பாண்டியநாடு படம் பார்த்தோம். குடும்பப் பின்னணியில் ரவுடிகளை அழிக்கும் படம். விஷால் சொந்தப்படம் என்பதால் போட்ட காசை இழந்து விடக்கூடாது என ரொம்பக் கவனமாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய அப்பா கிடைத்திருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு இயக்குநர் இமயம் நடிப்பில் கலக்கியிருக்கிறார்.
படத்தின் கதை நகரும் விதம் அருமையாக இருக்கிறது. பாடல்கள் பரவாயில்லை. என்ன ஒரே வருத்தம் 'சொல்லிட்டாளே அவ காதலை...' என்று சொல்லியவளும் 'நெஞ்சுக்குள்ளே... நெஞ்சுக்குள்ளே வச்சிருக்கேன் ஆசை...' என்று எல்லாருடைய நெஞ்சத்தையும் அள்ளியவளுமான லெஷ்மிமேனனை இந்தப் படத்தில் சில இடங்களிலும் பாடலிலும் பயன்படுத்தி வேஸ்ட் பண்ணிட்டாங்கன்னு எல்லாருக்கும் வருத்தம்.
மதுரையில் காதல், நட்பு, சந்தோஷம் என வேறு எந்த ஒரு வாழ்க்கையும் இல்லாதது போல தமிழ் சினிமாவின் கதைக்களம் மதுரை என்றாலே ரவுடியிசம் என்றாகிவிட்டது. சரி படம் எப்படியிருக்குன்னுதானே கேக்குறீங்க... படம் குடும்ப சென்டிமெண்ட் கலந்த ரவுடிகளை ஒழிக்கும் கதை என்பதால் நன்றாக இருக்கிறது.
விஷால் படம் பற்றி பார்த்தாச்சு... இனி எங்க வீட்டு விஷாலின் சேட்டையைக் கொஞ்சம் பார்ப்போம்.
நேற்று மாலை பள்ளியில் இருந்து வந்து சாப்பிடும் போது நடந்த நிகழ்வை இரவு போனில் மனைவி சொல்லும் போது சிரித்தாலும் சிந்திக்க வைத்தது. பாப்பாவுடன் அவன் பேசியது.
பாப்பா : டேய் முட்டை எல்லாத்தையும் தின்னுடா. சும்மா வேஸ்ட் பண்ணாம.
விஷால் : (பாப்பா பக்கம் திரும்பி) என்ன அம்மா ஆகப் பாக்குறியா?
பாப்பா : அம்மா ஆகவா?
விஷால் : ஆமா... நீ என்னய திட்டுனா அம்மா ஆயிடுவியா... ஏய் இங்கபாருலே நீயெல்லாம் நித்யா ஆக முடியாது...
பாப்பா : அப்ப நீங்க மட்டும் குமாரு ஆயிடுவியலோ..?
விஷால் : நாங்கதான் ஆயிட்டோமுல்ல...
பாப்பா : அது எப்போ..?
விஷால் : அதுதான் ஊருல எல்லாரும் குமாரு மகனா... குமாரு மகனான்னு கேக்குறாங்கல்ல அப்ப நாங்க ஆயிட்டோமுல்ல... உன்னைய அப்படி கேட்டாகளா (அம்மா பக்கம் திரும்பி) என்னம்மா இந்தப்புள்ள உங்கள மாதிரியா இருக்கு... நா அப்பா மாதிரித்தானே இருக்கேன்...
ராஜபக்சே என்னும் மிருகத்தின் மந்தையில் இருக்கும் ஓநாய்களின் வெறிக்கு இசைப்பிரியா என்னும் இளம்நங்கை இரையாகி இருக்கிறார் என்பது உலகுக்குத் தெரிய வந்தாலும் இவரைப் போல எத்தனை இசைப்பிரியாக்களை அந்த நாய்கள் கொன்று குவித்திருக்கிறார்கள் என்பது தெரிந்தும் நாமெல்லாம் கத்திக் கொண்டிருந்தாலும் காமன்வெல்த் மாநாட்டுக்குப் போகத்தான் போகிறேன் என்று சொல்லும் கல்லுளி மங்கன் பிரதமரையும் கொன்று குவிக்கும் போதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு இப்போது கூப்பாடு போடும் அரசியல்வாதிகளையும் என்ன சொல்வது... பாருங்கள் இந்தப் பூவைக் கசக்க இவனுகளுக்கு எப்படி மனசு வந்தது.
அறையில் ஆல் இன் ஆல் அழகுராஜா ஓடிக்கிட்டு இருக்கு... எனக்கு அறையை விட்டு ஓடிடலாம் போல இருக்கு... முடியல... மனசாட்சியே இல்லாம ஒரு படம் எடுத்து இருக்காங்க. இயக்குநர் ராஜேஷ் கஜானா காலியாச்சின்னா என்ன சொன்னாலும் பாப்போம்ன்னு நெனச்சிட்டாரு போல... அய்யோ சாமி... கொல்லுறாய்ங்க... கொல்லுறாய்ங்க... நடிக்கிறவன் அம்புட்டுப் பேரும் கொல்லுறாய்ங்க.... பாவம் பணம் கொடுத்து நொந்து நூடுல்ஸாகிப் போயிருக்கும் படம் பார்த்தவர்கள்.
-'பரிவை' சே.குமார்.
படங்களில் சுலபமாக ரௌடிகளை ஒலித்துக் கட்டை விடுகிறார்கள் ,ஆனால் இங்கே மதுரையில் ரௌடியிசம் ஒழிந்த பாடில்லை !
பதிலளிநீக்குத ம 2
படங்களில் சுலபமாக ரௌடிகளை ஒலித்துக் கட்டை விடுகிறார்கள் ,ஆனால் இங்கே மதுரையில் ரௌடியிசம் ஒழிந்த பாடில்லை !
பதிலளிநீக்குத ம 2
தொகுப்பை ரசித்தேன்
பதிலளிநீக்குபாண்டிய நாடு பாராட்ட வேண்டிய படம்தான்... சமீபத்தில்தான் பார்த்தேன்...
பதிலளிநீக்குஹீரோயிஷம் இல்லாமல் ஒரு சாமானியனின் கதை என்பதால் இந்தப்படம் வெற்றிப்படம்மாக கொண்டாடப்படுகிறது..
விஷால் இதில் ஓவர் ஆக்ட் இல்லாமல் செய்திருக்கிறார்
எல்லா வீட்டு வாண்டுகளும் இப்படித்தான்....
பதிலளிநீக்குஅழகு ராஜா வா.... ஓடு மக்களே ஓடுங்க...
ராஜபக்சே... கண்டிப்பாக காலத்திடம் பதில் சொல்லியே தீரவேண்டும்...
பதிலளிநீக்குநாடகம் பேர்டும் நம்ம அரசியல்வாதிகளும் கூடதான்...
'பாண்டிய நாடு'...........ம்...பார்க்கலாம்!///குழந்தைகள் உலகமே தனி தான்!///ஆல் இன் ஆல்............ஐம்பது நிமிடங்கள் பார்த்தேன்.............///அந்தப் பன்னாடை பற்றி.......ஏன் இப்போது?
பதிலளிநீக்குவாங்க பகவான்ஜி..
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோ. சௌந்தர்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோ.யோகராஜா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்கள் விஷாலின் கேள்விகளை ரசித்தேன்....
பதிலளிநீக்குஇசைப்பிரியா - கொடூரம்.... :(