம்.//
வாழ்த்துக்கு நன்றி ஸ்டார்ஜன்.
@சித்ரா
பதிலளிநீக்கு//எங்க வீட்டு செல்லக்குட்டி இப்ப விடுமுறைக்காக மதுரைக்கு போயாச்சாம். அவங்க முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டார்களாம். முழுஆண்டுத் தேர்வில் எல்லா பாடத்திலும் 90க்கு மேலாம். பள்ளியில் நடந்த பேஷன் ஷோவிலும் நடனத்திலும் இரண்டாவது பரிசாம். இதை எல்லாம் அவர் போனில் மழலையாய் சொன்னபோது அவருக்கு இருந்த சந்தோஷம் எனக்குள்ளும்....
....இதையே அழகா ஒரு பதிவா போடுவதை விட்டு விட்டு...... குமார் சார், இதற்காகவே உங்களை பையா இன்னொரு முறை பார்க்க வைக்க வேண்டும்! :-)//
அவர்களிம் பதிவுகள் ஆயிரக்கணக்கில் இதயத்துக்குள் இருக்கு. பார்க்கலாம் வரும் நாட்களில்...
மறுபடியும் பையாவா... கஷ்டம்தான்
@ஆனந்தி
பதிலளிநீக்கு//விமர்சனம் நல்லா இருக்கு..
உங்கள நம்பி ஒரு முறை பார்கிறேன்..//
பாருங்கள் ஆனந்தி இசைக்காகவும்... ஒளிப்பதிவுக்காகவும்...
Hi shruvish,
பதிலளிநீக்குCongrats!
Your story titled 'மனசு: பையா - விமர்சனமில்லா வித்தியாசமான பார்வை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 17th April 2010 10:49:01 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/226693
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
பிரபல பதிவு ஆக்கிய தமிழிஷ்க்கும் வாக்களித்த நட்புக்கும் நன்றிகள் பல.
//இதை எல்லாம் அவர் போனில் மழலையாய் சொன்னபோது அவருக்கு இருந்த சந்தோஷம் எனக்குள்ளும்....//
பதிலளிநீக்குஇதை படிக்கும் போது எங்களுக்குள்ளும்.வாழ்த்துகள்.
வித்தியாசமான பார்வைதான். கலக்குறீங்க.
அதானே 'செல்லக்குட்டி மேட்டரை' தனிப் பதிவாக போட்டிருக்கலாம்
பதிலளிநீக்குஅன்பான செல்லகுட்டிக்கு அன்புநிறைந்த வாழ்த்துக்களை சொல்லுங்கள்..இன்னும் இன்னும் முன்னேர வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவிமர்சனம் வித்தியாசம்..
@அக்பர் said...
பதிலளிநீக்கு////இதை எல்லாம் அவர் போனில் மழலையாய் சொன்னபோது அவருக்கு இருந்த சந்தோஷம் எனக்குள்ளும்....//
இதை படிக்கும் போது எங்களுக்குள்ளும்.வாழ்த்துகள்.
வித்தியாசமான பார்வைதான். கலக்குறீங்க.//
சந்தோஷ வாழ்த்துக்கு நன்றி அக்பர்.
அலுவலகத்தில் இருந்து வந்து போன் பேசும் போது என் மகளின் சில வார்த்தைகளை கேட்டால் தனி சந்தோஷம். என் செல்பேசியில் என் இல்ல அழைப்புக்கு என் மகள் பாடிய பாடல்தான் அழைப்புக் குரல்...
@கண்மணி said...
பதிலளிநீக்கு//அதானே 'செல்லக்குட்டி மேட்டரை' தனிப் பதிவாக போட்டிருக்கலாம//
கருத்துக்கு நன்றி கண்மணி. பார்க்கலாம்...
@அன்புடன் மலிக்கா said...
பதிலளிநீக்கு//அன்பான செல்லகுட்டிக்கு அன்புநிறைந்த வாழ்த்துக்களை சொல்லுங்கள்..இன்னும் இன்னும் முன்னேர வாழ்த்துக்கள்.
விமர்சனம் வித்தியாசம்..//
வாழ்த்துக்கு நன்றி. இடைச்செருகலாய் உங்கள் பெயரை பயன்படுத்தியதும் கோவத்தில் பின்னூட்டம் இடவில்லை போலும் என்று நினைத்தேன். உங்கள் வாழ்த்தை சொல்லியாச்சு. மதுரையில் ஐயா வீட்டில் ஆட்டம். நம்மகிட்ட பேசக்கூட நேரமில்லை. ஆனா 'எப்பப்பா வருவே கேள்வி மட்டும் தினமும்...'.
நன்றி அக்கா.
விமர்சனம் நல்லா இருக்கு.......
பதிலளிநீக்கு"எங்க வீட்டு செல்லக்குட்டி-- சந்தோஷம் எனக்குள்ளும்"....
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
குழந்தைகளை ஐந்து வயது வரை தூக்கி கொஞ்ச இரண்டு கைகள் பத்தாது. ஆலமர கிளைகள் போல் அள்ளி அணைத்துக்கொள்ள அவ்வளவு கைகள் வேண்டும்.
உங்கள் குழந்தையின் வயதுக் கேற்ற குட்டியூண்டு பதிவா.. ம்ம்ம் கலக்குங்க