மூணாவது வருசத்துல அடியெடுத்து வச்சாச்சு... மனசு வலையில் மட்டும் 200 நண்பர்களின் நட்பையும் வாசிப்பையும் பெற்றது மகிழ்வைத் தருகிறது. எனது தொடரும் எழுத்துக்கும் தொடரும் நட்புக்கும் காரணகர்த்தா நீங்களே... எல்லாருக்கும் நன்றி... நன்றி.. நன்றி.
***********************************
1. சவால் மற்றும் வம்சி
திரு. ஆதி, திரு. பரிசல்காரன் மற்றும் யுடான்ஸ் திரட்டி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. முடிவுகளுக்கு முன்னால் அனைத்துக் கதைகளுக்குமான விமர்சனம் இரண்டு பதிவுகளாக பகிரப்பட்டது. சென்ற முறை விமர்ச்சித்த விதம் வித்தியாசமானதாக இருந்ததால் சுனாமியாய் தாக்குதல்கள் இருந்தன. ஆனால் இந்த முறை கதை மட்டுமே விமர்சிக்கப்பட்டது. அதுவும் முடிந்தவரை நாசூக்காக. மிகவும் அருமையான விமர்சனங்கள்.
இந்த சவாலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
முதல் இடம் : திரு. ஆர்விஎஸ் / திரு. பினாத்தல் சுரேஷ்
இரண்டாம் இடம் : திரு. ஜேகே / திரு. நந்தா குமாரன்
மூன்றாம் இடம் : திரு. இளா / திரு. சி.பி.செந்தில்
வெற்றி பெற்ற அறுவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சவால் ஒன்றுக்கு கதை எழுதுவது என்பது எல்லாருக்கும் சாத்தியமில்லை. இருப்பினும் இந்த சவாலை சவாலாக எடுத்துக் கொண்டு கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
சவால் சிறுகதை குறித்த பரிசல்காரனின் பதிவில் நண்பர் நடராஜ்,
‘ஒரு செம டவுட். இந்த ஃபோட்டோவில் உள்ளது போல் ஒருவர் ரெண்டு துண்டு சீட்டையும், ஒரு இன்கமிங் காலையும் பார்ப்பது போல் காட்சி வரவேண்டுமா, இல்லை, அந்த 2 துண்டு சீட்டில் இருப்பது மட்டும் கதையில் வந்தால் போதுமா?
ஆமா, இந்த டவுட் ஏன் யாருக்கும் வரல? ‘ என்று கேட்டிருந்தார்.
உண்மைதான்... நான் உள்பட பெரும்பாலானோர் துண்டுச் சீட்டு வாசகங்களை மட்டுமே பிரதானமாக்கி எழுதியிருந்தோம். மொபைலில் விஷ்ணு இன்பார்மர் என்ற பெயர் வருவதை கவனிக்கத் தவறிவிட்டோம். இருப்பினும் போட்டியை சிறப்பாக நடத்திய நண்பர்களுக்கும் அவர்களுக்கு உதவிய நடுவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.
சவால் சிறுகதைப் போட்டி முடிவுக்குப் பின் அனைவரின் எதிர்பார்ப்பும் வம்சியின் சிறுகதைப் போட்டிக்கான முடிவின் மீதுதான் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இதில் சவால் எதுவும் இல்லை... போட்டிக்கதைக்கு களமும் சொல்லப்படவில்லை. பதிவராக இருக்க வேண்டும் மற்றும் 2011ல் பதிவிடப்பட்டிருந்தால் போதும் என்பதை மட்டுமே சொல்லியிருந்தார்கள். அதனால் நாம் ரசித்து எழுதியதை அனுப்பியிருக்கிறோம். வெல்லப்போகும் நண்பர்களின் எழுத்துக்களை வம்சியின் வெளியீட்டில் பார்க்கலாம்... இன்னும் பதினைந்து நாளில் வெற்றிக்கனியை தட்டப்போகும் பதிவர்கள் யார்... யார்... என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
*********
2. கோவை கவியரங்கத்துக்கு கவிதை அனுப்பியாச்சா கவிஞர்களே...
கோவையில் நடக்கும் கின்னஸ் சாதனை கவியரங்கத்திற்கு கவிதை அனுப்ப விரும்பும் நண்பர்கள் கூடிய மட்டும் விரைவாக மூன்று கவிதைகள், உங்கள் போட்டோ மற்றும் முகவரியுடன் நேரடியாகவோ அல்லது நண்பர் தமிழ்காதலன் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வையுங்கள். வாசிக்கப்படும் உங்கள் கவிதைக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படும். இது குறித்த விவரம் அறிய கீழே உள்ள சுட்டியை தட்டி பார்த்துக் கொள்ளுங்கள்...
உங்கள் மனசினை தட்டி கவிதைகளை பறக்கவிடுங்கள்.
*********
3. ஊருக்குப் போறேன்... ஊருக்குப் போறேன்...
ஆமாங்க... முக்கியமான விசயமே இதுதானே... இல்லயா பின்ன... என்னன்னா... எங்க கம்பெனி புராஜெக்ட்ஸ் முடிஞ்சிருச்சு... இப்போ வேலையில்ல... கறக்குற வரைக்கும்தான் வச்சிக்குவாங்க... சும்மா வச்சு வைக்கலப் போடுவாங்களா என்ன... அதனால ஊருக்குப் போறேன்னு கேக்குறப்பல்லாம் முடியாதுன்னு சொன்னவங்க... சொல்லுறவங்க... இப்ப நீ போ, நீ போன்னு எல்லாரையும் விரட்டிட்டாங்க... என்னையும்தான்...
நாளைக்கு இரவு விமானத்தில் திருச்சி நோக்கி பயணம்... நாளை மறுநாள் மனைவி, மக்களுடன் காரைக்குடியில்... டிசம்பர் 22 வரைக்கும் அங்கதான்... இந்த முறை முடிந்தளவு பதிவுலக நண்பர்களை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
டிசம்பர் 25 புது புராஜெக்ட் ஆரம்பிக்கலாம் என்று 80% நம்பிக்கையுடந்தான் 22ந்தேதி வரச்சொல்லி அனுப்புகிறார்கள். பார்க்கலாம். புது புராஜெக்ட் ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும். அப்ப ஊருக்கு அனுப்பமாட்டார்களாம்... இப்பவே சொல்லியாச்சு...
அப்புறம் புராஜெக்ட் அபுதாபி(ABU DHABI)யில் இல்லை அலைன் (AL AIN)... அதனால வந்ததும் ஜாகையை அலைனுக்கும் மாத்தணும். தங்க அறை பார்க்க வேண்டும்... என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆசியா அக்கா அலைனில்தான் இருக்கிறார்கள். அவர்களைச் சந்திக்க ஆசை. கண்டிப்பாக நடக்கும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
அப்புறம் ஊருக்குப் போனா எழுதுறது சிரமம்... ஏன்னா டிசம்பர் 5 மனைவியின் தங்கை திருமணம். அதனால் வேலைகள் சரியாக இருக்கும். என்ன இப்ப நிறைய எழுதுறியாக்கும் இதுல பில்டப் வேறன்னு நினைப்பீங்க... எழுதுறேனோ இல்லையோ முடிந்தளவு வாசிக்கிறேன்.
அப்புறம் எனது கதைகளை புத்தகமாக்க வேண்டும் என்று எனது கல்வித் தந்தை பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன் அவர்களுக்கு ஆசை. என்னை எழுத்தாளனாக்கிப் பார்த்தவரல்லவா... கதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். எழுத்துப் பிழைகள், தலைப்புகள் என திருத்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஆசை நிறைவேறுகிறதா என்று தெரியவில்லை... தற்போது இருக்கும் குடும்ப சூழலில் எனக்குள் அப்படி ஒரு எண்ணம் இல்லை. தேவகோட்டை போய் அவரைப் பார்த்தால்தான் தெரியும்... பார்க்கலாம்.
இப்ப எதுக்கு இதெல்லாம்... ஊருக்கு போற சந்தோஷம் மட்டுமே இருக்கட்டுமுன்னு நீங்க சொல்றது கேக்குது... ஓகே... சந்திப்போம்.
-பரிவை’ சே.குமார்
மூன்றாம் வருடம் வெற்றிகரமாய் அடியெடுத்து வைத்தமைக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபோட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
குடும்பத்தை காண செல்வதே ஒரு குதுகலம் தான் அது உங்கள் வரிகளில் உணர முடிகிறது வாழ்த்துக்கள் நண்பா
மகிழ்வை பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி
பதிலளிநீக்குமூன்றாம் வருடம் - வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஊருக்குப் போய் ஜாலியா இருந்திட்டு வாங்க!
மூன்றாம் வருடம் வெற்றிகரமாய் அடியெடுத்து வைத்தமைக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஊருக்கு செல்வதற்கு வாழ்த்துகள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஊருக்கு சென்று நினைத்த காரியங்களை வெற்றிக்ரமாக முடிய இறைவனிடம் வேண்டுகிறேன். ஊரில் குடும்பத்தினர் அனைவரையும் நலம் விசாரித்ததாக சொல்லவும்.
வாழ்த்துகள் குமார்.
wish u a blog anniversary & happy journey!!
பதிலளிநீக்குமூன்றாம் வருட நிறைவுக்கு வாழ்த்துகள் குமார்..
பதிலளிநீக்குஊருக்குப்போறீங்களா..எஞ்சாய்!!!
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
ஊரை எஞ்சாய் பண்ணுங்க.வாழ்த்துக்கள்.ஆஹா,அல் ஐன் வந்ததும் தெரிவியுங்க தம்பி.
பதிலளிநீக்குகுமார்,வாழ்த்துக்கள் அனைத்துக்கும்.
பதிலளிநீக்குவாழ்த்துக்களுக்கு நன்றி
பதிலளிநீக்குபகிர்விற்கு நன்றிங்க குமார்.
பதிலளிநீக்குஊருக்கு போகும் வாய்ப்பை கூடுமானவரையில் குடும்பத்துடன் கொண்டாடுங்கள். சிறிது நேரம் நட்புகளுடனும்.
வாழ்த்துக்கள்!
மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும், 200 இணைய நண்பர்களைப் பெற்ற அன்பின் குமார் - பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅன்பின் குமார் - எல்லாவற்றையும் மறந்து விட்டு மகிழ்ச்சியுடன் தாயகம் வருக. ஏறத்தாழ 31 நாட்கள் இங்கிருக்கப் போவதால் நினைத்தவை அத்தனையும் நடை பெறும். அயலகம் சென்று - வீடு பிடித்து - தங்கும் வசதியுடன் - பணி செய்யலாம். கவலை வேண்டாம். எல்லாம் நல்ல படியாக நடக்க நல்வாழ்த்துகள். மனைவி குழந்தைகள் நலமறிய அவா. மதுரைக்குக் குடும்பத்துடன் வர வேண்டும். திட்டமிடுக. நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅன்பின் குமார் - மனைவி தங்கை திருமணம் சிறப்பாக நடைபெறவும், தங்களின் கதைகள் புத்தகமாக வெளி வரவும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குமூன்றாம் வருடம் வெற்றிகரமாய் அடியெடுத்து வைத்தமைக்கு வாழ்த்துக்கள் குமார்..
பதிலளிநீக்குஅப்படியே ஊருக்குள செம ஜாலிபோயிட்டுவாங்க..
நான் ஏற்கனவே 3 கவிதை அனுப்பியுள்ளேன் குமார்.
முகநூலில் தமிழ்குடில் தோழி அனிதா ராஜ் அவர்களின் மூலமாக அனைத்துவிபரமும் அனுப்பியுள்ளேன்..
பதிவர்களின் யார் அதில் வந்தாலும் சந்தோசம்தான்.
வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமனைவி மகளிடம் எங்கள் அன்பையும் சொல்லிடுங்க.
அன்பு வாழ்த்துகள் குமார் !
பதிலளிநீக்குமூன்றாம் ஆண்டுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவளமும் நலமும் பெற 2012 புத்தாண்டு நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.தம்பி ஊரிலிருந்து திரும்பியாச்சா?அபுதாபியா?அலைனா?
பதிலளிநீக்குவணக்கம்.... உங்களுக்கும் உறவினர் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு