வியாழன், 3 அக்டோபர், 2019

மனசு பேசுகிறது : நம்மை நாமே புகழ்வோமே... :)

பிக்பாஸே எழுதுறான்னும் நம்ம பக்கமே வரமாட்டேங்கிறான் நாம எதுக்குப் போகணும்ன்னும் ரொம்பப் பேரு ஓடிட்டாங்கன்னு தோணுது... ஆனாலும் வாசிக்கிறவங்க பிக்பாஸை ஒதுக்கிட்டு எப்பவாச்சும் போடுற பதிவை வாசிச்சிக்கிட்டுத்தான் இருக்காங்க... அதுல ஒரு சந்தோஷம் இங்கிட்டு நிக்கத்தான் செய்யுது... அதே போல பிரதிலிபியில் நான் எழுதும் பிக்பாஸ் பதிவுகளை ஆரம்பம் முதல் தொடர்ந்து வாசிக்கும் சகோதர, சகோதரிகள் எழுதும் கருத்துக்கள், சில சமயங்களில் நிகழும் கருத்து மோதல்கள் மிகச் சிறப்பானவையாக இருக்கின்றன என்ற சந்தோஷம் அங்கிட்டும் நிக்கத்தான் செய்யுது... அப்படிக் கருத்துப் பகிரும் பலரில் சகோதரிகள் டாக்டர். பிரணிதா ராமச்சந்திரன், புவனா ராஜபாண்டி, சாரு, கண்மணி, சிவகுட்டி, சகோதர்கள் ஆசிவருன் வருண், சின்ன ராசு மற்றும் மனோ மணி அம்மாபோன்ற பலரின் கருத்துக்கள் சிறப்பாக இருக்கும்.

தொடர்ந்து வாசித்து உற்சாகப்படுத்திய அவர்களுக்காகவும் அப்படியே பிக்பாஸ் எழுதியதால் நமக்கு பெருமை கிடைச்சிருக்கு அப்படின்னு சொல்லிக்கவும் இருவரின் கருத்துக்களும் இங்கே... மற்ற சகோதர, சகோதரிகளுக்கு நன்றி.

பிரணிதா ராமச்சந்திரன் :very true analysis Saho. complete the upcoming episodes too.

critics is always there every where. Take only healthy critics Saho. just ignore the rest. I have been watching few episodes whenever time admits. your write up well reflects the real persona of each participant in that show. keep writing Saho.

you really have a very unique style of writing Saho. It brings a wide grin each time while reading your episodes.

புவனா ராஜபாண்டி : மிக நன்று... இரண்டு நாட்களாக உங்கள் பதிவுக்காக காத்திருந்தேன். பிரதிலிபி தான் update செய்யவில்லை என்று uninstall செய்து install செய்து பார்த்தேன். 

சிறப்பான பதிவு. நகைச்சுவை.. ஆக்சன்.. பாடல்கள் அனைத்தும் இருக்கும் மசாலா படம் போல இருந்தது. தங்கள் பதிவுகளில் முகனைப் பற்றி அதிகம் விமர்சித்தது இல்லை. இப்போது அவர் வெற்றி பெற வாழ்த்து கிறீர்கள். நான் நிகழ்ச்சியை இதுவரை பார்த்தது கிடையாது. புராமோ மட்டும் தான் பார்த்திருக்கிறேன். அதிலும் கடந்த சில நாட்களாக முகனை காட்டிய நினைவு இல்லை. தர்ஷன் அனைவருக்கும் விட்டுக் கொடுத்தல்.. தேவையான நேரங்களில் மட்டும் பேசுதல்.. இது மட்டுல்லாமல் லோஸ்லிய விற்கு நிறைய செய்து இருக்கிறார். அவர் தான் வெற்றி பெறுவார் என்றே நினைத்து வந்தேன்.. உங்கள் பதிவு தான் முக்கிய காரணம் என்பது இரண்டாவது விஷயம். கவின் லாஸ்லியா தவிர யார் வென்றாலும் எனக்கு மகிழ்ச்சியே. விருதுநகர் புரோட்டா .. திருநெல்வேலி அல்வா எல்லாம் நினைவு படுத்தி இருக்கிறீர்கள்.. என்று கிடைக்குமோ.. தொடரட்டும்.. வாழ்த்துக்கள்.

ப்பத்தாவை மையப்படுத்தி சில கதைகள் எழுதியிருக்கிறேன்.. அதில் ஒன்று 2014-ல் எழுதி இதே மனசு வலைத்தளத்தில் பகிர்ந்த கதையான 'தலைமுறை நேசம்'. இது சிறுகதைகள்.காம் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. சிறுகதைகள்.காம் இணையத்தில் பகிரப்படும் எனது மூன்றாவது கதை இது. அப்பத்தாவுக்கும் பேத்திக்குமான உறவை பேத்தியின் நினைவு மூலமாகச் சொல்லும் ஒரு சோகக்கதைதான்... வாசிக்க இங்கே சொடுக்குங்கள்.

கொலுசு அக்டோபர் 2019 மின்னிதழில் இந்தத் தளத்தில் முன்பெழுதிய 'செல்லரிக்காத நினைவுகள்' என்னும் கவிதை காதல் என்னும் பெயரில் வெளிவந்திருக்கிறது. கவிதையை வாசித்து அதற்கு மதிப்பெண்ணும் இட்டு வர இங்கே சொடுக்குங்கள்.

முத்துக்கமலம் இணைய இதழில் அக்டோபர் மாத முதல் புதுப்பித்தலில் எனது கவிதைகள் 'சின்னச் சின்ன கவிதைகள்' என்னும் தலைப்பில் வெளியாகியிருக்கிறது. வாசிக்க இங்கே சொடுக்குங்கள்.

ன்று பல பிரச்சினைகள், உடல் நலமின்மையுடன் அலுவலகத்தில் வேலை இல்லாமல் அமர்ந்திருந்த போது ஆற்ற வேண்டிய கடமையாய் பிக்பாஸ் எழுதிவிட்டு... இதுவரை 83 பதிவு எழுதியிருக்கேன்... எனக்கே இது பெரும் ஆச்சர்யம்தான்.... பின்னர் ஒரு கதை எழுதலாமான்னு யோசிச்சு எழுத ஆரம்பித்தேன். அதிலிருந்து சில வரிகள்.

"அம்மா உனக்கு வேண்டியதையெல்லாம் எடுத்து வச்சிக்க... தேவைப்படாதுன்னு நினைக்கிறதை உன்னோட செல்ப்ல வச்சிட்டுப் போ... மருந்து, மாத்திரையை எடுத்துக்க... ஒரு மாசத்துக்கு உள்ள மருந்து மாத்திரை வாங்கித் தந்துட்டேன்... இது தீர்ந்ததும் தம்பிக்கிட்டச் சொல்லி வாங்கிக்க..." என்றான் காசி.

"சரிப்பா..." என்றபடி நூல் சேலையி பேக்கினுள் திணித்தாள் லட்சுமி.

"அப்புறம்... சீனு பொண்டாட்டி அப்படி இப்படித்தான் இருப்பா... இவளை மாதிரி அவ பாக்கலைன்னுட்டு சண்டை போட்டுடாதே... எது சொன்னாலும் சரின்னு சொல்லிட்டு இருக்கப் பழகிக்க..."

"சரிப்பா..."

"ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவைதான் செக்கப்புக்குப் போகணும்... சும்மா... அங்க பிடிச்சிக்கிச்சு இங்க பிடிச்சிக்கிச்சுன்னு சொல்லிக்கிட்டு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போகச் சொல்லி நிக்காதே... என்ன புரிஞ்சதா...?"

"சரிப்பா..."

"அத்தை... அங்க வெஸ்டர்ன் டாய்லெட்தான் இருக்கும்... அதை எப்படி யூஸ் பண்ணனும்ன்னு கேட்டுட்டு அதுபடிச் செய்யுங்க... இங்க மாதிரி வெளிய தெருவ போகல்லாம் இடமிருக்காது... வீட்டுக்குள்ளதான் எல்லாமே... அதை நாறடிச்சிடாதீங்க... நீங்க போனான்னு இல்ல.... எப்பவுமே நீங்களே அதைக் கிளீன் பண்ணி சுத்தமா வச்சிக்குங்க... அவங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போயிருவாங்க... நீங்கதானே வீட்டுல இருப்பீங்க..." என்றபடி வந்தாள் மருமகள் ரமா.

"சரித்தா..."

"அங்க பொயிட்டு அண்ணன் வீட்டுல அப்படி இருந்தேன்... இப்படி இருந்தேன்னு எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காதே... அவங்க என்ன சொல்றாங்களோ அப்படி நடந்துக்க... நீ ஏதாவது சொல்லப் போனா அது பிரச்சினையாகவும் வாய்ப்பிருக்கு... புரியுதா நான் சொல்றது..?"

"புரியுதுப்பா..."

"ஆமா... புரியுது புரியுதுன்னுட்டு தேவையில்லாமப் பிரச்சினையை இழுத்து வச்சிடாதீங்க... வயசான காலத்துல என்ன பேசுறோம்... என்ன பண்ணுறோம்ன்னு புரியிறதில்லை.. அவரு சொன்ன மாதிரி நடந்துக்கங்க... ஏன்னா அங்க ஆறு மாசம் நீங்க இருக்கணும்... அவங்க என்ன சொன்னாலும் சரி சரின்னு போகக் கத்துக்கங்க..."

"சரித்தா..."

"அப்பா... அப்பத்தா எங்கே கிளம்புறாங்க...?" கேட்டபடி வந்தாள் பேத்தி ஸ்ரீதாரிணி.

"அப்பத்தா சித்தப்பா வீட்டுக்குப் போறாங்க..."

"சித்தப்பா வீட்டுக்கா...? அப்ப இங்க வரமாட்டாங்களா...?"

"வருவாங்க... ஆறு மாசம் அங்க இருந்துட்டு வருவாங்க...."
-'பரிவை' சே.குமார்.

2 கருத்துகள்:

  1. என்னுடைய கருத்தை அப்படியே தங்கள் வலைப் பக்கத்தில் ஏற்றி வைத்து விட்டீர்கள்... மிக்க மகிழ்ச்சி. நெல்லுக்கு இறைத்த நீர்.. பாடல் நினைவிற்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி...
      இங்கும் நட்போடு தொடர வந்திருக்கும் உறவுக்கு...
      நன்றி மறப்பது நன்றன்று...
      நீங்களெல்லாம் இல்லை என்றால் பிக்பாஸ் பதிவுகள் இல்லை...
      பிரதிலிபியில் என் கதைகள், கட்டுரைகள் பெறாத வரவேற்ப்பை பிக்பாஸ் பெற்றது... ஒவ்வொரு பதிவின் பின்னும் ஒரு அனுபவம்...
      எழுதியதில் மன நிறைவைக் கொடுத்த பதிவுகள் 86.
      மறக்க முடியாத எழுத்து...
      ரொம்ப நன்றி.

      நீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி