சென்னையில் பத்திரிக்கைத் துறையில் பணி புரிந்தபோது எனக்கு கிடைத்த நண்பன் இவன். விருத்தாசலம் பக்கத்தில் உள்ள கிராமத்தில் பிறந்தவன். வாத்தியார் வீட்டுப் பிள்ளை. நானும் இவனும் எங்களுடன் கூட விஸ்வநாதனும் பெரும்பாலான நேரங்களில் ஒரே ஷிப்டில் வருவோம். எங்களுக்குள் எந்த ஒளிவு மறைவும் இல்லை. எல்லா விஷயங்களையும் மூவரும் பகிர்ந்து கொள்வோம்.
ஆரம்பத்தில் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு தி.நகரில் இருந்து பஸ்ஸில் போய் வந்தேன். அப்போது இவன் அம்பத்தூரில் தங்கியிருந்தான். பெரும்பாலும் இரண்டுவேளை சாப்பாட்டை அலுவலகத்தில் முடித்துக் கொள்வோம். பணி முடிந்து திரும்பும் போது தொழிற்பேட்டை பேருந்து நிலையத்துக்கு இவனுடன் நடந்தபடி பேசிக் கொண்டே செல்வோம். பின்னர் அவன் அம்பத்தூருக்கும் நான் தி.நகருக்கும் பஸ் ஏறுவோம்.
குடும்பத்தை சென்னை கொண்டு வரும் எண்ணம் இருப்பதைச் சொன்னதும் அதைச் செய் முதலில் என பணி முடிந்ததும் என்னுடன் சேர்ந்து அம்பத்தூர் எஸ்டேட் ஏரியா, முகப்பேர் என வீடு தேட ஆரம்பித்தான். எங்களுடன் விஸ்வநாதனும் இணைந்து கொள்ள அவரது டிவிஎஸ் 50-ஐ உருட்டியபடி தேடுவோம். வீடு பிடித்தால் தண்ணீர் பிரச்சினை, கரண்ட் பிரச்சினை இருக்கும். அதெல்லாம் சரியாக இருந்தால் வீடு பிடிக்காது. தினமும் அலைய ஆரம்பித்தோம். ஒரு வீடும் சரியாக அமையவில்லை.
முகப்பேர் கிழக்கில் ஒரு வீட்டு வாசலில் வாடகைக்கு விடப்படும் என்ற போர்டைப் பார்த்ததும் இந்த வீடு செட்டாகும்டா என்று சொல்லி விசாரிக்க, வீட்டில் இருந்த சின்னப்பெண் அம்மா வெளியில போயிருக்காங்க, சாயந்தரம் வாங்க என்றார். அதன்படி மாலை அவங்க வீட்டுக்குப் போய் பாப்பாக்கிட்ட கேட்டோம். அதுதான் சாயந்தரம் வரச் சொன்னுச்சு என்று மூவரும் சொன்னதும் நாங்க சொன்ன பாப்பா என்ற வார்த்தை வீட்டுக்காரம்மாவுக்கு பிடித்துப் போக சரியென்று சொல்லிவிட்டார்.
மாடியில் வீடு படியில் விளக்கு இல்லை என்றால் இருட்டு வழி தெரியாது. இருந்தும் வீடு பிடித்துப் போனதால் சரியென அட்வான்ஸ் கொடுத்தோம். பின்னர் தேவகோட்டையில் இருந்து சாமான்களை ஏற்றிக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தேன். சாமான்களை இறக்கி வைக்கவும் வீட்டில் ஒழுங்கு படுத்தவும் எல்லா வேலைகளிலும் உதவி செய்தான். எங்களுக்கு சென்னையில் இருக்கும் வரை பெரும் உதவியாக இருந்தான்.
இரவு நேரத்தில் பணி செய்யும் நாட்களில் ஒரு மணிக்கு எதாவது சாப்பிட்டு வரலாம் என பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் இரவு ஹோட்டலுக்குச் சென்று டீ, பன் எதாவது சாப்பிட்டு விட்டு பேசிக் கொண்டே வருவோம். குடும்பம் சென்னை வருமுன்னர் இரவு வேலை என்றால் பணி முடிந்ததும் அங்கயே படுத்து விடுவோம். காலையில் எழுந்து ஒரு டீ குடித்து விட்டுத்தான் அறைக்குத் திரும்புவோம். நிறைய விஷயங்கள் பேசுவான். எல்லாம் நிறைவாய் இருக்கும்.
நாங்கள் மூவரும் ராஜ் டிவியில் வேலைக்கான இண்டர்வியூவிற்குப் போனோம். அதில் செலக்ட்டும் ஆனோம். அவர்கள் அப்போது நாங்கள் வாங்கிய சம்பளத்தைவிட குறைவான சம்பளம் தருவதாகச் சொன்னார்கள். முகப்பேரில் இருந்து அம்பத்தூர் எஸ்டேட்டுக்கு நான் நடந்து கூட வேலைக்குப் போய்விடுவேன். போயஸ் கார்டனுக்கு வண்டியில்தான் வரவேண்டும். இந்தச் சம்பளம் கட்டுபடியாகாது என்றதும் மேலதிகாரியிடம் பேசி சொல்கிறேன் என்றவன் நீங்க இருக்க வேலைக்கும் இதுக்கும் வித்தியாசமில்லையா? இது விசுவல் மீடியாவாக்கும் என்றதும் எங்களுக்கு எந்த மீடியாங்கிறது பெரிசில்லை. சம்பளம்தான் முக்கியம் நீ வாய்யா என்று சொல்லி எங்களை அழைக்க, வேண்டாம் என்று சொல்லி கிளம்பி விட்டோம்.
பின்னர் சென்னையில் இருந்து காரைக்குடி வந்த பிறகு அவ்வப்போது போனில் பேசிக்கொள்வோம். அபுதாபி செல்ல இருப்பதைச் சொல்லாமால் அலுவலகத்தில் வேலையை ராஜினாமா செய்த அன்று இவனுடன்தான் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தேன். இங்கு வந்தும் போனிலும் மின்னஞ்சலிலும் எங்கள் நட்பு தொடர்ந்தது.
சென்ற முறை குடும்பத்துடன் சென்னை சென்ற போது இவனது வீட்டிற்குச் (இப்போது ஆவடியில் இருக்கிறான்) சென்று இவன் மனைவி, குழந்தைகளைப் பார்த்து மதிய உணவருந்தி சந்தோஷமாகப் பொழுதைக் கழித்து வந்தோம். குடும்பத்தில் மாமாவின் திடீர் இழப்பு, சில பல பிரச்சினைகள், எல்லாருக்கும் நல்லது செய்பவனை எல்லாரும் ஒதுக்கும் நிலை என கடந்து சென்ற வருடங்களில் நிறைய சந்தித்து விட்டான். இன்னும் அதே இடத்தில்தான் வேலை செய்கிறான். அங்கும் அரசியல்தான்... அதிலும் நீந்தித்தான் வேலை பார்த்து வருகிறான்.
அவனுக்கு நல்ல வேலை கிடைத்து குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
நண்பேன்டா தொடரும்...
-'பரிவை' சே.குமார்.
மலரும் நினைவுகள் அருமை நண்பரே...
பதிலளிநீக்குதமிழ் மணம் 2
வாங்க அண்ணா...
நீக்குவணக்கம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வள்ளுவரின் வாக்கின் படி ,நண்பனுக்காக உங்களின் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் !
பதிலளிநீக்குத ம 2
வாங்க ஜி...
நீக்குவணக்கம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்கள் நண்பர் நன்றே வாழ்வார்
பதிலளிநீக்குவாங்க ஐயா...
நீக்குவணக்கம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தம 4
பதிலளிநீக்குவாங்க ஐயா
நீக்குவாக்களித்தமைக்கும் நன்றி.
அவரது வாழ்வும் சிறக்கட்டும்...
பதிலளிநீக்குவாங்க அண்ணா...
நீக்குவணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நட்பு தொடரட்டும்..
பதிலளிநீக்குத.ம. +1
வாங்க அண்ணா...
நீக்குவணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எண்ணம் போல எல்லாம் நலமாகும்..
பதிலளிநீக்குநண்பரின் நினைவைப் பதிவு செய்தது அருமை..
வாங்க ஐயா...
நீக்குவணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நண்பருடனான மலரும் நினைவுகள் சுவாரசியமாக இருந்தது! நல்ல நட்பு என்றுமே நீடிக்கும்!
பதிலளிநீக்குவாங்க அம்மா...
நீக்குவணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நண்பரைப் பற்றிய நினைவுகள் ..ஆஹா! தங்கள் வேண்டுதல் நிறைவேரும்...
பதிலளிநீக்குவாங்க துளசி சார்...
நீக்குவணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்! தங்கள் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும்!
பதிலளிநீக்குவாங்க துளசி சார்...
நீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
தாங்கள் நண்பர்களிடம் காட்டும் பாசம் கண்டு பாராட்டுகின்றேன்
பதிலளிநீக்குவாங்க ஐயா...
நீக்குவணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களின் ஆசை நிறை வேறட்டும்
பதிலளிநீக்குதம + 1
வாங்க சகோதரி...
நீக்குவணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தம வேலை செய்யவில்லையே சகோ
பதிலளிநீக்குவேலை செய்கிறதே...
நீக்குநண்பருக்கு நல்வாழ்வு அமைய வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாங்க அண்ணா...
நீக்குவணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நண்பன் பற்றிய நினைவலைகள் நன்று. இதை அவரும் படிப்பாரா?
பதிலளிநீக்குவாங்க அண்ணா...
நீக்குவணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பல நண்பர்கள் வாசித்திருக்கிறார்கள். இதை கண்டிப்பாக இவர் வாசிப்பார்.
இருவரும் தொடர்பில் இருக்கிறோம்.
இப்போ அவர் பொங்கல் பிஸியில்...
நண்பரின் கஷ்டங்கள் தீரட்டும்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாங்க அண்ணா...
நீக்குவணக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.