பிரபல வலைப்பதிவரும் மிகச் சிறந்த பதிவுகளைப் பகிர்ந்து கொண்டவருமான திரு. தி.தமிழ் இளங்கோ அய்யா அவர்கள் நேற்று காலை இயற்கை எய்தினார் என்ற செய்தியை 'தமிழ் வலைப்பதிவகம்' வாட்ஸப் குழுமம் மூலமாக அறிய நேர்ந்தது... முகம் பார்க்காவிட்டாலும் கருத்துக்கள் வழி நேசம் கொண்டிருந்த ஒருவரின் இழப்பு ஏற்க்க முடியாததாகி விடுகிறது... மனம் வலிக்கிறது... இது மிகப்பெரிய இழப்பு... ஈடு செய்ய முடியாதது.
அவரின் ஆன்மா சாந்தியடையவும் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் அதிலிருந்து மீண்டு வரவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
**************
தமிழ் நெஞ்சம் பிப்ரவரி மாத இதழில் எனது 'மனிதர்கள் பலவிதம்' என்ற சிறுகதை வெளியாகியிருக்கிறது. தமிழ் நெஞ்சத்தில் எனது முதல் சிறுகதை. வெளியிட்ட ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றி.
நண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் தேன்சிட்டு பிப்ரவரி (காதலர் தின சிறப்பிதழ்) மின்னிதழில் எனது 'ஆராதனா' என்னும் சிறுகதை வெளியாகியிருக்கிறது. வெளியிட்ட ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றி. இது மனசு வலைப்பூவில் பகிர்ந்த கதைதான்.
-'பரிவை' சே.குமார்.
என்ன ஒரு அனுபவம்... அனுபவங்களே கதையாய்...
பதிலளிநீக்குபூங்காவில் சந்தித்த பெண் சொன்னது மனதை கனக்க வைத்து விட்டது.
பதிலளிநீக்குவேறு வேலை தேடி கொள்ள மனம் இல்லை, குழந்தையை விட்டு செல்ல மனம் இல்லை என்று அவர் சொன்ன காரணம் அவரை உயர்ந்த மனிஷியாக நினைத்து வணங்க சொல்லுது.
சிறுகதை மனதை நெகிழ வைத்து விட்டது.
நான் முகநூலில் ரமணி ஐயாவின் பதிவைக் கண்டு அறிந்தேன். என்னாலும் அவரது இழப்பைத் தாங்கிகொள்ள முடியவில்லை. முகநூலில் பதிந்த பதிவின் இணைப்பைப் பகிருகிறேன்.
பதிலளிநீக்குhttps://www.facebook.com/yarlpavanan/posts/2503621176346823
தமிழ் இளங்கோ மறைந்தது அதிர்ச்சி. எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகள்.
பதிலளிநீக்குகடுமையான அனுபவங்கள்....மனம் கனக்கச் செய்யும் அனுபவங்கள் கதைகள் விரியக் காரணமாகின்றன...மனதை நெகிழ வைத்தது.
துளசிதரன், கீதா
திரு தமிழ் இளங்கோ தன் எழுத்தின் மூலம் என்றும் நம்முடன் இருப்பார்.
பதிலளிநீக்குஅருமையான கதை...
பதிலளிநீக்குதமிழ் இளங்கோ ஐயாவின் இழப்பை தாங்க முடியவில்லை...