(படத்துக்கு நன்றி : வண்ணத்துப்பூச்சி சினிமா குழு)
என்ன தாத்தா கோவமாப் போறே..?
ஒண்ணுமில்லடி ராசாத்தி...
இப்படித்தான் பாட்டி போனப்போ
நீ ஒண்ணுமில்லன்னு சொன்னே
பாட்டி இன்னும் வரலை...
நீயும் ஒண்ணுமில்லன்னு சொல்றே...
அப்ப நீயும்.... வாயைப் பொத்தி
மடியில் அமர்த்தி...
பாட்டி போனாங்கள்ல
அவங்களைத்தான்
பார்க்கப் போறேன்...
நானும் வாரேன்...
ரொம்பத்தூரம் போகணும்
தாத்தா பாத்துட்டு வந்துடுறேன்...
சீக்கிரமா பார்த்துட்டு வா...
எங்கிட்ட கூட்டிக்கிட்டு வா...
ராத்திரியாச்சின்னா வராதே...
பேயெல்லாம் வருமாம்...
சரிடி என் செல்லம்...
துண்டை தோளில் போட்டுக்
கொண்டு மனைவியை புதைத்த
இடம் நோக்கி நடந்தார்...
சில வார்த்தைகள் பேசி
மனபாரத்தை குறைக்க..!
(மார்ச் 2010-ல் நெடுங்கவிதைகள் தளத்தில் எழுதியது)
-'பரிவை' சே.குமார்.
மனதும் லேசாக வேண்டும்
பதிலளிநீக்குஅருமை....................
பதிலளிநீக்குமிகவும் அழகான படத்தைத் தேர்வு செய்த விதம் சொன்ன
பதிலளிநீக்குவிசயதிற்க்குப் பொருத்தமாக மனம் கவரும் வண்ணம் உள்ளது .
வாழ்த்துக்கள் சகோ .
உளம் தொட்ட உன்னத உணர்வுக் கவிதை சகோதரரே!
பதிலளிநீக்குமிகமிக அருமை!
வாழ்த்துக்கள்!
த ம. 4
வாங்க கவியாழி கண்ணதாசன் அண்ணா...
பதிலளிநீக்குஉண்மைதான் மனசும் லேசாக வேண்டும்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தனபாலன் சார்...
பதிலளிநீக்குதங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அம்மாள் அடியாள் அம்மா...
தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க இளமதி...
தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.