காதல் படிக்கட்டுகளில் சாதம் வாங்கிச் சாப்பிட்டு நினைவுகளைச் சுமந்த பாரா சித்தப்பாவின் அழைப்பினை ஏற்று பாரா... பாராவாக தன் காதலை உருக்கிக் கொடுத்த என் அன்பு நண்பர் சிநேகிதன் அக்பர் அவர்கள் என்னைத் தொடரும்படி அழைத்திருந்தார்.
அலுவலகத்திலிருந்து வரவே இரவு 9 மணி ஆகிவிடுகிறது. மேலும் எனது கணிப்பொறியும் வைரஸ் காய்ச்சலால் அவதிப்படுதால் அவர் அழைப்பை உடனே ஏற்கமுடியவில்லை, அதற்காக நண்பரிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இருந்தாலும் நான் பாட்டுக்கு செவனேன்னு வேலை உண்டு அறை உண்டுன்னு இருக்கது புடிக்கலை போல காதலப் பத்தி எழுது... அது... இதுன்னு ஒரு குடும்பஸ்த்தனை மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறாரு பாருங்க... அதுக்கு என்னங்க செய்யலாம் அவரை... சரி... பேசிக்கலாம்.
இங்கயே சொல்லிக்கொள்கிறேன்... நீங்கள் படிக்கப் போவது அடைகாத்து வைத்த நினைவல்ல... அதா வந்து விழுந்த கற்பனை... கலப்படமில்லா கற்பனை... 100% அக்மார்க் கற்பனை... இதுக்கு மேல என்ன சொல்லி புரிய வைக்கிறது... எப்படியும் என்னை எங்க வீட்டம்மாக்கிட்ட மாட்டிவிடுற மாதிரி பின்னூட்டம் போடத்தான் போறீங்க... இது தேர்தல் நேரம்... எனக்கு சாதகமான பின்னூட்டம் வந்தால் அழகிரியின் திருமங்கலம் பாணியில் கவனிக்கப்படும்... சரி வாங்க கற்பனைக் காதலுக்குள் போவோம்.... (ஸ்... அப்பா... எப்படியெல்லாம் முன்னச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கு...)
ரோஜாவில் முள் இருக்கு என்பதால் நாம் அதை வெறுப்பதில்லை. அதேபோல் காதல் வருகிறதோ இல்லையோ எல்லாருக்கும் பிடிக்கும். எனக்கு காதலிக்கப் பிடிக்கவில்லை என்றோ நான் காதலித்தது இல்லை என்றோ சொன்னால் அது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் கதைதான்.ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மலர்ந்தால் மட்டுமே காதல் என்று அர்த்தம் கொள்வோமேயானால் நாம் அறிந்தது அவ்வளவுதான் என்றே அர்த்தம். காதல் என்பது இயற்கை, பாடல், இசை, சினிமா, விளையாட்டு... இப்படி எதன் மீதும் வரலாம்.
காதல்... இந்த மூன்றெழுத்து எத்தனை மனங்களைக் கட்டிப் போட்டிருக்கிறது. இதன் வீரியத்தில் இன்பம் துன்பம் எல்லாம் இருக்கத்தான் செய்யும். இருந்தும் காதலிக்கும் அந்தத் தருணங்களை அனுபவிக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு ஈடாக எதைச் சொல்ல முடியும்?
காதல் சாரலாய் இறங்கிய அந்தத் தருணம் இன்னும் பசுமையாய்... அவள்... தாவணியில் தரையிறங்கிய தங்க நிலா. நிலவில் பூத்து இதய வயலில் பதியமிட்டாள். இருவருக்குமான முதல் சந்திப்பு கல்லூரியில் நடந்த கட்டுரைப் போட்டியில்... அதில் இருவருக்கும் பரிசு கிடைக்க பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்பட்ட புன்னகையே காதலின் தொடக்கம்.
அவள் அறிவியலை ஆராய்ந்த போதும் தமிழ் மீது காதல் கொண்டிருந்தாள். அந்தத் தமிழ்தான் இலக்கியத் தாகம் கொண்ட எங்களை நட்பு என்னும் இன்னும் பலமாக்கியது. ஆண்பால் பெண்பால் என்ற அர்த்தமற்ற நட்பு வட்டம் துறந்து நாங்கள் இணைத்த வட்டமோ பலவின்பால்.
ஆளுக்கொரு திறமை... ஆளுக்கொரு தாக்கம்... எங்கள் நட்பு வட்டத்தில் எண்ணங்களின் கருத்து மோதல்கள் நடக்கும் போதெல்லாம் மற்றவர் அறியா வண்ணம் எங்கள் கண்கள் மோதிக் கொள்ளும்... அப்போதெல்லாம் நட்பா... காதாலா... என்று அறியாமல் கழிந்தன பொழுதுகள்.
எத்தனை பேர் இருந்தாலும் என்னை மட்டும் எங்கே என்று அவள் விசாரிக்கும் தோணியில் காதல் இருப்பதாக நண்பர் ஏற்றிவிட கனவுகளின் கோட்டைக்குள் கற்பனையாக வாழ்ந்தாலும் அந்த முகம் கண்டதும் எல்லாம் மறக்கும் என்னையும் சேர்த்து...
எதற்கும் பயப்படாத அவள் குணம் எல்லாத்துக்கும் யோசிக்கும் என் மனமும் ஒத்துப் போனதில் எனக்கே வியப்புத்தான். பெரும்பாலான மாலை வேளைகளில் என்னுடன் உரையாடியபடியே சைக்கிளைத் தள்ளிக்கொண்டு அவள் வரும்போது கிண்டல்களையும் கேலிகளையும் சுமக்க முடியாமல் நெளியும் என்னை அவன் கத்துனா உனக்கென்ன... நம்ம பேசுறது அவனுக்கு பிடிக்கலை என்று சொல்லி தைரியமாக அவள் வீடு வரை வரும் அந்த திமிர் நிறைந்த குணம் மனசுக்குள் மையமிட்டது.
அவளைத்தேடி அவள் வகுப்பறைக்குச் சென்ற நாட்களை விட அவள் தேடி வந்த நாட்கள்தான் அதிகம்... அது வகுப்பறை என்றில்லை... மதிய வேளையில் நண்பர்களிடன் அரட்டை அடிக்கும் இடத்திற்கும் வருவாள். நண்பர்களிடம் எவ்வளவு சொன்னாலும் அவள் வரும்போது அண்ணி வந்தாச்சு என்று சப்தமாக சொல்லுவார்கள்...
அதைக் கண்டு கொள்ளாதது போல அவள் உதிர்க்கும் ஒற்றைச் சிரிப்பு ஆம் என்கிறாதா இல்லை என்கிறதா... புரியாமல் எகிறித் துடிக்கும் இதயத்தோடு டேய்... சும்மா இருங்கடா என்று நண்பர்களை அடக்க முயலும் போது என்ன சொல்றாங்க உங்க பிரண்ட்ஸ் என்று எதுவும் தெரியாதது போல அவள் கேட்கும் கேள்விக்கு பதில் தெரியாமல் அலையும் கண்களைக் கண்டு சிரிக்கும் அந்த நிமிடம்... அவளுக்குள் இருப்பது என்ன என்று தெரியாமலே கடந்து செல்லும்.
அதைக் கண்டு கொள்ளாதது போல அவள் உதிர்க்கும் ஒற்றைச் சிரிப்பு ஆம் என்கிறாதா இல்லை என்கிறதா... புரியாமல் எகிறித் துடிக்கும் இதயத்தோடு டேய்... சும்மா இருங்கடா என்று நண்பர்களை அடக்க முயலும் போது என்ன சொல்றாங்க உங்க பிரண்ட்ஸ் என்று எதுவும் தெரியாதது போல அவள் கேட்கும் கேள்விக்கு பதில் தெரியாமல் அலையும் கண்களைக் கண்டு சிரிக்கும் அந்த நிமிடம்... அவளுக்குள் இருப்பது என்ன என்று தெரியாமலே கடந்து செல்லும்.
மூன்றாண்டுகள் நண்பர்கள் வளர்த்த எங்கள் காதல் பயிர் இருவருக்குள்ளும் இருந்திருக்கலாம்... ஆனால் அறுவடை செய்யவில்லை... ஆட்டோ கிராப் நோட்டில் எல்லாம் அவள் குறித்த கருத்துக்களை நண்பர்கள் இட்ட போதும் எங்களுக்குள் இருப்பது காதலா... நட்பா... கருத்துப் போராட்டம் மனசுக்குள்...
