திங்கள், 2 நவம்பர், 2015

சந்தோஷமாய் இரு



நீ
நான்
கல்லூரி...

மறக்க இயலாத
இளமையான
இனிமையான
நாட்கள் அவை...

சரளை ரோடு
ஒற்றை வேம்பு...
மைதானத்து
மரங்கள்...

இன்னும்
கண்ணுக்குள்
நாம் அமர்ந்து
பேசிய
சிமெண்ட் பெஞ்சு...

என் வகுப்பறை
நீ கடந்தாலோ
உன் வகுப்பறை
நான் கடந்தாலோ
நம் பெயரை
உச்சரிக்கும்
நட்புக்குள்...

அதற்காகவே
காத்திருந்தது போல
மெல்லத் திரும்பி
நீ வைக்கும்
புன்னகை
தினமும்
பூப்பதுண்டு...

நாம் கொடுத்துக்
கொண்ட
நம் பிறந்தநாள்
பரிசுகள்
எல்லாம்
இன்னும்
பத்திரமாய்
என்னிடம்...

உன்னிடமும்
இருக்குமென
நினைக்கிறேன்...

நீ அழைக்கும்
அந்த செல்லப் பெயர்
இன்னும் ஒட்டிக்
கொண்டிருக்கிறது
உள்ளத்தில்...

உன் வீட்டில்
அழைக்கும் பெயரை
யார் அழைத்தாலும்
எதிர்க்காத நீ
ஏனோ என்னை
மட்டும் அதை
அழைக்க
விடுவதில்லை...

உன்னைச் சுருக்கி
அழைத்தால்
மிகவும் சந்தோஷிப்பாய்...

என்னுள்
தென்றலாய்...
சாரலாய்...
இயக்கமாய்
இருந்தவளே...

இன்றும்
எனக்குள்ளே
இருப்பவளே...
உன் புன்னகை
இன்னும் பூத்துக்
கொண்டிருக்குமென
நினைக்கிறேன்...

எங்கிருந்தாலும்
சந்தோஷமாய் இரு...
வாழ்க்கை உனக்கு
வானவில்லாய் இருக்கட்டும்...
-'பரிவை' சே.குமார்.

21 கருத்துகள்:

  1. தென்றலாய்...
    சாரலாய்...

    ரசித்தேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தமிழ் மண இணைப்பிற்கு நன்றி அண்ணா...

      நீக்கு
  3. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      நீக்கு
  4. அருமை நண்பரே என்றுமே தோற்ற காதலே வாழ்ந்து கொண்டு இருக்கும் என்பார்கள் அது உண்மைதான்....

    எதற்க்கும் வீட்டில் படித்து விடாமல் இருக்க, துண்டைப் போட்டு மூடி வையுங்கள்
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      கருத்துக்கு நன்றி...
      ஆமா... ஆமா... அது கடைசி வரைக்கும் இருக்குமாமே... சொல்லக் கேள்வி அண்ணா...

      எங்க வீட்டு எஜமானிக்கு எல்லாம் தெரியும்... சோ மறைத்து வைக்க வேண்டியதில்லை...

      நீக்கு
  5. எங்கிருந்தாலும்
    சந்தோஷமாய் இரு...
    >>> வாழ்க்கை உனக்கு
    வானவில்லாய் இருக்கட்டும்..<<<

    க்விதை - அருமையாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
      ஊருக்குப் போய் பதிவிற்கும் வந்தாச்சா...

      நீக்கு
  6. கவிதையும் படமும் அழகு!
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே...
      படம் தேடி எடுத்தது... அந்த அழகு வேண்டும் என்பதால்...
      கருத்துக்கு நன்றி...

      நீக்கு
  7. அருமை
    ரசித்தேன் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. ஆஹா! ரசிக்கவைத்தக் கவிதை! அருமை குமார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசி சார்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  9. கல்லூரிப்பக்கம் அழைத்துச்செல்வீர்கள் என்று நினைத்து உள்ளே வந்தால் வேறு பக்கம் இழுத்துச்சென்றுவிட்டீர்களே, நல்ல ரசனை.

    பதிலளிநீக்கு
  10. நல்ல கவிதை..... எங்கிருந்தாலும் வாழ்க!

    பதிலளிநீக்கு
  11. அருமையான கவிதை குமார். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  12. இதயத்தில் கல்வெட்டாய்ப் பதிந்த நினைவுகள்
    அருமை

    பதிலளிநீக்கு
  13. உன்னைச் சுருக்கி
    அழைத்தால்
    மிகவும் சந்தோஷிப்பாய்...

    மிக எளிய வார்த்தைகளில்
    ஒரு விவரிப்பு
    அதுதான் கவிதையின்
    சிறப்பு..

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி