Bharatwriters.com என்னும் தளத்தில் எனது இரண்டாவது சிறுகதை வெளியாகியிருக்கிறது. Mini Stories என்னும் தலைப்பின் கீழ் இருக்கும் ஐந்து கதைகளில் ஐந்தாவது கதையாக வெளியாகியிருக்கிறது. 'எதிரொலி' என்னும் தலைப்பில் இருக்கும் கதையை வாசித்து, மறக்காமல் விருப்பக்குறி இடுங்கள்... வரும் விருப்பக்குறிகளைப் பொறுத்து அந்தக் கதைக்கான சன்மானம் அமையும்...
அமேசானில் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது... அதில் கூட கிட்டத்தட்ட நூறு ரூபாய் உங்கள் கணக்கில் போடப்பட்டிருக்கு என்பதாய்ச் சொல்லியிருக்கிறார்கள்... எனக்கு அமேசான் கணக்கு வழக்குப் புரியவில்லை... அதில் போட்ட ஒரு நாவல் மற்றும் கவிதையைத் தவிர வேறொன்றும் ஏற்றவில்லை... ஏனோ அதில் எப்படித் தொடர்வதென யோசனையுடனேயே கழிகிறது. அமேசான் விபரம் தெரிந்த ஜோதிஜி அண்ணன் போன்றோர் கொஞ்சம் சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
சஹானா இணைய இதழில் தீபாவளிக்கென மறக்க முடியாத தீபாவாளி என்றொரு போட்டி... சரி எழுதலாமே என அதற்க்கும் எழுதி அனுப்பினேன்... விழும் விருப்பக்குறியைப் பொறுத்துத்தான் வெற்றியாளர் தேர்வு என்பது இன்று தளத்தின் உரிமையாளர் சகோதரி. திருமதி கோவிந்த் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல் மூலமே தெரிந்து கொண்டேன்... முடிந்தவர்கள் அங்கு சென்று வாசித்து தங்கள் கருத்துக்களைச் சொன்னால் மகிழ்வாக இருக்கும்... செய்வீர்களா...?
தமிழ்டாக்ஸ் இணைய தளத்தில் தொடர்ந்து எழுதும் வாய்ப்புக் கிடைத்திருப்பது உண்மையில் மகிழ்ச்சியே... பிக்பாஸ் எழுத ஆரம்பித்து அதற்கென தனித்திரி உருவாக்கிப் பகிரும் வேளையில் இங்கு எழுதிய கட்டுரைகள், கவிதைகள் என வாங்கிப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் இணையாசிரியரான சகோதரர் கவிஞர் சிவமணி. பிக்பாஸ் பதிவுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. எழுதுவதற்கு அதொரு நல்ல வாய்ப்பு என்பதால் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். விருப்பமிருந்தால் பிக்பாஸ் பதிவுகளை வாசித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
தேன்சிட்டு தீபாவளி சிறப்பு மலரில் எனது சிறுகதையான 'அப்பாவுக்காக தீபாவளி' வெளியாகியிருக்கிறது. கதை கேட்டு வாங்கி, அதற்கு தனது இதழில் இடமும் கொடுத்த சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி.
கறுப்பி பதினேழு பகுதிகளும் முடிவடைந்த நிலையில் அடுத்து என்ன தொடங்கலாம் என தசரதன் கேட்டதுடன் கறுப்பிக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்றும் சொன்னார். அங்கு கருத்து இடும் வசதி முடக்கப்பட்டிருப்பதால் அது குறித்தான கருத்தை அறிய முடியாமல் போனது என்றாலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்தது 2000 என்றிருந்தது மகிழ்வைக் கொடுத்தது. அடுத்து ஏதாவது தொடங்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. பேச்சின் போது வேரும் விழுதுகளும் நாவலை புத்தகம் ஆக்கும் பணியைத் தொடங்கிவிடலாம் அண்ணா என்றார். விரைவில் வேரும் விழுதுகளும் நாவல் வெளிவரும் என்று நம்புகிறோம். என் மீது நம்பிக்கை வைத்து நகரும் தசரதனுக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.
எதிரொலி கதை அப்பிடித்தேன். அருமை குமார். மனைவிக்கு பாடம் அந்நேரத்தில் தானாகக் கிடைத்திருக்கிறது.
பதிலளிநீக்குதேன்சிட்டு கதையும் அருமை. ராதிகா நடுவில் ராதாவாகிப் போனாள்! கதை நல்ல கதை. ஆனால் இறந்தவர் வீட்டில் பண்டிகை கொண்டாடாதது மூட நம்பிக்கை என்று சொல்ல மாட்டேன். அவரவர் மனோபாவம். இங்கு அவர் தந்தைக்காற்றும் கடமை.
சஹானா கட்டுரையும் வாசித்தேன்.
குமார் சஹானா வில் கருத்து போட்டுள்ளேன் ஆனாஅல் தாமதமாகிவிட்டது சாரி குமார்.
பதிலளிநீக்குகறுப்பி முடிந்துவிட்டதா...விட்டதிலிருந்து தொடர்ந்து வாசித்து முடிக்கிறேன் குமார்.
கீதா
அடுத்தடுத்து தொடர் சாதனைகள். இலக்குகள்...மகிழ்ச்சி, வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகருத்துரை வந்ததா குமார்?
பதிலளிநீக்குகீதா
இதுபோல் அனைத்திலும் ஈடுபடுத்திக் கொள்வது தன்னை மெருகேற்க வைக்கும் குமார்...! பாராட்டுகள்...
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்கு