எனக்கு நண்பர்கள் பதிந்த ஆட்டோகிராப்பில் எழுத்துக்களாய் அவள்... அவள் மட்டுமே... எல்லாருக்கும் ஆட்டோகிராப் இட்டுக் கொடுத்தவள் நான் கேட்டபோது மட்டும் எதுக்கு ஆட்டோகிராப் போட வேண்டும் என்று மறுத்தாள்... மனசுக்குள் இருப்பது எழுத்தில் வருமென நினைத்தது நெஞ்சம்... எங்கே ஆட்டோகிராப்பில் கொட்டி விடுவோமோ என்று நினைத்தது போலும் அவள் நெஞ்சம்... கடைசி வரை மறுத்தவள் என்னிடமும் வாங்கவில்லை.
மறுநாள் ஆட்டோகிராப் நோட்டை குடு நான் பார்க்கணும் என்றவளிடம் மறுத்தபோதும் பறித்துச் சென்று படித்துத் தந்தாள். கொடுக்கும்போது அவள் சிவந்த முகத்தில் அரும்பிய புன்னகைக்கு அர்த்தம் என்ன..? நண்பர்களின் கருத்தை ஆமோதிக்கிறாளா... அலட்சியப் படுத்துகிறாளா... தெரியவில்லை...
காதல் இருவருக்குள்ளும் மலர்ந்திருந்த போதிலும் எதோ ஒன்று வெளிக்காட்ட மறுத்தது... அதனால் சொல்லாக் காதாலாகிப் போன வாழ்க்கையில் தண்டவாளமாய் விளைந்து போனோம்...
இன்றும் அவள் கொடுத்த பொருட்களும் அனுப்பிய வாழ்த்து அட்டைகளும் பொக்கிஷமாய்... சொல்லாமல் சொல்கின்றன எங்கள் காதலை...
கல்லூரி வாழ்க்கைக்குப் பின் தொடர்வுகள் அற்றுப் போன வாழ்க்கையில் குடும்பம் என்ற கூட்டுக்குள் போனாலும் இதயத்துக்குள் இன்னும் அவள் இருந்து கொண்டுதான் இருக்கிறாள்... அவளுக்குள்ளும் இருப்பான் இவன் என்பதில் துளியும் சந்தேகமில்லை..
இதைத் தொடர சகோதர சகோதரிகளை அழைப்பதைவிட நட்பை அழைப்பதே சாலச் சிறந்தது என்ற நம்பிக்கையில் அன்பு நண்பன் தமிழ்க்காதலன் மற்றும் மோகனன் இருவரையும் அழைக்கிறேன். காசா... பணமா... காதல்தானே.... மற்றவர்களும் எழுதுங்களேன்...
டிஸ்கி : சத்தியமா... காதலைப் பற்றி எழுதச் சொன்னதால்தான் இந்தக் கதை... இந்தக் கதையில் வரும் நான் நானல்ல...
-'பரிவை' சே.குமார்.
Photo From Google
கற்பனையே இம்புட்டு வெவரணையா இருக்கே. நிசத்துல?=))
பதிலளிநீக்குபுனைவாய் இருந்தாலும் உண்மையாய் இருந்தாலும் நல்லா இருந்தது.
பதிலளிநீக்கு.
..
.
.
.
.
.
.
.
.
.
.
அண்ணே நீங்க சொன்ன மாதிரி இது உங்கள் சொந்தக் கதைன்னு நான் யார்கிட்டயும் சொல்லவே இல்லை
//அன்று வயல்வெளியில் வசந்தத்தைத் தேடியவன்... இன்று மணல்வெளியில் பாரம் சுமப்பவன்.//
பதிலளிநீக்குவலியில் மிளிரும் அழகு வரிகள்..
இக்கதையின் காதலன் காதலி எங்கேயும் எப்போதும் பார்த்து வருகிறோம்...
//எனது கணிப்பொறியும் வைரஸ் காய்ச்சலால் அவதிப்படுதால் //
பதிலளிநீக்குha ha ha...
// எங்கள் காதல் பயிர் இருவருக்குள்ளும் இருந்திருக்கலாம்... ஆனால் அறுவடை செய்யவில்லை...//
பதிலளிநீக்குரசனையான வார்த்தைகள்..
உள்ளே இருப்பது என்னவென்று அறியப்படாத கடிதத்தின் சுவை உங்கள் பதிவில்... சோகத்தை காட்டாமல் சொல்லியிட்டீங்க..
பதிலளிநீக்குசொல்ல முடியாத காதல் உணர்வை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். படிக்கும்போதே அந்த நிகழ்வுகளும் சேர்ந்து மனதில் ஓடுகிறது.
பதிலளிநீக்குஅருமை! ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு...ஏன் அந்தப் பெண்ணிடம் காதலை சொல்லவில்லை?
காதலைப் பற்றி எழுதினாலே பிரச்சினை இதுதான்,கற்பனையை உண்மையென்று எல்லோரும் உறுதி செய்யப் பார்ப்பார்கள்!
பதிலளிநீக்குகற்பனக் காதல் சுவாரஸ்யம்!
நீங்க இவ்ளோ பயப்படுரதால யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.
பதிலளிநீக்குகற்பனையா இருந்தாலும் ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க...
பதிலளிநீக்குகற்பனையா இருந்தாலும் ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க...
பதிலளிநீக்கு//இந்தக் கதையில் வரும் நான் நானல்ல...//
பதிலளிநீக்குகல்யாணம் ஆயிருச்சோ?
சுவையான பகிர்வு குமார்
//நான் காதலித்தது இல்லை என்றோ சொன்னால் அது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் கதைதான்.// நான் ஒன்னும் சொல்லலைப்பா..நீங்க சொன்னது தான்!!
பதிலளிநீக்கு:-))
பதிலளிநீக்குசெரி.,செரி...சமர்த்துதான். நம்பிட்டேன் மகன்ஸ். போதுமா? :-)
>>மனசுக்குள் இருப்பது எழுத்தில் வருமென நினைத்தது நெஞ்சம்... எங்கே ஆட்டோகிராப்பில் கொட்டி விடுவோமோ என்று நினைத்தது போலும் அவள் நெஞ்சம்.
பதிலளிநீக்குஅண்ணன் குமார் அனுபவிச்சு எழுதி இருக்கார் போல..
அண்ணே நீங்க சொன்ன மாதிரி இது உங்கள் சொந்தக் கதைன்னு நான் யார்கிட்டயும் சொல்லவே இல்லை//
பதிலளிநீக்குநானும் சொல்லமாட்டேன் சரியா..
கதை மிகப்பிரமாதம் குமார் வாழ்த்துக்கள்..
தம்பி நீங்க அவனில்லையா? அச்சச்சோ ! அச்சச்சோ !
பதிலளிநீக்குசுவாரசியமான தொடர்..
வாங்க வானம்பாடிகள் ஐயா...
பதிலளிநீக்குகற்பனையை எழுதின அளவுக்கு நிஜத்தை வர்ணிக்க முடியுமா தெரியலை...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க எல்.கே...
புனைவுதான்...
ஆமா... கண்டிப்பா ஆருக்கிட்டயும் சொல்லிடாதீங்க... நமக்குள்ள இருக்கட்டும்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பாசமலர்...
பதிலளிநீக்குமுதல் வருகைக்கு முதல் நன்றி.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பாரத்... பாரதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பாரத்... பாரதி...
பதிலளிநீக்கு//உள்ளே இருப்பது என்னவென்று அறியப்படாத கடிதத்தின் சுவை உங்கள் பதிவில்... சோகத்தை காட்டாமல் சொல்லியிட்டீங்க..//
சுகப்பட்ட பதிவில் சோகம் எதற்கு...?
உங்கள் கருத்துக்களுக்கு மீண்டும் ஒரு நன்றி.
வாங்க ஸ்ரீஅகிலா...
பதிலளிநீக்குஎன்ன பண்றது சகோதரி... கற்பனைக் காதலியாப் போனதால் கற்பனையாகிப் போய்விட்டது...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சென்னை பித்தன் சார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கலாநேசன்...
பதிலளிநீக்குஆமா... நமக்குள்ள இருக்கட்டும்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மேனகாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஜோதி...
பதிலளிநீக்கு//கல்யாணம் ஆயிருச்சோ?//
ஆருக்கு...?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க செங்கோவி...
பதிலளிநீக்கு////நான் காதலித்தது இல்லை என்றோ சொன்னால் அது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் கதைதான்.// நான் ஒன்னும் சொல்லலைப்பா..நீங்க சொன்னது தான்!!//
அதுக்கு அப்புறம் சொன்னதை கவனிக்கலையா...?
நானும் காதலித்தேன் இயற்கையை... ஹா... ஹாஆஆஆ...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சித்தப்பா...
பதிலளிநீக்குநம்புங்கப்பா... நம்புங்க...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க செந்தில் அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மலிக்காக்கா...
சொல்லிடாதீங்க...சொல்லிடாதீங்க...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கற்பனையா.
பதிலளிநீக்குநம்பிட்டேன்:)
அன்புள்ள குமார் அவர்களுக்கு! மகிழ்ச்சி,துக்கம், வலி,பசி,, தூக்கம் போன்று தான் காதலும். அதற்கு என்று நாம் தேவையிலாத முக்கியத்துவத்தை கொடுக்கிறோம் என்பது என் மதிப்பீடு. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களில் பலர் தாங்கள் செய்தது சரியா என்று பரிசீலித்து முடிவெடுத்தால் வெறு முடிவுக்குத்தான் போவார்கள்.இதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம், இதற்காகவா இத்துணை மனக்கஷ்டம்.உற்றார் உறவினரைப் பிரிந்தோம். என்று வெதனைபடுவார்கள் என்பது தான் நிஜம்.ஷாஜகான்,மும்தஜை திருமணம் செய்து பத்தொன்பது வருடம் வாழ்ந்தாள்.பதினாங்கு குழந்தைகளைப் பெற்றாள்.யுத்தகளத்திற்குக் கூட மும்தாஜை அழைத்துச்செல்வான் ஷஜகான்.அவ்வளவு நம்பிக்கை! இறுதியில் பிரசவ வேதனையில் யுத்தப்பாசறையில் மருத்துவ வசதியில்லாமல் மும்தாஜ் இறந்தாள். நண்பா! தஜ்மகால் காதலின் சின்னமல்ல.! பின் அது எதன் சின்னம்?----காஸ்யபன்
பதிலளிநீக்குமிக்க நன்றி குமார் தொடர்ந்ததற்கு...
பதிலளிநீக்குநீங்க எழுதுனது நான் எழுதுனது எல்லாம் அது அது அதேதான் பாஸ். ஆனா நீங்க எழுதுனதை படிக்கும்போது ஃபீலிங் ஜாஸ்தியாகுது பாஸ்.
இது கற்பனைன்னு மீண்டும் மீண்டும் சொல்லும்போதே தெரியுது இது கற்பனைன்னு...
கலக்கல்.
//அன்புள்ள குமார் அவர்களுக்கு! மகிழ்ச்சி,துக்கம், வலி,பசி,, தூக்கம் போன்று தான் காதலும். அதற்கு என்று நாம் தேவையிலாத முக்கியத்துவத்தை கொடுக்கிறோம் என்பது என் மதிப்பீடு. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களில் பலர் தாங்கள் செய்தது சரியா என்று பரிசீலித்து முடிவெடுத்தால் வெறு முடிவுக்குத்தான் போவார்கள்.இதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம், இதற்காகவா இத்துணை மனக்கஷ்டம்.உற்றார் உறவினரைப் பிரிந்தோம். என்று வெதனைபடுவார்கள் என்பது தான் நிஜம்.ஷாஜகான்,மும்தஜை திருமணம் செய்து பத்தொன்பது வருடம் வாழ்ந்தாள்.பதினாங்கு குழந்தைகளைப் பெற்றாள்.யுத்தகளத்திற்குக் கூட மும்தாஜை அழைத்துச்செல்வான் ஷஜகான்.அவ்வளவு நம்பிக்கை! இறுதியில் பிரசவ வேதனையில் யுத்தப்பாசறையில் மருத்துவ வசதியில்லாமல் மும்தாஜ் இறந்தாள். நண்பா! தஜ்மகால் காதலின் சின்னமல்ல.! பின் அது எதன் சின்னம்?----காஸ்யபன் //
பதிலளிநீக்குசார் நீங்கள் சொல்வது சரிதான் காதல் மற்ற உணர்வுகளைப்போன்ற ஒன்றுதான்.
நீங்கள் நன்றாக யோசித்துப்பார்த்தால் மற்ற விசயங்களை எழுதுகிற அளவுக்கு கூட இல்லாமல் காதலை பற்றி வருடத்திற்கு ஒரு முறைதான் எழுதுகிறோம்.
எனக்கு தெரிந்து திருமணத்தையும் காதலையும் ஒப்பிடக்கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து. திருமணம் என்பது கிட்டதட்ட வருங்கால சந்ததியினரை உருவாக்க நமக்குள்ளே போட்டுக் கொள்ளும் ஒப்பந்த கணக்காகவே நான் கருதுகிறேன் அதில் சில நேரம் காதலும் இருக்கலாம்.
சில பேருக்கு சிலரின் அன்பை மறக்கவே முடியாது அது ஆண்களாக இருந்தால் நட்பாகிவிடுகிறது. பெண்ணாக இருந்தால் காதலாகி விடுகிறது (கல்யாணமாகும் சாத்தியம் இருப்பதால் அந்த பெயர்) அவ்வளவே. மற்றபடி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான அனுபவம்.
தாஜ்மகால் காதலுக்காக கட்டியது என்ற கதையை நம்பித்தான் நாம் தாஜ்மகாலை மதிக்கிறோம். நீங்கள் சொல்லும் கதையைக் கேட்டால் ஒருவரும் அதற்கு மதிப்பு கொடுக்கமாட்டார்கள்.
ஏனெனில் காதலுக்காகத்தான் தாஜ்மகாலை மதிக்கிறோமே தவிர தஜ்மகாலுக்காக யாரும் காதலிக்கவில்லை.
இது அனைத்தும் எனது சொந்த எண்ணங்களே. உங்களது கருத்துக்களை மறுக்க அல்ல.
யாரைத்தான் இந்தக் காதல் விட்டு வச்சுது.இதுக்கும் ஒரு தொடர் வலமா !
பதிலளிநீக்குமனதில் இருப்பதுதான் வார்த்தைகளாக வரும். உங்களுக்கு எழுத்துக்களாக வந்துள்ளது..நீங்கள் எழுதியது உண்மை சம்பவம் தானே...( மனசுக்குள் இருப்பது எழுத்தில் வருமென நினைத்தது நெஞ்சம்... அருமையான வரிகள்)
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
வேலன்.
காதல்... இந்த மூன்றெழுத்து எத்தனை மனங்களைக் கட்டிப் போட்டிருக்கிறது. இதன் வீரியத்தில் இன்பம் துன்பம் எல்லாம் இருக்கத்தான் செய்யும். இருந்தும் காதலிக்கும் அந்தத் தருணங்களை அனுபவிக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு ஈடாக எதைச் சொல்ல முடியும்
பதிலளிநீக்குmmmmmmmmm really super
இந்தக் கதையில் வரும் நான் நானல்ல// நம்பிட்டோம் .. வேறென்ன சொல்ல..:)
பதிலளிநீக்கு//ஸ்... அப்பா... எப்படியெல்லாம் முன்னச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கு//
பதிலளிநீக்குநீங்க இவ்ளோ முன் எச்சரிக்கை குடுத்தாலும் பின் விளைவுகல்ல இருந்து தப்பிக்க முடியாதுங்க பிரதர்...ஹா ஹா..:))
//ரோஜாவில் முள் இருக்கு என்பதால் நாம் அதை வெறுப்பதில்லை//
ஒகே... டாக்டர் விஜயோட அடுத்த படத்துக்கு ஒரு டயலாக் ரெடி...:)
//எனக்கு நண்பர்கள் பதிந்த ஆட்டோகிராப்பில் எழுத்துக்களாய் அவள்//
வீட்டம்மா ஆட்டோகிராப் நோட்டை தேட தொடங்கியாச்சா...ஹா ஹா ஹா..:))
//இந்தக் கதையில் வரும் நான் நானல்ல//
அதாவது "நான் அவனில்லை" ஸ்டைல்'ல சொல்றீங்க...அப்படி தானே அண்ணா... ஒகே ஒகே... அண்ணி, நோட் தி பாயிண்ட்...:))
அருமை..!
பதிலளிநீக்குஃஃஃரோஜாவில் முள் இருக்கு என்பதால் நாம் அதை வெறுப்பதில்லை. ஃஃஃஃ
பதிலளிநீக்குஉங்க காதலைப் பத்தி தானே சொல்லுறிங்க..
ஹ...ஹ.. சும்மா நல்லாயிருந்ததுங்க..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.