கலக்கல் ட்ரீம்ஸில் வந்து கொண்டிருக்கும் 'கறுப்பி' தொடர்கதை இன்று ஆறாம் பாகம் வெளியாகியிருக்கிறது. இதுவரை நல்ல வரவேற்பு இருப்பதாக அதன் உரிமையாளர் சகோதரர் தசரதன் சொன்னார்.
கறுப்பியை வாசிக்க நினைத்தால் கலக்கல் ட்ரீம்ஸ் பக்கம் சென்று வாருங்கள்.
கலக்கல் ட்ரீம்ஸில் பகிரப்பட்ட 'பார்வதி டீச்சர்' படித்து விட்டு இளையான்குடியில் ஆசிரியராகப் பணிபுரியும் சகோதரர் திப்பு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதில் 'மிகச் சிறப்பான கதை... வாசித்து முடித்ததும் எனது பள்ளி ஆசிரியர்களைப் போய் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது... கதையில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை' என்று சொல்லியிருந்தார். யாரேனும் ஒருவரையாவது தன் இளமைக் காலத்தை மீட்டிப் பார்க்க வைத்திருக்கிறதே என்னும் போது உண்மையில் மகிழ்வாய் இருந்தது. நான் எழுதியதில் என்னை மிகவும் கவர்ந்த கதைகளில் பார்வதி டீச்சருக்கும் இடம் உண்டு.
மகாகவி இதழ் சில மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் மலர்ந்த போது அதில் கவிஞர் சிவமணியின் 'மௌன ஒத்திகைகள்' என்னும் கவிதைத் தொகுப்பு குறித்து எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. இங்கு பகிர்ந்ததுதான்... அது மகாகவி இதழ் ஆசிரியரும் ஓவியா பதிப்பக உரிமையாளருமான திரு. வதிலை பிரபா அவர்களுக்குப் பிடித்துப் போக தன் முதல் இதழில் என் போட்டோவுடன் பகிர்ந்திருந்தார். அதனுடன் தமிழ் டாக்ஸ் என்னும் இணையதளம் ஒன்றையும் ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் பகிரப்பட்ட முதல் கதை எனது சிறுகதைதான் என்பது கூடுதல் மகிழ்ச்சி. கதை கொடுங்கண்ணே எனக்கேட்டு வாங்கிப் பகிர்ந்து கொண்ட சகோதரர் சிவமணிக்கும், ஆசிரியர் வதிலை பிரபா அவர்களுக்கும் நன்றி.
நெருஞ்சியும் குறிஞ்சியும் இங்கு பாதி வரை எழுதப்பட்ட நாவல்... அதன் பின் எழுதாமல் போட்டு வைத்திருந்தேன்... அப்படியே கிடந்தால் கிடந்து போகும்ண்ணே எழுதி முடிங்க என்று சொல்லி எழுத வைத்தவர் சகோதரர் ராஜாராம்... இவர்தான் என்னைத் தொடர்ந்து எழுதுங்கள் எனச் சொல்லிக் கொண்டே இருப்பவர்... சமீபத்தில் ஒரு தொடர்கதை ஆரம்பித்து மெல்ல மெல்ல நகர்த்தலாம் என நினைத்த போது தினமும் பேசி அதை அடுத்து எழுதுங்க... எழுதுங்க எனச் சொல்லியே 550 பக்கங்களுக்கு மேல் எழுத வைத்தார். ஒவ்வொரு அத்தியாயத்தையும் வாசித்து தன் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். சரி பழைய கதைக்கு வருவோம்... நெருஞ்சியும் குறிஞ்சியும் இப்ப அமேசான் தளத்தில் இருக்கிறது. கிண்டில் வழி இலவசமாகப் படிக்க முடிந்தவர்கள் முடிந்தால் வாசியுங்கள்... கட்டாயமில்லை... அதேபோல் நாளை ஒருநாள் (22-09-2020) இலவசமாகத் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்... விருப்பம் இருப்பின் வாசித்துக் கருத்துச் சொல்லுங்க.
வலைப்பூவில் பகிரப்பட்ட கவிதைகள் சிலவற்றைத் தொகுத்து 'சொல்ல மறந்த கவிதைகள்-I' என்ற தலைப்பில் கிண்டிலில் பகிர்ந்திருக்கிறேன்.. காதல், வாழ்க்கை, சமூகம் என எல்லாம் கலந்த கவிதைகள்தான். நாளை (22-09-2020) முதல் வியாழன் (24-09-2020) வரை இலவசமாகத் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். முடிந்தவர்கள் வாசியுங்கள்... அப்படியே உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க.
இன்று இரவு சமையல் செய்து கொண்டிருக்கும் போது எப்போதும் என்மேல் நேசம் கொண்ட அண்ணன் பூபதி அவர்கள் பேசினார். எனது எழுத்தை விரும்பி வாசிப்பவர்களில் இவரும் ஒருவர். நீண்ட நேர உரையாடலில் வாழ்க்கை, குடும்பம், வேலை சம்பந்தமான பேச்சுக்கள்... என எல்லாமாய் நகர, மனோபாலா நிகழ்வு குறித்து எழுதியிருந்ததைப் படித்ததும் அப்பவே பேசணும்ன்னு நெனச்சேன். இப்பத்தான் முடிந்தது எனச் சொல்லி, எழுத்தை மட்டும் விட்டுவிடாதே... அது உனக்குக் கிடைத்திருக்கும் பெரிய சொத்து எனச் சொன்னார். வேறென்ன வேண்டும்... நம் எழுத்து ஒருவரை நம்மீது இறுக்கமான அன்பைப் பொழிய வைக்கிறது... உன்னைப் பார்க்க வேண்டும்... ஒரு பத்து நிமிடமேனும் பேச வேண்டும் எனச் சொல்ல வைக்கிறது. அது போதுமே.
-'பரிவை' சே.குமார்.
பலவற்றில் கவனத்தையும் நேரத்தையும் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டு வருவது சிறப்பு... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குஉங்கள் சாதனைகள் தொடரட்டும்.
பதிலளிநீக்குவாழ்த்துகளும் பாராட்டுகளும் குமார்.
வாழ்த்துக்கள் !!!
பதிலளிநீக்கு