ஞாயிறு, 25 அக்டோபர், 2015

குறுந்தொடர்: பகுதி - 6. கொலையாளி யார்?

முன்கதை
தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையை வீட்டு வேலைக்காரியிடம் இருந்து ஆரம்பிக்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன். தனது விசாரணையைத் தொடர்கிறார்.

பகுதி -1 படிக்க கொலையாளி யார்?

பகுதி -2 படிக்க கொலையாளி யார்?

பகுதி -3 படிக்க கொலையாளி யார்?


"நா...நா... ன் மட்டுந்தான்..." அவனுக்கு வியர்த்தது.

"பொய் சொன்னே கொன்னேபுடுவேன்... உன்னோட யார் இருந்தா...?"

"ச...சத்தியமா.... யா... யா...ரு...மே இல்லை சார்... " அவனுக்கு போதை சுத்தமாக இறங்கியிருந்தது.

"உனக்கு குடும்பம் இருக்கா?"

"இ... இருக்கு சார்..."

"ம்... எங்கே ஊட்டியிலதானா?"

"இல்ல மதுரைக்குப் பக்கம்..."

"இங்கேதான் இருப்பியா... ஊருகுப் போவியா...?"

"மூணு மாசத்துக்கு ஒருக்கா போவேன்..."

"சரி... எப்ப பிளான் பண்ணுனே... இதை எத்தனை பேர் சேர்ந்து பண்ணுனீங்க?" சுகுமாரன் மீண்டும் அதே இடத்துக்கு வந்தார்.

"என்ன சார்.... திரும்பத் திரும்ப நாந்தான் கொன்னேன்னே பேசுறீங்க... எனக்கு படியளந்த தெய்வத்தைக் கொல்லுவேனா? பாண்டியய்யா மேல சத்தியமா 

எனக்கு காலையில லதாப்பொண்ணு கத்தும்போதுதான் கொலை நடந்ததே தெரியும்..."

"சரி... நீ செய்யலை... ஒத்துக்கிறேன்.... ஆனா நீ இதுல சம்பந்தப்பட்டிருக்கேன்னு தெரிஞ்சா மவனே அப்பவே உன்னை எண்கவுன்டர்ல போட்டுடுவேன்.... 

பாத்துக்க..."

"..." பேசாமல் எச்சில் விழுங்கினான். அப்போது ஒரு இளைஞனும் யுவதியும் கான்ஸ்டபிள் ஆறுமுகத்துடன் உள்ளே வந்தார்கள்.

"நீ ஓரமா நில்லு..." என ரெத்தினத்தை ஓரங்கட்டியவர், அவர்களை "உக்காருங்க" என்று சொல்லி தானும் சீட்டில் அமர்ந்தார்.

"இன்ஸ்பெக்டர் ஐ ஆம் வருண், இது என்னோட சிஸ்டர் தர்ஷிகா" என்றபடி அவரிடம் கை நீட்டிய அந்த இளைஞன், ரெத்தினத்தினத்தைப் பார்த்து "என்ன 

ரெத்தினண்ணே... நீங்கள்லாம் இருந்து இப்படி..." என்றான் கலங்கிய கண்களோடு.


"தம்பி... இப்படி நடக்கும்ன்னு நினைக்கலையே..." கண் கலங்கியபடி முன்னே வந்தவன் சுகுமாரனின் முறைக்கு சற்று ஒதுங்கி நின்றான்.

"உக்காருங்க... " என்று சொல்லியபடி தனது இருக்கையில் அமர்ந்த சுகுமாரன் இருவரையும் நன்றாகப் பார்த்தார். வருண் பார்ப்பதற்கு சிவகார்த்திகேயன் 

போல இருந்தான்... ஆனால் நல்ல சிகப்பு.  தர்ஷிகா பேருக்கு ஏற்றார்போல் அழகாக இருந்தாள். உடம்பை நயன்தாரா போல் சிக்கென்று வைத்திருந்தாள். 

அவள் மீதிருந்த கண்களை வேறு இடம் மாற்ற சிரமப்பட்டார். நான் இராமநாதபுரத்துக்காரியாக்கும் என புவனா கண்ணில் வந்து மறைய மீண்டும் வருண் 

பக்கம் பார்வையைத் திருப்பினார். 

"ம்... சொல்லுங்க வருண்... அப்பாவுக்கு எதிரிங்க யாரும் இருக்காங்களா?"

"எதிரிங்கன்னு யாரும் இல்லை சார்... எல்லாருக்குமே நல்லதுதான் செய்வார்... எப்படி... இப்படின்னு..."

"எதாவது பிஸினஸ் மோட்டிவ்.."

"சான்ஸே இல்லை சார்.. அப்பாவோட பிஸினஸ்ல பார்ட்னர்ஸ் யாரும் இல்லை... எல்லாமே இண்டிவிச்சுவல் பிஸினஸ்தான்..."

"சொத்துக்காக..?"

"அப்பாவோட பிரதர்ஸ் சிஸ்டர்ஸ் எல்லாம் இவரை விட வசதியானவங்க.. சொத்துக்காக கொல்ல வேண்டிய அவசியமில்லை." 

"சரி... அம்மா சைடுல..?" என்றபடி  தர்ஷிகவைப் பார்த்தார். அவளோ கன்னத்தில் வழிந்த கண்ணீரை கர்ச்சிபால் துடைத்துக் கொண்டு படபடப்போடு அமர்ந்திருந்தாள்.

வருண் மௌனமாக அமர்ந்திருக்க, "என்ன அம்மா இறந்துட்டாங்களா? சாரி வருண்" என்றார்.

"இல்ல சார்.... அவங்க இருக்காங்க..."

"இல்லைன்னு கேள்விப்பட்டேன்..."

"எங்க கூட இல்லை... அவங்க கூட டச்சும் இல்லை... சொல்லப்போனா அவங்களை நாங்க மறந்துட்டோம்..." என்றவன் அம்மா என்ற வார்த்தையைத் தவிர்த்தான்.

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

21 கருத்துகள்:

  1. கதை சூடு பிடிக்கிறது நண்பரே தொடர்கிறேன்
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      எல்லாப் பதிவுகளுக்கும் சிந்திக்க வைக்கிறது என்கிறீர்களே... ஏன்?
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. விறுவிறுப்பு கூடுகிறது
    தொடர்கிறேன்நண்பரே
    வாழ்த்துக்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. விசாரணை விறுவிறுப்பாக இருந்தது! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரரே...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. சுறு சுறு விறு விறு...என்று நகர்கின்றது....டெய்லி போடக் கூடாதா ஹஹஹ முடியாது இல்லையா....குமார்...

    சஸ்பென்ஸ் கதைகள் என்றால் இருவருக்குமே ரொம்பப் பிடிக்குமா அதான்...ஹஹஹ்

    தொடர்கின்றோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசி சார்...
      தினமுமா,.. ? நானும் கொலையாளியைத் தேட வேண்டாமா...?
      ஹா...ஹா... விரைவில் முடிச்சிடலாம்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. "அம்மா"வைப் பிடிக்காதோ? வருணுக்கு?

    இதில்தான் எதுவும் க்ளு கிடைக்குமோ? இன்ஸ்பெக்டருக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே...
      எங்க "அம்மா"வைப் பிடிக்கும்..
      வருணுக்கு பிடிக்காது நண்பரே...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. கலக்குறீங்க குமார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. கொலையாளியை தேடி டிகெட்டிவ்குமார் புறப்பட்டு போகப்போவதாகவும் அவரை தேடி நாமும் புறப்பட வேண்டும் எனவும் பட்சி சொல்கின்றதே குமார்! அப்படி யார் தான்பா கொலை செய்தாங்க! நிச்சயமாக நானில்லப்பா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அக்கா...
      டிடெக்டிவ் முருகன்னுதானே போட்டிருந்தேன்... குமாருன்னு போடலையே...
      கதையை பாதியோட நிறுத்திட்டு எழுத்தாளர் எஸ்கேப் ஆகப் போறாருன்னு பட்சி சொல்லலையா..?

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  9. விறுவிறுப்பான நடை..

    கொலையாளியை சீக்கிரமாகப் பிடித்து விடுவீர்களோ!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      பாதிக்கிணறுதான் தாண்டியிருக்கிறோம் ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  10. கொலையாளி யார்... தொடரும் சஸ்பென்ஸ்.... நானும் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே.

    தொடர் கதை மிகவும் அருமையாக நகர்கிறது. அதிகாரியின் விசாரணையின் விறுவிறுப்புகளைப் படிக்கும் போது கதை மாந்தர்களை கண் முன்னாடியே கொண்டு வந்து நிறுத்துகிறது. நல்ல எழுத்து நடை.. இன்றுதான் வலைப்பக்கம் வந்தேன். கொலையாளி யார் எனும் ஆவலுடன் நானும் கதையை தொடர்கிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி