புதன், 17 செப்டம்பர், 2014

சிங்கப்பூர் கிளிஷே இணைய இதழில் சிறுகதை



சில வாரங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் இருந்து தங்கை அனிதா சிறுகதை ஒன்று வேண்டும் அதுவும் உடனே வேண்டும் என்றார். எதற்காக கேட்கிறார் என்றெல்லாம் கேட்கவில்லை... அப்போது சில மன வருத்தமான நிகழ்வுகள் நடந்தேறி இருந்தன... அந்தச் சூழலில் எழுதும் எண்ணமும் இல்லை... சரி தங்கை கேட்டிருக்கிறார் என நான் முன்னர் எழுதிய கதையில் இரண்டை அனுப்பி வைத்திருந்தேன். எது பிடிக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்ற வாசகத்துடன்... அதன் பின் அது பற்றிய செய்திகள் இல்லை... இடையில் கதை நல்லா இருக்கா... இல்லையா என்று சொல்லுங்கள் என்றேன். இன்னும் பார்க்கவில்லை பார்த்து ரெண்டொரு நாளில் சொல்கிறேன் என்றார். பின்னர் அது குறித்தான பேச்சு இல்லை. இன்று அலுவலகம் சென்று வந்து  முகநூலைத் திறந்தால் அதில் ஒரு இணைப்பு முகவரி அனுப்பியிருந்தார். அதன் வழியாகச் சென்றால் 'சிங்கப்பூர் கிளிஷே' என்ற இணைய இதழில் எனது சிறுகதை வெளியாகி இருக்கிறது.  ரொம்பச் சந்தோஷமாக இருந்தது.


மனச்சுமை

“நிம்மதியில்லாம இப்படி ஒரு வாழ்க்கை தேவையா?” கத்தினான் பாலா.

“தேவையா… தேவையில்லையான்னு இப்ப.. இங்க.. நீயே ஒரு முடிவு எடு” பதிலுக்கு கத்தினாள் நந்தினி.

“செய்யிறதெல்லாம் செய்துட்டு என்னைய முடிவெடுக்கச் சொல்லு… நல்லாயிருக்குடி…”

“என்ன செஞ்சாங்க… எப்பவும் நிம்மதியில்ல… விடிஞ்சா எந்திரிச்சா சண்டை… சை… வாழுறதுக்கு சாகலாம்ன்னு இருக்கு…”  லேசாக விசும்பினாள்.

“உன்னைய சாகடிச்ச பாவம் எனக்கு வேண்டாம்… எனக்குந்தான் என்னைக்கு உன்னைய கட்டுனனோ அன்னைக்கு சந்தோஷமெல்லாம் செத்துப்போச்சு… இப்பல்லாம் விடிஞ்சாவே பயமா இருக்கு…”

“பெத்தவங்க… கூடப் பிறந்தவங்க எல்லாரையும் உதறிட்டுத்தான் உன்னோட பின்னால வந்தேன். ஆசை அறுபது நாள்… மோகம் முப்பது நாள்ன்னு எண்ணிக்கிட்டு இருந்தே போல… அப்ப ஆரம்பிச்சே… முடியவே இல்லை… உனக்கு மட்டுந்தான் விடிஞ்சாப் பயமா… எனக்குந்தான் விடியவே கூடாதுன்னு நெனைப்பு வருது…”

“நானுந்தாண்டி எல்லாத்தையும் விட்டுட்டு உன் பின்னாடி வந்தேன். காதலிக்குப் போது சாந்த சொரூபினியா இருந்தே… இப்ப கொல்லங்குடி காளி உங்கிட்ட தோற்றுப் போயிடுவா போ… ஆட்டம்… எல்லாத்துக்கும் ஆட்டம்… உக்கிரமால்ல இருக்கே… ஒரு நாளாச்சும் சிரிச்சுப் பேசி… ம்க்கும்… நடக்கலையே”

“அன்னைக்கு காமாட்சியா தெரிஞ்ச நான் இன்னைக்கு உனக்கு காளியாயிட்டேன்… ஆனா நீ மட்டும் சாட்சாத் அந்த ராமனாவே இருக்கே…நீ ராமனாவே இரு… நான் இப்ப காளியாவே இருந்துட்டுப் போறேன்…எனக்குத் தேவை நீ எடுக்கப் போற முடிவு…”

“ஏன் முடிவை நீயே சொல்லுவே…”

என்னங்க இங்கயே வாசிக்காம அந்த இதழில் போய் வாசியுங்கள்... என் கதை மட்டுமின்றி சில ஜாம்பவான்களின் எழுத்தையும் வாசிக்கலாமே... 
அதற்கு இங்கு சொடுக்குங்கள்...

***********
ப்புறம் இந்த வாரத்தில் தேனக்காவின் சாட்டர்டே ஜாலி கார்னர், சகோதரர்கள் கில்லர்ஜி மற்றும் அ.பாண்டியன் அளித்த விருதுகள், தற்போது 'சிங்கப்பூர் கிளிஷே' இணைய இதழில் சிறுகதை என சந்தோஷங்களை சுமந்து மகிழும் வாரமாக அமைந்திருக்கிறது. அதற்கு எல்லாருக்கும் நன்றி.

'கலையாத கனவுகள்' தொடர்கதை முடிவில் சில நண்பர்களுக்கு திருப்தி இல்லை எனச் சொன்னார்கள். இப்படி முடித்திருக்கலாமோ என எழுதி வைத்தாயிற்று... இன்னும் பதியும் எண்ணம்தான் வரவில்லை... காரணம் தொடர்ந்து வாசித்த சகோதரர்கள் யோகராஜா, ரூபன், பகவான்ஜி, சகோதரி மேனகா, ஐயா ஜெயக்குமார் அவர்கள் என எல்லாருமே முடிவு சரியென்றே சொல்லியிருந்தார்கள். இனியும் மாற்றத்தோடு பதியணுமா என்று எண்ணம்... பதியலாமா வேண்டாம என்பதை நாளை முடிவு செய்யலாம்.

'சிங்கப்பூர் கிளிஷே' இணைய இதழின் பொறுப்பாசிரியர் தங்கை அனிதாதான் என்பதை அந்த இதழை வாசிக்கும் போதுதான் அறிந்தேன்.... தங்கைக்கு வாழ்த்துக்கள்... எனது சிறுகதையையும் பதிவிட்டமைக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.

15 கருத்துகள்:

  1. ”சிங்கப்பூர் கிளிஷே” இணைய இதழில் உங்கள் சிறுகதை இடபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.வாழ்த்துக்கள் குமார்.

    கலையாதகனவுகள் தொடர்கதை முடிந்து விட்டதா? ஊர்களுக்கு போய்விட்டதால் படிக்கவில்லை படிக்க வேண்டும்.

    நிறைய எழுதுங்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  2. அங்கே போய் படிச்சுட்டு வந்திட்டேன்... இயல்பான கதை....

    பதிலளிநீக்கு
  3. அங்கே போய் படித்துவிட்டேன்.... இயல்பான இறுக்கம் சொல்லும் கதை....வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. சிங்கப்பூர் இணைய இதழில் தங்கள் சிறுகதை இடம் பெற்றது குறித்து மகிழ்ச்சி..

    நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. மனம்கனிந்த நல்வாழ்த்துக்கள் சகோதரரே...

    பதிலளிநீக்கு
  6. //என சந்தோஷங்களை சுமந்து மகிழும் வாரமாக அமைந்திருக்கிறது. //
    தொடரட்டும் சந்தோஷங்கள்

    பதிலளிநீக்கு

  7. இந்தவாரம் தங்களுக்கு ''நோன் ஸ்டாப் வாரம்'' கொண்டாட்டமோ... இது தொடந்து இப்படியே... ''நோன் ஸ்டாப் வருடம்'' கொண்டாட்டமாக நீடிக்க வாழ்த்துகிறேன் நண்பரே...

    நண்பா, அலுவலகம் புறப்படும் போதே காலையில் படித்து விட்டேன் கருத்துரை இடுவதில் பிரட்சினை இருந்தது.. அதனால்தான் மாலை வந்து கருத்துரை இடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. ரொம்ப மகிழ்சி மற்றும் வாழ்த்துகள் சார், கதையும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  9. கிளிஷே இதழ் மெயில் ஐ டி கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  10. அருமையான கதை. பாராட்டுகள் குமார்.

    பதிலளிநீக்கு
  11. இயல்பான கதை, பாராட்டுகள் நண்பரே..

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி