பட்டிமன்றத் தலைப்பு : "மகிழச்சியான வாழ்க்கை - திருமணத்திற்கு முன்பே / திருமணத்திற்கு பின்பே"
(விழா மேடையில் திரு.லியோனி)
பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றத் தொகுப்பு தொகுதி-1) வாசிக்காதவர்கள் இங்கே கிளிக்கவும்.
திரு.லியோனியின் முன்னுரையுடன் தொடங்கிய பட்டிமன்றத்தில் பேச்சாளர்களின் பேச்சு தொடங்கியது.
திருமதி. சித்ரா: பள்ளிக் காலம், கல்லூரிக்காலம் என நட்பின் அடையாளங்களை தனது பேச்சில் வழங்கினார். ஒரு அப்பாவும் பொண்ணும் திருவிழாவுக்கு செல்லும்போது கூட்டத்தில் வழி தவறாமல் இருக்க என் கையை பிடித்துக்கொள்ளம்மா என்று அப்பா சொன்னாராம். அதற்கு அந்தப் பெண் நீங்கள் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள் அப்பா என்றது சொன்னதாம். அது ஏன் அப்படி சொல்கிறது என்று குழம்பிய அப்பாவிடம் நான் கூட்டத்தில் உங்கள் கையை விட்டு விடுவேன். ஆனால் நீங்கள் என் கையை பிடித்தபிடியை விடமாட்டீர்கள் என்பதால்தான் என்று அந்தப் பெண் தன் அப்பாவிடம் சொன்னாளாம்.
திருமணத்திற்கு முன் அண்ணன், தம்பி, அக்கா தங்கை என்று சந்தோஷித்த அந்த நாட்கள் எல்லாம் திருமணத்திற்குப் பின் கிடைக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். மேலும் திருமணத்திற்கு முன்பான வாழ்க்கையை செடியுடன் ஒப்பிட்டுச் சொன்னார். லியோனி அவர்களைப் பார்த்து நீங்களும் நெல்லிக்காய் சாப்பிட்டிருக்கிறீர்கள் எனவே மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பே என்று தீர்ப்பு வழங்குவீர்கள் என்று நம்புகிறோம் என்று முடித்தார்.
திரு. லியோனி : திருமதி. சித்ரா அவர்கள் அருமையாக தங்கள் பக்க கருத்துக்களைச் சொல்லி அமர்ந்திருக்கிறார்கள். இப்படித்தான் ஒரு அக்கா, தன் பையனைப் படிக்க வைக்க பணம் பொரட்டி பத்தாயிரம் பத்தாமல் போகவே தம்பியிடம் வந்து தம்பி ஒரு பத்தாயிரம் கொடுடா, மூணு மாசத்துல திருப்பித் தந்துடுறேன் என்று கேட்க, எங்க வீட்டு நிதியமைச்சர் கிச்சன்ல இருக்காக்கா, என்று சொல்லி இரு அவகிட்ட கேக்கிறேன்ன்னு சொல்லி என்னடி எங்கக்கா பத்தாயிரம் கேக்குது கொடுக்கவான்னு கேக்க, இந்தப் பொம்பளங்க அதுக்குன்னு ஒரு பேச்சு வச்சிருப்பாங்க, கொடுங்ங்ங்கககன்னு சொல்ல கொடுக்கிறதா இல்லையாங்கிற குழப்பத்தோட கொடுக்கத்தான் சொல்றா நாளைக்கு வாக்கா என்று சொல்லி அனுப்ப, கொடுங்க கொடுங்க இப்படி அள்ளிக் கொடுத்துப்புட்டு எங்களை தெருவுல விடுங்கன்னு கத்திக்கிட்டு, தூங்குன பையனை தட்டி எழுப்பி நாம பிச்சைதான்டா எடுக்கனுமின்னு சொல்ல இதுக்குத்தான் இந்த ஆளை கட்டிக்காதேன்னு சொன்னேன்னு சொன்னானாம் என்று சில நகைச்சுவைகளுடன் விளக்கங்கள் கொடுத்தார்.
('நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி' - நடன மயில்)
தன் பெயரை தவறாக சொல்கிறார் என்பதால் சித்ரா அவர்கள் பேசும்போதே பொற்செல்வி கண்ணன் என்ற தன் பெயரை லியோனி அவர்களிடம் எழுதிக் கொடுத்துவிட இந்தமுறை லியோனி திருமதி பொற்செல்வி கண்ணன் என்று சரியாக அழைத்தார்.
திருமதி பொற்செல்வி: திருமதிற்குப் பின்புதான் மகிழ்ச்சி இருக்கிறது என்று அடித்துச் சொன்னதுடன் குடும்ப சகிதமாக வந்து பட்டி மன்றத்தை ரசிப்பவர்கள் மத்தியில் ஒருத்தர் மட்டும் தனியாக உக்காந்து பாவமா பாத்துக்கிட்டிருக்கிறார் என்று சித்ராவின் கணவரை காண்பித்து கைதட்டல் பெற்றார்.
உறவுகள் நட்புக்கள் என எல்லாம் இருந்தாலும் முன்பின் அறிமுகமில்லாத இருவர் வாழ்க்கையில் இணைந்து தங்கள் சுக, துக்கங்களைப் பகிர்ந்து வாழும் திருமண வாழ்க்கையின் மகோத்துவத்தை தன் வாதத்தில் வைத்தார். கணவனோ மனைவியோ அணுசரனையாய் இருப்பது போல் நட்போ உறவோ இருப்பதில்லை என்றும், தாய்மையின் சந்தோஷங்களும் தங்கள் வாரிசின் வரவின் மகிழ்ச்சியும் அளிக்கும் சந்தோஷத்தை திருமணமில்லாத வாழ்க்கை கொடுக்குமா என்று கேள்வி எழுப்பினார். தாய்மையின் தனித்துவம் குறித்து நல்ல எடுத்துக்காட்டுக்களுடன் சிலாகித்தார்.. கணவன் மனைவி உறவு குறித்துப் பேசியதுடன் மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கவிதையும் சொன்னார்.
உறவுகள் நட்புக்கள் என எல்லாம் இருந்தாலும் முன்பின் அறிமுகமில்லாத இருவர் வாழ்க்கையில் இணைந்து தங்கள் சுக, துக்கங்களைப் பகிர்ந்து வாழும் திருமண வாழ்க்கையின் மகோத்துவத்தை தன் வாதத்தில் வைத்தார். கணவனோ மனைவியோ அணுசரனையாய் இருப்பது போல் நட்போ உறவோ இருப்பதில்லை என்றும், தாய்மையின் சந்தோஷங்களும் தங்கள் வாரிசின் வரவின் மகிழ்ச்சியும் அளிக்கும் சந்தோஷத்தை திருமணமில்லாத வாழ்க்கை கொடுக்குமா என்று கேள்வி எழுப்பினார். தாய்மையின் தனித்துவம் குறித்து நல்ல எடுத்துக்காட்டுக்களுடன் சிலாகித்தார்.. கணவன் மனைவி உறவு குறித்துப் பேசியதுடன் மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கவிதையும் சொன்னார்.
திரு. லியோனி: பொற்செல்வி அவர்களின் பேச்சை அலசிய லியோனி அவர்கள், நம் திருமண வாழ்க்கை குறுத்த கருத்துக்களை சொன்னபோது, ஒரு கோவிலில் அறுபதாம் கல்யாணம் நடந்ததாகவும், அதை பார்த்த வெள்ளைக்காரன் வாட் இஸ் திஸ் என்று ஒருவரிடம் கேட்க, இது அறுபதாம் கல்யாணம் என்று அதற்கான விளக்கம் கொடுக்க, என்னடா இவங்க ஒரே பொம்பளைகூட அறுபது வருடம் குடும்பம் நடத்துறாங்கன்னு சொன்னானாம் என்றார்.
('போக்கிரிப் பொங்கல்' - அரும்புகள்)
திருமதி.சித்ரா பேசும் போதும், லியோனி பேசும் போதும் விடியோ எடுப்பவர் அவர்களை முழுவதும் கவரேஜ்க்குள் கொண்டு வந்தார். அதனால் மேடைக்கு இடப்புறம் வைத்திருந்த ஸ்கீரினில் பார்க்க முடிந்தது. ஏனோ தெரியவில்லை திருமதி.பொற்செல்வி பேசும்போது சித்ரா அவர்களையும் மற்றவர்களையும் மட்டுமே காட்டிக் கொண்டிருந்தார். அவர் பேசி முடிக்கும் வரை கேமராவைத் திருப்பவில்லை. இதனால் எங்கள் பக்கம் இருந்த நண்பர்கள் மிகவும் கோபப்பட்டார்கள். எதனால் அப்படிச் செய்தார் என்பது தெரியவில்லை.
திரு.செந்தில் வேலன்: வெகு வேகமாக சொல்லப் போனால் ரஜினி ஸ்டைலில் நடந்து வந்த செந்தில் சற்று சாய்வாக நின்றபடி அவர் உயரத்துக்கு தகுந்தாற்போல் மைக்கை சரி பண்ண முயன்று திணறி தோற்றார். மற்றொரு நண்பர் வந்து சரி பண்ணிக் கொடுத்தார். இதுவே அவருக்குப் பின் பேச வந்த மதுக்கூராருக்கு அவலானது. சாய்வாக நின்றவண்ணம் முழுமை பெற்றதற்கும் பெறாததுக்கும் நடுவரிடம் விளக்கம் கேட்டார். அவர் நீங்க முதல்ல நல்லா நில்லுங்க என்றும் நீங்க முழுமை பெற்று விட்டீர்களா என்றும் திருப்பிக் கேட்க, கடைசியில் சொல்வதாக சொன்னார்.
திருமணங்களுக்குப் பின்னர் அநாதை இல்லங்களும் முதியோர் இல்லங்களும் பெருகுவதாகவும் பேசினார். நட்பு குறித்து சித்ரா அவர்கள் பேசியதை நினைவு கூர்ந்த வேலன், முஸ்தபா... முஸ்தபா... பாடலைப்பாடி நட்பின் ஆழத்தை விளக்கினார். அப்போது லியோனி அந்தப்பாடலின் மூழ்காத ஷிப்பே பிரண்ட் ஷிப்தான் என்ற வரிகளைப்பாடி சிலாகித்தார். தாய்மை குறித்துப் பேசிய பொற்செல்வி அவர்களின் கூற்றை மறுத்து தாய்மை சிதைக்கப்படுவதாக ஆதாரங்களுடன் பேசினார். சிறைக்கு சென்று சுவீட் கொடுத்தது போன்ற விசயங்களைப் பேசும்போது திரு. சங்கர் அவர்களை வம்புக்கு இழுத்தார்.
மேலும் திருமணத்திற்குப் பின்னான வாழ்க்கை பட்டுப்பூச்சி வாழ்க்கை என்றும் முன்னான வாழ்க்கை பட்டாம் பூச்சி வாழ்க்கை என்றும் சொல்லி பட்டுப்பூச்சி பாருங்க ஒரு இடத்துல இருந்து அதோட வாழ்க்கையை முடிச்சுக்கிட்டு பட்டு நூலை கொடுத்துட்டுப் போகுது. ஆனா பட்டாம்பூச்சி அப்படியே பறந்து பல இடத்துக்கும் போய் சந்தோஷமா இருந்துட்டுப் போகுது என்று முடித்தார். ஆனால் கடைசி வரை முழுமை பெற்றதற்கும் பெறாததற்கும் அவர் விளக்கம் கொடுக்கவில்லை.
(திரு & திருமதி. லியோனியுடன் 'பாரதி நட்புக்காக' . திரு ராமகிருஷ்ணன், அவருக்குப் பின்னே திரு. சுபஹான் (வெள்ளைச்சட்டை))
மேலும் திருமணத்திற்குப் பின்னான வாழ்க்கை பட்டுப்பூச்சி வாழ்க்கை என்றும் முன்னான வாழ்க்கை பட்டாம் பூச்சி வாழ்க்கை என்றும் சொல்லி பட்டுப்பூச்சி பாருங்க ஒரு இடத்துல இருந்து அதோட வாழ்க்கையை முடிச்சுக்கிட்டு பட்டு நூலை கொடுத்துட்டுப் போகுது. ஆனா பட்டாம்பூச்சி அப்படியே பறந்து பல இடத்துக்கும் போய் சந்தோஷமா இருந்துட்டுப் போகுது என்று முடித்தார். ஆனால் கடைசி வரை முழுமை பெற்றதற்கும் பெறாததற்கும் அவர் விளக்கம் கொடுக்கவில்லை.
(திரு & திருமதி. லியோனியுடன் 'பாரதி நட்புக்காக' . திரு ராமகிருஷ்ணன், அவருக்குப் பின்னே திரு. சுபஹான் (வெள்ளைச்சட்டை))
திரு.லியோனி: செந்தில் வேலன் அவர்களின் வாதத்தில் அவர் பட்டுப்பூச்சி, பட்டாம்பூச்சி என சொன்ன கருத்தை ரசித்துப் பேசினார். மேலும் ஒரு கல் ஒரே இடத்தில் கிடக்கும் என்றும் ஆனால் சிறு இறகு காற்றில் பறந்து எல்லா இடங்களும்... ஏன் உலகையே சுற்றி வர அதனால முடியும். திருமணத்துக்கு முன்னான வாழ்க்கை இறகு போல்... பின்னான வாழ்க்கை கல் போல்... என்று சொல்லி வாங்க சங்கர், என்ன பதில் வச்சிருக்காருன்னு பாப்போம் என்றழைக்கவும் திரு.சங்கர் அவர்கள் தனது தரப்பு வாதத்தை தொடர வந்தார்.
சிறு விளக்கம்:
பட்டிமன்ற பேச்சாளர்களை அறிமுகப்படுத்தி மேடையேற்றிய பாரதி நட்புக்காக நண்பர் திரு. முனீஸ்வரன் அவர்கள் பெயர் சென்ற பதிவில் விடுபட்டு விட்டது. பதிவைப் பார்த்த திரு,முனீஸ்வரன் அவர்கள் சகோதரர் சுபஹான் அவர்களுக்கு அனுப்பிய மெயில் இது...
//அது எப்படி சார் ?????
உங்கள் நண்பர் குமாருக்கு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய சசிகலா ஞாபகமிருக்கு
என் பெயர் ஞாபகமில்லாமல் போச்சு.
என் பெயர் தமிழ்ப் பெயர் இல்லையோ??
நன்றி
Muneesh //
என்ன செய்யிறது நம்ம வலைப்பூவோட பேரே 'மனசு' - மனசுக்கு என்ன பிடிக்குமுன்னு எல்லாருக்கும் தெரியுமில்ல... அதனால கூட மறந்திருக்கலாம். முனீஸ்வரன் சாரையும் பாருங்க தமிழ்த்தாய் வாழ்த்து பாடினது ரெண்டு பேரு... ஆனா அவரு சொன்னது.... சரி விடுங்க... அவருக்கும் 'மனசு' இருக்குல்ல... சார்... உங்கள் பெயர் விடுபட்டதை சரிக்கட்ட மூன்று முறை சொல்லியாச்சு. (சகோதரர் சுபஹான் மன்னித்தருள்வாராக - அனுமதி பெறாத மின்னஞ்சல் பதிவுக்காக)
-'பரிவை' சே.குமார்.
** நட்புக்காக போட்டோ உதவிய திரு.சுபஹான் அவர்களுக்கு நன்றி.
நல்ல பகிர்வுங்க. நிகழ்வுக்கு நேர்ல வந்த மாதிரி இருந்தது.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி குமார் தொடருங்கள்
பதிலளிநீக்குme first
நல்ல விலாவாரியாக தொகுத்து இருக்கிறீர்கள்.. வீடியோவோ ஆடியோவோ பார்த்து எழுதினீர்களா அல்லது நேரடித் தொகுப்பா.. குமார்
பதிலளிநீக்குVADAI YA SORA
பதிலளிநீக்குVADAI YA SORA
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.தொடருங்கள்.
பதிலளிநீக்குவாங்க சுசிக்கா...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தேனக்கா...
பதிலளிநீக்குஆடியோ வீடியோ கேட்டெல்லாம் எழுத எனக்குப் பிடிக்காதக்கா. போன வாரம் பார்த்த பட்டிமன்றத்தின் தொகுப்பு என் மனதில் உள்ளபடி எழுதுகிறேன். அவ்வளவுதாங்க்கா,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஷபி...
பதிலளிநீக்குஇது பழைய சோறுதான்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஆயிஷா....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நன்றி...
பதிலளிநீக்குஉங்க "மனசு" நல்லாவே புரியுது குமார். அதுசரி...... அவங்கவங்களுக்கு அவங்கவங்க கவலை. நடக்கட்டும். வழக்கமா ஒரு பட்டிமன்றம் நடக்கும் போது அதில்தான் அனைவரின் கவனமும் போகும். ஆனால் ஒரு எழுத்தாளனின் பார்வை மட்டும்தான் சூழலையும், மக்களின் இரசிப்புத் தன்மையையும், பேச்சாளர்களின் திறனையும் மதிப்பிடும். அந்த வகையில் என் அன்பு நண்பா... நீ "எழுத்தாளண்டா"...... என்கிற சிறப்பு பட்டத்தை பெறுகிறீர்கள். வாழ்த்துகள். தொடருங்கள் அன்னைத் தமிழுக்கு உங்கள் அரும் பணியை.
பதிலளிநீக்குவாங்க பிரபாகரன்...
பதிலளிநீக்குஉங்கள் நன்றிக்கு நன்றி...
வாங்க தமிழ்...
சில வாரங்களுக்கு முன்பு "நண்பேண்டா..."
சில நாட்களுக்கு முன்பு "தமிழ் நேசன்..."
இப்ப "எழுத்தாளண்டா..."
பட்டங்களாக அள்ளிக் கொடுக்கும் என் அன்பு நண்பா... உன் பேச்சில், மூச்சில்,எழுத்தில் என எல்லாவற்றிலும் தமிழ் என்ற மூன்றெழுத்து மட்டுமே இருப்பதால் இன்று முதல் நீ....
இரு... அவசரப்படாதே... மனுசன் எதோ வேகத்துல எழுதிட்டான்... யோசிக்க வேண்டாம்...
சங்கத் தமிழன்... வேண்டாம் சரி வராது...
முத்தமிழ் வித்தகர்.... வேற ஆளு பட்டா போட்டாச்சு...
தமிழ் வேங்கை...இல்ல இதுவும் நல்லாயில்லை....
என்ன கொடுக்கலாம்...?
இதுக்கே ஒரு பட்டிமன்றம் வைக்கலாமா..?
இல்ல வேண்டாம்... வேண்டாம்...
இந்தா பிடிச்சுக்க பொற்கிழியுடன்... "செந்தமிழ்க்கோன்" என்ற பட்டத்தையும்...
"செந்தமிழ்க்கோன்" தமிழ்க்காதலன்.... வாழ்க... வாழ்க...
படத்தில் நீங்கள் எங்கே??? ஹிஹி.
பதிலளிநீக்குநல்லா இருக்கு பதிவு.
வாங்க பிரபாகரன்...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானதி...
நல்லா பாருங்க கிழக்குப் பக்கத்தில் வடக்க பாத்தபடி ஒருத்தர் இருக்காருல்ல... அவருக்கு பக்கத்துல பின்னாடி பாத்திங்கன்னா முன்னாடிக்கு பக்கவாட்டுல போறவரோட சைடுல நாலாவது சீட்... கரெக்டா பாத்துட்டிங்களா? ஹி...ஹி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.