(தர்ஷன்) |
பிக்பாஸ் கடந்த மூன்று நாட்களில் நேற்றைய பகுதி தவிர்த்து மற்ற இரண்டும் மரண மொக்கை. கொலை செய்யும் பட்ஜெட் டாஸ்க், வனிதாவிற்காகவே வைத்தது போல சுவராஸ்யமில்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது.
கவினும் சாண்டியும் பாடல்களைப் பாடி மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க, கவினின் 'அடியே லாஸ்லியா... என்னைப் பாத்தியா...' பாடல் செம.
மோகன், சாக்சி, ஷெரின் வரிசையில் ரேஷ்மா காபியை உடையில் சிந்திக் கொல்லப்பட்டார். முகன் காபியை ஊற்றும் போதே புரிந்திருக்க வேண்டும்... ஆனால் புரியலை. எப்பவும் போல் சாண்டி அன் கோ மேளதாளத்துடன் அவரை வழி அனுப்பியது.
இறந்தவர்களின் நினைவைப் போற்ற சுடுகாட்டில் அஞ்சலிக் கூட்டம்... சேரன் பேசும் போது எந்த நாய் பண்ணுச்சோ தெரியலைன்னு சொன்னப்பல்லாம் வனிதா முகம் போனதைப் பார்க்கணுமே... எப்படியும் சேரனுக்கு ஒரு காட்டு இருக்கு. சாண்டி ரொம்பச் ஜாலியாக் கிண்டல் செய்தார். தர்ஷனோ என் லவ்வர் ஷெரின் எனக் கலாய்த்தான். மதுமிதா... ஆமா இந்தம்மா என்ன பேசுச்சு... எதுக்குப் பேசுச்சு... சாண்டி சொன்னது மாதிரி ஜாலியான்னு சொல்லி எல்லா உண்மையையும் பத்த வச்சிட்டியேம்மா... உனக்கு ஏம்மா இந்த வேலை.
சாண்டி ஜாலியாய் பேசுவதையெல்லாம் மோகன் கோபமாய் எடுத்துக் கொள்கிறார். மீரா தேவையேயில்லாமல் நீ நேற்று வேலை பார்க்கலை என்று சொன்னதை மற்றவர்களிடம் சொல்லி அதை பிரச்சினையாக்கி நானே நல்லவள் என்பதாய் சீன் போட்டு சேரனுடன் மோதிக் கொண்டிருக்கிறது.
இந்தக் கொலைகளைத் துப்புத் துலக்க பிக்பாஸால் இன்ஸ்பெக்டராக கவினும் அவருக்கு உதவியாய் மீராவும்... விசாரணை என்ற பெயரில் உப்புச் சப்பில்லாத காட்சிகளாய் நகர்த்தினார்கள். கொலையாளி வெளியிலிருந்து வரலை... வீட்டுக்குள்தான் இருக்கிறான்... யார் என்ன செய்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்தாலே போதுமானது... முந்தைய சீசன்களில் இதே போன்ற திருடன் போலீஸ் டாஸ்க்கில் எல்லாம் அவர்கள் எப்படிச் செயல்பட்டார்கள் என்ற அறிவு சுத்தமாக இந்தக் கூட்டத்துக்கு இல்லை. தன் மேல் முகன் வேண்டுமென்றே காப்பியைக் கொட்டியது கூட தெரியவில்லையாம் ரேஷ்மாவுக்கு. ஒண்ணு தத்தின்னா பரவாயில்லை... எல்லாமே தத்தியின்னா... :(
கவினும் இதுதான் சாக்கு என சாக்சியை வெறுப்பேற்ற லாஸ்லியாவுடன் சாப்பிடுகிறான். சேரன் போட்டுக் கொடுக்க, அங்கே சக்களத்தி சண்டைக்கான அறிகுறி... கவின் பேசி சமாளித்தாலும் சாக்சி விடுவதாய் இல்லை என்பது முகத்தில் தெரிகிறது. லாஸ்வியாவுடன் விசாரணை என மொக்கை போட, கவின் மீதான காதலை மெல்ல வெளிக் கொண்டு வருகிறார் லாஸ்லியா.
வெயிலில் கிடக்கிறார்களே என சேரன் பொங்கி, எனக்கு இந்த விளையாட்டே புரியலை என சேரன் பேச, கவின் விளையாடத்தான் வேண்டுமெனச் சொல்ல, சேரன் எனக்கு எதுவும் வேண்டாமென கேமரா முன் சொல்கிறார்... மீரா பொங்கல் வைக்க, உங்கிட்ட பேசலைம்மா என அடக்கிவிடுகிறார். சரவணனுக்கு சேரன் மீது ஏதோ வாய்க்காத் தகராறு போல... மீராவுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்.
விளையாட்டு வேண்டான்னு யாரும் சொல்ல முடியாதுன்னு வனிதா பிட்டுப் போடுகிறார். கவினும் கொல்லப்பட, மீரா இன்ஸ்பெக்டர் ஆக, அதன் பின் விளையாட்டு முடிவுக்கு வருகிறது. வனிதாவுக்கு பிக்பாஸ் பாராட்டு மழையே பெய்கிறார். பெரிய நடிகை என சக பயணிகள் புகழாரம் வேறு... அதான் பார்த்தோமே சினிமாவில் நடிப்பை... நல்ல விளையாண்ட இருவர் என பிக்பாஸ் கேட்க, சாக்சி மற்றும் வனிதா சொல்லப்பட, மோகன் பொங்கிட்டார் எனவே மோகன் பெரியவர்... சாக்சி புரிஞ்சிப்பா என சேரன் நிலையை மாற்றி, மோகன் வனிதா என்றாக, மீண்டும் ஒருவருக்கு வாய்ப்பு எனும்போது சாக்சி அதில் இடம்பெற, மூவருக்கும் இந்த வார தலைவர் பதவியில் நிற்க போட்டி வைக்கப்படும் என்று சொல்லிவிடுகிறார் பிக்பாஸ்.
அப்புறம் நல்லா விளையாடாத ரெண்டு பேர் என்றதும் சேரன் நான் விளையாடலைன்னு போட்டி முடியும் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சொன்னேன் எனவே நான் என முன்னிற்க, தலைவர் அபிராமி சொல்ல வேண்டிய சூழலில் சேரன் மற்றும் சரவணன் என்று சொல்ல, சரவணன் நான் ஏன் விளையாடலைன்னு கேட்டு பிரச்சினையை ஆரம்பித்தார். விளக்கம் சொல்லியும் கேட்கவில்லை... இருவருக்கும் ஜெயில் என்னும் போது அபிராமியை அடிக்க வனிதா இதைக் கையில் எடுத்து சரவணன் விளையாண்டார்... கவின்தான் சரியா விளையாடலை என ஆரம்பித்து வைக்க, ஆளாளுக்கு நான் போறேன் என முன்னிற்க, லாஸ்லியா நான் போறேன் என்று சொன்ன போது வனிதா காளியாகிவிட்டார். உன்னைய அப்படி ஒண்ணும் நல்லவளாக நான் விடமாட்டேன்னு குதிச்சிட்டார். புள்ளைக்கு கோபம் வந்து பாத்ரூம்க்குள்ள போயிடுது... அங்கயும் மச்சான்... மச்சான்னு பொயிட்டான் மாப்பிள்ளை கவின்... எங்கிட்ட கதைக்காதே எனச் சொல்லிச் செய்யும் செய்கையில் காதல் வழிய, கவினுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அபிராமி நேரடியாகக் கேட்டும் கவின் ஒத்துக் கொள்ளவில்லை என்றதும் அழகா ஒதுங்கிடுச்சு... ஆனா சாக்சி மற்றும் லாஸ்லியா குடுமிப்பிடி சண்டை விரைவில் இருக்கும்ன்னுதான் தோணுது.
சேரனும் கவினும் ஜெயிலுக்குள்... லாஸ்லியா கவினுக்காக உருகுது... மீரா தன்னைப் பற்றிச் சொல்லச் சொல்ல... சாண்டி நீ கிழம்ன்னு பாட, தர்ஷனோ ஒரு படி மேலே போய் அழகான பச்சோந்தி என்கிறான்... விடுவாளா... வாயால் வடை சுடும் மீரா... தனியே பிடித்து எப்படிச் சொன்னேன்னு கேள்வி கேட்க, தர்ஷன் சூப்பராய் விளக்கம் தர்றான்... ரொம்பப் பேச செருப்பால அடிப்பேன்னு வேற சொல்லிட்டு சாரின்னு சொல்லிடுறான்.
சரவணன் சேரன் சொன்னதை யாருமே சொல்லலை என்னைச் சொன்னபோது எல்லாரும் பேசாம நின்னீங்க... அவங்க அவங்க பாதுகாப்பா விளையாடுறீங்க இனி எவனும் எங்கிட்ட வராதே... அவனவன் அவனவன் விளையாட்டைச் சரியா விளையாடு... நான் இந்த டாஸ்கில் விளையாடிக்கிட்டுத்தான் இருந்தேன் எனப் புலம்பினார். இது ஒரு கேம் ஷோதானே... இதில் விளையாடுவதுதான் வேலை என்பது தெரியாதா செவ்வாழை... இதுல சேரனைச் சொல்லலைன்னு வேற கடுப்பு... அந்தாளுதான் கேமரா முன்னாடி சொல்லிட்டாரு... அப்புறம் நாந்தான் சொன்னேன் என ஜெயிலுக்குப் போகவும் முதல் ஆளாக் கை தூக்கிட்டாரு... இதுக்கு மேல உங்களுக்கு என்ன வேணும் சித்தப்பு... வாய்க்காத் தகராறுன்னாலும் இப்படி வாய்க்கு வந்ததைப் பேசுறதா... யோசி சித்தப்பு... உனக்குத் தூபம் போடுற மீராக்கிட்ட ஜாக்கிரதையா இரு சித்தப்பு... சூதனமாப் பொழச்சிக்க... அடுத்த வாரமே மீரா உனக்கு எதிரா நிக்கும்.
மறுநாள் ஆட்டத்துடன் விடிய, லாஸ்லியா பாப்பாத்தி (வண்ணத்துப்பூச்சி) பிடிக்கச் சொல்லிக் கொடுக்கிறேன் என என்னமோ செய்தார். சேரன், கவினுக்கு விடுதலை... அதென்ன இந்த வாரத் தலைவரை இப்பவே தேர்ந்தெடுக்கிறாங்க... எப்படியிருந்தாலும் வனிதா காப்பாற்றப்படுவார்... அவர் இல்லைன்னா விஜய் டிவிக்கு டிஆர்பி இல்லை... ஒருவேளை தலைவரானால் தலைவர் என்ற முறையில் நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் போட்டியில் மோகன் ஓடிப் பார்த்து ஊக்கப்படுத்தலை... கேலி பண்ணுறீங்க என ஜகா வாங்க, ஓடிப் பார்த்த வனிதா முடியாத கட்டத்தில் இது சரியில்லை... கேமை மாத்து... பிக்பாஸ் என நேரடியாக பிக்பாஸூடன் மோத, பிரச்சினையின் பின்னணியில் தர்ஷன் உங்களுக்காக எப்படி மாத்த முடியும்... அப்பா விளையாண்டு முடியாதுன்ன பின்ன எப்படி மாத்தச் சொல்லுவீங்க என வர, நீ போடா நான் நாட்டாமை மகள் எனப் பேச, பய விட்டு விளாசிட்டான்.... வனிதாவுக்கு செம அடி... மைக்கைக் கழட்டி பிக்பாஸ் கூப்பிடட்டும் என ஆட்டம் போட, வனிதாவின் கட்டுப்பாட்டில் இருந்த ஷெரின் எல்லாம் தர்ஷன் பக்கம். மோத முடியாத சூழலில் என் காண்ட்ராக்ட் வேற உன்னோட காண்ட்ராக்ட் வேற, தமிழ்நாட்டுக்குள்ள இருந்த என்ன வேணுமின்னாலும் பேசாதேன்னு ஏதேதோ உளறுச்சு வனிதாம்மா... பாவம். தர்ஷன் அடிச்ச அடியெல்லாம் எல்லைக் கோட்டுக்கு வெளியே போன சிக்ஸர்தான். செம அடி.
பிக்பாஸும் கூப்பிடலை... எவனும் நமக்குச் சப்போர்ட் பண்ணலைன்னு அபியோட நீதானே தலைவர்ன்னு அம்மணி மோத ஆரம்பிச்சிருச்சு... பாவம் இந்த மூணு வாரமா யாரு தலைவருன்னாலும் அம்மணிதான் எல்லாம் பேசுது... செய்யுது... அப்புறம் நீதானே தலைவருன்னு மல்லுக்கு நிக்கிது. சேரன் அபிராமியைக் காப்பாற்றி, தர்ஷனிடம் நீ கேட்டது சரிதான்... பட் அதை எப்பக் கேட்டிருக்கணும் என்றால் என விளக்கம் கொடுத்து உன்னோட குரல் உயரும் போது ரொம்பச் சப்தமா இருக்குன்னு சொல்லி, சமாதானம் பண்ணினார். இந்த விஷயத்தில் சேரன் சமாதானத்துக்கு இறங்கினாலும் சொன்ன விளக்கம் தேவையற்றது. சரவணன் ஒதுங்கியே இருந்தார். வனிதாவிடம் பேசப்பயம் போல... மோகன் கூட மற்றவர்களிடமே புலம்பினார் வனிதாவிடம் கப்சிப்.
சாக்சி தலைவராக்கப்பட்டார்... வேலைக்கான ஆட்கள் பிரிப்பதில் புதிய குழுத் தலைவர்களைச் சொன்ன போது மீராவின் கீழே வனிதா, அப்பவே வனிதாவின் முகம் சுருங்கியது. சாப்பாடுத் தலைவர் சரவணன் தலைமையில் கவின், மது என ஆனபோது அந்தக் குழுவுக்குள் தான் வந்து கிச்சனில் நின்று அதிகாரம் செய்யலாமென சாக்சியிடம் கேட்க, அவரும் நீங்க நல்லா சமைச்சிருவீங்களான்னு சரவணனிடம் கேட்டு ஒருத்தரை இங்க மாத்தி விடுறேன் என்றதும் நாங்களே பாத்துப்போம் எனச் சரவணன் அழகாக கட்டையைப் போடுகிறார். அவருக்குத் தெரியும் யார் வருவார்கள் என.
மது சாமி கும்பிட நேரம் வேண்டும் என்றதும் மூனறைக்கு எந்திரி, குளி, சாமி கும்பிடு, ஆறே முக்காலுக்கு கிச்சனுக்கு வா என்று சரவணன் சிரிக்காமல் சொல்லி, நான் சமைச்சிருவேன்... நீ பழகிக்கிட்டு வீட்டுல போயி புருஷனுக்குச் சமைச்சிப் போடு என்றும் குத்தலாய்ச் சொல்ல, நான் சமைப்பேன் என மது கத்திக் கொண்டிருந்தார்.
லாஸ்லியா - கவின் - சாக்சி : மச்சான் சும்மா ஜாலியாத்தான் பழகினேன்னு அவன் சொன்னாலும் வரும் வாரங்களில் குழாயடிச் சண்டை களை கட்டும்.
வனிதாவுக்கு தர்ஷன் வைத்த ஆப்பில் பிக்பாஸ் கூட வனிதாவை வைத்துக் கல்லாக் கட்டலாம் என்ற கனவை உடைத்து வீசியிருப்பார்... பயபுள்ள சிங்கத்தை அப்படியே சாச்சுப்புட்டான்.
ஷெரின் - தர்ஷனுடன் ரொமான்ஸ் பண்ணுது... இது ஜாலிக்கா... இல்லை இருவருக்குள்ளும் கெமிஸ்ட்ரி, கணிதம், உயிரியல்ன்னு எல்லாம் இருக்கான்னு போகப்போகத் தெரியும்.
முகன் - அபிராமி காதல் ஒரு பக்கம் சத்தமில்லாமல் நகருது.
மீரா ஆபத்தானவர் என்பதை எல்லாரும் உணர்ந்தே வைத்திருக்கிறார்கள்.
மது மிகமிக ஆபத்தானவர் என்றாலும் தமிழ் என்ற மூன்றெழுத்து முட்டாள்தனமே அவரை இறுதிவரை வாக்களித்துக் காப்பாற்றும். பிரச்சினைகளில் 'ஃ' க்கில் மீரா, வனிதாவுடன் இவரும் உண்டு.
சேரனும் சரவணனும் கண்டிப்பாக மோதும் நாள் வரும்.
இந்த வாரம் மோகனே அனுப்பப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
சாண்டி - வைகைப்புயல்தான்... சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார்.
ரேஷ்மா எப்போது வனிதாவை விட்டு விலகுவார் என்பது புதிரே...
இன்று கமல் வருவார்... 'ஃ'- நாயகிகளான வனிதா, மீரா, மது வீட்டுக்குள் வேண்டும் என்பதாலும் சரவணன் தேவை என்பதாலும் மோகனே போகக் கூடும்.
வரும் வாரங்கள் சுவராஸ்யமாக இருக்கும் என்று நம்புவோம்.
பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.
// கெமிஸ்ட்ரி, கணிதம், உயிரியல்-ன்னு எல்லாம் இருக்கான்-னு போகப்போகத் தெரியும்...//
பதிலளிநீக்குஹா... ஹா...
பிக்பாக்ஸ் பார்ப்பதில்லை. இருந்தாலும, நீங்கள் பகிரும்விதத்தை ரசிப்பதுண்டு.
பதிலளிநீக்குகுமார் பிக்பாஸ் எல்லாம் பார்க்கும் வாய்ப்பும் இல்லை.
பதிலளிநீக்குஉங்க தொகுப்பு எல்லாம் சொல்லிடுது அங்கு என்ன நடக்கிறது என்று!!!
கீதா