சகோதரி. கிரேஸ் அவர்களை வலைத்தளம் மூலமாகவே அறிவேன். இவர் எழுதிய 'துளிர் விடும் விதைகள்' மதுரை வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்பட்டது. அது குறித்தான நூல் விமர்சனப் பார்வையை என் தளத்தில் எழுதினேன். அதற்கான இணைப்பு 'துளிர் விடும் விதைகள்'
அதன் பின் ஒருவருக்கு ஒருவர் பதிவுகளில் கருத்துப் பரிமாறிக் கொள்வோம். ஆங்கில வழிக் கல்வி பயின்றிருந்தாலும் தமிழ் மீதான காதலால் மிகச் சிறப்பாக கவிதைகள் எழுதுவார். சங்கத் தமிழை எளிய தமிழில் புதுக்கவிதையாகவும் எளிய ஆங்கிலக் கவிதையாகவும் எழுதும் முயற்சியில் இருப்பதாக இவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான 'பாட்டன் காட்டைத் தேடி'க்கான முன்னுரையில் திரு. முத்து நிலவன் ஐயா அவர்கள் எழுதியிருக்கிறார். அந்த முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி.
'என்னைப் பற்றி நான்' பகுதிக்கு தங்களின் கட்டுரை வேண்டும் என்று கேட்டவுடன் அடுத்த நாளே அனுப்பிக் கொடுத்தார். அவரைப் பற்றி அவர் என்ன சொல்கிறார் என்பதை அவரின் எழுத்தில் வாசியுங்கள்...
நன்றி.
வணக்கம் வலைத்தள நண்பர்களே!
‘மனசு' தளத்தில் வலைத்தள நட்புகளின் மனங்களையும் திறக்க ஒரு வழி செய்துள்ள குமார் சகோவிற்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்களில் சிலருக்கு என்னைத் தெரிந்திருக்கலாம், பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். தெரியாதவர்களுடன் அறிமுகப்படுத்திக்கொள்ள சகோ கொடுத்துள்ள இந்த வாய்ப்பிற்கு மகிழ்கிறேன், நன்றி.
தேன் மதுரத் தமிழ் எனும் வலைத்தளத்தில் எழுதிவருகிறேன். அதனால் தேன்மதுரத்தமிழ் கிரேஸ் ஆகிப்போனேன். என் முழுப்பெயர் கிரேஸ் பிரதிபா. கணவர் மற்றும் இருமகன்களுடன் தற்போது வசிப்பது அட்லாண்டாவில். இராமநாதபுரத்தைப் பூர்விகமாகக் கொண்ட நான் வளர்ந்தது படித்தது எல்லாம் கொடைக்கானலிலும் மதுரையிலும்.
பெங்களூருவில் மென்பொருள் பணியாளராகப் பணியாற்றிய நான் குழந்தைகளுக்காகப் பணி துறந்து வீட்டில் இருக்கத் துவங்கியதும் 2008இல் இருந்து வலைத்தளத்தில் எழுதத்துவங்கினேன். ஆங்கிலவழிக் கல்வி கற்றிருந்தாலும் தமிழ் மேல் எப்பொழுதும் தீராக்காதல் உண்டு. டைரியிலும் கிடைக்கும் காகிதத்திலும் எழுதிப் பறக்கவிட்டுக் கொண்டிருந்த என்னை வலைத்தளத்தில் எழுதத் தூண்டியது என் கணவர்தான். முதலில் ஆங்கிலத்தளத்தில் இருமொழிகளிலும் எழுதிக் கொண்டிருந்தேன். பின்னர் 2012இல் தமிழில் தனியாக வலைத்தளம் திறந்து எழுதத்துவங்கினேன், தமிழ் இலக்கியத்தை அதிகமாகப் பகிரவேண்டும் என்பதே அதன் நோக்கம். தமிழ் தளத்தின் மூலம் பல நண்பர்களையும் பெற்றேன். குறிப்பிட்டுச் சொல்ல ஆசைப்பட்டாலும் பலர் இருக்கின்றார்கள், ஒருவரையும் விட்டுவிடக்கூடாது என்று அதைச் செய்யவில்லை.
என் முதல் கவிதைத் தொகுப்பான ’துளிர் விடும் விதைகள்' 2014இல் மதுரையில் நடந்த வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்பட்டது. அதற்கு வளரி இதழ் வழங்கும் 'கவிப்பேராசான் மீரா' விருது 2015இல், என் அன்புத்தோழி மு.கீதா அவர்களின் ‘விழி தூவிய விதைகள்' தொகுப்புடன் சேர்ந்து கிடைத்தது பேருவகையும் பெருமையும்..!
கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், அறிவியல் மற்றும் வரலாற்றுப் பதிவுகள் என்று என்னால் இயன்ற அளவிற்குத் தமிழில் பல விசயங்களைத் தருவது எனக்கு மகிழ்ச்சி. கவிதைகள், இலக்கியம் என்று துவங்கிப் பல விதமாக விசாலமடைந்துவிட்டது என் தளம். நண்பர்களின் அன்பும் ஊக்கமுமே அதற்குக் காரணம்.
சங்க இலக்கியப் பாடல்களை எளிய தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து உலகெல்லாம் அறியத்தருவது என் ஆசை. இங்கு நான் பழகும் மற்ற நாட்டு நட்புகளிடம் தமிழ் பற்றிப் பெருமை பேசாமலிருக்க என்னால் முடியாது.
என்னுடைய இரண்டாவது கவிதைத்தொகுப்பு ‘பாட்டன் காட்டைத் தேடி' ஜனவரி 2017இல் வந்திருக்கிறது என்பதையும் மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.
