ரயில் நிலையம்...
பேருந்து நிலையம்...
விமான நிலையம்...
என எல்லா இடத்திலும்
தொடரும் பாதுகாப்பு
சோதனைகள்...
பேருந்து நிலையம்...
விமான நிலையம்...
என எல்லா இடத்திலும்
தொடரும் பாதுகாப்பு
சோதனைகள்...
இந்தியத்
தொலைக்காட்சிகளில்
முதல் முறையாக
போட்டி போடும்
சினிமாக்கள்...
சுதந்திர போராட்டத்
தியாகிகளாம்
கதாநாயகன்
கதாநாயகியின்
பேட்டிகள்...
சமச்சீர் கல்வியால்
வகுப்பறையில்
தூங்கிய மாணவருக்கு
விடுமுறையுடன்
சாக்லெட்டு கொடுக்கும்
கொடியேற்றம்...
இவற்றிற்கெல்லாம்
முத்தாய்ப்பாய்...
குண்டு துளைக்காத
கூண்டுக்குள் இருந்து
சுதந்திரக் கொடியேற்றும்
பிரதமர்...
கூண்டுக்குள் இருந்து
சுதந்திரக் கொடியேற்றும்
பிரதமர்...
இப்படிப்பட்ட
சூழலில் தியாகிகளை
நினைக்க நமக்கு
நேரமிருக்கிறாதா..?
இதில் எங்கே
இருக்கிறது சுதந்திரம்...?
இருக்கிறது சுதந்திரம்...?
-'பரிவை' சே.குமார்.
படம் உதவிய கூகிளுக்கு நன்றி
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதெளிவான தீர்க்கமான கவிதை...போலீஸ் , ராணுவம் இவைகளின் உதவிகளுடன் கொண்டாடுவது தான் சுதந்திரமா ...?வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமுதல் வாழ்த்து
பதிலளிநீக்குஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். நிகழ்சிகள் பார்க்காமல் சுதந்திரமாய் இந்திய சுதந்திரத்தைச் சிந்திக்கலாமே...
பதிலளிநீக்கு//இவற்றிற்கெல்லாம்
பதிலளிநீக்குமுத்தாய்ப்பாய்...
குண்டு துளைக்காத
கூண்டுக்குள் இருந்து
சுதந்திரக் கொடியேற்றும்
பிரதமர்...//
நம் நாட்டின் நிலைமையை அழகாக சுட்டிக்காடியிருக்கீங்க.
இதையெல்லாம் மீறி சுதந்தர தினம் என்கிற போது மனதில் ஒரு சந்தோஷம் வருகிறது, அதை மறுக்க முடியாதே?
சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஉண்மை
பதிலளிநீக்குஇனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.
நேற்றைய சுதந்திரம் உரிமைக்காக
பதிலளிநீக்குஇன்றைய சுதந்திரம் விடுமுறைக்காக
நாளைய சுதந்திரம்........?
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாங்க செங்கோவி...
பதிலளிநீக்குவாங்க கோவை நேரம்...
வாங்க சிபி அண்ணா...
வாங்க பிரதர் கலா நேசன்...
வாங்க ரமா அக்கா...
வாங்க சரவணன்...
வாங்க சகோதரி ஆமினா...
வாங்க பிரகாஷ்...
வாங்க மாய உலகம் அவர்களே...
உங்கள் அனைவரின் பின்னூட்டக் கருத்துக்கு நன்றிகள் பல.
எனது பதிவுகளை மேம்படுத்த உதவும் உங்கள் பின்னூட்டங்கள் தொய்வில்லாமல் தொடரட்டும்.