தன்மானத் தலைவர்... தமிழர்களின் உயிர் நாடி... மக்களுக்காக வாழும் மனிதநேயம்... மக்கள் நலனுக்காக தள்ளாத வயதிலும் தள்ளுவண்டியில் அமர்ந்து அயராது உழைக்கும் செம்மொழி கண்ட எம்மொழிச் சிங்கம்... அண்ணாவின் அடிபற்றி ஆட்சி செய்யும் அட்சய பாத்திரம்... பாராட்டு விழாக்களின் பகலவன்... டாக்டர் கலைஞர் அவர்களின் இளைஞன் திரைப்படம் இரண்டு காட்சிகள் ஓடியதோ இல்லையோ... காங்கிரஸ் - திமுக தொகுதிப் பங்கீட்டு நாடகம் இரண்டு நாட்கள் விறுவிறுப்பாக ஓடியது.
நம்மளைப் பற்றி நல்லா தெரிஞ்சு வச்சிருக்கிறதாலதான் இந்த வயசிலும் அவரு சிக்ஸர் அடிச்சு சதம் போடுறாரு... நாம இலவசங்களின் இயக்கத்தில் இயங்கும் சுய நினைவில்லா பதர்கள் என்பதால்தான் இலவசங்களால் நம்மை அடித்துப் போட்டு அவர் மக்களுக்காக ஆட்டம் போடுகிறார். தமிழகத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கைப் பிடிப்போடு இருக்கும் தம் மக்களாட்சித் தலைவர் கலைஞர் காங்கிரஸ்க்காரன் ஆட்சியில் பங்கு என்றதும் 'குய்யோ... முறையோ..' என்று குதித்து என்னமோ மக்களாட்சி நடத்துவது போல் மக்களே கேளுங்கள் இது நியாயமா...? தர்மமா...? என்றார்.
தொகுதிப் பங்கீட்டின் போது இத்தனை தொகுதிகள் வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையால் தூக்கம் இழந்து தவித்து அறிக்கைகள் விட்டார். 63 என்றதும் 60தான் என்றார்... இங்கே ஒரு கேலிக்கூத்து என்னவென்றால் 3 தொகுதிகளுக்காக கூட்டணி உடைந்ததாம். அவர்கள் என்ன கருணாநிதி, ஸ்டாலின் தொகுதிகளையா கேட்டார்கள். ஏதோ அறுவதும் அறுபத்து மூணும் எட்டாத தூரம் என்பது போல் முடியாது என்று சொல்லி கூட்டணி உடைந்ததாக அறிவித்தார். அதிலும் துரோகி கட்சி என்று விமர்சித்ததுடன் இனி அண்ணா வழியில் காங்கிரஸை பார்ப்போம் என்றார்.
இந்த நாடகத்தின் உச்சகட்டமாக பிரச்சினை அடிப்படையில் ஆதரவு என்றும் ராஜினாமா என்றும் தனது வழக்கமான ராஜ தந்திர அம்பை பிரயோகித்தார். இது தெரியாமல் பல அல்லக்கைகள் உடனே அறிக்கைகள் விட்டு அசத்தினார்கள். பாவம் வெளிவராத படத்துக்கு விமர்சனம் எழுதியது போல் ஆகிவிட்டது அவர்கள் நிலை. கறுப்புத்துண்டும் சிறுத்தையும் தன்மானம் இழந்து தவிப்பது தெரியாமல் புன்னகை பூசி புலியாக காட்டிக் கொள்கிறார்கள்.
இதைவிட கொடுமை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்துவரும் திரு. இளங்கோவன், சுதந்திரம் கிடைத்தது என்று மகிழந்தார். பாவம் கலைஞர் கைதேர்ந்த எழுத்தாளர் என்பது அவருக்கு தெரியவில்லை... கதாநாயகனாக சிங்கும் நாயகியாக சோனியாவும் நடிப்பதும் கூட அவருக்கு தெரியவில்லை போலும். இனி அவர் எந்த முகத்துடன் தலைவர் கலைஞருடன் இணைந்து செயல்படப் போகிறார், அரசியல்ல இதெல்லாம் சகஜம்... தொடச்சிட்டு போக வேண்டியதுதானே... அஞ்சு வருசமாக போகாத தொகுதிக்குள்ளயே தன்மானத் தமிழனா ஓட்டுக் கேட்டு போகாமயா இருக்காங்க... எல்லாம் சரியாகும்... நாளைக்கே நிரந்தர முதல்வர் அவர்களேன்னு போயி பாத்துப் பேசிட்டு பேட்டியும் கொடுத்திட மாட்டாரா என்ன...
சரி விசயத்துக்கு வருவோம்... கூட்டணி முறிவுக்கு அறுபத்தி மூணுதான் காரணமா என்ற கேள்விக்கு அதுவும் ஒரு காரணம் என்றார். அப்ப மற்ற காரணங்கள்...? அதுக்காகத்தானே இந்த விவாகரத்து நாடகம். எல்லாரும் நல்லா நடிக்கிறாங்கய்யா... எப்பவும் இவங்க நடிக்கிறதை பார்ப்பதும்... டீக்கடையில உக்காந்து தினத்தந்தி பாத்து அலசுறதுமே நம்ம பொழப்பாப் போச்சு... பிள்ளைகளுக்காவது செம்மறி ஆட்டுக் கூட்டத்துல இருந்து விலகி வர பழகிக் கொடுப்போம்
தில்லியில உக்கார்ந்து பேசுனாங்களாம்... அப்ப கூட்டணி பேரம் சரியாயிடுச்சாம்... 63க்கு சம்மதிச்சிட்டாங்களாம். இந்தப் பிரச்சினையில காங்கிரஸ் கடைசி வரைக்கும் நின்னு ஜெயிச்சதாவும் நம்ம தன்மானத் தலைவர் அம்மாகிட்ட (இது டெல்லி அம்மா) சரணடைஞ்சிட்டாருன்னும் சொல்றாங்க...
எப்ப தலைவரு சரணடைஞ்சிருக்காரு... அவருக்கு வேண்டிய பேரங்கள் எல்லாம் முடிஞ்சாச்சு... இனி கலைஞர் தொலைக்காட்சிக்கு ரெய்டு தொல்லை இருக்காது... மகளுக்கு கைது பயமில்லாம தூக்கம் வரும்... ராசவுக்கும் கொஞ்சம் நிம்மதி வந்திருக்கும்... பேரனும் மகனும் இன்னும் சம்பாதிக்கலாம்... இன்னும் நிறைய சாதங்கள் இருக்குல்ல... இப்ப சொல்லுங்க இந்த நாடகத்துல சரணடைஞ்சது யாரு... ?
ஏதோ தமிழக மீனவர்கள் கொல்லப்படுறதுக்கும் இலங்கையில தமிழன் அழிக்கப்படுறதுக்கும் எதிர்ப்பு தெரிவிச்சு காங்கிரஸ் கூட்டணிய முறிச்சிக்கிட்டது போலவும் உடனே அவங்க தமிழர்கள் பாதுகாப்புக்கு நாங்க பொறுப்புன்னு செம்மொழியில உறுதி கொடுத்ததால மக்கள் நலனுக்காக மீண்டும் கூட்டணியை தொடர்வது போலவும் அவங்களும் அறிக்கை விடுறாங்க... நாமளும் டீயை குடிச்சிக்கிட்டு படிச்சு சந்தோஷப்படுறோம்... இது கொள்கைக்காக ஏற்பட்ட கூட்டணி இல்லை... கொள்ளைக்காக தொடரும் கூட்டணி... போயி புள்ளகுட்டிகளை படிக்க வைக்கிற வேலையப் பாப்போம்....
மக்கள் பிரச்சினைக்காக கடிதம் எழுதும் டாக்டர் கலைஞர் தம் மக்கள் பிரச்சினைக்காக தில்லிக்கே போவார்... அங்கிருந்து அறிக்கையும் விடுவார்... இதில் இருக்கும் குடும்ப பாசமெல்லாம் நமக்குத் தெரியாது... தெரிஞ்சிருந்தாத்தான் தொகுதிக்கு ஒன்றும் செய்யாத... ஐந்து வருடங்களாக ஏறெடுத்துப் பாக்காத... நிரந்தர எம்.எல்.ஏ. போலிப் புன்னகையோடு ஓட்டு கேட்டு வந்ததும் எல்லாம் மறந்து ஓட்டுப் போட்டு மீண்டும் தேர்ந்தெடுக்க மாட்டோமே...
பாமக ஒரு இடத்தை விட்டுக் கொடுத்திருக்காம்.... எத்தனை இடம் கேட்டாலும் திருப்பிக் கொடுக்கும் குணம் கொண்டவர்தான் மருத்துவர் ஐயா... ஆனால் அன்பு மகனுக்கான ஒரு இடத்தை கேட்டிருந்தால் கூட்டணியை விட்டு முதல்ல வெளிய வந்திருப்பாருல்ல... சரி.. விடுங்க...
இங்கிட்டு மட்டுமில்ல அங்கிட்டு... பெரியாத்தா நம்மகிட்ட வந்தாலும் வருமின்னு நம்மாத்தா காத்திருந்திச்சு... அதுக்காக அம்மா புகழ்பாடி சோர்ந்திருக்கும் மறுமலர்ச்சியை கண்டுக்காம இருந்திச்சு... இனி அவருக்கு எதாவது போடும்... பாக்கலாம்... நல்ல பேச்சாளன் இன்னைக்கு கேப்டனுக்கு கிடைச்ச மரியாதையில் பாதிகூட இல்லாமல் காத்திருக்கிறார்... பாவம்...
இங்கிட்டு மட்டுமில்ல அங்கிட்டு... பெரியாத்தா நம்மகிட்ட வந்தாலும் வருமின்னு நம்மாத்தா காத்திருந்திச்சு... அதுக்காக அம்மா புகழ்பாடி சோர்ந்திருக்கும் மறுமலர்ச்சியை கண்டுக்காம இருந்திச்சு... இனி அவருக்கு எதாவது போடும்... பாக்கலாம்... நல்ல பேச்சாளன் இன்னைக்கு கேப்டனுக்கு கிடைச்ச மரியாதையில் பாதிகூட இல்லாமல் காத்திருக்கிறார்... பாவம்...
எல்லா நாடகமும் முடிவுக்கு வருகிறது... தேர்தலில் நமது முடிவை நாமே எடுப்போம்... இன்னும் கதை பேசி காலத்தை ஓட்டாமல் சிந்திப்போம்... சில மாற்றங்களையாவது நாம் சந்திப்போம்...
டிஸ்கி: வேலைப்பளூ மற்றும் கணிப்பொறி பிரச்சினை காரணமாக நிறைய இடுகைகளைப் படிக்க முடியவில்லை... இருந்தும் எனது படைப்புக்கு உங்கள் வருகையை தந்து சிறப்பிக்கும் எல்லா நண்பர்களுக்கும் என் நன்றிகள்...
நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று வேலை குறைவால் இந்தப் பகிர்வு. இதற்கு முன் பகிர்ந்த எல்லாக் கதைகளும் நான் முன்பு எழுதி பதிவிடாமல் இருந்தவையே... மீண்டும் உங்கள் அன்புக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.
முடியல..
பதிலளிநீக்குதேர்தல் வரைக்கும் இதெல்லாம் சகித்துக்கொண்டுத்தான் இருக்க வேண்டும்
:(எளவு 15ம்தேதி தேர்தல் வச்சிருந்தா 4 நாள் லீவு சேர்ந்து வந்திருக்கும்.
பதிலளிநீக்குதெளிவான அலசல்... பாராட்டுக்கள்
பதிலளிநீக்குஎங்க பார்த்தாலும் இது தானா பேச்சு ஆனால் நல்ல வரஞ்சிருக்கீங்க... நன்றி..
பதிலளிநீக்குஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..
வானம்பாடிகள்
பதிலளிநீக்குஇங்குள்ள மொதலாளிமாருங்க நீங்க சொன்னமாதிரியே ரொம்ப வருத்தப்பாடுறாங்க.
நன்றி குமார்.
என்னமோ பண்ராங்க..ம்ம் யார் ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளை மட்டும் நிச்சயம்!!
பதிலளிநீக்குதானைத்தலைவரை தப்பா பேசீட்டீங்களே.. ஆட்டோ வராது?ஹி ஹி
பதிலளிநீக்குதானைத்தலைவரை தப்பா பேசீட்டீங்களே.. ஆட்டோ வராது?ஹி ஹி
பதிலளிநீக்குஉலகம் ஒரு நாடக மேடை என்பதை சரியாக புரிந்து வைத்துக்கொண்டவர்கள்,நம்மை வேடிக்கை பார்க்க வைக்கிறார்கள்.
பதிலளிநீக்கு@பாலா
பதிலளிநீக்குசார் , ஞாயிறு அன்னிக்கு வெச்சிருக்கலாம். எப்படி இருந்தாலும் எனக்கு லீவ் இல்லை.
அரசியல் அலசல் நல்லா வந்திருக்கு...
பதிலளிநீக்குஎல்லா நாடகமும் முடிவுக்கு வருகிறது... தேர்தலில் நமது முடிவை நாமே எடுப்போம்... இன்னும் கதை பேசி காலத்தை ஓட்டாமல் சிந்திப்போம்... சில மாற்றங்களையாவது நாம் சந்திப்போம்...
பதிலளிநீக்கு...rightly said...
அரசியலாஆஆவ்வ்வ்..
பதிலளிநீக்குநல்ல அசல்! அருமையான எழுத்து! ஆனால் இதற்கு தீர்வுதான் இல்லை. எல்லாமே கொள்ளை என்னும்போது யாருக்குத்தான் ஓட்டு போடுவது?
பதிலளிநீக்குசரியான வாதம் நச் பாயிண்டுகள்..கலக்கல்
பதிலளிநீக்குநல்ல அலசல் ................
பதிலளிநீக்குஅன்பு நண்பா, வணக்கம். அரசியல் கட்சிகளை அலசி இருக்கிறாய். மக்களைப் பற்றி சற்றே அடக்கி வாசித்திருக்கிறாய். இங்கே திருந்த வேண்டியவர்கள் மக்கள். திருத்தப் பட வேண்டியவர்கள் அரசியல்வாதிகள். இது நடக்காத வரை நாம் எந்த மாற்றமும் காணமுடியாது. நம் கண்களை நம் கைகளைக் கொண்டே குத்தும் இனத் தலைவர்களைத்தான் நாம் தலைவர்கள் எனக் கொண்டிருக்கிறோம். நமக்கு நல்லவர்கள் மேல் எவ்வித அக்கரையும் இல்லை. பணம் வாங்காமல் ஓட்டுப் போடும் குணம் இல்லை. நாளைய நம் தலைமுறைகள் மீதான தொலைநோக்குப் பார்வை இல்லை. தேசம் பற்றிய சிந்தனை இல்லை. எங்கேனும் ஒரு மூலையில் போர் அல்லது பொது அழிவு ஏற்பட்டால் நம்மால் முடிந்த ஒரு தொகையை கொடுத்து அதற்கு ஒரு விளம்பரம் தேடிக்கொள்வதோடு நம்முடைய வேலை முடிகிறது. நமக்காக நாம் போராட மாட்டோம். எவனாவது போராடினால் கூட நேரடி ஆதரவு கிடையாது. உள்முக, மறைமுக, வெளிமுக ஆதரவுகள்னு நிறைய கண்டுபிடிச்சு நம்மை நாம் அறிவாளிகளாக காட்டிக்கொள்கிறோம். நிசமாய் நாம் தண்டிக்கவும், கண்டிக்கவும் படகூடிய நிலையில் இருக்கிறோம். நம் முதுகில் உள்ள அழுக்கை கழுவாமல் இன்னொருவன் முதுகில் அழுக்கை சுட்டிக் காட்டும் அருகதை நமக்கு இல்லை....
பதிலளிநீக்குநாம் தவறுகளின் உச்சத்துக்கு போய் பிறகு அங்கிருந்து பாடம் கற்கும் அறிவைத்தான் பெற்றிருக்கிறோம்.
நமக்கான சுயத்தை முதலில் நாம் பெறுவோம்.
நன்றி.
ராஜதந்திரம் என்ற வார்த்தைக்கே அர்த்தமில்லாமல் போய் விட்டது! இதில் விஜய் போன்ற காமெடியன்கள் வேறு நடுவில்!
பதிலளிநீக்குஎல்லா நாடகமும் முடிவுக்கு வருகிறது... தேர்தலில் நமது முடிவை நாமே எடுப்போம்... இன்னும் கதை பேசி காலத்தை ஓட்டாமல் சிந்திப்போம்... சில மாற்றங்களையாவது நாம் சந்திப்போம்...
பதிலளிநீக்குதேவையான இடுகை தான்...
வாங்க தொப்பிதொப்பி...
பதிலளிநீக்குஆமா... எல்லாத்தையும்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
எங்களுக்கு அந்தக் கவலையில்லையே..?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கருணாகரசு அண்ணா...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ம.தி.சுதா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஜோதிஜி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மேனகாக்கா...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க செந்தில் அண்ணா...
ஆட்டோ வராது... பிளைட்லதான் வரணும்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க குறட்டை புலி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க எல்.கே...
பதிலளிநீக்கு//@பாலா
சார் , ஞாயிறு அன்னிக்கு வெச்சிருக்கலாம். எப்படி இருந்தாலும் எனக்கு லீவ் இல்லை.//
நமக்கு கவலையே இல்லை... என்ன மே மாசம் வச்சிருந்தா ஆண்டு விடுமுறைக்கு வந்திருக்கலாம்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஸ்ரீ அகிலா...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சித்ராக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சுசிக்கா...
அவ்வளவு பயமா?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அம்மா...
பதிலளிநீக்குநம்ம ஏரியாவில் கொஞ்சம் நல்லவனுக்குப் போடலாம்... ஆனா அவன் ஜெயிப்பானா?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சதீஷ் அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பவி...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க நண்பா...
மக்களைப் பற்றி தனியா எழுதுவமே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஸ்ரீராம்...
முதல் வருகை... ராஜதந்திரமெல்லாம் இப்ப இல்லை...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
புலிகளை ஆதரித்து பேசலாம் சரி - என்ன பேசுவது தமிழ்தேசிய வாதிகளே ! http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_15.html
பதிலளிநீக்கு