நாவால் துளாவியும்...
விரலால் விரவியும்...வர மறுத்தது
தொண்டைக்குள் சிக்கிய
மீன் முள்..!
'சோத்தை உருட்டி
வாயில் போட்டு
விழுங்கு' அம்மாவின்
கணக்கு பொய்த்தது..!
'தண்ணிய கொப்பளித்து
துப்பு' அப்பாவின்
வைத்தியம் தப்பானது..!
'கண்ணாடி பார்த்து
மெதுவா பிடுங்கு'
அக்காவின் அறிவுரைக்கும்
சிக்காமல் போனது..!
எச்சில் விழுங்கும்
போதெல்லாம்
'சுருக்' கென்ற வலியுடன்
உள்ளிருப்பு போராட்டம்
தொடர்ந்தது..!
அருவலில் முடிவாய்
வந்த வாந்தியில்
எல்லாம் வெளியே...
முள்ளைத் தவிர..!
மருத்துவரிடம் போனால்
இலகுவாக பிடிங்கினார்
எரிச்சலூட்டிய முள்ளை..!
மீன் விலையோ
அம்பது ரூபா...!
முள் பிடுங்க
நூற்றம்பது...!
எனது வலி இப்ப
அப்பா முகத்தில்..!
-'பரிவை' சே.குமார்
//எனது வலி இப்ப
பதிலளிநீக்குஅப்பா முகத்தில்..!//
அப்பாவோட வலிய இயல்பாய் சொல்லியிருக்கீங்க!
நல்லா இருக்கு எஸ்கே!
இருந்தாலும், மீன் ருசி அறிந்தர்வர்கள், மீன் சாப்பிடாமல் இருப்பதெப்படி முடியும்? :-)
பதிலளிநீக்குதூண்டி முள்ளு குத்தினப்ப சாபம் விட்டு செத்துப்போன மீனா இருக்குமோ:))
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குகடைசி வரியை நான் முழுவது ஒத்துக்கொள்ள முடியவில்லை :)
அருமையான கவிதை.. யதார்த்தமான வலி.. ஒரு மீன்முள் என்ன வேலையெல்லாம் செய்யுது பாத்தீங்களா..
பதிலளிநீக்குரொம்ப நல்லாயிருக்கு...
பதிலளிநீக்குபெரிய விஷயத்தை ரொம்ப எளிமையா சொல்லி இருக்கீங்க :))
பதிலளிநீக்குvery nice!!
பதிலளிநீக்குஆக மொத்தம் 200 ஒரு மீனுக்கு ஆசப்பட்டதுக்கு... அப்பாவுக்குத்தான தெரியும் அந்த காசுக்கு பட்ட கஷ்டம்..
பதிலளிநீக்குநல்லாயிருக்குங்க...
ரொம்ப நல்லாருக்கு..
பதிலளிநீக்குஇனிமே முள் இல்லாத மீன் வாங்கி சாப்பிடுங்க.
வாங்க பாலாஜி சரவணா...
பதிலளிநீக்குஅப்பாவுக்கு முதல்ல பையனோட அவஸ்தைய பார்த்து வலி
அப்புறம் டாக்டர் பீஸைப் பார்த்து வலி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சித்ரா மேடம்...
பதிலளிநீக்குமுள் இருக்க மீன் தான் அதிக சுவையா இருக்கும் தெரியுமா?
முள் குத்தினாலும் மீன்வலியை மீன் சுவை வென்றுவிடும் என்பதே உண்மை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானம்பாடிகள் ஐயா...
பதிலளிநீக்குஇருக்குமோ..?
அதுக்கு முள் குத்துன வலியை திருப்பிக் கொடுக்குதோ...?
தூண்டில் போட்டு மீன் பிடித்து சாப்பிடுறதே சுகம்தான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க பின்னோக்கி...
பதிலளிநீக்குஎன்ன செய்ய அந்த அப்பாவி(யி)ன் வலி அது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஸ்டார்ஜன்...
பதிலளிநீக்குரொம்ப நாளாச்சு... நம்ம வலைக்கு வந்து...
ஆமா அனுபவப்பட்டாத்தானே அந்த வலி தெரியும். உங்க கிட்ட மட்டும் சொல்றேன். நமக்கும் மீன் முள்ளுக்கும் ரொம்ப ராசிங்க.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வெறும்பய சார்...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சுசி மேடம்...
அனுபவத்தை சொல்றேன்னு சொல்லலையில்ல...
அப்பா சந்தோஷம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மேனகா அக்கா...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பாலாஜி...
ஆமா அப்பாவோட வலி நமக்குத் தெரியாதுல்ல...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கவிதை நல்லா இருக்கு. படம் தான் கொஞ்சம் டெரரா இருக்கு.
பதிலளிநீக்கு///மீன் விலையோ
பதிலளிநீக்குஅம்பது ரூபா...!
முள் பிடுங்க
நூற்றம்பது...!
எனது வலி இப்ப
அப்பா முகத்தில்..!////
எனக்கு இந்த அனுபவம் இல்லாட்டியும்...நீங்க சொல்ல சொல்ல.. அப்படியே நினைத்து பார்க்க முடிந்தது..
சூப்பர் கவிதைங்க..
மீன் சாப்பிடுவதைக் கூட கவிதையாய் வடிச்சிட்டீங்க..
பதிலளிநீக்குமீன் மேல நீங்க வச்சிருக்கிற அன்பு தெரியுதுங்க.. :-))
தொண்டையில் குத்திய வலி அப்பா பாக்கெட்டுக்கு போன விதம் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்புடன் ஆர்.வி.எஸ்.
வாங்க வானதி...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மீன் வலிங்க அதான் வலியோட படிக்க இந்த படம்.... ஹா... ஹா.... எப்பூடி.?
வாங்க ஆனந்தி...
பதிலளிநீக்குஉங்களுக்கு அனுபவம் இல்லைன்னா எங்களுக்கு அனுபவமுன்னு சொல்றீங்களா? அது சரி...
சில அனுபவங்களே கவிதையாகின்றன்...
ஆனா...
இது அனுபவமான்னு கேக்கப்படாது. சத்தியமா கற்பனையே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க RVS சார்...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
///வாங்க ஆனந்தி...///
பதிலளிநீக்குவந்துட்டேன்..... :-))
////உங்களுக்கு அனுபவம் இல்லைன்னா எங்களுக்கு அனுபவமுன்னு சொல்றீங்களா? அது சரி...///
ஏங்க....மீன் சாப்பிடுற ஹாப்பி அனுபவம் இல்லைங்க....அதான் பீலிங்க்ஸ்..
///சில அனுபவங்களே கவிதையாகின்றன்..
ஆனா...
இது அனுபவமான்னு கேக்கப்படாது. சத்தியமா கற்பனையே...//
சரி ஓகே.... கேக்கலை... (ஆனா சாப்ட்ட மாதிரியே ஒரு எபெக்ட் எப்புடி.....ஹ்ம்ம் சிந்திக்கிறேன் )
உங்கள் தொண்டையில் குத்திய முள் என் நெஞ்சில் குத்தி நிற்கிறது குமார்.., வாங்க வந்து எடுத்து விட முடியுமான்னு பாருங்க..! எங்கப்பா இதுக்கெல்லாம் காசு தரமாட்டார். எப்படிப்பா......!! நல்ல சிந்தனை குமார்.. தொடருங்கள். எழுத்து என்பது இது போல் இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குஃஃஃ...மீன் விலையோ
பதிலளிநீக்குஅம்பது ரூபா...!
முள் பிடுங்க
நூற்றம்பது...!...ஃஃஃ
தம்பி கிட்ட தந்திருந்தால் முள் எடுத்து தந்திருப்பேனெ..
இது பிரமாதம்...
பதிலளிநீக்கு