அலை - 1
எனது மழலை இதயம் சிறுகதை சிறுவர்களுக்காக தினத்தந்தி நாளிதழில் வெள்ளியன்று இலவச இணைப்பாக வெளிவரும் தங்கமலர் ஏப்ரல்-2ந்தேதி பதிப்பில் வெளிவந்திருந்தது. சிறுவர்களுக்கான இதழில் வெளியிட்ட ஆசிரியருக்கும் தினத்தந்தி நாளிதழுக்கும் நன்றி.
அலை - 2
நண்பர் ஸ்டார்ஜனின் வலைப்பூவில் சில புல்லுருவிகள் புகுந்து சேட்டைகள் செய்திருப்பதாகவும் அதனால் அவருக்கு ஏற்பட்ட் மனவலி குறித்தும் இன்று காலை அவரது வலையில் பார்த்தேன். நமக்குள் இருக்கும் முகம் தெரியா நட்புக்குள் நண்பர்கள், தோழிகள், சகோதரர்கள், சகோதரிகள், அம்மாக்கள் என எத்தனையோ உறவு முறைகள்...
எல்லாம் நமக்குள் ரத்த சம்பந்தத்தால் வந்தது என்றால் நிச்சயமாக இல்லை. நமக்குள் இருக்கும் பகிர்தலே காரணம். அப்படியிருக்க கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி பின்னூட்டம் இட நினைக்கும் கயவர்கள் தயவு செய்து தங்களுக்கென ஓரு வலை விரித்து அதில் என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள். உங்களுக்கும் நட்பு கிடைக்கும் உங்களைப் போலவே. தயவு செய்து நல்ல குடும்பத்துக்குள் நாறவாயன் நுழைய வேண்டாம். இதனால் நண்பருக்கு எத்தனை மனவேதனை...!
அவரது நட்பில் உள்ள பெண்கள் பார்த்திருந்தால்...? இனிமேலாவது இது போன்ற பின்னூட்டங்களை தயவு செய்து போடாதீர்கள். ஸ்டார்ஜன் அருமையான எழுத்தாளர். அவரது பகிர்வுகள் அனைத்தும் அருமையானவை. அவர் யாரையும் தாக்கியோ தூற்றியோ எழுதியதில்லை... அப்படியிருக்க அவருக்கேன் இப்படி...?
வலைச்சரத்தில் பட்டயை கிளப்பியதால் வந்த கோபமா என்ன...? யாரா இருந்தாலும் நண்பர்களே இனி இதுபோல் வேண்டாமே..!
அலை - 3
நாங்கள் அறை மாறிய கதை எங்களுக்கு சொல்ல முடியாத மனவலியைத் தந்தது. பிப்ரவரி மாத இறுதியில் நாங்கள் நீண்ட நாட்களாக தங்கியிருந்த கட்டிடம் உடைக்கப்படப்போவதாக நோட்டீஸ் கொடுத்ததால் நாங்கள் வேறு அறை தேடும் பணியில் தீவிரமானோம்.
புரோக்கர்கள் என்ற பெயரில் கொள்ளைக் கூட்டம் ஒன்று அபுதாபியில் அலைவது அப்பொழுதுதான் தெரிந்தது. அறை பிடித்துக் கொடுத்தால் அவருக்கு 1000 அல்லது 2000 திர்ஹாம் கமிஷன் வெட்ட வேண்டுமாம். என்ன செய்ய... நாங்கள் இருந்தது இக்கட்டான நிலையில் எனவே அவர்களிடமும் சொல்லி தேடினோம்.
அதற்குள் நண்பர் மூலமாக கமிஷன் இல்லாமல் ஒரு அறை கிடைத்தது. மார்ச் 2ஆம் தேதி எங்கள் பழைய கட்டிடத்தத்தில் மின்சாரம் எங்கள் தளத்தில் மட்டும் துண்டிக்கப்பட்டது. எனவே அவசர அவசரமாக மாற்றினோம். புதிய அறை நல்ல விசாலமானது. எங்கள் ஆறு பேருக்கு அதிக இட வசதியுடன் இருந்தது. ஆனால் கழிப்பறை மிகவும் மோசமாக இருந்தது. மலையாளிகள் பயன்படுத்தி வந்தனர். சுத்தம் செய்வது என்பது அவர்களுக்கு தெரியாது போலும். அவ்வளவு மோசம்.
கிச்சன் மற்றும் கழிப்பறையில் இருந்து எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலே எந்த நேரமும் மழைக்காலத்தில் மாட்டுக் கசாலைக்குள் தேங்கி நிற்கும் மூத்திரம் போல இருந்து கொண்டே இருக்கும். அழகான பால்கனி. நல்ல காற்று அதிலெல்லாம் குறையில்ல.
நாங்கள் போன நேரமோ என்னவோ தெரியவில்லை நாங்கள் போகும்போது இயங்கிக் கொண்டிருந்த லிப்ட், மூன்று நாளில் மூச்சை நிறுத்திக் கொண்டது. அதை சரி செய்யும் எண்ணம் கட்டிட உரிமையாளருக்கு எழவில்லை. காரணம் அதுவும் இடிக்கப்பட இருக்கும் கட்டிடமாம். போதுமுடா சாமி...!
கடந்த ஒரு மாதமாக பழனிமலை நடை பயணம்தான், தினமும் ஏறினோம்... இறங்கினோம்... இதனால் வலை (Internet) வாங்கும் எண்ணம் ஏனோ தடையானது. அதனால்தான் தமிங்கிலத்தில் அலுவலகத்தில் இருந்து அவசர... அவசரமான பின்னூட்டங்கள்.
மீண்டும் அறை தேடும் படலம் ஆரம்பிக்குமோ என்று மனசுக்குள் கிலி ஏற்பட ஆரம்பிக்கும் போது உறவினர் ஒருவர் தனது மனைவியை பிரசவத்தின் காரணமாக இந்தியா அனுப்புவதால் அந்த அறையை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முன்பு ஒருமுறை சொல்லியிருந்தார். அவரிடம் வினவ, ஏப்ரல் 2ந்தேதி ஊருக்கு செல்ல இருப்பதால் மாறிக்கொள்ளலாம் என்றார்.
அவர் மூலமாக அந்த பிளாட்டின் உரிமையாளரிடம் பேசினால் எதோ வேலைக்கான நேர்முகத்தேர்வு போல் ஆயிரத்தெட்டு கேள்விகள். அதில் தாண்டி வந்தால் நான் கு பேர்தான் தங்கணும், சிகரெட் தண்ணி கூடாது என்ற கட்டுப்பாடுகள். எல்லாம் ஓகேயானதும் மீண்டும் அறை மாற்ற வேலைகள். உறவினர் சொல்லிவிட்டு மனைவியை கொண்டுவிட பத்து நாள் விடுமுறையில் சென்று விட்டார்.
இந்த முறை மூன்று மாடிகள் படிகளில் பொருட்களை இறக்கினோம். 29" தொலைக்காட்சி, ஏசி, பிரிட்ஜ், கட்டில்கள் எல்லாம் படியின் வழியாக... ஸ்... அப்பாடா என்று புது அறைக்கு வந்தபோது மீண்டும் பிரச்சினை. வந்த முதல் நாள் மூட்டைப்பூச்சி மருந்து அடிக்கிறோம் என்றார்கள் அப்படியே போட்டுவிட்டு வெளியில் தங்கிவிட்டு மாலை திரும்பினால் நாளைதான் அடிக்கிறோம் என்றார்கள்... வந்ததே பாருங்கள் கோபம்...? ம்.... என்ன செய்ய... நமக்கு அறை வேணுமே... அதனால் அடங்கியது மனசின் எரிமலை...
சரி சாவியை கொடுங்கள் நாங்கள் படுப்பதற்காகவாவது இடம் ஒதுக்கிக் கொள்கிறோம் என்றால் கிச்சன் சாவியை மானேஜர் வாங்கிக் கொண்டுவிட்டார். பேச்சிலர்கள் சமைக்க அனுமதியில்லையாம் என்றான் எங்கள் சாவியை கொடுத்தவன்... மானேஜர் மலையாளி, அவனுக்கு நாங்கள் வருவது பிடிக்கவில்லை என்பது பின்னர்தான் தெரிந்தது.
அதற்கு மேல் அடங்கியிருக்க, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் அமைதி காத்து குடும்பம் நடத்தும் அவரா நாம... நமக்குன்னு ஒரு மரியாதை இருக்குல்ல... அது வாய் வழியாக சற்று வேகமாக இறங்க, இதை எதிர்பார்க்காத சாவியை கொடுக்க வந்த நண்பர் முதலாளிகிட்ட பேசுங்க... என்றார். அவரிடம் சற்று மரியாதை கலந்த சூட்டோடு பேசினோம். அவர் எங்களுக்கு கிரீன் சிக்னல் காட்டினார்.
பின்னர் மேனேஜரிடம் சாவி வாங்கி (அவன் முகத்தில் அணை கட்டியது போலிருந்தது) எல்லாம் சரி செய்து சமைத்து சாப்பிட்டு அறையில் தங்கியாச்சு. பக்கத்துல மலையாளக் கரையாளுங்க, இப்ப பாத்ரூமை குத்தகை எடுத்து உள்ள தூங்குறாங்க போல ... சரி ஆகிறது ஆகட்டும்... போகப் போக நாம எல்லாரையும் பாத்துக்கலமுன்னு மனசை தேத்திக்கிட்டு இருக்கோம். வலை (internet) வாங்கிட்ட நாம பொழப்பு நல்ல போகும்... பார்க்கலாம்.
--'பரியன் வயல்' சே.குமார்
//தயவு செய்து நல்ல குடும்பத்துக்குள் நாறவாயன் நுழைய வேண்டாம். இதனால் நண்பருக்கு எத்தனை மனவேதனை...!//
பதிலளிநீக்குநல்லாசொன்னீங்க.. சிலநேரம் நாம் தவிர்க்கவேண்டியவைகளும் இங்கே இருக்கின்றன. அவருக்குண்டான மனவேதனை இனியாருக்கும் உண்டாகக்கூடாது...
//வலை (internet) வாங்கிட்ட நாம பொழப்பு நல்ல போகும்... பார்க்கலாம்.//
வலை வாங்கிட்டம்னா யாரு பாத்ரூம குத்தகையெடுத்து தூங்குறாங்கன்னுகூட நமக்கு தெரியாதுல்ல... அப்டியும் ஒரு வசதி இருக்கு...
தினத்தந்தி தங்கமலரில் வெளியான தங்களது சிறுகதைக்கும் வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குHi,
பதிலளிநீக்குThis is ragu from Abu dhabi.
0506522926
விருது பெற தங்களை அன்புடன் அழைக்கிறேன்
பதிலளிநீக்குhttp://sinekithan.blogspot.com/2010/04/blog-post_07.html
உங்க சிறு கதை வெளியானதற்கு வாழ்த்தலாம் என்று நினைத்தால், மற்ற இரண்டு செய்திகளும் சந்தோஷத்தை அமுக்கி போட்டு விட்டதே..... :-(
பதிலளிநீக்குதங்கமலர் கதை...படிக்கவில்லை.
பதிலளிநீக்குஆனால், அறை மாறிய கதை படா
சுவாரஸ்யம். அதாவது, வேதனைகளையும்
இரசிக்கும்படி எழுதியிருந்தீர்கள்.
தவறான பின்னூட்டங்களால் ஸ்டார்ஜன், அவர்களுக்கு ஏற்பட்ட மனவருத்தம் கண்டு, வருத்தமாக இருக்கிறது.. இனியாவது இப்படி நடக்காமல் இருந்தால் சரி தான்..
பதிலளிநீக்கு@க.பாலாசி said...
பதிலளிநீக்கு//தயவு செய்து நல்ல குடும்பத்துக்குள் நாறவாயன் நுழைய வேண்டாம். இதனால் நண்பருக்கு எத்தனை மனவேதனை...!//
நல்லாசொன்னீங்க.. சிலநேரம் நாம் தவிர்க்கவேண்டியவைகளும் இங்கே இருக்கின்றன. அவருக்குண்டான மனவேதனை இனியாருக்கும் உண்டாகக்கூடாது...
//வலை (internet) வாங்கிட்ட நாம பொழப்பு நல்ல போகும்... பார்க்கலாம்.//
வலை வாங்கிட்டம்னா யாரு பாத்ரூம குத்தகையெடுத்து தூங்குறாங்கன்னுகூட நமக்கு தெரியாதுல்ல... அப்டியும் ஒரு வசதி இருக்கு...//
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி பாலாசி. வலைச்சரத்தில் பட்டாசாய் நீங்கள்.
@க.பாலாசி said...
பதிலளிநீக்கு//தினத்தந்தி தங்கமலரில் வெளியான தங்களது சிறுகதைக்கும் வாழ்த்துக்கள்....//
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி பாலாசி.
@ரகுநாத் said...
பதிலளிநீக்கு//Hi,
This is ragu from Abu dhabi.
0506522926//
வருகைக்கும் அன்புக்கும் நன்றி ரகு. விரைவில் தொடர்பில் வருகிறேன்.
@அக்பர் said...
பதிலளிநீக்கு//விருது பெற தங்களை அன்புடன் அழைக்கிறேன்
http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_07.html//
அக்பர் அவையில் நம்ம மனசுக்கு விரு(ந்)து கொடுத்துருக்காங்க. வாறோம்முங்க அள்ளிக்கிட்டு வர சாக்கு மூட்டையோட. ஆமா பொன்முடியும் உண்டுதானே.
வருகைக்கும் விருதுக்கும் நன்றி.
@சித்ரா said...
பதிலளிநீக்கு//உங்க சிறு கதை வெளியானதற்கு வாழ்த்தலாம் என்று நினைத்தால், மற்ற இரண்டு செய்திகளும் சந்தோஷத்தை அமுக்கி போட்டு விட்டதே..... :-(//
ஆம் சித்ரா. சில கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கிறது என்ன செய்ய. வருகைக்கு நன்றி.
@நிஜாமுதீன் said...
பதிலளிநீக்கு//தங்கமலர் கதை...படிக்கவில்லை.
ஆனால், அறை மாறிய கதை படா
சுவாரஸ்யம். அதாவது, வேதனைகளையும்
இரசிக்கும்படி எழுதியிருந்தீர்கள்//.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நண்பரே நம்ம வேதனைகளையும் சோதனைகளையும் ரசித்தால் கஷ்டம் குறையுமல்லவா?
ஆனந்தி said...
பதிலளிநீக்கு//தவறான பின்னூட்டங்களால் ஸ்டார்ஜன், அவர்களுக்கு ஏற்பட்ட மனவருத்தம் கண்டு, வருத்தமாக இருக்கிறது.. இனியாவது இப்படி நடக்காமல் இருந்தால் சரி தான்../
ஆம் ஆனந்தி. அவருக்கு எவ்வளவு மனவலி என்பது அவரது பகிர்வில் தெரிந்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்ல மனசுங்க.
பதிலளிநீக்குகுமார் தினத்தந்தி சிறுவர்மலரில் வெளியான உங்கள் சிறுகதைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. மிக்க நன்றி குமார்.
அன்புள்ள குமார் அவர்களுக்கு!
பதிலளிநீக்குஇந்த பாலைவன நாட்டில் 35 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகிறேன். தனியாகத் தங்கும் இளைஞர்கள் அறை பிடிக்கவும், சமைக்கவும் படும்பாட்டை நான் அறிவேன். ஆனாலும் உங்களது அனுபவம் மனதை கஷ்டப்படுத்தியது. குடும்பத்தைப்பிரிந்து இருக்கும் இளைஞர்களுக்கு எந்தெந்த வடிவிலெல்லாம் சோதனைகள்!
அலை 1.
பதிலளிநீக்குதங்கமலரில் வெளியானதற்கு வாழ்த்துகள்.
அலை 2.
சரியாக சொன்னீர்கள். அதைத்தான் நானும் ஸ்டார்ஜன்னும் பேசி வருத்தப்பட்டுக்கொன்டிருந்தோம்.
அலை 3.
எங்கே சென்றாலும் இந்த மலையாளிகள் தொல்லைதான்.
@ஆயிஷா said...
பதிலளிநீக்கு//நல்ல மனசுங்க.//
நன்றிங்க..!
@ஸ்டார்ஜன் said...
பதிலளிநீக்கு//குமார் தினத்தந்தி சிறுவர்மலரில் வெளியான உங்கள் சிறுகதைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. மிக்க நன்றி குமார்.//
சிறுகதைக்கு வாழ்த்து ஓகே ஸ்டார்ஜன்.
மத்ததுக்கு எதுக்குங்க நமக்குள்ள நன்றி...! உங்களுக்காக இருந்தாலும் எனக்காக இருந்தாலும் இல்லை யாருக்காக இருந்தாலும் மனவலி எல்லாருக்கும் ஒன்றுதானே..!
@மனோ சுவாமிநாதன் said...
பதிலளிநீக்கு//அன்புள்ள குமார் அவர்களுக்கு!
இந்த பாலைவன நாட்டில் 35 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகிறேன். தனியாகத் தங்கும் இளைஞர்கள் அறை பிடிக்கவும், சமைக்கவும் படும்பாட்டை நான் அறிவேன். ஆனாலும் உங்களது அனுபவம் மனதை கஷ்டப்படுத்தியது. குடும்பத்தைப்பிரிந்து இருக்கும் இளைஞர்களுக்கு எந்தெந்த வடிவிலெல்லாம் சோதனைகள்!//
அம்மா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!
பயங்கர கஷ்டமம்மா... இப்ப பக்கத்துல மலையாளிங்க மாமியார் வீட்டுக்குப் போன புதுப்பெண் கதைதான் எங்கள் நிலை.
எனக்கும் 'மாமியார் உடைச்சா மண்குடம்... மருமக உடைச்சா பொன் குடம்' என்ற பழமொழிதான் அவர்கள் செய்கையில் தெரிகிறது.
@அக்பர் said...
பதிலளிநீக்கு//அலை 1.
தங்கமலரில் வெளியானதற்கு வாழ்த்துகள்.
அலை 2.
சரியாக சொன்னீர்கள். அதைத்தான் நானும் ஸ்டார்ஜன்னும் பேசி வருத்தப்பட்டுக்கொன்டிருந்தோம்.
அலை 3.
எங்கே சென்றாலும் இந்த மலையாளிகள் தொல்லைதான்.//
ஆம் நண்பரே... வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி..!
அன்புள்ள குமார் அவர்களுக்கு!
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றி!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
அன்புள்ள குமார்..
பதிலளிநீக்குஉங்கள் அறை மாறிய அனுபவத்தை வாசித்தபோது மிக வருத்தமாக இருந்தது. இப்போது எல்லாம் மாறியிருக்கும் என்று நம்புகிறேன். இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். தொடர்ந்து நிறைய எழுதுங்கள் நண்பரே.
உங்கள் சிறுகதை வெளியானதற்கு
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
\\நமக்குள் இருக்கும் முகம் தெரியா நட்புக்குள் நண்பர்கள், தோழிகள், சகோதரர்கள், சகோதரிகள், அம்மாக்கள் என எத்தனையோ உறவு முறைகள்... \\
சரியாக சொன்னீர்கள்.
எங்கே போனாலும் இந்த கொசு (மலையாளி) தொல்லை இருக்கும் போல.. ஹா.. பரவா யில்லை. சமாளியுங்கள்
பதிலளிநீக்கு@ஹரீகா said...
பதிலளிநீக்கு//எங்கே போனாலும் இந்த கொசு (மலையாளி) தொல்லை இருக்கும் போல.. ஹா.. பரவா யில்லை. சமாளியுங்கள்//
மலிக்காக்கா தளம் வாயிலாக வந்ததற்கு மிக்க நன்றி ஹரீகா.
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி.
உங்களது வலைப்பூவின் முகவரி என்ன?
அடிக்கடி வாருங்கள். நன்றி.