அன்பின் வாழ்த்துகளுடன்,
வி.கிரேஸ் பிரதிபா
http://thaenmaduratamil.blogspot.com
http://sangamliteratureinenglish.blogspot.com
குறிப்பு : எனக்குத் தெரிந்த எல்லாரிடமும் வாங்க எண்ணம், முதல் கட்டமாக சிலரிடம் கேட்டிருக்கிறேன். அந்தச் சிலரில் வெகு சிலரே அனுப்பியிருக்கிறார்கள். மற்றவர்கள் முடிந்தவரை விரைவில் அனுப்புங்கள் உறவுகளே. மின்னஞ்சலிலும் முகநூலிலும் பிடிக்க முடிந்தவர்களை விட இவற்றில் பிடிக்க முடியாமல் பலர் இருக்கலாம்... தங்களைப் பற்றி பலரும் அறியத் தரலாம் என்று விரும்பினால் என் மின்னஞ்சல் முகவரியான 'kumar006@gmail.com' என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.
நன்றி.
-'பரிவை' சே.குமார்.
முகவுரை அருமை சகோவுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குபாட்டன் காட்டைத் தேடி அலைகிறேன் படித்து மகிழ...
த.ம.2
நன்றி சகோ.
நீக்குவிரைவில் எங்கெங்கு கிடைக்கும் என்ற தகவல் பதிவிடுவேன் சகோ. நன்றி.
வணக்கம் அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கவிதை போல மிக சுருக்கமாக எழுதி முடித்துவிட்டார்
பதிலளிநீக்கு:)
நீக்குவணக்கம் மதுரைத் தமிழன் சார்......
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மிக சுருக்கம்...
பதிலளிநீக்குவாழ்த்துகள் சகோதரி..
நன்றி குமார்
ஹ்ம்ம் உங்கள் கட்டுரை படித்த பின்னர், சுருக்கமாக எழுதிவிட்டோமோ என்று எனக்கும் தோன்றியது. உங்கள் கட்டுரை அருமை.
நீக்குநன்றி சகோ
நீக்குநான் வள வள என்று ஒன்று எழுதி அனுப்பி இருக்கிறேன்
வணக்கம் அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மதுரைத் தமிழன் சார்... அது வளவளவா சூப்பரான்னு நாங்க சொல்லணும்
சகோதரிக்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்குவணக்கம் அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//சங்கத்தமிழ் இலக்கிய பாடல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து உலகெல்லாம் அறியத்தருவது என் ஆசை//
பதிலளிநீக்குஉயர்ந்த எண்ணம், லட்சியம். அந்த ஆசை நிறைவேற எங்கள் வாழ்த்துகள்.
உங்கள் அடுத்த கவிதை நூல் வெளியீடுக்கும் வாழ்த்துகள்.
அறியத்தந்தமைக்கு நன்றி குமார்.
மிக்க நன்றி ஸ்ரீராம். உங்களைப் போன்ற நண்பர்களின் வாழ்த்துகள் தடைகளைத் தாண்டி ஆசையை நிறைவேற்ற உதவும்.
நீக்குநூல் வாழ்த்திற்கும் நன்றி.
வணக்கம் அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அட..கிரேஸ் சகோ/தோழி....நாங்கள் வியக்கும் பலருள் ஒருவர்...சங்க இலக்கியத்தை எளிய தமிழில் தருவதோடு அங்கிலத்திதிலும் தருவது சிறப்பு...மேலும் பல வெற்றிகள் பெற்றிட வாழ்த்துகள் சகோ/கிரேஸ்...குமார் உங்களுக்கும் நன்றி, வாழ்த்துகள்
பதிலளிநீக்கு:) நெகிழ்ச்சியுடன் நன்றி அண்ணா/கீதா. உங்கள் அன்பு பெரிது.
நீக்குவணக்கம் துளசி சார்...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாவ் !!இன்னிக்கு கிரேஸ் ..வாழ்த்துக்கள்ப்பா ..தமிழை குறித்த உங்களுடைய எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேறட்டும்
பதிலளிநீக்குநன்றி ஏஞ்சல்: :-)
நீக்குவணக்கம் சகோதரி...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மிக்க நன்றி சகோ. 'துளிர் விடும் விதைகள்' விமர்சன இணைப்பையும் கொடுத்தது நன்று. நீண்ட கால வலைத்தள நட்பு அறியலாகிறது அல்லவா? மகிழ்ச்சி சகோ. 'பாட்டன் காட்டைத் தேடி' முன்னேறி இருக்கிறது என்று நம்புகிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி...
நீக்குதங்கள் அன்புக்கு நன்றி
சகோதரிக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குவணக்கம் நண்பா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நண்பா...
எளிமை.. இனிமை.. அருமை..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
என்னைப் பற்றி நான்...கேட்கப்பட்டவர் அருமையாகத் தந்துள்ளார். அதனை நீங்கள் பகிர்ந்த விதம் அருமை. இருவருக்கும் பாராட்டுகள்.
பதிலளிநீக்குசுருக்கமாய் ஒரு அறிமுகம்.... வாழ்த்துகள் கிரேஸ்.
பதிலளிநீக்குதொடர வாழ்த்துகள் குமார்.
vaalthukal arumai.
பதிலளிநீக்குசகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்கள் தனது கவிதைகளைப் பற்றி சொன்னார். அவருக்கு இருக்கும் அனுபவங்களின் அடிப்படையில் வலையுலகில் தொடர்ந்து நிறைய கட்டுரைகள் எழுத வேண்டும். அவைகளும் நூல்களாய் வெளிவர வேண்டும்.
பதிலளிநீக்குசுருக்கமான அறிமுகம். இவரையும் மற்றப் பதிவுகளின் மூலமே தெரியும்.
பதிலளிநீக்கு