நனைத்த மழை
சந்தோஷத்தைக்
கொடுக்கவில்லை...
ஒழுகும் அரசுப் பேருந்து..!
*
மரங்களை மட்டுமின்றி
விலங்குகளையும் இழந்து
விதவையானது காடு..!
*
சந்தோஷத்தில்
குதிக்கும் மீனின்
கண்ணுக்குத் தெரியவில்லை
காத்திருக்கும் கொக்கு..!
*
சாதிச் சங்கப்
பலகைகள் தாங்கி
சமத்துவபுரம்..!
*
மழையில் நனைந்த
உன்னால்
நனைந்தது மனசு..!
*
முழங்கிய வானம்
இசைக்க வில்லை...
ஏக்கத்தில் விவசாயி..!
*
மரணத்தை நோக்கி
பைக்கில் பயணம்...
அறியாமல் பிராய்லர்...!
*
குழந்தையாய்
குதூகலித்தது மனசு...
எதிரே ஐஸ்வண்டி..!
******
இன்னும் வரும்...
-\பரிவை' சே.குமார்
அனைத்து கவிதைகளும் அருமை
பதிலளிநீக்குபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வாங்க ரமணி சார்...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அனைத்தும் அருமை நண்பரே...
பதிலளிநீக்குதமிழ் மணம் 3
வாங்க அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அனைத்துமே அருமை. மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குவாங்க அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அனைத்துக்கவிதைகளும் மிக அழகு!
பதிலளிநீக்குவாங்க அம்மா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குசிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
வாங்க பாவாணன் சார்...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
காடு விதவையானதை கண்டு மிகவும் வேதனையடைந்தேன். அனைத்து கவிதைகளும் அருமை.தம4
பதிலளிநீக்குவாங்க ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அனைத்தும் அருமை, குமார்.
பதிலளிநீக்குவாங்க அக்கா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
காடு - உண்மை...
பதிலளிநீக்குவிவசாயி - நெகிழ்ச்சி...
வாங்க அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சமத்துவபுர சிந்தனை அற்புதம். மற்றவைகளும் சிறப்பு. வாழ்த்துக்கள் சகோ.
பதிலளிநீக்குவாங்க சகோதரி...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கவிதைகள் சூப்பர் சகோ
பதிலளிநீக்குவாங்க சகோதரி...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அடேடே.... கலக்கறீங்க குமார்.எல்லாமே அருமை.
பதிலளிநீக்குவாங்க அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எல்லாமே அருமை. அதுவும் முதல் மனதை வருத்தியது...ஆம் சமீபத்தில் மழையில் பஸ்ஸில் பிராயணம் செய்த போது அப்படித்தான் அனுபவம்...கலக்குகின்றீர்கள் நண்பரே!
பதிலளிநீக்கும்ம்ம் திட்டக் கமிஷன் ஸ்டார்ட் ஆகிவிட்டது போல.....தொடருங்கள் வாழ்த்துக்கள்! நோ காம்ப்ரமைஸ் என்று உங்கள் திட்டக் கமிஷனை நிறைவேற்றுங்கள் நண்பரெ!
பதிலளிநீக்கு