புதன், 26 ஜனவரி, 2011

குடியரசுத் தாயே...!


பதவிக்கான மரியாதையோ
பதவிக்கு மரியாதையோ
இல்லா குடியரசுத் தலைவர்..!

இத்தாலியின் கூண்டுக்குள்
இந்தியாவை ஆளும்
பொம்மைப் பிரதமர்..!

பாராட்டு விழாக்களிலும்
பசங்களின் வளர்ச்சியிலும்
தீராத தாகம் கொண்டு
சீர்மேவ ஆட்சி செய்யும்
முத்தான முதல்வர்..!


மக்களுக்கு பிரியாணி
கொடுத்து வாங்கிய பதவியில்
ஊழலை இருத்தி
உள்ளுக்குள் கொழிக்கும்
உத்தம அமைச்சர்கள்..!

தொகுதி என்பதை
தேர்தல் நேரத்து
தேனீர்க்கடையாக்கி
பதவிக்காக காலில்
விழும் எம்.எல்.ஏக்கள்..!

மாவட்டம்...
வட்டம்...
மேயர்...
நகரசபைத் தலைவர்...
பஞ்சாயத்து...
வார்டு...



என வட்டமாய்...
வாகாய் அமர்ந்து...
வளம் கொழிக்ககும்
அரசியல் வியாதிகள்...

தேர்தல் நேரத்தில்
கடவுளாய்...
பிரதமராய்...
முதல்வராய்...
மந்திரியாய்...
எம்.எல்.ஏ.வாய்...
கௌரவ வேடம் ஏற்கும்
குடிமக்களாகிய நாங்கள்...

மறுதேர்தல் வரை
மதிகெட்டு 'குடி'யிழந்து நிற்க...
அமோகமாய் வாழ்கிறது அரசு.


வெறுப்புக்களின் நெருப்பில்
வெந்து தணிந்தாலும்
என்றும் குறைந்ததில்லை
உன் மீதான எங்கள் மோகம்..!

எங்கள் அன்னையே...
வெள்ளையனை விரட்டி
கொள்ளையனின் கைகளில்
கொள்கை இழந்து நீ...

கொள்ளையனை வேறறுப்போம்...
கொள்கைகளை மீட்டெடுப்போமென
இந்நாளில் சூளுரைத்து...
தேர்தல் நேரத்து இலவசங்களில்
சூளுரைகளை துகிலுரிக்கும்
குடிமக்கள் நாங்கள்.

****************

நம் நாட்டின் குடியரசு தின வாழ்த்துக்கள்...!

-'பரிவை' சே.குமார்.


போட்டோ உதவிய கூகிளுக்கு நன்றி

23 கருத்துகள்:

  1. அருமை சகோ.பாராட்ட வார்த்தைகள் இல்லை..குடியரசு தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. உண்மையை கவியாக வைத்திருக்கீங்க நண்பரே,,,

    பாராட்டுக்கள்.

    இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    பதிலளிநீக்கு
  3. எங்குமே தமிழன்
    சந்தோஷமாயில்லை(யே)யா.
    என்றாலும் வாழ்த்துகள் குமார் !

    பதிலளிநீக்கு
  4. கொள்ளையனை வேறறுப்போம்...
    கொள்கைகளை மீட்டெடுப்போமென
    இந்நாளில் சூளுரைத்து...
    தேர்தல் நேரத்து இலவசங்களில்
    சூளுரைகளை துகிலுரிக்கும்
    குடிமக்கள் நாங்கள்.


    பாராட்டுக்கள்.

    இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் நண்பரே.
    இலவசங்களில் இழக்காதிருப்போம்
    நம்மை.
    சூளுரைகளை
    தொலைக்காமல்
    சுமந்திருப்போம்.

    பதிலளிநீக்கு
  6. கவிதை அருமை... படங்களும் நன்றாக இருக்கு!
    குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. பாராட்டுக்கள்,இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா26/1/11, 6:16 PM

    நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைக்கெட்ட மனிதரை நினைந்துவிட்டால்...எங்கிருக்கிறாய் பாரதி எப்படி தீர்க தரிசியானாய் அன்றே...

    சேகர் கவிதையாய் பார்த்தால் பாராட்ட மனம் பாடாய் படுகிறது.வலியை அல்லவா வார்த்தெடுத்து இருக்கீங்க..

    பதிலளிநீக்கு
  9. சாட்டை வீசியுல்லீர்கள்

    பதிலளிநீக்கு
  10. \\வெறுப்புக்களின் நெருப்பில்
    வெந்து தணிந்தாலும்
    என்றும் குறைந்ததில்லை
    உன் மீதான எங்கள் மோகம்..!\\
    குடியரசு தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. அசத்தலான ஆணித்தரமான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. குடியரசு தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. தலைவரே.... உங்களுடைய கோபத்தை அருமையாக அதுவும் கவிதையாக பதிவு செய்திருக்கிறீர்கள்... அருமை...

    பதிலளிநீக்கு
  14. தேர்தல் நேரத்தில்
    கடவுளாய்...
    பிரதமராய்...
    முதல்வராய்...
    மந்திரியாய்...
    எம்.எல்.ஏ.வாய்...
    கௌரவ வேடம் ஏற்கும்
    குடிமக்களாகிய நாங்கள்...

    மறுதேர்தல் வரை
    மதிகெட்டு 'குடி'யிழந்து நிற்க...
    அமோகமாய் வாழ்கிறது அரசு.

    அருமை நண்பா.. கொதித்திருக்கிறீர்கள்... நம் அவலங்கள் நம்மால் மட்டுமே நீக்கப் பட முடியும். இன்னொருவர் அதை செய்ய முடியாது. எனவே நாம் உணர்ந்து செயல் பட்டு நம் தேசம் காப்போம். வா என் தோழமையே....... தமிழ் நேசமுடன்.

    பதிலளிநீக்கு
  15. படிக்க கவலையா இருக்கு. இந்த நிலை மாறுமா??

    பதிலளிநீக்கு
  16. வாங்க ஆசியாக்கா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க தமிழ்தோட்டம்...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க ஹேமா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க ரேவா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வாங்க சிவகுமாரன்...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க பிரியாக்கா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வாங்க மேனகாக்கா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க தமிழரசி அக்கா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வாங்க தினேஷ்...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க அம்பிகாக்கா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வாங்க லஷ்மி அம்மா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க அக்பர்...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வாங்க பிரபாகர்...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க தமிழ்...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க வானதி...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி