சனி, 13 செப்டம்பர், 2014

மனசின் பக்கம் : ஜாலியாய் சில செய்திகள்

தேனம்மை அக்கா அவர்கள் தனது வலைப்பூவான 'சும்மா'வில் சனிக்கிழமை அன்று சாட்டர்டே ஜாலிகார்னர் என்ற பகுதியில் வலைப்பதிவர்களிடம் ஒரு கேள்வி கேட்டு அதைப் பகிர்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் என்னிடமும் கேட்டிருந்தார். அப்போது விடுமுறையில் ஊருக்குச் சென்றிருந்ததால் உடனே கொடுக்க முடியவில்லை. மிகவும் தாமதமாகத்தான் கொடுத்தேன். இன்றைய சாட்டர்டே ஜாலிகார்னரில் பகிர்ந்திருக்கிறார். அக்காவுக்கு நன்றி... சும்மாவில் வந்திருக்கும் என்னைப் பற்றிய பகிர்வு குறித்து தனது பின்னூட்டத்தில் தெரிவித்த சகோதரி. மேனகா சத்யா அவர்களுக்கும் நன்றி.


அந்தக் கட்டுரையை வாசிக்க... சாட்டர்டே ஜாலிகார்னர் சொடுக்குங்க... 

னது 'இளமை எழுதும் கவிதை நீ' தொடர்கதை மூலமாக மிகச் சிறந்த கதையாசிரியராய் வலையுலகில் பெயரெடுத்து அதை புத்தகமாகவும் கொண்டு வந்து வெற்றி பெற்ற அன்பு அண்ணன் குடந்தை ஆர்.வி. சரவணன் அவர்கள் 'சில நொடி சிநேகம்' என்ற தலைப்பில் ஒரு குறும்படம் இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்த நிலையில் அதன் அடுத்தகட்டப் பணிகளில் தீவிரமாக இருக்கிறார். விரைவில் ஒரு நல்ல குறும்படத்தைக் காணும் பாக்கியத்தை நமக்கு கொடுக்க இருக்கும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள். 

'சிகரம் தொடு' திரைப்படத்தில் சில நிமிடம் நடித்திருந்தாலும் கடலூரில் இருந்து சென்னை வந்து கஷ்டப்பட்டு இன்று வெள்ளித்திரையில் தன் தலையைக் காட்டியிருக்கும் சினிமா விமர்சகர் அண்ணன் ஜாக்கி சேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நேற்று தியேட்டரில் படம் பார்க்கும் போது லாங்க் ஷாட்டில் தெரிந்த தந்தையைப் பார்த்ததும் அப்பா அது நீதானே என யாழினிக்குட்டி கேட்டதாகவும் பின்னர் திரையில் வசனம் பேசிய போது கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததாகவும் முகநூலில் பகிர்ந்திருந்தார். என்றுமே மகள்களின் அன்பில் திளைப்பது அப்பாக்கள் மட்டுமே... வாழ்த்துக்கள் அண்ணா.

'கலையாத கனவுகள்' தொடர்கதை 80 பகுதிகளைத் தொட்டு விட்டதால் இதற்கு மேல் இன்னும் இழுக்க வேண்டாமே என முடித்து விட்டேன். இப்படி முடிப்பது நன்றாக இருக்குமா என்று யோசித்தேன். முதல் தொடர்... நீண்ட தொடராக மாறிவிட்டது... கதையின் போக்கில் போனதாலும்... அன்றைக்கு எழுதி அப்போதே பதிவிட்டதாலும் இத்தனை பகுதிகளாகி விட்டது என்று நினைக்கிறேன். சகோதரி மேனகா சத்யா அவர்கள் கதை தொய்வில்லாமல் சென்றது என்று சொல்லியிருப்பது சந்தோஷமே... க்ரைம் கதை கேட்டிருக்கிறார்... க்ரைமா... நானா.... யோசிக்க வேண்டிய விஷயம். பார்க்கலாம் சகோதரி. தொடர்ந்து ஊக்கம் கொடுத்த சகோதரர் யோகராஜா, இடையிடையே வந்தாலும் உற்சாகமூட்டிய ரூபன், நேசன், பகவான்ஜி, கரந்தை ஜெயக்குமார் ஐயா மற்றும் அனைத்து வலைப்பூ நட்புக்களுக்கும் நன்றி. இந்தக் கதையின் முடிவில் என் நண்பனுக்கு உடன்பாடில்லை. முடிவை இன்னும் கொஞ்சம் விரிவாய் சொல்லியிருக்கலாம்... இளங்கோ பேசுவதோடு முடித்தவன் எதற்கு குட்டிக்குட்டியாய் கதை சொல்லியிருக்கிறார் என்று கேட்கிறான். அவனுக்காக இன்னுமொரு பகிர்வில் கொஞ்சம் விரிவாய் அப்பாவுடன் சேர்ந்தாளா இல்லையா என்றும் சொல்ல எண்ணம். ஒருவேளை இன்றிரவு கூட பகிரலாம்.

துரையில் பதிவர் திருவிழா நடக்க இருப்பது குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். சீனா ஐயா, தமிழ்வாசி பிரபாகர், திண்டுக்கல் தனபாலன் அண்ணா என ஒரு பெரிய எழுத்தாளர்கள் கூட்டமே ஓடியாடி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. விழா வெற்றிகரமாக அமைய எனது வாழ்த்துக்கள். உள்ளூரில் இருந்தால் மதுரைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே போய்விடலாம்... மனைவியின் அம்மா வீடு அங்கு இருப்பதால் ஒரு வாரம் முன்னர் கூட போய்விடலாம்... அபுதாபியில் இருந்து அது முடியாதே... விழா நிகழ்வுகளை நண்பர்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.... உற்சாகமாக கலந்து கொள்ளுங்கள் உறவுகளே... மதுரை குலுங்க வேண்டும்.

திரு. சகாயம் ஐ.எ.எஸ் அவர்கள் நேர்மையாய் இருப்பதால் எத்தனை முறை ஒவ்வொரு இடமாக தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார். படிக்காமல் அரசியல் பண்ணும் ஊழல் முதலைகள் உறுதியாய் நெஞ்சம் நிமிர்த்தி லஞ்சம் தவிர்த்து வாழும் தமிழனை பந்தாடுவதாய் சந்தோஷப்படலாம்... அந்த இந்திரசபை நாயகிகளுக்கும் நாயகன்களுக்கும் காலம் பதில் சொல்லும். கிரானைட் ஊழலை விசாரிக்கும் குழுவை தலைமை ஏற்று விசாரணை மேற்கொள்ள இருக்கும் திரு. சகாயம் அவர்கள் இனிமேல் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அரசியல் அடிவருடிகளும், சில மிருகங்களும் அவரை பணி செய்ய விடாமல் செய்ய என்ன வேண்டுமானாலும் செய்யும். அனைத்தையும் தகர்த்து அனைவருக்கும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். மொத்தத்தில் மதுரைப் பேச்சு வழக்கில் சொல்வதென்றால் திரு. சகாயம் அவர்கள் சூதனமாய் இருந்து அம்புட்டுப் பேரையும் தூக்கிப் போட்டு மிதிக்கணும்.

-மனசின் பக்கம் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

12 கருத்துகள்:

  1. எல்லா செய்திகளும் செம கூல் சார்... ,உங்கள் அறிமுகத்தைப் பற்றி இப்போது தான் முழுதும் அங்கே படித்தேன். பெரிய எழுத்தாளர் ன்னும் தெரிஞ்சிக்கிட்டேன்.க்ரேட் சார். நினைத்தவை எல்லாம் நடக்க வாழ்த்துகள் சார்...

    பதிலளிநீக்கு
  2. வாங்க ஜெயசீலன்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    பெரிய எழுத்தாளரெல்லாம் இல்ல... சும்மா அப்பப்போ கிறுக்குறதுதான்... ரொம்பப் பெரியாளா நினைச்சிறாதீங்க...

    உங்க வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. கடந்த பொங்கலுக்கு ஊருக்கு வந்து சென்றீர்களே ,மீண்டும் வர முடியாதுன்னு சொல்வது நியாயமே !உங்க சார்பா நாங்க கலந்துகிட்டு பதிவர் சந்திப்பை அசத்தி விடுகிறோம் !
    த ம 2

    பதிலளிநீக்கு
  4. தேனம்மை அவர்களின் பதிவில் இன்று தான் படித்தேன்..... வாழ்த்துகள் குமார்.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் ! அங்கே சென்றும் வாசிச்சிட்டு வந்தேன் சாட்டர்டே ஜாலிகார்னர் .
    .உங்க அடுத்த தொடர் ஆரம்பம் முதல் வாசிக்க முயல்கிறேன்

    பதிலளிநீக்கு
  6. ‘’அன்பு நண்பரே வணக்கம், விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்’’ பெற்றுக்கொள்ளவும்.
    அன்புடன்
    கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  7. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே...

    பதிலளிநீக்கு
  8. சிறந்த பகிர்வு
    இனிதே தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  9. நல்வாழ்த்துக்கள்.என்னால் பழைய மாதிரி வலைப்பூக்கள் வர முடியலை.உங்க புத்தகபதிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரர்
    உங்கள் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டவன் என்ற முறையில் ஒரு விருதினைத் தங்களோடு பகிர்ந்திருக்கிறேன். அன்போடு பார்க்க அழைக்கிறேன் http://pandianpandi.blogspot.com/2014/09/the-versatile-blogger-award.html

    பதிலளிநீக்கு
  11. நண்பரே சகாயம் விசாரணைக்கு தடை வேண்டி அரசே மேல்முறையீடு!
    தெரியாதா!

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி