வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

மனசின் பக்கம் : உறவுகள் முதல் உறைவிடம் வரை

'தேவியர் இல்லம்' ஜோதிஜி அண்ணாவின் விருப்பத்துக்கு இணங்க அவரின் பழைய குப்பைகள் குறித்தான எனது பார்வையை, அதை மின்னூலாக்கும் முன்னர் அணிந்துரை என்ற பெயரில் எழுதச் சொன்னார். அதெல்லாம் நமக்கு சரிவராது  என்பதுடன் அவரது படைப்புக் குறித்து விரிவாய், விளக்கமாய் எழுத தமிழ் இளங்கோ ஐயா போன்றோர் இருக்க நானெல்லாம் எழுதுவதா என்ற யோசனையும் இருந்தது என்றாலும் மிகச் சிறந்த படைப்பாளியின் விருப்பம், திடீரெனக் கேட்கிறார் அண்ணன் என்பதால் பழைய குப்பைகளை ஒரு முறைக்கு இருமுறை வாசித்து என் மனக்குப்பைகளைக் கிளறி ஏதோ எழுதி அனுப்பினேன். அண்ணனிடம் இருந்து வந்த பதில் 'நல்லா வந்திருக்கு... பயன்படுத்திக் கொள்கிறேன்' என்பது மட்டுமே. பழைய குப்பைகள் மின்னூலாகியதும் அது குறித்து என் தளத்திலும் ஒரு பதிவு போட்டேன். (அந்தப் பதிவை வாசிக்க நினைத்தால்.. வசீகரிக்கும் பழைய குப்பைகள்) தற்போது அண்ணன் அவர்கள் ஒவ்வொருவரின் அணிந்துரையாக தளத்தில் பதிய ஆரம்பித்திருக்கிறார்கள். என் அணிந்துரை ஜனவரி-17-ல் பதியப்பட, நானோ சல்லிக்கட்டுக் காளையாய் முகநூல், வாட்ஸ்-அப் என துள்ளிக்கிட்டு திரிந்ததால் கவனிக்கலை... மூன்று நாட்களுக்குப் பிறகே பார்த்தேன். ஒவ்வொரு அணிந்துரையும் ஜோதி அண்ணாவின் மிகச் சிறந்த தலைப்பும் அதற்கேற்ற படமுமாம் மிக அழகாக பதியப்பட்டது. பெரும்பாலான நட்புக்கள் அங்கு வாசித்திருப்பீர்கள். வாசிக்காத நட்புக்களுக்காக இணைப்பு கீழே...


'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் அண்ணா மற்ற பதிவர்களின் பதிவை தங்கள் தளத்தில் பதிந்து வருவதில் வலையுலகின் முன்னோடி என்பதை நாம் அறிவோம். கேட்டு வாங்கிப் போடும் கதை, சமையல் குறிப்புக்கள் என கலக்குபவர் 2017-ல் சக பதிவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்ற சின்னச் சின்ன ஆசைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என பலருக்கு அனுப்பி பதில் வாங்கிப் பதிந்து வருகிறார். அதில் அடியேனும் ஒருவன். எனது கருத்துக்கள் நான் விரும்பி வாசிக்கும் வெங்கட் அண்ணா மற்றும் ரஞ்சனி நாராயணன் அம்மாவின் பதில்களோடு என் பதிலும் சென்ற வாரத்தில் வெளியாகி இருந்தது. அந்த சின்னச் சின்ன ஆசைகளை கிட்டத்தட்ட எல்லாரும் எங்கள் பிளாக்கில் வாசித்திருப்பீர்கள்... அப்படி வாசிக்காதவங்க வாசிக்க இணைப்பு கீழே...

சின்னச்சின்ன ஆசைகள் - ஜனவரி எதிர்பார்ப்புகள் 4 

- பதிவுலக நண்பர்களின் கருத்துகள்


'சும்மா' தேனம்மை அக்காவுக்கு கல்யாண் நினைவு உலகளாவிய கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு கிடைத்திருக்கிறது என்பதை தனது பதிவின் மூலம் தெரிவித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். போட்டி முடிவுகள் குறித்த விவரம் அறிய இணைப்பு கீழே...

கல்யாண் நினைவு உலகளாவிய கவிதைப்போட்டி - 2016 முடிவுகள்



'சந்தித்ததும் சிந்தித்ததும்' வெங்கட் நாகராஜ் அண்ணா பயணங்கள் குறித்தான பகிர்வின் மூலமாக நம்மையும் அந்த இடத்துக்கே அழைத்துச் செல்லும் எழுத்துக்கு சொந்தக்காரர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதில் அவர் பகிர்ந்து கொள்ளும் போட்டோக்கள் அழகு என்றால் அப்படி ஒரு அழகாக இருக்கும். அப்படிப்பட்ட போட்டோக்கள் சிலவற்றைக் கொடுத்து இதற்கு உங்களால் கவிதை எழுத முடியுமா என அழைப்பு விடுத்திருக்கிறார். உங்கள் கவிதைகள் வெற்றி பெறும் பட்சத்தில் அவற்றை எல்லாம் தொகுத்து மின்னூலாக்க இருக்கிறாராம். இதற்கான அறிவிப்பை ஒரு பதிவாக தந்திருக்கிறார்... எடுங்கள் பேனாவை... பேனா எடுத்து கவிதை எழுதிய காலமெல்லாம் மலையேறிப் போச்சுல்ல... தட்டுங்கள் கணிப்பொறியில்... அனுப்புங்கள் அண்ணனுக்கு... தேர்வு பெறும் கவிதைகளில் ஒன்றாய் உங்கள் கவிதையும் இருக்கட்டும். அந்தப் பதிவை வாசித்து விவரம் அறிய இணைப்பு கீழே...


'திண்டுக்கல் தனபாலன்' தளத்தின் அண்ணன் தனபாலன் அவர்களிடம் புதுகைக் கவிஞரும் 'நான் ஒன்று சொல்வேன்' என கவிதை, கட்டுரை என களமிறங்கி அடித்து ஆடுபவருமான மீரா செல்வக்குமார் அண்ணன் பிடிஎப் கோப்பை எப்படி இணைப்பது எனக் கேட்க, அதற்கென வலைச்சித்தரின் பாணியில் மிகச் சிறப்பான பகிர்வு, அதில் நம்ம வெங்கட் அண்ணாவின் 'ஏரிகள் நகரம் நைனிதால்' என்னும் மின்னூலையும் இணைத்துக் காட்டியிருக்கிறார். எல்லாரும் அறிய வேண்டிய மிகச் சிறப்பான பகிர்வு. வலையுலகில் தனபாலன் அண்ணா வாசிக்காத பதிவுகளும் அவரின் பதிவை வாசிக்காத பதிவர்களும் இருப்பதற்கு வாய்ப்பு கம்மிதான் என்றாலும் இங்கும் பகிர்கிறேன் விட்டுப் போனவர்களுக்காக... அந்த பகிர்வுக்கான இணைப்பு கீழே....


'மனசு' குமார்... அட நாந்தாங்க.. 'பரிவை' சே.குமார்ன்னு எழுத ஆரம்பிச்சி, இப்ப நண்பர்கள் மத்தியில் 'பரிவை' போயி 'மனசு' குமார் ஆயாச்சு. இப்ப எதுக்கு 'மனசு' குமார்ன்னு ஆரம்பிச்சிருக்கேன்னு யோசிக்காதீங்க... வரிசையா வலைப்பதிவு பெயர்களை வைத்து எழுதியாச்சு... அப்ப நம்ம கதையைச் சொல்லும் போதும் வலைப்பூ பேரோட சொல்வோமே... சரி விஷயத்துக்கு வருவோம்.... சில காரணங்களால் எட்டு வருடங்கள் உறவுகளுடன் இருந்த அறையை விடுத்து அதன் அருகில் அபுதாபி வந்த ஆரம்பகாலத்தில் என்னுடன் இருந்த நண்பர் தங்கியிருக்கும் அறைக்கு மாறிவிட்டேன். முன்பு இருந்தது போல் மிகப்பெரிய அறையில்லை... சிறிய அறைதான்.... இருப்பினும் மனநிறைவையும் நிம்மதியையும் தருகிறது. இங்கு நாம் எப்படியிருந்தாலும் ஊரில் இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்... அதையும் கெடுப்பது போல் சில விஷயங்கள் இன்றல்ல நேற்றல்ல இங்கு வந்தது முதலே நடந்து கொண்டுதான் இருந்தது எல்லாவற்றையும் உறவின் மீது வைத்த உன்னதமான அன்பினால்  கடந்து வந்தேன்... பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதால் தனித்திரு என்ற முடிவெடுக்க வைத்து விட்டது. அறை மாறியாச்சு... வாழ்க்கைப் பாதையும் மாறட்டும்.
-'பரிவை' சே.குமார்.

9 கருத்துகள்:

  1. இம்புட்டு நடக்குதா?! இனி நானும் பிளாக்குல முழுநேரமும் இருக்கனும்.. இருப்பேன் சகோ

    பதிலளிநீக்கு
  2. வலையுலகில் நட்பை மேலும் விரிவாக்கும் இந்த உன்னத நட்பை என்னவென்று சொல்ல...? இதற்கு ஒரு உதாரணம் நீங்கள் தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை... நன்றி ஆயிரம் சொன்னாலும் ஈடாகாது...

    பதிலளிநீக்கு
  3. அட! நம்ம பதிவுலக நட்புகள் அனைத்தும் இங்கே!!! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்தையும் உங்கள் பதிவுகள் உட்பட எல்லாமே வாசித்து கருத்தும் போட்டாச்!! சேமிப்பு அவசியம் ஆம் நட்பூ சேமிப்பு மிக மிக அவசியம்!!! மிக்க மகிழ்ச்சியாக உள்ளது இங்கு நட்பூக்களின் படைப்புகளையும் பார்க்க!! தங்கள் வாழ்க்கைப் பாதையும் மாறி வெற்றிப்பாதையை வழிவகுக்கும் குமார்!!! வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  4. வாழ்க்கைப் பாதை மாறட்டும்
    வசந்தம் மலரட்டும் நண்பரே
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. வலைத்தளங்கள் எல்லாம் பேஸ்புக்கால் அழிந்து வருகின்றது என்று மிகப் பெரிய பழைய பதிவர்கள் லைக்ஸ்களுக்காக விட்டு சென்றாலும் இங்கும் பல புதிவர்கள் தங்களின் தனிதிறமையால் நின்று நிலைத்து வருகிறார்கள் அவர்களின் பல தளங்களை மீண்டும் இங்கே அறிமுகம் செய்து வைத்தது பாராட்டுகுரியது பேஸ்புக்கில் பதிவதை யாரும் தேடி தேடிபடிப்பதில்லை ஆனால் வலைத்தளங்களை தேடி தேடி இன்றும் பலர் படித்து கொண்டிருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  6. அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள். எங்கள் தளத்தையும், என்னையும் குறிப்பிட்டுள்ளமைக்கு மிகவும் நன்றி குமார். நான் ஏற்கெனவே உங்களை 'மனசு' குமார் என்றே அழைத்து வருகிறேன். தளிர் சுரேஷையும் அப்படியே! உங்கள் அறைமாற்றம் குறித்த மன வருத்தங்கள் மறைந்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  7. சற்றுச் சிந்திக்க வைக்கிறியள்
    தங்கள் பதிவினை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. நண்பர்களையும் அவர்களுடைய எழுத்துக்களையும் பகிர்ந்து பாராட்டிய விதம் அருமை. நல்ல அலசல்.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி