ஆதித் தமிழர்கள் வாழ்ந்த கடலில் மூழ்கிய லெமூரியா கண்டத்தை நாம் நெருங்கிவிட்டோம் என்றே எண்ண முடிகிறது அந்த அறிவிப்பின் மூலமாக!. இப்போதைய தமிழகத்துக்கு தெற்கேயேும், கிழக்கிலும், மேற்கிலும் பரவியிருந்த கண்டமாகக் கருதப்படுவது லெமூரியா எனப்படும் குமரிக் கண்டம். கிழக்கே ஆஸ்திரேலியா வரையிலும் மேற்கே ஆப்பிரிக்காவை ஒட்டிய மடகாஸ்கர் தீவு வரையிலும் பரவியிருந்ததாகக் கூறப்படும் இந்தக் கண்டம் பின்னர் கடலில் மூழ்கி அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
இந்திய பெருங்கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் மிகப்பெரிய கண்டம் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நார்வே நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர். சுமார் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ரொடினியா என்ற பெயரில் ஒட்டுமொத்த உலகமே ஒரே நிலப்பரப்பாக இருந்தது. பின்னர் இவை ஒவ்வொன்றாக படிப்படியாக விலகி இருக்கின்றன. இப்படி விலகியவின் மிகப் பெரும் பகுதி இந்தியப் பெருங்கடலில் மூழ்கியதாகவும் அதன் ஒரு நிலப்பரப்பு தற்போது கண்டறியப்பட்டிருப்பதாகவும் அறிவித்திருக்கின்றனர்.
இந்திய பெருங்கடலுக்குள் புதைந்திருக்கும் இந்த நிலப்பகுதிக்கு மொரிஷியா என்று பெயரிடப்பட்டிருக்கிறது. தற்போது கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் இந்த நிலப்பகுதியானது சுமார் 2000 முதல் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு மேலே இருந்திருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.
அண்மையில் மொரிஷியஸ் தீவுகளின் கடற்கரை மணலை ஆராய்ந்த பிறகு போதுதான் 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த சிர்கோன் என்கிற துகள்களையும் கண்டறிந்துள்ளனர். இந்த சிர்கோன் துகள்கள் கண்டங்களின் மேல்பரப்பில் காணப்படுபவை, மிக மிகத் தொன்மையானவையாம்.மொரீஷியஸ் தீவுப்பகுதியில் நடந்த எரிமலை வெடிப்பில் இந்த மூழ்கிய கண்டம் மேலேவந்து மொரீஷியஸ் தீவுநிலப்பகுதியுடன் மோதி மீண்டும் கடலுக்குள் சென்றிருக்கக்கூடும் என்றும் கூறுகின்றனர்.
இந்தியப்பெருங்கடலுக்குள் மூழ்கியிருக்கும் மொரீஷியா கண்டத்தின் ஒரு சிறுபகுதி இன்னமும் கடலுக்கு வெளியில் தெரியலாம் என்றும் இந்தியப்பெருங்கடலின் மத்தியில் இருக்கும் சீஷெல்ஸ் தீவு அப்படியானதொரு நிலமாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
சரி இந்த மொரிஷியாவுக்கும் நம்ம லெமூரியா கண்டத்துக்கும் என்ன தொடர்பு? ஆதித் தமிழர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டின் தென்கோடி நிலப்பரப்பான ராமேஸ்வரத்துக்கும் தெற்கே கடலுக்குள் லெமூரிய கண்டம் என்கிற கண்டம் மூழ்கியிருப்பதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. அப்படியானால் நம்ம லெமூரியா கண்டம்தான் அந்த மொரிஷியாவா என்ற தேடல் தொடங்கியிருக்கிறது...இன்னும் சில காலங்களில் நம்ம ஆதி கண்டத்தை எட்டிவிடலாம்!
நன்றி : தட்ஸ் தமிழ்
-'பரிவை' சே.குமார்
வணக்கம்,குமார்!//எப்படியாவது நம் தொன்மை நிலைநாட்டப்படுதல் அவசியம்!
பதிலளிநீக்குலெமூரியா கண்டத்தை நாம் நெருங்கிக்கொண்டிருக்கிறோம்
பதிலளிநீக்குஎன்று நினைக்கையில் மனம் மகிழ்வடைகிறது...
***இந்திய பெருங்கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் மிகப்பெரிய கண்டம் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நார்வே நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர். ***
பதிலளிநீக்குதொடுப்பு ஏதாவது இருக்கா, குமார்? :)
நானும் தேடிப் பார்க்கிறேன். :)
தங்கள் தகவலுக்கு நன்றி குமார் அந்த கண்டத்தை விரைவில் எட்டுவோம் என்ற நப்பிக்கையுடன் காத்திருப்போம்
பதிலளிநீக்குநல்ல ஆராய்ச்சியைப் பற்றிய தகவல்.
பதிலளிநீக்கு.//இன்னும் சில காலங்களில் நம்ம ஆதி கண்டத்தை எட்டிவிடலாம்! //
இது பற்றி தகவல் கிடைக்கப்பெற்றால் நன்றாகத்தான் இருக்கும்.
நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம் நம் வரலாற்றை. எத்தனை இனிமை. எவ்வளவு உண்மைகள் கண்டுபிடிக்கப் படும். நம் தொன்மையும் பெருமையும் வெளிச்சத்துக்கு வரட்டும்.
பதிலளிநீக்கு"தேடல் தொடங்கியிருக்கிறது...இன்னும் சில காலங்களில் நம்ம ஆதி கண்டத்தை எட்டிவிடலாம்" Ironically even for the history of us, we need to wait for some foreigner to dig out and inform us, then we will be proud for their work
பதிலளிநீக்கு"தேடல் தொடங்கியிருக்கிறது...இன்னும் சில காலங்களில் நம்ம ஆதி கண்டத்தை எட்டிவிடலாம்" Ironically even for the history of our own, we need to wait for some foreigner to dig out and inform us, then we will be proud for that.
பதிலளிநீக்கு